TrailerDinesh R
செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.
Trailer
தி வுமன் கிங் – அகோஜி படையின் வீர தீர சாகசம்
சரித்திர புகழ் மிக்க சாகச போர் காவியங்களைத் திரையில் வடிப்பதென்பது ஒரு சாமான்ய செயற்பாடன்று. இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில், ஆஃப்ரிக்க தேசமான தகோமாவில் (Dahomey) 1800 களில், அந்தத் தேசத்தைக் காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட அகோஜி (Agojie) என பேர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை ஒரு காவியமாகத் திரையில் கொண்டு வந்துள்ளனர். உயரிய உடை அலங்காரங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், அசர வைக்கும் போர் […]

அம்மு – உணர்ச்சிகரமான த்ரில்லர் படம்
ப்ரைம் வீடியோ, தனது முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்முவின் உலகளாவிய பிரீமியர் அக்டோபர் 19 அன்று வெளியிடப்படும் என அறிவித்தது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக, கல்யாண் சுப்ரமணியன் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸின் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளனர், சாருகேஷ் சேகர் எழுதி இயக்கியிருக்கும் இப்படம், துன்பங்களை எதிர்கொண்டு பீனிக்ஸ் பறவை போல எழும் பெண்ணின் கதையான ஒரு டிராமா த்ரில்லர் படமாகும். குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்ணாக இருந்து, அவளது […]

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ – தீபாவளி வெளியீடு
டான் படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘பிரின்ஸ்’. இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தைத் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக ‘பிம்பிலிக்கி பிலாப்பி’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான ‘ஜெஸ்ஸிகா’வும் […]

லவ் டுடே – ட்ரெய்லர்

டிமென்ஷியாவும், புத்தி க்ளினிக்கும்
உலகெங்கும், செப்டம்பர் மாதம் அல்சீமர் மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அல்சீமர் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்க, செப்டம்பர் 21-ஐ அல்சீமர் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் முதியவர்களைப் பராமரிக்கும், இந்தியத்தன்மை அதிகமுள்ள தன்னிறைவு (ஆத்மநிர்பர்) பெற்ற ஒருங்கிணைந்த மருத்துவ மாடலை வடிவமைத்துள்ளனர் புத்தி க்ளினிக் மருத்துவர்கள். அல்சைமர் நோய் டிமென்ஷியாவுக்கு மிகவும் பொதுவான காரணமாகும். மற்ற காரணங்களில் வாஸ்குலர் நோய், லெவி உடல்களுடன் கூடிய டிமென்ஷியா மற்றும் ஃப்ரன்டோ-டெம்போரல் டிமென்ஷியா ஆகியவை அடங்கும். மறதி நோய் என அறியப்படும் […]

வெந்து தணிந்தது காடு விமர்சனம்
தன்னைச் சுற்றி ஓர் அதிகார மையத்தை உருவாக்கிய எந்த ஒரு டானின் கதையை எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னால் ஒளிந்திருப்பது ஒரேயொரு விஷயம் தான். சர்வைவல் ஆப் தி பிட்டெஸ்ட். அதாவது, தக்கண தப்பிப் பிழைக்கும். அதிலேயும் நாம் கேட்டறிந்த பெரும்பாலான டானின் கதைகள் அடிமட்டத்தில் இருந்து கிளர்ந்து மேலே வந்தவனின் கதைகளாகத்தான் இருக்கும். வாழ்க்கையால் விரட்டப்பட்டு, சுற்றத்தால் கைவிடப்பட்டு, இனி ஆவதற்கு ஏதும் இல்லை என்ற கணத்தில் கத்தியைத் தூக்கியவன் எடுத்த முதல் பலியில் இருந்தே […]

கோப்ரா – In and Out பேட்டி | விக்ரம் | அஜய் ஞானமுத்து

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்
காதல், நெருக்கம், பாலினப்பண்பு முதலியவற்றை மையமாகக் கொண்டு ஓவியம் தீட்டுவதில் வல்லவரான 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆஸ்திரிய ஓவியர் குஸ்தாவ் க்ளிம்ட் (Gustav Glimt) -இன் மிகவும் புகழ்பெற்ற ஓவியமான The Kiss இலிருந்து படத்தின் ஃப்ரேம் தொடங்குகிறது. படத்தின் மையமும், காதல், நெருக்கம், பாலினப்பண்பு ஆகியவற்றைச் சுற்றியே! இனியனின் அறைச்சுவரில், ‘தி கிஸ்’ ஓவியமும், பின்னணியில், கறுப்பினப் பெண்மணியான நினா சிமோனின் (Nina Simone) பாடலும் ஒலிக்கிறது. பாடகியும், இசையமைப்பாளருமான நினா சிமோன் ஒரு […]

கோப்ரா விமர்சனம்
டார்கெட்டைக் குறி வைத்துவிட்டால், அதற்காக எவ்வாறாயினும் உருமாறி, கணித ஞானத்தைக் கொண்டு இலக்கைக் கச்சிதமாகத் தாக்கும் கான்ட்ராக்ட் கொலையாளிக்கு ‘கோப்ரா’ எனக் காரணப் பெயர் சூட்டப்படுகிறது. அதி ரகசியமாகச் செயற்படும் கோப்ராவின் திட்டங்கள் ஒரு ஹேக்கரால் இன்டர்போலுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. யார் அந்த ஹேக்கர், ஹேக்கருக்கும் கோப்ராவிற்கும் இடையே என்ன பிரச்சனை, ஹேக்கர் – கோப்ரா இருவரையும் ஏன் தொழிலதிபர் வேட்டையாட நினைக்கிறான் போன்ற கேள்விகளுக்கான பதிலே படத்தின் முடிவு. படத்தில் மூன்று கதாநாயகிகள். பாடல் காட்சிகளுக்கென்று நேர்ந்து […]

கோப்ரா ஸ்பெஷல் – கலாட்டா செய்யும் விக்ரம்

தி லெஜண்ட் – விமர்சனங்களைத் தகர்த்து விமரிசையான வெற்றி
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படமாகத் தயாரித்து, லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான ‘தி லெஜண்ட்’ திரைப்படம் ஐந்து வாரங்களைக் கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் படத்தில் நடிக்கிறார் என்றவுடன் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தையும் மீறிய ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லமால், சமூகச் சிந்தனையுடன் கூடிய […]

ஆஹாவில் ஜீவா தொகுத்து வழங்கும் கேமிங் ஷோ | சர்க்கார் வித் ஜீவா
ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரைத்தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவிகித பிரத்தியேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் தளங்களில் வலைதளத் தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை […]

“தேஜாவு தானே முக்கோண விதியும், தொடர்பியலும்!” – ஜீவி ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்
வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியான படம் ஜீவி-2. கடந்த 2019இல் வெளியாகிப் புதுமையான முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்ட ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. V.J.கோபிநாத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடித்த நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய வேடங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, ரமா, கருணாகரன் என முதல் […]

கோப்ரா – கணிதப் புதிர்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர்
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘கோப்ரா’ படத்தைத் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்திய அளவில் ரசிகர்களிடையேயும், பார்வையாளர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. கணிதப் புதிர்களை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களைப் புலனாய்வு பாணியில் கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் படம் என்பதால், ‘கோப்ரா’ படத்தை முதல் நாள் முதல் காட்சியில் காண்பதற்கான ஆர்வம் உண்டாகி […]