Shadow

சினிமா

ஜெய் பஜ்ரங்பலி: தேவிஸ்ரீ பிரசாதின் அனுமன் சாலிசா

ஜெய் பஜ்ரங்பலி: தேவிஸ்ரீ பிரசாதின் அனுமன் சாலிசா

ஆன்‌மிகம், சினிமா
உலகப் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதையான பத்மஸ்ரீ மேண்டலின் U.ஸ்ரீனிவாசனின் 50-வது பிறந்த நாள் (ஃபிப்ரவரி 28) நினைவாக அவரது சிஷ்யனும் பிரபல இசையமைப்பாளருமான தேவி ஸ்ரீ பிரசாத் தனது குருவிற்குப் பிடித்த கடவுளான அனுமனைப் போற்றும் அனுமன் சாலிசா பாடலை ஃப்யூஷனாக உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலுக்கு ஜெய் பஜ்ரங்பலி எனவும் பெயரிட்டுள்ளார். இந்தப் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து இந்தியாவின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகரான ஷங்கர் மகாதேவன் அவர்களும் பாடியுள்ளார். மேலும் கிராமி விருது பெற்ற பத்ம பூஷன் விக்கு விநாயகரம், ட்ரம்ஸ் சிவமணி, கஞ்சிரா செல்வ கணேஷ், மேண்டலின் U.ஸ்ரீனிவாசன் அவர்களின் சகோதரரான பிரபல மேண்டலின் கலைஞர் U.ராஜேஷ் ஆகியோரும் இந்தப் பாடலுக்காக ஒன்றிணைந்து பணி புரிந்துள்ளனர். இந்தப் பாடலை, ஃபிப்ரவரி 28 அன்று மாலை, சென்னையில் உள்ள மியூசிக் அகாடெமியில் நடைபற்ற 'தி கிரேட் மேண்டலின் ஷோ (The...
தடம் விமர்சனம்

தடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எழிலும் கவினும் ஓருரு இரட்டையர்கள் (Identical twins). அவர்களில் ஒருவர் கொலையாளி என்பதற்கான புகைப்படத் துப்பு காவல்துறையினர்க்குக் கிடைக்கிறது. அவ்விரட்டையரில் கொலையாளி யாரென்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிக்க படாதபாடுபடுகின்றனர். கொன்றது யார், ஏன் கொன்றார், அவர் அழிக்காமல் விட்ட தடம் எது என்பதன் தான் படத்தின் கதை. கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யத் தொடங்கும் முதல் ஃப்ரேமிலேயே நம்மைத் திரைக்குள் இழுத்துவிடுகிறார் மகிழ் திருமேனி. சிகரெட் பிடிக்கும் சேச்சி; பெண்களின் மார்புக்கச்சைக்கும், கொல்கத்தா ஹெளரா பாலத்துக்கும் ஒரே தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது எனும் நாயகனின் இன்ஜினியரிங் மேஜிக் வசனம் எனப் படத்தின் முதல் 35 நிமிடங்களுக்குக் கதைக்குள் போகாமல் காட்சிகளாலும் பாடல்களாலும் மட்டுமே ரசிக்க வைக்கிறார். படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்தின் ரசனையான எடிட்டிங்கே அதற்குக் காரணம். ஒரு கொலை நடந்து, இர...
இயக்கி – கால்டாக்சி ஓட்டுநர்களின் வலி

இயக்கி – கால்டாக்சி ஓட்டுநர்களின் வலி

சினிமா, திரைத் துளி
நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் டோரா. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் ஷான். அவர் தற்பொழுது, “இயக்கி“ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். கால் டாக்சி ஓட்டுபவர்களின் நெகட்டிவான பக்கங்களை மட்டுமே இது வரை நமக்குக் காட்டி அவர்களின் மேல் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், ஷானின் "இயக்கி" குறும்படம் அதைத் தகர்த்து அவர்களும் நம்மில் ஒருவர் தான், அவர்களுக்கும் சோகமான பக்கங்கள் இருக்கிறது என்கிற நிதர்சனமான உண்மையை உரக்கச் சொல்கிறது. 26 நிமிடத்துக்குள் ஒரு ஓட்டுநரின் வலி மிகுந்த வாழ்க்கையை உணர்த்தியுள்ளார் ஷான். "இந்தக் கதையைப் படமாக்குவது என்று முடிவெடுத்தவுடன் கால் டாக்சி ஓட்டுநரானேன்.500 க்கும் மேல் டிரிப் அடித்து அனுபவத்தைக் கற்றுக் கொண்டு அதற்கு மேல் படமாக்கினேன். பட்டம் பெற்றுவிட்டு, உணவு, உறக்கம் எல்லாவற்றையும் இழந்து குடும்பத்திற்காக அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக...
ஸ்ரீதேவியின் மாம் – சீனாவில் வெளியாகிறது

