கோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம்
சந்திரமுகி, காஞ்சனா, மாயா, டிமான்ட்டி காலனி என தமிழ்த் திரையுலகம் டிசைன் டிசைனாகப் பேய்களை மார்க்கெட்டில் இறக்கிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஹாலிவுட்டில் இருந்து சமீபத்தில் கால் பதித்திருக்கும் பேய்க் கதைதான் இந்த கோஸ்ட் பஸ்டர்ஸ். இது இந்த (GHOST BUSTERS) வரிசையில் மூன்றாவது படம் என்றபோதும் மற்ற படங்களைப் பற்றிய முன்கதைச் சுருக்கங்கள் இல்லாமலே நமக்குப் புரிகிறது.
கொலம்பியா யுனிவர்சிட்டியில் பேராசிரியராகப் பணிபுரியும் எரினைச் சந்திக்க ஒருவர் வருகிறார். அவர் கையில் எரினும் அபியும் சேர்ந்து எழுதிய புத்தகத்தின் நகல் இருக்கிறது. இந்தப் புத்தகத்தை காட்டி தன் வீட்டில் பேய் இருப்பதாகவும், அதை விரட்ட எரின் உதவ வேண்டும் என்றும் கேட்கிறார். தான் அந்தப் புத்தகத்தை எழுதவே இல்லை என்று மறுக்கும் எரின் ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக் கொள்கிறார். ஏன் மறுத்தார் என்ற ஃபிளாஷ் பேக்கிற்கு எல்லாம் செ...