Trailerஜோதி – ட்ரெய்லர்
செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.


தமிழ்ப் படங்களில் நாயகனாக நடிக்கவேண்டுமென ஆசைப்பட்டவர் ராம். ஆனால், ராம் பொத்தினேனியாக தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இருபது வருடக் காத்திருப்புக்குப் பிறகு, தமிழில், நாயகனாக அறிமுகமாகியுள்ளார் ராம். லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. அவரது இரண்டாவது இன்னிங்ஸிற்கான தொடக்கமாக இப்படம் அமையுமென எதிர்பார்க்கப்பட்டது. மருத்துவரான சத்யா, மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றலாகி வருகிறார். மதுரையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குரு எனும் ரெளடிக்கு எதிராகக் காவல்துறையில் புகாரளிக்கிறார் […]

Trance எனும் மலையாளப் படத்தைத் தமிழில் ‘நிலை மறந்தவன்’ என மொழிமாற்றி வெளியிட்டுள்ளனர். ட்ரான்ஸ் என்றால் பித்து நிலை எனச் சொல்லலாம். பித்து நிலையில், மனிதன் தன்னிலை மறந்து, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. அப்படி மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்யும் ஒரு வியாபார யுக்தியை ஜீசஸின் பெயரால் உருவாக்குகின்றனர் வில்லன்கள். விட்டில் பூச்சிகளாய் அதில் தன்னிலை மறந்து விழும் மக்களைக் கொண்டு எப்படிக் கோடியில் புரளுகின்றனர் என்பதே படத்தின் […]

குழந்தைகளுக்கான படம். பிரபு தேவா பூதமாக நடிக்க, பூதத்தை விடுவிக்கும் சிறுவனாக அஷ்வந்த நடித்துள்ளான். அஷ்வந்திற்கு ஒரு விபத்தில் திக்குவாய் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் கிண்டல்களுக்கு உள்ளாகும் நிலையில், சமணர் மலை அருகில் ஒரு பொம்மையில் அடைப்பட்டு இருக்கும் சிலையில் இருந்து கர்கிமுகி எனும் பூதத்தை விடுவிக்கிறான். சாபம் பெற்று பொம்மையாய் மாறிய பூதம், விடுபட்டதிலிருந்து 48வது நாளில், அஷ்வந்த் மந்திரம் சொன்னால் மட்டுமே, பூதத்தால் தன் சொந்த கிரகத்திற்குச் செல்ல முடியும். ஆனால், பூதமே அந்த […]

இரவை விடவும், இரவின் நிழலை விடவும், அடர்த்தியான இருண்மையைக் கொண்டுள்ளது ‘இரவின் நிழல்’ திரைப்படம். “இது மென்மையான மனம் கொண்டோருக்கான படமில்லை” என மேக்கிங் வீடியோவில் எச்சரிக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 92 நிமிட கால அளவைக் கொண்ட படம் தொடங்குவதற்கு முன், 30 நிமிட மேக்கிங் வீடியோ போடுகிறார் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். உலகத்திலேயே முதல் முறையாக சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் என்ற முறையில் தமிழர்கள் எல்லாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். புதிய முயற்சிக்கான […]

முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி அசத்தி விடும் இயக்குநர் கெளதம் ராமசந்திரன், கடைசி ஃப்ரேம் வரை நம் கவனம் கலையாமல் பார்த்துக் கொள்கிறார். இந்த வருடத்தின் மிகச் சிறப்பான படங்களில் ஒன்றாகக் கார்கி புகழடையும். பள்ளி ஆசிரியையான கார்கியின் தந்தையைக் காவல் துறை கைது செய்துவிடுகிறது. சிறுமி மீதான பாலியல் வன்முறை வழக்கு என்பதால், காவல்துறையினர் ரகசியமாகவும் கவனமாகவும் இருக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், பத்திரிகைத் துறையைச் சேர்ந்த பெண் ஒருவரால், விஷயம் கசிந்து, கார்கியின் குடும்பம் […]

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஜோதி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஃபோரம் மாலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவரான R.K.செல்வமணி, செயலாளர் R.V.உதயகுமார், நடிகர் ரவி மரியா, இயக்குநர் நந்தா பெரியசாமி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆகியோருடன் படக் குழுவினரும் கலந்து கொண்டனர். விழாவில், ‘ஜோதி’ படத்தில், பத்மபூஷன் KJ.ஜேசுதாஸ் பாடிய ‘அன்பின் வழி’, பல்ராம் பாடிய ‘ஆரிராரோ’, கார்த்திக் பாடிய ‘போவதெங்கே’ […]

அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P. பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N. ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதைப் போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேன்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். ஜூலை 15 ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் N. […]

விக்ரம் திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜூலை 8, 2022 அன்று பிரத்தியேகமாக வெளியானது. வாரயிறுதியில் அதிக பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற புதிய சாதனையையும் விக்ரம் படம் படைத்துள்ளது. இந்த மெகா ஆக்ஷன் திரைப்படத்திலிருந்து அவர்களுக்குப் பிடித்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க பார்வையாளர்களுக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு இது. கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத்து இயக்கத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் […]

உறியடி விஜய் குமார், ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார். இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார். கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்ஷன், காதல், கலந்த குடும்பப் பாங்கான திரைப்படமாகவும், ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாகத் தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். […]

ஜீ5 தளம், இந்த ஆண்டின் மிகவும் கொண்டாடப்பட்ட தமிழ்க் குடும்பப் பொழுதுபோக்கு படமான ‘வீட்ல விசேஷம்’ படத்தை, ஜூலை 15, 2022 முதல் வெளியிடுகிறது. ‘பதாய் ஹோ’ எனும் ப்ளாக்பஸ்டர் ஹிந்தித் திரைப்படத்தின் அதிகாரபூர்வமான தழுவலான இப்படத்தில், ஆர்ஜே பாலாஜி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் NJ சரவணனுடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு நடுத்தர வயது தம்பதி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் […]

‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ‘கோப்ரா’ படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடையச் செய்தனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து, “நான் ‘ஏழாம் அறிவு’ படத்தில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றியபோது, அதன் தயாரிப்பாளரான உதயநிதி […]

‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது. இயக்குநர் அஜ்ய ஞானமுத்து, “இர்ஃபான் பதானைச் சந்தித்து கதையைச் சொன்னபோது, ‘என்னால் நடிக்க முடியுமா?’ எனக் கேட்டார். ‘உங்களால் முடியும்’ என்று நம்பிக்கை அளித்தேன். அத்துடன் அவருக்காகத் தமிழ் மொழி பயிற்சியாளர் ஒருவரை நியமித்து, தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்பித்தோம். உடன் நடிப்பு பயிற்சியையும் […]

‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், […]

ஆர்ட்சீ மீடியா ப்ரொடக்ஷன் மற்றும் இந்தோ – சைனீஸ் கோ ப்ரொடக்ஷன் நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘லட்கி (Ladki)’. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் “பொண்ணு” என்ற பெயரில் வெளியாகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை பாத்திரத்தில், சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ராம் கோபால் […]
தேடலை தொடங்க குறைந்தபட்சம் 3 எழுத்துக்களை தட்டச்சு செய்யவும்.
உங்கள் ஊர், கிராமம் அல்லது பகுதியில் நடந்த சம்பவங்கள், விபத்துக்கள், திருவிழாக்கள் அல்லது பொதுப் பிரச்சனைகளை எமது செய்திப் பிரிவுக்கு உடனே பகிருங்கள்.
முக்கிய பிரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் உங்கள் திரையில் பெற அனுமதி வழங்கவும்.
