32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 86)
தேஜாவு விமர்சனம் சினிமா

தேஜாவு விமர்சனம்

தேஜாவு என்பது ஒரு ஃப்ரெஞ்ச் சொல். ஒரு நிகழ்வு, ஏற்கெனவே நிகழ்ந்தது போல் தோன்றினாலோ, அல்லது புதிதாய் ஓர் இடத்திற்குச் செல்லும்போது முன்பே அங்கு வந்திருப்பது போல் தோன்றினாலோ, அது தேஜாவு என அழைக்கப்படும். இப்படத்தில், ஒரு வருடத்திற்கு முன் நடந்த ஒரு கடத்தலை, மீண்டும் அதே போல் நிகழும்படி உருவாக்குகின்றனர். யார், ஏன், எதற்கு, எப்படி என்பதுதான் படத்தின் கதை. டிஜிபி மகள் பூஜா கடத்தப்படுகிறாள் என எழுத்தாளர் சுப்பிரமணி எழுதினால், அது அப்படியே நடக்கிறது. […]

22/07/2022 Dinesh R
மஹாவீர்யர் விமர்சனம் அயல் சினிமா

மஹாவீர்யர் விமர்சனம்

ஒரு ஃபேண்டசி கோர்ட் ரூம் டிராமாவைத் தயாரித்துள்ளார் நிவின் பாலி. எம். முகுந்தனின் கதையைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அப்ரீட் ஷைன். அனுமார் சிலையைக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட அபூர்ணாநந்தா எனும் சாமியார் தனக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். இது படத்தின் முதற்பாதி. விக்கல் நிற்காத ஸ்ரீ ருத்ர மகாவீர அக்ரசேனா மஹாராஜா, அவரது தளபதி வீரபத்திரன், தளபதியால் கடத்தப்பட்ட தேவயானி ஆகியோரது வழக்கு தற்கால நீதிமன்றத்தில் நடக்கிறது. இது படத்தின் இரண்டாம் பாதி. வழக்கம் போல், மலையாள […]

22/07/2022 Dinesh R
சிவி – 2 விமர்சனம் சினிமா

சிவி – 2 விமர்சனம்

ஷட்டர் (2004) எனும் தாய்லாந்து படத்தை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு சிவி எனும் படத்தை, கே. சுந்தர் தயாரிப்பில், கே.ஆர்.செந்தில்நாதன் இயக்கினார். மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து, Gonjiam: Haunted Asylum எனும் கொரியன் தொடரை மையப்படுத்தி சிவி – 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார் கே.ஆர்.செந்தில்நாதன். ஆர் மாஸ் ப்ரோடக்ஷன்ஸ் சார்பாக லலிதா கஸ்தூரி கண்ணன், சிவி-2 திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். ‘சிவி’ படத்தில் பேய் செய்த கொலைகளையும், அக்கொலைகள் நிகழ்ந்த மூடப்பட்டிருக்கும் ஷைன் மருத்துவமனையில் நிலவும் […]

22/07/2022 Dinesh R
மாயோன் – 25 நாட்களைக் கடந்த திரைமாயம் சினிமா

மாயோன் – 25 நாட்களைக் கடந்த திரைமாயம்

புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர த்ரில்லர் திரைப்படமாக வெளியான “மாயோன்” ரசிர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது. ஒரு திரைப்படம் ஒரு வாரம் முழுதாக ஓடினாலே மிகப்பெரிய வெற்றி என்று கொண்டாடப்படும் தற்போதைய தமிழ் சினிமாவில், மாயோன் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து, ரசிகர்களின் பேராதரவில் 4 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைத்து, வெற்றிகரமாகத் […]

22/07/2022 Dinesh R
கார்த்திகேயா 2 – மாய சாகசப் பயணத்திற்கு இட்டுச் செல்லும் படம் Teaser

கார்த்திகேயா 2 – மாய சாகசப் பயணத்திற்கு இட்டுச் செல்லும் படம்

பீப்பள் மீடியா ஃபேக்டரியும், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸும் இணைந்து வழங்கும் ‘கார்த்திகேயா 2’ திரைப்படம், 2014 ஆம் ஆண்டு வெளியான கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இது தெலுங்கு மொழியில் வரவிருக்கும் (5 மொழிகளில் டப் செய்யப்படுகிறது) ஒரு சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தினை இயக்குநர் சண்டூ மொண்டேட்டி எழுதி இயக்கியுள்ளார். T.G. விஸ்வ பிரசாத்தும் அபிஷேக் அகர்வாலும் இணைந்து தயாரிக்கின்றனர். நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, விவா ஹர்ஷா, ஆதித்யா […]

20/07/2022 Dinesh R
சீதா ராமம் – காஷ்மீரின் பனி படர்ந்த பின்னணியில் காதல் Songs

சீதா ராமம் – காஷ்மீரின் பனி படர்ந்த பின்னணியில் காதல்

நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சீதா ராமம்’ எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார். மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘சீதா ராமம்’ எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை […]

