32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 180)
புது வேகத்தில் இசையமைப்பாளர் சத்யா சினிமா

புது வேகத்தில் இசையமைப்பாளர் சத்யா

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலை பொழுது’, ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா – 2′ போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா, இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என […]

23/09/2017 Dinesh R
பிச்சுவாகத்தி விமர்சனம் சினிமா

பிச்சுவாகத்தி விமர்சனம்

இனிகோ பிரபாகர், யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகிய மூவரும் நண்பர்கள். ஓர் ஆட்டினைத் திருடி போலீஸில் மாட்டிக் கொண்டு, கும்பகோணம் காவல் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்து போடவேண்டும் என நீதி மன்றத்தில் தீர்ப்பாகிறது. அந்தக் காவல் நிலையத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரி, மூவரிடமும் தலா பத்தாயிரம் கேட்கிறார். கையில் பணமில்லாச் சூழலில், அவர்களின் நிலை என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. படத்தில் ஒரு கிளைக்கதையும் உண்டு. இரண்டாம் நாயகனான செங்குட்டுவனுக்கு அனிஷாவைப் பார்த்த […]

23/09/2017 Dinesh R
பயமா இருக்கு விமர்சனம் சினிமா

பயமா இருக்கு விமர்சனம்

பேயென்றால் ஜெய்க்கு பயம். ஆனால், அவன் மனைவி லேகாவே பேய் தானெனத் தெரிய வருகிறது. பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமான சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் ஜெய்யாகப் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். ஜெய்யின் மனைவி கர்ப்பமாக உள்ள சமயத்தில், மனைவியின் அம்மா உதவியாக இருப்பாரென அவரைத் தேடி இலங்கைக்குப் பயணமாகிறான் ஜெய். ‘பயமா இருக்கு’ என்ற தலைப்புப் போடப்பட்ட பின், படம் இலங்கையில் தான் தொடங்குகிறது. சின்ன […]

22/09/2017 Dinesh R
விஜய் சேதுபதியின் எடக்கு சினிமா

விஜய் சேதுபதியின் எடக்கு

எடக்கு எனும் படத்தை, நிமோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் K.பாலு தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் S.சிவன். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், யாரும் எதிர்பார்த்திட இயலாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். இப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் , “விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும். மேலும் இப்படத்தின் திரைக்கதையும் மிக சுவாரசியமாக அமைந்திருக்கிறது. ஏனெனில் இது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்ட படம். இப்படத்தில் விறுவிறு சண்டைக் […]

19/09/2017 Dinesh R
வசீகர வெண்பா சினிமா

வசீகர வெண்பா

தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த பெண் கிடைப்பது அதனினும் அரிது. இவை இரண்டும் இருந்தாலும் நன்கு நடிக்கக் கூடிய திறமை இருப்பது அரிதினும் அரிது. ஆனால் இப்படிப்பட்ட சகல திறமைகளையும் உள்ளடக்கி மிக அருமையான தமிழ்ப் பெயருடன் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள நாயகி தான் வெண்பா. சமீபத்தில் வெளியான காதல் கசக்குதையா படத்தில் முக்கால்வாசி நேரம் ஸ்கூல் யூனிஃபார்மிலேயே நடித்திருந்த வெண்பா இந்தக் கதையின் […]

19/09/2017 Dinesh R
பள்ளியும் காதலும் சாதியும் சினிமா

பள்ளியும் காதலும் சாதியும்

வி.கே.பி.டி.கிரியேஷன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிப்பில், வாசுதேவ் பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘பள்ளிப் பருவத்திலே’. பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். ‘கற்றது தமிழ்’ படத்தில் அஞ்சலியின் சிறு வயது கேரக்டரிலும், ‘காதல் கசக்குதய்யா’ நாயகி வெண்பா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமைய்யா, பொன்வண்ணன், ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ், பருத்தி வீரன் சுஜாதா ஆகியோரும் நடித்துள்ளனர். நடிகர் நாசர் பேசும்போது, “இன்றையச் சமூகச் சூழலில் இன்னும் சாதீயத்தின் பிரம்பால் […]

