Shadow

சினிமா

அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம்

அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம்

சினிமா, திரைச் செய்தி
இந்தியத் திரையுலகின் பிதாமகன், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து தமிழ் வாணன் இயக்கத்ததில் அவர் நடிக்கவுள்ள படத்தின் பெயர் "உயர்ந்த மனிதன்". திருச்செந்தூர் முருகன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமன்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்கப்பட உள்ளது. "ஒரு துணை இயக்குநராகத் திரையுலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம்" என்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மார்ச் 2019 இல் படப்பிடிப்புத் துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறம...
ஆருத்ரா விமர்சனம்

ஆருத்ரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைளுக்கு எதிரான வன்முறையைப் பேசும் படமென பா.விஜயே, இசை வெளியீட்டில் படத்தின் ஒரு வரிக் கதையைச் சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு, இல்லையில்லை பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர்களே போலீஸாக இருந்து பாதுகாக்கவேண்டும் என்பது தான் படம் முன் வைக்கும் அழுத்தமான கருத்து. படம் ஆகாயவதத்தில் தொடங்கி, நிலசதுக்கத்தில் முடிகிறது. அதாவது பஞ்சபூதங்களைக் கொண்டு, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களைப் பழிவாங்குகிறார் படத்தின் நாயகனான சிவமலை. ஜல சமாதி, அக்னி சாபம், காற்றுப்படலம் என இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் வைத்துக் கொல்கிறார். ஆனால், படத்தின் முதற்பாதியில் பா.விஜய் மிகவும் இம்சிக்கிறார். நான் கடவுள் இராஜேந்திரனையும் கே.பாக்யராஜையும் கொண்டு மிக அசட்டுத்தனமான மலிவான நகைச்சுவை, திணிக்கப்பட்ட கவர்ச்சி, ஐட்டம் சாங் என அநியாயத்திற்கு ஒப்பேத்தி நெளிய வைத்துவிடுகிறார். எதிர் வீட்டுப் பெண்ணை நான் கடவுள் இராஜேந்திரன...
இமைக்கா நொடிகள் விமர்சனம்

இமைக்கா நொடிகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலையை ரசித்துச் செய்யும் ஒரு கொலைக்காரன், அவனைப் பிடிக்க நினைக்கும் ஒரு பெண் சி.பி.ஐ. அதிகாரி என இருவருக்கு இடையில் நடக்கும் ஆடுபுலியாட்டம்தான் இமைக்கா நொடிகள் படத்தின் கதை. ருத்ராவெனும் சைக்கோவாக அனுராக் கஷ்யப் அதகளப்படுத்தியுள்ளார். அனுராகின் அட்டகாசமான உடற்மொழியுடன், மிரட்டும் முகபாவனையுடன், மகிழ் திருமேனியின் கம்பீரமான குரல் செம்புலப் பெயல் நீர் போல் ஒன்றிக் கொள்கிறது. ட்ரெய்லரிலேயே அந்த ரசவாதத்தினை உணரலாம். படத்திலேயோ, அது தொடக்கம் முதல் கவ்விக் கொள்கிறது. வில்லனாக அனுராக் கஷ்யபையும், அவருக்கு டப்பிங் தர மகிழ் திருமேனியையும் தேர்வு செய்ததற்காகவே இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதை முழுதும் ரசிக்க முடியாதளவுக்கு, குறுக்கும் நெடுக்குமாக அதர்வா - ராஷி கண்ணாவின் காதல் அத்தியாயம் குறுக்கிடுகிறது. படத்தின் நீளமோ அயர்ச்சித் தருமளவுக்கு இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களாக உள்ளது. ந...
பிரபுதேவாவை இயக்கும் நடன இயக்குநர்

பிரபுதேவாவை இயக்கும் நடன இயக்குநர்

சினிமா, திரைத் துளி
தூத்துக்குடி மற்றும் மதுரை சம்பவம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குநர் ஹரிகுமார், ஸ்டுடியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். "தேள்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் C.சத்யா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். காட்டேரி படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்கிறார். கலை இயக்குநராகச் செந்தில் ராகவனும், சண்டைப்பயிற்சியாளராக அன்பு, அறிவு ஆகியோரும் பணி புரிகிறார்கள். பொன் பார்த்திபன் மற்றும் ஹரிகுமார் இருவரும் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஹரிகுமார். "ஒரு புகழ் வாய்ந்த நடன இயக்குநரை இன்னொரு நடன இயக்குநர் ...
சுடானி ஃப்ரம் நைஜீரியா