20/07/2022 Dinesh R
துரிதம் – இயக்குநர் ஹெச். வினோத்தின் சீடர் இயக்கிய படம் சினிமா

துரிதம் – இயக்குநர் ஹெச். வினோத்தின் சீடர் இயக்கிய படம்

இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை. ஆனால் முதன்முறையாக அந்தக் குறையைப் போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் ‘துரிதம்’. இயக்குநர் ஹெச்.வினோத்தின் சீடர் இயக்குநர் சீனிவாசன் துரிதம் படத்தை இயக்கியுள்ளார். ‘சண்டியர்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார். கதாநாயகியின் தந்தையாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக […]

19/07/2022 Dinesh R
வார்டு 126 – 4 கதாநாயகிகள் நடக்கும் ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் சினிமா

வார்டு 126 – 4 கதாநாயகிகள் நடக்கும் ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர்

SSB டாக்கீஸ் தயாரிப்பில் செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வார்டு 126’. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் ஆக இது உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, நாயகர்களாக மைக்கேல் தங்கதுரை மற்றும் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சோனியா அகர்வாலும், ஸ்ரீமனும் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.கே. சுரேஷ் குமார் ஒளிப்பதிவை […]

18/07/2022 Dinesh R
சிபிராஜின் ‘வட்டம்’ – சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கை Movie Posters

சிபிராஜின் ‘வட்டம்’ – சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கை

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் அடுத்ததாக, நடிகர் சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தினைப் பிரத்தியேகமாக நேரடித் திரைப்படமாக வெளியிடுகிறது சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்குக் கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘வட்டம்’ படத்தினை நேரடித் திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘வட்டம்’ […]

18/07/2022 Dinesh R
நதி – சமூக அவலங்களைச் சாடும் கமர்ஷியல் டிராமா சினிமா

நதி – சமூக அவலங்களைச் சாடும் கமர்ஷியல் டிராமா

மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் K. தாமரைசெல்வன் இயக்கத்தில், காதலையும் நட்பையும் மையமாகக் கொண்டு, சமூக அவலங்களைச் சாடும், ஒரு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “நதி”. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, ஜூலை 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. யூ-ட்யூப்பில் கோடங்கி எனும் பெயரில் விமர்சனம் செய்யும் நடிகர் வடிவேல் முருகன், “இந்தப் படத்தின் மூலம் கரு. பழனியப்பன் போன்ற ஒரு சகோதரர் […]

16/07/2022 Dinesh R
சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது சினிமா

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகைப் புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய […]

16/07/2022 Dinesh R
பா. ரஞ்சித்தின் சீயான் 61 சினிமா

பா. ரஞ்சித்தின் சீயான் 61

சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களைத் தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா, […]

16/07/2022 Dinesh R
நாயகனாகிறார் ரக்ஷன் சினிமா

நாயகனாகிறார் ரக்ஷன்

பிலியா என்டர்டெயின்மென்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க, இராகோ யோகேந்திரன் இயக்கத்தில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்புகழ் நடிகர் ரக்‌ஷன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் துவங்கியது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் தனது தனித்த, நகைச்சுவை நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த நடிகர் ரக்‌ஷன், நாயகனாகப் புதிய படத்தில் அறிமுகமாகிறார். உணர்வுபூர்வமான காதல், நட்பு, உறவுகளை மையமாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது. கலக்கப் […]

16/07/2022 Dinesh R
“எல்லாமே ஜாலி தான்” – கனா காணும் காலங்கள் Songs

“எல்லாமே ஜாலி தான்” – கனா காணும் காலங்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் “கனா காணும் காலங்கள்” தொடருக்காக, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் சிறப்பு ஆன்த்தம் பாடல், சோனி மியூசிக் யூடுயூப் தளத்தில் வெளியாகியுள்ளது. ‘கனா காணும் காலங்கள்’ இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசோடுகளுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. தலைமுறை தாண்டி ரசிகர்களை அசத்தி வரும், “கனா காணும் காலங்கள்” தொடரின் புதிய சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தொடர் அதன் ரசிகர்களுக்கு ஓர் ஆச்சரியமான இசை விருந்தை […]

16/07/2022 Dinesh R
“மாமனிதன் உங்களுக்கு நெருக்கமாகி விடுவான்” – விஜய் சேதுபதி சினிமா

“மாமனிதன் உங்களுக்கு நெருக்கமாகி விடுவான்” – விஜய் சேதுபதி

தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ஒளிபரப்பியாகியுள்ளது. இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாகக் கண்டுகளிக்கலாம். மாமனிதன் படம் ஓடிடியில் வெளியாவதையொட்டி, இப்படத்தின் நன்றி அறிவித்தலும், பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இயக்குநர் சீனு ராமசாமி, “கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது. காயங்களோடு இருப்பவனை விரட்டிக் கொத்தும் காக்கையைப் […]

15/07/2022 Dinesh R