32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 142)
இயக்கி – கால்டாக்சி ஓட்டுநர்களின் வலி சினிமா

இயக்கி – கால்டாக்சி ஓட்டுநர்களின் வலி

நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் டோரா. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் ஷான். அவர் தற்பொழுது, “இயக்கி“ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். கால் டாக்சி ஓட்டுபவர்களின் நெகட்டிவான பக்கங்களை மட்டுமே இது வரை நமக்குக் காட்டி அவர்களின் மேல் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், ஷானின் “இயக்கி” குறும்படம் அதைத் தகர்த்து அவர்களும் நம்மில் ஒருவர் தான், அவர்களுக்கும் சோகமான பக்கங்கள் இருக்கிறது என்கிற நிதர்சனமான உண்மையை உரக்கச் சொல்கிறது. 26 நிமிடத்துக்குள் ஒரு ஓட்டுநரின் […]

27/02/2019 Dinesh R
ஸ்ரீதேவியின் மாம் – சீனாவில் வெளியாகிறது சினிமா

ஸ்ரீதேவியின் மாம் – சீனாவில் வெளியாகிறது

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகையாகப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. அவர் தனது வழக்கம் போல், 2017 இல் வெளிவந்த மாம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார். அது அவருக்குத் தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அவரது இந்த 300வது திரைப்படமானது மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. அத்துடன் திரைத்துறையில் அவரது 50வது ஆண்டில் தைரியமான மற்றும் அசாதாரணமான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்ததற்கு மிகப்பெரிய பாராட்டுகளையும் திரைத்துறையில் பெற்றார். போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, […]

27/02/2019 Dinesh R
மாயநதி – பவதாரிணி இசையில் ஒரு பாடல் சினிமா

மாயநதி – பவதாரிணி இசையில் ஒரு பாடல்

ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளிப் பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி அஷோக் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து […]

26/02/2019 Dinesh R
ஜெயம் ரவி – ஸ்கிரீன் சீனில் 3 படம் சினிமா

ஜெயம் ரவி – ஸ்கிரீன் சீனில் 3 படம்

மாஸ் படங்களில் நடித்து கைத்தட்டல்களையும், விசில் ஒலியையும் பெறும் அதே நேரத்தில், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருந்து பாராட்டுகளையும் பெறுகிறார் ஜெயம் ரவி. அவரது அசுர வளர்ச்சி ஒரு புறம் இருக்க, அவர் தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார். இதற்கு மிகச்சரியான உதாரணம் என்னவென்றால் ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் 3 திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்திருக்கிறது.  “நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல […]

25/02/2019 Dinesh R
தலைவி – ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப்படம் சினிமா

தலைவி – ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப்படம்

இன்று மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவசர்களின் 71வது பிறந்த  நாள். இதை முன்னிட்டு  இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு  ‘தலைவி’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தான் ஜெயலலிதா அவர்களின் “அதிகாரப்பூர்வ” வாழ்க்கை வரலாற்று படம் எனக் குறிக்கப்படலாம். ஏனெனில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் திரு. தீபக் அவர்களிடம் இருந்து NOC-யைப் பெற்று இந்தப்  படத்தை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது.  இந்தத் திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் மகிழ்ச்சியில் […]

25/02/2019 Dinesh R
கோடீஸ்வரி – இரட்டை வேடங்களில் கே.ஆர்.விஜயா சினிமா

கோடீஸ்வரி – இரட்டை வேடங்களில் கே.ஆர்.விஜயா

ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “கோடீஸ்வரி” என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் குடும்பக்கதை படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்று நடிக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இவர் இரட்டை வேடமேற்று இருக்கிறார். இளம் நாயகனாக A.மோகன் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாகக் காவல்துறை அதிகாரி வேடத்தில் ரிஸ்வான் அறிமுகமாகிறார். இவர் மாடர்ன் தியேட்டர்ஸில் பணி புரிந்த எஸ்.ஏ.மஸ்தான் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகிகளாக் அஷ்மா, சுப்ரஜா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். கராத்தே ராஜா, டி.பி.கஜேந்திரன், நெல்லை […]

25/02/2019 Dinesh R
“அமீரா: இஸ்லாமியப் பெண்ணின் கதை” – சீமான் சினிமா

“அமீரா: இஸ்லாமியப் பெண்ணின் கதை” – சீமான்

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்தப் படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். சீமானிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த டுலெட் படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் […]

24/02/2019 Dinesh R
“சினிமா: ஒரு துப்பாக்கி, ஒரு கோடாரி, ஒரு அரிவாள்” – சீமான் சினிமா

“சினிமா: ஒரு துப்பாக்கி, ஒரு கோடாரி, ஒரு அரிவாள்” – சீமான்

“அரசியலைக் கவனிக்காமல் அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் படத்தில் நாட்களைச் செலவிடுகிறீர்களே என்கிறார்கள். எனக்கு இருபது நாள்தான் படப்பிடிப்பு இருக்கிறது. மற்றவர்கள் கூட்டணி அமைக்க நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த நேரம் எனக்கு மிச்சம் என்பதால் அதை நான் படப்பிடிப்பிற்குச் செலவிடுகிறேன். அவ்வளவுதான்! நடிகர்கள் நாடாளக்கூடாது என்று சொல்லும் சீமான், திரைத்துறையில் இருந்துதானே வந்திருக்கிறார் என பலரும் கேட்கிறார்கள். நான் எனது ரசிகர்களைச் சந்தித்து, அவர்களை தொண்டர்களாக மாற்றிக் கட்சியைத் துவங்கவில்லை. என்னுடைய பிறப்பு, வளர்ப்பு, பாதை, […]

24/02/2019 Dinesh R
கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – ஆசையாக மாறும் தேவைகள் சினிமா