சுடானி ஃப்ரம் நைஜீரியா

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
திருவனந்தபுரம் பொறியியற் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்த காலத்தில் அங்கேயிருந்த கால்பந்தாட்ட ஆட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் மலபார் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். மலப்புரத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு பதினைந்து மணி நேரம் பயணம் செய்து ஆட்டம் முடித்த உடனேயே ஞாயிறன்றே இரவோடிரவாகத் திரும்பி வரும் ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். கால்பந்தாட்டம் என்பது மலபார் பகுதிகளைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை பெரும்போதை என்பதை உணர்ந்த காலம் அது. பேசும்போது கூட உலகப் புகழ் பெற்ற ஆட்டக்காரர்களைப் பற்றி மட்டுமில்லாமல் ஸ்பானிஸ் ஜெர்மன் இங்கிலிஸ் லீகுகளில் ஆடும் ஆட்டக்காரரகள் குறித்தும் விரல் நுனியில் தகவல் வைத்திருப்பார்கள் அவர்கள். அதிலும் பதினொருவர் ஆடும் ஆட்டத்தை வெட்டிச் சுருக்கி எழுவர் ஆடும் ஆட்டமாக மாற்றி, 'செவன்ஸ்' என்று நாமகரணம் சூட்டி மலபாரின் மூல...
சூப்பர் ஸ்டார் – மீத்திரன் முக்கிளை

சூப்பர் ஸ்டார் – மீத்திரன் முக்கிளை

சினிமா, திரைத் துளி
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் "தாதா 87" படத்தைக் கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. "தாதா 87" படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது கலை சினிமாஸ் நிறுவனம் தன்னுடைய அடுத்த படத்திற்கு 'சூப்பர் ஸ்டார் - மீத்திரன் முக்கிளை' என்ற தலைப்பைப் பதிவு செய்துள்ளது. நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது....
U – சீமராஜா

U – சீமராஜா

சினிமா, திரைத் துளி
செப்டம்பர் 13 அன்று, விநாயகர் சதுர்த்திக்குச் சீமராஜா வெளியாகவுள்ளது. பொன்ராம், D.இமான், சிவகார்த்திகேயன், சூரி இணையின் படம் திருவிழா கொண்டாட்டத்திற்கு உத்திரவாதம் அளிப்பதால், படம் குறித்த எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது. குடும்பங்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாய் படத்திற்கு 'U' சான்றிதழ் கிடைத்துள்ளது. 
‘வாயாடி பெத்த பிள்ளை’யை எழுதிய ஜி.கே.பி.

‘வாயாடி பெத்த பிள்ளை’யை எழுதிய ஜி.கே.பி.

சினிமா, திரைத் துளி
சூது கவ்வும் படத்தில் இடம் பெற்ற "கம் னா கம்" பாடல் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஜி.கே.பி. அதன் பின் எனக்குள் ஒருவன், உரியடி, மரகதநாணயம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவான கனா படத்தில் ஜி.கே.பி எழுதிய, "வாயாடி பெத்த புள்ள" பாடல் வெளியானது. இப்பாடலை இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைகோம் விஜயலஷ்மி பாடியுள்ளனர். "வாயாடி பெத்த புள்ள" பாடல் வெளியான கனம் முதல் இப்பாடலின் வரிகளும் இசையும் அனைவரையும் கவர்ந்தது. சமூக வளைத்தலங்களில் பிரபலம் ஆனது. தான் எழுதிய பாடலை அனைவரும் கொண்டாடுவதை அறிந்த ஜி.கே.பி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். "இப்படிபட்ட பாராட்டுகள் ஒரு கலைஞனை மேலும் மேலும் பல நல்ல படைப்புகளைப்...
தனி ஒருவன் 2 – மித்ரனின் அடுத்த குறி தயார்!

தனி ஒருவன் 2 – மித்ரனின் அடுத்த குறி தயார்!

