Shadow

அயல் சினிமா

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மீண்டும் ஒரு அதகள சாகசத்தோடு காட்டுக்குள் பயணம் மேற்கொண்டுள்ளனர் ராக் & கோ. இம்முறை மேலும் கலகலப்பிற்கு உத்திரவாதமளித்துள்ளனர். எட்டி (Eddie) எனும் முதியவர் பாத்திரம் ஒன்று வருகிறது படத்தில். இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ள அப்பெரியவருக்கு, ஜுமான்ஜி விளையாட்டுக்குள் ஆஜானபாகு ராக்கின் உருவம் கிடைக்கிறது. அந்தப் பெரியவரின் மனநிலைக்கு ஏற்றவாறு, ராக்குடைய ப்ரேவ்ஸ்டோனின் முக பாவனைகள் மாறுவது காமிக்கலாக ரசிக்கும்படி உள்ளது. படத்தில் இன்னொரு ரசனையான கேரக்டர், திருடி மிங் ஃப்ளீட்ஃபூட் ஆகும். ஆவ்க்வாஃபினா எனும் அந்த நடிகை, ஸ்பென்சர் மிங் வடிவத்தை ஏற்கும் பொழுதும், பின் முதியவர் எட்டி அவ்வடிவத்தை எடுக்கும் பொழுதும் நல்ல வேறுபாடு காட்டியிருந்தார். திரையரங்கில் குழந்தைகள் ரசித்து மகிழும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நெருப்புக்கோழிகள் துரத்தும் பொழுது தப்பிக்கும் சாகசம், நகரும...
சார்லிஸ் ஏஞ்சல்ஸ் விமர்சனம்

சார்லிஸ் ஏஞ்சல்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கெலிஸ்டோ எனும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை ஆயுதமாக மாற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், அவை திருடப்படுகின்றன. அது தீயவர்களின் கையில் சிக்காமல் தடுக்கின்றனர் சார்லிஸ் ஏஞ்சல்ஸ். தொலைக்காட்சித் தொடராகத் தொடங்கப்பட்ட பொழுது, கவர்ச்சியில் தாராளமாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. 2000 இலும், 2003 இலும், இத்தொடர் படமாக எடுக்கப்பட்ட பொழுது கேமரூன் டயஸ், ட்ரூ பேரிமோர், லூசி லியோ ஆகியோரையும் கூடக் கவர்ச்சிக்கென சில காட்சிகளில் பயன்படுத்தியிருந்தனர். 'இப்படத்தில் அத்தகைய குறைகள் இருக்காது' என இயக்குநர் எலிசபெத் பேங்க்ஸ் உறுதியளித்திருந்தாலும், படத்தின் தொடக்கக் காட்சிகளில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெண் இயக்குநர் என்பதால், ஒரு பெண்ணின் பார்வையில், ஏஜென்ட்களாக இருப்பதின் சங்கடங்கள் போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். தயாரிப்பாளர்களில் ஒருவராகக் களமிறங்கியதோடு, திரைக்கதையையும் எழுதியுள்ளார...
சார்லீஸ் ஏஞ்சல்ஸ் 2019

சார்லீஸ் ஏஞ்சல்ஸ் 2019

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
இவான் கோஃப் மற்றும் பென் ராபர்ட்ஸ் இணைந்து 1976-இல் உருவாக்கிய 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' என்கிற தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலமானது. அதன் அடிப்படையில் 2000-இல் அதே பெயரில், 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' என்கிற திரைப்படத் தொடர் துவங்கியது. ஆக்ஷனும் நகைச்சுவையும் கலந்த அத்திரைப்படத்தின் திரைக்கதையமைப்பு, தொலைக்காட்சித் தொடரின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருந்தது. சார்லஸ் டவுன்சீட் என்கிற முகம் தெரியாத ஒரு நபர், தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்யும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் பிரதானமாகப் பணிபுரிபவர்கள், தேவதைகள் போன்ற மூன்று பெண்கள். புலனாய்வுத் திறனிலும், ஆண்களுக்கு நிகராகச் சண்டையிடுவதிலும்வல்லவர்கள். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு, 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் த்ராட்டல் (Charlie's Angels: Full Throttle)' படமும் வெளியாகி வெற்றியும் பெற்றது. தற்போது, நீண்ட இடைவெளிக்குப் ப...
ஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்

ஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன் (Frozen ) படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில் மிகப்பெரும் தமிழகப் பிரபலங்கள் இணைகிறார்கள். நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான எல்சா பாத்திரத்திற்கு தமிழில் பின்னணி குரல் தந்துள்ளார். ஒரு பாடலையும் பாடியுள்ளார். தமிழின் பிரபல பாடலாசிரியாக விளங்கும் தளபதி விஜயின் சர்கார், பிகில் படங்களுக்கு பாடல் தந்த பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்குத் தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார். படத்தின் மிகப்பிரபல கதாபாத்திரமான ஓலஃப் பாத்திரத்திற்கு காமெடியில் கலக்கும் சத்யன் பின்னணி குரல் தந்துள்ளார். குணச்சித்திர நடிப்பில் கலக்கும் திவ்யதர்ஷிணி (விஜய்...
ரேம்போ: லாஸ்ட் பிளட் விமர்சனம்

ரேம்போ: லாஸ்ட் பிளட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பழி வாங்கும் வெறியில், இறுதி ரத்தத்தைத் தாராளமாகச் சிந்த விட்டுள்ளார் ரேம்போ. அதீத வன்முறைக் காட்சிகள் உள்ளதால், A சான்றிததழ் அளித்துள்ளனர். ரேம்போவின் தோழி மரியாவின் பேத்தியான கேப்ரியல், பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மெக்சிகோ கடத்தல் குழுவினரிடம் சிக்கிக் கொள்கிறார். கேப்ரியலைக் காப்பாற்ற மெக்சிகோ செல்கிறார் ரேம்போ. அந்தக் குழுவிடம் இருந்து கஷ்டப்பட்டு மீட்டு வருகையில், ஓவர்-டோஸாக போதை மருந்து செலுத்தப்பட்டதால் வழியிலேயே கேப்ரியல் இறந்துவிடுகிறார். பழி வாங்கும் வெறியில் சிவக்கும் ரேம்போ, மெக்சிகோ கடத்தல் குழுவை, அரிசோனாவில் இருக்கும் தன் வீட்டிற்கு வர வைத்து, கொலைவெறித் தாக்குதல் தொடுத்து, அக்குழுவை நிர்மூலம் செய்வதுதான் படத்தின் கதை. சோர்வான, வயோதிக சில்வஸ்டர் ஸ்டலோன். குதிரை சவாரி செய்து காலத்தைக் கழிக்கும் அந்த முதியவரின் ஒரே நம்பிக்கையான கேப்ரியலை இழந்ததும், சீற்றமட...
சாஹோ – 4 நாட்களில் 330 கோடி வசூல்!

சாஹோ – 4 நாட்களில் 330 கோடி வசூல்!

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
இந்திய சினிமாவின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 330 கோடியை 4 நாட்களில் குவித்து புது சாதனை படைத்திருக்கிறது பிரபாஸின் சாஹோ. தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாததால், வசூலில் இங்கே சற்றே சுணக்கம் நிலவுகிறது. ஆனால், இந்திய அளவில் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்தியாவிற்கே ஒரு வழி என்றால், தமிழகத்திற்கு மட்டும் தனி வழி என்பதைப் பாராளுமன்றத் தேர்தலில் நிரூபித்தது போல், சாஹோ பட வசூலிலும் நிரூபித்துள்ளது. வெளியான முதல் நாளிலேயே 100 கோடியைக் கடந்து சாதனை படைத்த சாஹோ படம், இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியைக் கடந்தது. வசூலில் புயலாய்ப் பாய்ந்து, இந்தியாவில் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் சாதனையை எளிதாய் முறியடித்தது. விநாயகர் சதுர்த்தி தினமான நேற்றைய திங்கட்கிழமையிலும் 14.20 கோடியைக் குவித்துள்ளது. வெளியான 4 நாட்களில் இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் தகர்த்தெறிந...
ரேம்போ சில்வஸ்டர் ஸ்டலோனின் ‘லாஸ்ட் பிளட்’