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – ஆசையாக மாறும் தேவைகள்

பல பிரபல இயக்குநர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாகத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”. மாயவன் திரைப்படத்திற்குப் பிறகு சீ.வி.குமார் இயக்கும் இரண்டாவது படம் இது. தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்” படத்தின் கதைக்கரு. பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க  அஷோக், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள்  (பக்ஸ்) , இயக்குநர் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

23/02/2019 Dinesh R
LKG விமர்சனம் சினிமா

LKG விமர்சனம்

LKG என்பது லால்குடி கருப்பையா காந்தியின் சுருக்கம். கவுன்சிலரான எல்கேஜிக்கு எம்.எல்.ஏ.வாக வேண்டுமெனக் கனவு. கனவு என்னானது என்பதுதான் படத்தின் கதை. ஆர்ஜே பாலாஜியின் அப்பாவாக நாஞ்சில் ச்மபத் நடித்துள்ளார். இன்னோவா சம்பத் என சகட்டுமேனிக்கு அவர் கிண்டல் செய்யப்பட்டாலும், மகனின் படிப்புக்குப் பணம் கட்ட இயலாத வாழ்க்கைதான் அவருடையது. மேடையேறி அலங்காரச் சொற்பந்தல் போட்டு அமைந்திடாத பொருளாதாரம், இனி சினிமாவில் அவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. காமிக்கலான அவர் முகம் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு ஏற்றது. தேர்ந்த இயக்குநரின் […]

23/02/2019 Dinesh R
தும்பா – குழந்தைகளுக்கான படம் சினிமா

தும்பா – குழந்தைகளுக்கான படம்

மாஸ் ஹீரோக்களும் பெரிய படங்களும் தான் லட்சக்கணக்கான லைக்ஸும் ஷேர்களையும் பெறும் என்ற யதார்த்தம் சில நேரம் தவிடுபொடியாகும். ஒரு சிலர் இதனை ‘லக்’ என்று சொல்லலாம். ஆனால், உண்மையும் யதார்த்தமும் என்னவெனில் ரசிகர்கள் மிகச்சிறப்பான அனுபவத்துக்குக் காத்திருப்பதோடு, அவர்களின் நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் அளிக்கிறார்கள். தற்போது குழந்தைகளின் ஃபேவரைட்டான அனிருத் மற்றும் டைகரஸ் (பெண் புலி) தும்பா பங்கு பெறும் ‘தும்பா’ வீடியோ 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் யூ-ட்யூப்பில் 1.5 மில்லியன் பார்வையாளர்களைக் […]

23/02/2019 Dinesh R
“இது சீமானின் பாட்டு!” – வைரமுத்து சினிமா

“இது சீமானின் பாட்டு!” – வைரமுத்து

சீமானின் தம்பி திரைக்களமும், ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 உம் இணைந்து தயாரிக்க, இரா.சுப்ரமணியன் இயக்கும் படம் அமீரா. ஒரு திருடனின் வாழ்க்கையில் ஓர் அழகான பெண் குறுக்கிடுகிறாள். அவள் அழகு அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. அந்த அழகின் வழியே வந்த அன்பு அவனது திருட்டுத் தொழிலையே மாற்றுகிறது; அவன் திருந்துகிறான். அவள் எப்படிப்பட்ட அழகி, அந்த அழகு அவனை என்னவெல்லாம் செய்தது என்பதுதான் பாட்டு. 15 நிமிடங்களில் பாடல் எழுதி முடித்தாராம் கவிஞர் வைரமுத்து. அந்த நேரத்தில் […]

22/02/2019 Dinesh R
கண்ணே கலைமானே விமர்சனம் சினிமா

கண்ணே கலைமானே விமர்சனம்

தர்மதுரை வெற்றியைத் தொடர்ந்து, அதே பாணியிலான கதையைக் கையிலெடுத்துள்ளார் சீனு ராமசாமி. இம்முறை இன்னும் மென்மையான கிராமத்து டோனில். சோழவந்தான் வள்ளலான கமலக்கண்ணனுக்கு, வங்கி மேலாளரான பாரதி மீது காதல் எழுகிறது. அக்காதலுக்குக் கமலக்கண்ணனின் அப்பத்தா அழகம்மாள் சிவப்புக் கொடி காட்ட, கமலக்கண்ணனுடைய செயற்பாடுகள் என்ன என்பதுதான் படத்தின் கதை. புது மேலாளரை பூமாலையுடன் வரவேற்கும் வினோத வழக்கம் கொண்ட வங்கியாக உள்ளது மதுரா கிராம வங்கி. அவ்வங்கியின் மேலாளர் பாரதியாக தமன்னா நடித்துள்ளார். இது அவரது 50வது […]

22/02/2019 Dinesh R
டுலெட் விமர்சனம் சினிமா

டுலெட் விமர்சனம்

தாங்கள் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் உரசல், புது வீடு தேடி அலுக்கும் படலம், சொந்த வீட்டுக்கான விழைவு ஆகிய மூன்றையும் கடக்காதவர்கள், நூற்றுக்கு ஒரு சதவிகிதம் பேரே இருப்பார்கள். மீதி, தொண்ணூத்தொன்பது பேர்க்கு இந்த அனுபவம் வாய்த்திருக்கும். சொந்த ஊரில் பத்து வீட்டை வாடகைக்கு விட்டுச் சொகுசாய்க் காலாட்டிச் சம்பாதிக்கும் பாக்கியசாலிகள் கூட, என்றேனும் எப்போதாவது இன்னொரு ஊரில் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். ஆக, டுலெட் 99 சதவிகிதத்தினருக்கு நிகழ்ந்த, நிகழும் 100 சதவிகிதம் உண்மையான […]

22/02/2019 Dinesh R