சினிமா, திரைத் துளி
"தனி ஒருவன்" இன்று 3 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக ஊடகங்களில் ஹாஷ் டேக் ட்ரெண்டிங்குடன் ரசிகர்கள் விமரிசையாகத் தனி ஒருவனைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இயக்குநர் மோகன்ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும், ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறார்கள். 'தனி ஒருவன் 2' படத்தை விரைவில் தொடங்கவுள்ளனர். இந்த உற்சாகமான தருணத்தைப் பற்றி இயக்குநர் மோகன் ராஜா கூறும்போது, "தனி ஒருவன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பும், அதற்கு கொடுத்த மிகப்பெரிய வெற்றியும் அலாதியானது. அவர்களின் எதிர்பார்ப்புக்கும் அதிகமான ஒரு விஷயத்தை இந்தத் 'தனி ஒருவன் 2' மூலம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறேன். நாங்கள் ஏற்கனவே முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்களுடன் பேசி வருகிறோம்...
லக்ஷ்மி விமர்சனம்

லக்ஷ்மி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிரபுதேவாவைக் கொண்டு ஒரு நடனப்படம் எடுத்தால் எப்படியிருக்கும் என்ற சிறு பொறி லக்‌ஷ்மியாக வளர்ந்துள்ளது. லக்‌ஷ்மி எனும் சிறுமிக்கு நடனம் என்றால் உயிர். எங்கும் எப்பவும் நடனம். தனது அம்மாவிற்குத் தெரியாமல், மும்பையில் நடக்கும் நடனப்போட்டியில் கலந்து கொள்கிறாள். லக்‌ஷ்மியின் கனவு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கதாநாயகியாக சிறுமி தித்யா. பேருந்து நிறுத்தத்தில், சாலையில், குளியலறையில், பள்ளியில், பேருந்தில், டீக்கடையில் (Cafe'teria) என ஆடிக் கொண்டே இருக்கிறார். தெய்வத்திருமகளில் சாரா, தியாவில் வெரோனிகா என அவர் ஆடிஷனில் தேர்வாகும் சிறுவர்கள் அனைவரும் உள்ளத்தைக் கவர்பவர்கள். தித்யாவும் தனது நடனத்தால் கவர்கிறார். அவரது முகம் வடக்கத்தைய சாடையாக இருப்பதாலும், அழுத்தமற்ற திரைக்கதையாலும், 'நம்ம பொண்ணு' என்ற உணர்வு எழவில்லை. லக்‌ஷ்மி போட்டியில் ஜெயித்து விடுவாள் என்பது உள்ளங்கை நெல்லிக்...
ஆல்ஃபா விமர்சனம்

ஆல்ஃபா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஆல்ஃபா என்பது தலைமை பொறுப்பில் உள்ள ஆளுமையைக் குறிக்கும் சொல். குறிப்பாக, தனது கூட்டத்தில் தலைமைப் பதிவு வகிக்கும் மிருகத்தை அப்படிச் சொல்வார்கள். படத்தின் மையக்கருவும் அதுதான். ஆல்ஃபா என்ற அங்கீகாரம் தரப்படுவதல்ல, உறுதியை நிரூபித்துப் பெறப்படுவது. 20000 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில், ஓர் இனக்குழு காட்டெருது (Bison) வேட்டைக்குச் செல்கிறது. அக்குழுவின் தலைவன் தன் மகன் வேகேடாவை வேட்டைக்கு அழைத்துச் செல்கிறான். தன் மகனுக்கு அவர் சொல்லும் பாடம், தலைவர் பதவி தரப்படுவதல்ல, சக்தியை நிரூபித்துப் பெறப்படுவது. கேடாவின் சிறு பலவீனத்தால் அவன் காட்டெருதால் தூக்கி வீசப்படுகிறான். மலை முகட்டில் இருந்து, இடையில் பாறையில் விழும் கேடாவை அவனது குழு இறந்துவிட்டதாக நினைத்துவிடுகிறது. அவர்களைப் போலவே வழுக்கைத் தலை கழுகொன்றும் நினைத்து கேடாவின் இரத்தம் வழியும் வாயைக் கொத்துகிறது. கழுகின் தலையைப் பிடித்து மலைய...