ரேம்போ சில்வஸ்டர் ஸ்டலோனின் ‘லாஸ்ட் பிளட்’

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
1972 ஆம் ஆண்டு ஜான் மோரெல் என்பவர் எழுதிய நாவலான ஃபர்ஸ்ட் பிளட் (First Blood)-ஐத் தழுவி 1982 ஆம் ஆண்டு, அதே பெயரில் ஃபர்ஸ்ட் பிளட் படம் வெளிவந்தது. கடுமையான வியட்நாம் போரில் பங்கு கொண்டு உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்ட நிலையில் ஒரு சிறிய வட்டத்திற்குள் தனது வாழ்வினை நடத்தி வரும் ஜான் ரேம்போ என்கிற ஒரு தனிமனிதனின் தனியானதொரு போராட்டமே அப்படத்தின் அடிப்படை கதைக்கரு. வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் மூன்று படங்கள் வெளியாகின. அவை முறையே, ரேம்போ: ஃபர்ஸ்ட் பிளட் 2 (1985), ரேம்போ 3 (1988), ரேம்போ (2008)Rambo (2008 ) ஆகும். இவ்வனைத்துப் படங்களுமே வசூலில் சாதனை புரிந்தன என்கிற போதிலும் இரண்டாவது தொடர் படம் மட்டுமே 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துப் பெரிய சாதனையை உருவாக்கியது. இதுவரை வெளிவந்த 4 தொடர் படங்களின் மொத்த வசூல் 727 மில்லியன் அமெரிக்க...
சாஹோ விமர்சனம்

சாஹோ விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சாஹோ என்றால் 'வெற்றி உனதே!' எனப் பொருள்படும் என பிரபாஸ் பேட்டியில் கூறியுள்ளார். எந்த மொழியில் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் சித்தாந்த் நந்தன் சாஹோ என்பதே படத்தின் தலைப்பிற்கான காரணம் என முடிவுக்கு வந்துவிடலாம். இந்திய அரசாங்கத்தின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டுக்கூடிய ராய் எனும் மிகப் பெரும் தொழிலதிபர் கொல்லப்படுகிறார். அவரை யார் கொன்றார்கள், ராய் வகித்த பதவிக்கு எவரெல்லாம் ஆசைப்படுகிறார்கள், ராயிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் என்னானது என்பதுதான் படத்தின் கதை. கே.ஜி.எஃப், லூசிஃபர் போன்ற படங்கள் தமிழ் மார்க்கெட் மீது குறி வைத்து மேக்கிங்கில் மெனக்கெட, 'பாகுபலி பிரபாஸ் நடித்த 350 கோடி ரூபாய் பட்ஜெட்டுடைய படம்' என்றால் மட்டும் போதாதா என்ற மெத்தனத்துடன் களமிறங்கியுள்ளார் இயக்குநர் சுஜீத். படத்தின் தொடக்கம் ஓர் எதிர்பார்ப்பைத் தூண்ட...
தி ஆங்ரி பேர்டஸ் மூவி 2 விமர்சனம்