ஸ்ரீதேவியின் மாம் – சீனாவில் வெளியாகிறது

சினிமா, திரைத் துளி
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகையாகப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. அவர் தனது வழக்கம் போல், 2017 இல் வெளிவந்த மாம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார். அது அவருக்குத் தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அவரது இந்த 300வது திரைப்படமானது மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. அத்துடன் திரைத்துறையில் அவரது 50வது ஆண்டில் தைரியமான மற்றும் அசாதாரணமான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்ததற்கு மிகப்பெரிய பாராட்டுகளையும் திரைத்துறையில் பெற்றார். போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் Zee Studios வெளியிட்ட இந்தப் படம் தற்போது சீனாவிலும் வெளியாக இருக்கிறது. சிறந்த பின்னணி இசைக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்த இந்தப் படம், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி சீனாவில் வெளியிடப்பட உள்ளது. இது குறித்து தயாரி...
மாயநதி – பவதாரிணி இசையில் ஒரு பாடல்

மாயநதி – பவதாரிணி இசையில் ஒரு பாடல்

சினிமா, திரைத் துளி
ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளிப் பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி அஷோக் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை; டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண்; இலக்குகள் எதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு சராசரி இளைஞன் ஆகிய மூன்று பாத்திரங்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே ‘மாயநதி’. பதின்ம வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது இனக்கவர்ச்சியை...
ஜெயம் ரவி – ஸ்கிரீன் சீனில் 3 படம்

ஜெயம் ரவி – ஸ்கிரீன் சீனில் 3 படம்

சினிமா, திரைத் துளி
மாஸ் படங்களில் நடித்து கைத்தட்டல்களையும், விசில் ஒலியையும் பெறும் அதே நேரத்தில், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருந்து பாராட்டுகளையும் பெறுகிறார் ஜெயம் ரவி. அவரது அசுர வளர்ச்சி ஒரு புறம் இருக்க, அவர் தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார். இதற்கு மிகச்சரியான உதாரணம் என்னவென்றால் ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் 3 திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்திருக்கிறது.  "நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களைத் தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் பேரார்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வரம். தமிழ் சினிமாவின் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்ச...
தலைவி – ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப்படம்

தலைவி – ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப்படம்

சினிமா, திரைத் துளி
இன்று மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவசர்களின் 71வது பிறந்த  நாள். இதை முன்னிட்டு  இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு  'தலைவி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தான் ஜெயலலிதா அவர்களின் "அதிகாரப்பூர்வ" வாழ்க்கை வரலாற்று படம் எனக் குறிக்கப்படலாம். ஏனெனில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் திரு. தீபக் அவர்களிடம் இருந்து NOC-யைப் பெற்று இந்தப்  படத்தை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் விஜய் கூறும்போது, "தலைவி  என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும். 'தலைவர்கள் பிறப்பதில்லை - உருவாகிறார்கள்' என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர். அவர் பிறப்பிலேயே அத்தகை...
கோடீஸ்வரி – இரட்டை வேடங்களில் கே.ஆர்.விஜயா

கோடீஸ்வரி – இரட்டை வேடங்களில் கே.ஆர்.விஜயா

சினிமா, திரைத் துளி
ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "கோடீஸ்வரி" என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் குடும்பக்கதை படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்று நடிக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இவர் இரட்டை வேடமேற்று இருக்கிறார். இளம் நாயகனாக A.மோகன் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாகக் காவல்துறை அதிகாரி வேடத்தில் ரிஸ்வான் அறிமுகமாகிறார். இவர் மாடர்ன் தியேட்டர்ஸில் பணி புரிந்த எஸ்.ஏ.மஸ்தான் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகிகளாக் அஷ்மா, சுப்ரஜா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். கராத்தே ராஜா, டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா, முத்து, அஞ்சலி, ஸ்டாலின், ரமேஷ், பரமசிவம் எல்.ஆர்.விஜய், கோடீஸ்வரன் மாணிக் ஆகியோர் நடிக்கிறார்கள். தர்மதுரை என்ற வித்தியாசமான வேடத்தில் சேலம் கே.முருகன் மற்றும் துரை ஆனந்த், C.கருணாநிதி, ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகி...
“அமீரா: இஸ்லாமியப் பெண்ணின் கதை” – சீமான்

“அமீரா: இஸ்லாமியப் பெண்ணின் கதை” – சீமான்

சினிமா, திரைச் செய்தி
தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்தப் படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். சீமானிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த டுலெட் படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை 22-02-2019 அன்று ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் னாம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குனரும் நடிகருமான செந்தமிழன் சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். படம் பற்றி நடிகர் ஆர்.கே.சு...
“சினிமா: ஒரு துப்பாக்கி, ஒரு கோடாரி, ஒரு அரிவாள்” – சீமான்