17/09/2017 Dinesh R
துப்பறிவாளன் விமர்சனம் சினிமா

துப்பறிவாளன் விமர்சனம்

ஒரு சிறுவனின் செல்ல நாய் துப்பாக்கிக் குண்டால் சுடப்பட்டு இறக்கிறது. அச்சிறுவன் இணையத்தில் ஒரு துப்பறிவாளரைத் தேடி, நாயைக் கொன்றவனைக் கண்டுபிடிக்கச் சொல்லி தன் சேமிப்பான என்னூத்தி சொச்சம் ரூபாயைத் தனியார் துப்பறிவாளரிடம் தருகிறான். அந்த வழக்கு, துப்பறிவாளர் கணியன் பூங்குன்றனை எங்கெல்லாம் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. முகமூடி படத்தின் ஹேங் ஓவர் முழுவதுமாக இயக்குநர் மிஷ்கினுக்கு விலகியதாகத் தெரியவில்லை. இந்தப் படத்தின் நாயகனும் சூப்பர் ஹீரோ. சகலகலா வல்லவன். தொழிற்முறை (!?) கொலைக்காரர்கள் […]

15/09/2017 Dinesh R
நீட் எனும் அவலட்சணம் சமூகம்

நீட் எனும் அவலட்சணம்

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று இப்போது அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்ந்திருக்கும் ஒரு மாணவச் செல்வத்திடம் நீட் கோச்சிங் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பிள்ளை படித்தது தமிழகத்தின் டாப் 10 பள்ளிகளில் (யார் சொன்னா – அவங்களே சொல்லிப்பாங்க) ஒன்றில். பதிலைக் கேட்டு நொந்தது தான் மிச்சம். 40 நாட்கள். வேதியியல், உயிரியலில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் திரும்பத் திரும்பத் படிக்கச் சொல்லிக் கொடுத்தார்களாம். இயற்பியலைப் படிக்கவே தேவையில்லையாம் (நெகடிவ் மார்க்கைத் தவிர்க்க அந்த […]

14/09/2017 Dinesh R
பயங்கரமான ஆளு – சஸ்பென்ஸ் த்ரில்லர் சினிமா

பயங்கரமான ஆளு – சஸ்பென்ஸ் த்ரில்லர்

பரிஷ்தா பிக்சர்ஸ் சார்பில் டி.கலியபெருமாள் தயாரிக்கும் படம் ‘பயங்கரமான ஆளு. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், ஹீரோவாகவும் நடிக்கிறார் அரசர் ராஜா. இவருக்கு ஜோடியாக ரிஷா நடிக்க, மற்றொரு ஹீரோயினாக சாரா நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் குறித்து இயக்குநரும் ஹீரோவுமான அரசர் ராஜாவிடம் கேட்ட போது, “நம் இந்திய திருநாடு […]

11/09/2017 Dinesh R
சீர்குலைவில் இருந்து தொடக்கம் தொழில்நுட்பம்

சீர்குலைவில் இருந்து தொடக்கம்

இசாகா (ISACA) – உலகளாவிய தொழில் வல்லுநர்களுக்கு, வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்றவாறு மாற்றம் பெற, உலக தர அறிவையும், நெட்வொர்க்கிங்கையும், தொழில் வளர்ச்சியையும் அறிமுகப்படுத்தி உதவுகிறது. 1969இல் நிறுவப்பட்ட இசாகா, 180 நாடுகளில் 1,40,000 தொழில் வல்லுநர்களைக் கொண்ட லாப நோக்கற்ற இயக்கம். இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் சைபர் செக்யூரிட்டி நெக்சஸ் (CSX), நிறுவனங்களை நிர்வகிக்கும் தொழில் வடிவமைப்பைக் கொண்ட கோபிட்டை (COBIT) முதலியவற்றையும் அளிக்கிறது இசாகா. இந்தியாவிலேயே சென்னையில் தான் முதன் […]