தி ஆங்ரி பேர்டஸ் மூவி 2 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
எதிரிகளான பறவைகளும் பன்றிகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து, பறவைத் தீவையும், பன்றித் தீவையும் அழிக்க நினைக்கும் கழுகுத் தீவின் ஜெட்டாவிடமிருந்து எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி முதற்பாகத்தையும் விட அதிக கலகலப்புக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் துரோப் வேன் ஆர்மன். படம் கதையிலும், கலகலப்பிலும் மட்டும் கவனம் செலுத்தாமல், கதாபாத்திரங்களின் குண இயல்பையும் கணக்கில் கொண்டுள்ளதுதான் முதற்பாகத்தை விடவும் ஈர்க்கக் காரணம். ‘பறவைத் தீவைக் காக்கும் சூப்பர் ஹீரோ’வாக தான் என்றுமே புகழப்பட வேண்டும் என நினைக்கிறது ரெட்; பகையை மறந்து அமைதி ஒப்பந்தத்திற்குத் தூது விடுகிறது பன்றித் தீவின் லியானார்டோ; தன் பயந்த சுபாவத்தை மறைத்து ‘மைட்டி ஈகிள்’ என்ற பெயர் மட்டுமே போதுமெனத் தனிமையில் வாழ்கிறது ஈத்தன் கழுகு; கல்யாணத்தன்று பயந்து ஓடிவி...
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் விமர்சனம்

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
லியானார்டோ டி காப்ரியோ, பிராட் பிட் என ஹாலிவுட்டின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம். அதை விட ஈர்ப்பான விஷயம், இந்தப் படத்தின் இயக்குநர் க்வென்டின் டாரன்டினோ என்பதேயாகும். ஹாலிவுட்டில் 1969 இல் நடக்கின்ற பீரியட் ஃபிலிம். டைட்டானிக் நாயகன் லியானார்டோ சொன்னது போல், ’இப்படம், 60 களின் ஹாலிவுட்க்கு டாரன்டினோ எழுதிய காதல் கடிதம்’ என்பதே சரி. செம கிளாஸான படம். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் ரிக் டால்டன் தனது இறங்குமுகத்தில் உள்ளார். அவரது உற்ற நண்பரான க்ளிஃப் பூத், ரிக்கிற்கு சண்டைக் காட்சிகளில் டூப் போடுகிறவர். ரிக் டால்டனின் பக்கத்து வீட்டுக்காரராக ரோமன் பொலான்ஸ்கியும், அவரது மனைவி ஷரோன் டேட்டும் வசிக்கின்றனர். இவ்விடத்தில் ஒரு செய்தி: உலகை உலுக்கிய கொடூரமான மரணங்கள் பட்டியலில், ஹிப்பிகளால் கொலையுண்ட மிக அழகான நாயகியான ஷரோன் டேட்டின் வழக்கும் ஒன்று....
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஆக்ஷன் பிரியர்களைக் குறி வைத்து, எந்த லாஜிக்கையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் அக்மார்க் ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படம். ஸ்னோ ஃப்ளேக் எனும் வைரஸைத் தேடி, இட்ரிஸ் எல்பா அட்டகாசமாக பைக்கில் வருகிறார். வளைந்து, நெளிந்து, ஒரு செல்லப்பிராணி போல் சொன்னதைச் செய்யும் வில்லனின் அந்த பைக் செம சூப்பராக உள்ளது. வில்லனிடம் இருந்து வைரஸைக் காப்பாற்ற, நாயகி வனேஸா கிர்பி அதைத் தனக்குள் செலுத்திக் கொள்கிறார். வில்லனின் கையில் அந்த வைரஸ் கிடைக்கும் முன், அதை மீட்க ராக்கும், ஜேஸன் ஸ்டாத்தமும் களத்தில் குதித்து ஆக்ஷன் அதகளம் செய்கின்றனர். முக்கியமாக, க்ளைமேக்ஸில் சாமோ (Samoa) தீவுகளில் நடக்கும் சண்டை செம ஜாலியாகவும், சீட் நுனியில் அமரச் செய்யும் அற்புதமான ஆக்ஷனாகவும் உள்ளது. ஹெலிகாப்டரைப் பறக்க விடாமல், சங்கிலியால் பிணைத்து, ஒற்றுமையாகச் செயற்பட்டு வில்லனைக் கதி கலங்க வைக்கும் காட்சி அட...
தி லயன் கிங் விமர்சனம்