“சினிமா: ஒரு துப்பாக்கி, ஒரு கோடாரி, ஒரு அரிவாள்” – சீமான்

சினிமா, திரைச் செய்தி
"அரசியலைக் கவனிக்காமல் அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் படத்தில் நாட்களைச் செலவிடுகிறீர்களே என்கிறார்கள். எனக்கு இருபது நாள்தான் படப்பிடிப்பு இருக்கிறது. மற்றவர்கள் கூட்டணி அமைக்க நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த நேரம் எனக்கு மிச்சம் என்பதால் அதை நான் படப்பிடிப்பிற்குச் செலவிடுகிறேன். அவ்வளவுதான்! நடிகர்கள் நாடாளக்கூடாது என்று சொல்லும் சீமான், திரைத்துறையில் இருந்துதானே வந்திருக்கிறார் என பலரும் கேட்கிறார்கள். நான் எனது ரசிகர்களைச் சந்தித்து, அவர்களை தொண்டர்களாக மாற்றிக் கட்சியைத் துவங்கவில்லை. என்னுடைய பிறப்பு, வளர்ப்பு, பாதை, பயணம் எல்லாமே வேறு. கமல், ரஜினி இவர்களெல்லாம் திரைப்படத்துறையில் இருந்து வருகிறார்கள். திமுக, அதிமுக ஊழல் கட்சி என்பது இப்போதுதான் இவர்களுக்குத் தெரிந்ததா? இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ரஜினிகாந்த்திடம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை ஏன் செ...
கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – ஆசையாக மாறும் தேவைகள்

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – ஆசையாக மாறும் தேவைகள்

சினிமா, திரைத் துளி
பல பிரபல இயக்குநர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாகத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்". மாயவன் திரைப்படத்திற்குப் பிறகு சீ.வி.குமார் இயக்கும் இரண்டாவது படம் இது. தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்" படத்தின் கதைக்கரு. பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க  அஷோக், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள்  (பக்ஸ்) , இயக்குநர் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக அனைவரின் பாராட்டையும் பெற்று, படத்திற்கான எதிர்ப்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இப்படம் மார்ச் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கபடுகிறது. படக்குழு: >> தயாரிப்பு, இயக்கம் - சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்ம...
LKG விமர்சனம்

LKG விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
LKG என்பது லால்குடி கருப்பையா காந்தியின் சுருக்கம். கவுன்சிலரான எல்கேஜிக்கு எம்.எல்.ஏ.வாக வேண்டுமெனக் கனவு. கனவு என்னானது என்பதுதான் படத்தின் கதை. ஆர்ஜே பாலாஜியின் அப்பாவாக நாஞ்சில் ச்மபத் நடித்துள்ளார். இன்னோவா சம்பத் என சகட்டுமேனிக்கு அவர் கிண்டல் செய்யப்பட்டாலும், மகனின் படிப்புக்குப் பணம் கட்ட இயலாத வாழ்க்கைதான் அவருடையது. மேடையேறி அலங்காரச் சொற்பந்தல் போட்டு அமைந்திடாத பொருளாதாரம், இனி சினிமாவில் அவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. காமிக்கலான அவர் முகம் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு ஏற்றது. தேர்ந்த இயக்குநரின் கைப்பட்டால் சிறந்த குணசித்திர நடிகராகவும் மிளிர வாய்ப்புள்ளது. அதனால்தான் வில்லன் கதாபாத்திரத்திற்கு அவரை அணுகிய ஆர்ஜே பாலாஜி, தோற்ற அரசியல்வாதி பாத்திரத்தில் அவரது அப்பாவாக நாஞ்சில் சம்பத்தை நடிக்கவைத்துவிட்டார். போஜப்பனாக நடித்திருக்கும் ராம்குமாருக்கு இது மூன்றாவது படம். அரசி...
தும்பா – குழந்தைகளுக்கான படம்

தும்பா – குழந்தைகளுக்கான படம்

சினிமா, திரைத் துளி
மாஸ் ஹீரோக்களும் பெரிய படங்களும் தான் லட்சக்கணக்கான லைக்ஸும் ஷேர்களையும் பெறும் என்ற யதார்த்தம் சில நேரம் தவிடுபொடியாகும். ஒரு சிலர் இதனை 'லக்' என்று சொல்லலாம். ஆனால், உண்மையும் யதார்த்தமும் என்னவெனில் ரசிகர்கள் மிகச்சிறப்பான அனுபவத்துக்குக் காத்திருப்பதோடு, அவர்களின் நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் அளிக்கிறார்கள். தற்போது குழந்தைகளின் ஃபேவரைட்டான அனிருத் மற்றும் டைகரஸ் (பெண் புலி) தும்பா பங்கு பெறும் 'தும்பா' வீடியோ 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் யூ-ட்யூப்பில் 1.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருப்பது இதை நிரூபனமாக்குகிறது. அனிருத் மற்றும் டைக்ரஸ் தும்பாவை வைத்து இந்த வீடியோவை உருவாக்கிய இயக்குநர் ஹரிஷ் ராம் LH கூறும்போது, "இதைப் பற்றி நான் என்ன சொல்றது? இது முற்றிலும் எதிர்பாராதது, எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. சாகச, கற்பனை வகை படங்களைக் குழந்தைகளு...