11/09/2017 Dinesh R
கதாநாயகன் விமர்சனம் சினிமா

கதாநாயகன் விமர்சனம்

தைரியசாலிக்கே பெண் என்று சொல்லிவிடுகிறார் கதாநாயகியின் தந்தை. நாயகனோ சாலையைக் கடக்கக் கூட தொடை நடுங்குபவன். அவன் பயத்தை மீறி எப்படி கதாநாயகன் ஆகிறான் என்பதே படத்தின் கலகலப்பான் கதை. தாசில்தார் ஆஃபீசில் அட்டெண்டராக சூரியும், ரெவன்யூ இன்ஸ்பெக்டராக விஷ்ணு விஷாலும் பணிபுரிகின்றனர். இருவரும் ஆறாம் வகுப்பில் பிரிந்த நண்பர்கள் என ஒரு காமிக்கல் ஃபிளாஷ்-பேக் காட்டப்படுகிறது. சூரியின் கதாபாத்திரத்தின் பெயர் அண்ணாதுரை; விஷ்ணு விஷாலின் பெயர் தம்பிதுரை. நாயகனின் நண்பர்கள் செய்யும் அதே வேலையைத்தான் சூரி […]

08/09/2017 Dinesh R
காதல் கசக்குதய்யா விமர்சனம் சினிமா

காதல் கசக்குதய்யா விமர்சனம்

காதலைச் சித்தரிக்கும் படங்கள், குறிப்பாக பதின் பருவத்துப் பெண்ணின் முதிர்ச்சியற்ற துணிகரமான காதலைச் சொல்ல முற்படுகையில், கதாநாயகியைக் கவர்ச்சியாகக் காட்டி ஒப்பேத்துவார்கள். ஆனால், குறும்பட இயக்குநரான துவாரக் ராஜா அந்தளவுக்குச் செல்லவில்லை. பள்ளிக்குச் செல்லும் பதின் பருவ மாணவிக்கு, இருபதுகளின் மத்தியில் இருக்கும் நாயகனின் மீது ஈர்ப்பு. பார்வையாளர்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாத வகையில் காட்சிகள் அமைத்ததற்காகவே அறிமுக இயக்குநரைப் பாராட்டலாம். அர்ஜூனாக துருவா நடித்துள்ளார். படம் முழுவதுமே தானேற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். கோமாவிலுள்ள தன் தாயின் […]

08/09/2017 Dinesh R
ஜுங்காவிற்கு ஆசைப்பட்ட விஜய் சேதுபதி சினிமா

ஜுங்காவிற்கு ஆசைப்பட்ட விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா வசூலில் மட்டும் வெற்றி பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களைத் திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்தத் தொழிலையே மீட்டெடுத்தது’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்குத் தினமும் ஃபோனிலும் நேரிலும் வாழ்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய கலைப்பயணத்தை அதேயளவிலான ஆர்வத்துடன் தொடர்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு […]

04/09/2017 Dinesh R
களத்தூர் கிராமத்து மிதுன் சினிமா

களத்தூர் கிராமத்து மிதுன்

செப்டம்பர் 15 அன்று, “களத்தூர் கிராமம்” எனும் படம் வெளியாக உள்ளது. இசைஞானி இளையராஜா அப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் நாயகன் மிதுன் குமார். சினிமா பின்னணி உள்ள அவரது குடும்பம், “ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ்” என்ற பேனரில் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், மகாநதி போன்ற படங்களைத் தயாரித்தவர்கள். தற்போது, மிதுன் “ஐராவத் என்டர்டெயின்மென்ட்ஸ்” எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அந்நிறுவனத்தின் மூலம், 16 […]

04/09/2017 Dinesh R