தி லயன் கிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
1994 இல் வெளியான 'தி லயன் கிங்' படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்கள், சில வருடங்களிலேயே தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். டிஸ்னி ஸ்டியோஸின் வரலாற்றிலேயே, இப்படம் ஒரு மைல்கல். இப்படத்தைப் பார்த்த அத்தனை பேரையுமே, இசையால், அனிமேஷனால், 'ஹகுனா மடாடா (எதற்கும் கவலைப்படாதே)' எனும் உயரிய சித்தாந்தாத்தாலும் கொள்ளை கொண்டது. அந்தப் படத்தை நினைத்தாலே ஒரு மகிழ்ச்சியான சிலிர்ப்பு ஏற்படும். சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின், அப்படம் 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 2016 இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தி ஜங்கிள் புக் குதூகலத்தில், டிஸ்னி இப்படத்தைப் பிரம்மாண்டமாய்த் தயாரித்து வெளியிடுகிறது. அதுவும் 'டிஸ்னி இந்தியா', நேரடியாகத் தமிழிலேயே 'டப்' செய்து வெளியிட்டிருப்பது மேலும் சிறப்பு. வில்லன் சிங்கம், ராஜா சிங்கத்தைக் கொன்று, குட்டி சிங்கத்தையும் கொல்...
உலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா

உலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் தொடர் படங்களின் மொத்த வசூல் 500 கோடி அமெரிக்க டாலர்கள். அதிக வசூல் செய்த தொடர் படங்களின் வரிசையில் 9 ஆம் இடத்தில் உள்ளது. 2015 இல், பால் வாக்கரின் மறைவுக்குப் பின் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 படத்துக்குத் தமிழகத் திரையரங்களில், அவரது அறிமுக காட்சிக்குக் கிடைத்த ஆரவார ட்ரிப்யூட்டே இத்தொடரின் புகழுக்குச் சான்று. வயது வரம்பின்றி எல்லா வயதினரும் பாரபட்சமின்றிக் கண்டு ரசிக்கத்தக்க ஆக்ஷன் காட்சிகள்தான் இத்தொடர்படங்களின் சிறப்பம்சம். சட்ட விரோதமான முறையில் பைக் மற்றும் கார் சேஸிங் நடத்தி அதை ஒரு சூதாட்டமாக மாற்றிவிடும் கும்பல் பற்றிய படமாகத் தொடங்கி, அடுத்தடுத்த தொடர்களில், சேஸிங் காட்சிகள் தவிர அதிரடி ஆக்ஷன் சம்பவங்களை ஒருங்கிணைத்து, உலவு பார்த்து பயங்கர சதிகளை முறியடிக்கும் பலம் மிக்க சூப்பர் ஹீரோக்கள் தொடராக (Franchise) ஆக ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் உருமாறிவிட்டன...
தி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்

தி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் - ஆக்ஷன் படமான 'தி லயன் கிங்' படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். தி லயன் கிங் படத்தின் தமிழ்ப் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த், ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினர். “1994 ஆம் ஆண்டு, 2டி அனிமேஷனில் வெளியான திரைப்படத்தின் புதிய பதிப்பு தான் 'தி லயன் கிங்'. எங்கள் டிஸ்னி நிறுவனத்துக்கு இது ஒரு ஸ்பெஷலான படம். இது குடும்ப உணர்வுகளைப் பேசும் படம். கதை சொல்லும் விதம் தனித்துவமாக இருக்கும். தந்தை, மகன் பாசம் தான் படத்தின் கரு. இந்திய மக்கள் பார்த்து மகிழ அவரவர் மொழிகளில் திரைப்படத்தை வெளியிடும் முய...