சினிமா

ஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை
நான்கு சுவருக்குள், பெண்ணால் அவமதிக்கப்படும் ஓர் ஆண் இயலாமை குமைய வெளியேறுகிறான். வெளியில் வந்து, அந்த இயலாமையைக் கோபமாகத் தன்னை விட பலவீனமான நபரிடம் காட்டுகிறான். அந்த நபர் மற்றொரு ஆணாக இருப்பான். ஓர் ஆண் தோற்க, அவனுக்குச் சம்பந்தப்பட்ட பெண் காரணமாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. அந்த ஆணுக்குத் தெரிந்த மற்றொரு ஆணுக்குச் சம்பந்தப்பட்ட பெண், பல ஆண்கள் தோற்கக் காரணமாக இருப்பாள்.
"உன்னால மீனுக்கு ஒரு பொறி கூட வாங்கிப் போட முடியாது" என்ற வசனத்தில் தொடங்குகிறது தோற்ற ஆண்களின் கதை. எத்தனை பேர் வந்தாலும், தெறிக்க விடும் நாயகர்களுக்குப் பழக்கப்பட்ட சினிமா ரசிகர்களுக்கு, இந்தப் படம் நிச்சயமாகப் புதுமையான திரை அனுபவத்தைத் தருமென நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் படக்குழுவினர். ராஜ் பரத், தேஜஸ்வினி, ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சகாவு’...

கோலி சோடா 2 விமர்சனம்
ஆட்டோ ஓட்டுநனான சிவா, பரோட்டா கடையில் வேலை செய்பவனான ஒலி, தாதாவுக்கு கார் ஓட்டிக் கொண்டிருந்தவனான மாறன் என மூன்று இளைஞர்களின் வாழ்க்கையிலும் நடக்கும் எதிர்பாராச் சம்பவங்கள், ஒரு புள்ளியில் அவர்களை நெருக்குகிறது. அப்புள்ளியில் இணையும் அவர்கள், தங்களை நெருக்கும் நபர்களிடம் இருந்து எப்படித் திரும்பி நின்று எதிர்க்கின்றனர் என்பதே படத்தின் கதை.
மூன்று இளைஞர்களையும் ஒரு ஜாதிக் கட்சி மீட்டிங் இணைக்கிறது. அதற்கு முன்பே, மூவருக்கும் பொதுவான ஒரு நலம்விரும்பியாக ஃபார்மசி வைத்திருக்கும் கணேசன் உள்ளார். கணேசனாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். வீறு கொண்டு சீறும் நபராக இல்லாமல் பொறுப்புணர்வுள்ள விவேகியாக உள்ளார். ஆனாலும், பேசிக் கொண்டே இருக்கும் பாத்திரத்தில் இருந்து அவரை விலக்கி வைத்துப் பார்க்க விஜய் மில்டனாலும் முடியவில்லை. நடேசன் எனும் சமுத்திரக்கனி ஏற்றிருக்கும் பாத்திரத்திற்குச் சீரியசான ஃப்ளாஷ்-பேக்...

ஒட்டாரம் பண்ணும் களவாணி ஓவியா
“ஆனி போய், ஆடி போய், ஆவணி வந்துச்சுன்னா அவன் டாப்பா வருவான்” என்ற சரண்யா பொன்வண்ணனின் நம்பிக்கை நனவானதா இல்லையா எனச் சொல்ல வருகிறது களவாணி 2.
களவாணியின் முதல் பாகம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. அதனூடே, பிக் பாஸில் விழுந்த புகழ் வெளிச்சத்திற்குப் பிறகு, ஓவியா மீண்டும் நடிக்கிறார் என்பது இப்படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
சமீபத்தில் ஓவியாவும் விமலும் நடித்த, 'ஒட்டாரம் பண்ணாத' என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ பாடலை எழுதிய மணி அமுதவன் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். இயக்குநர் சற்குணம் மற்றும் படக்குழுவினர் இந்தப் பாடலை ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்கத் திட்டமிட்டனர். கலை இயக்குநர் குணசேகரன், நிஜத்தைப் பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்தப் ப...

டானின் அம்மா சரண்யா பொன்வண்ணன்
விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும் போது, “நடிகர் விஜய் சேதுபதியுடன் நான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும் போது, 'இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா?' என என்னிடம் கேட்பார். அப்போது, ‘உனக்கென்னப்பா குறை. பார்க்க லட்சணமாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய்’ என்று வாழ்த்தினேன். ஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன். ஒரு தாய் தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படி பெருமிதமாக பார்த்துக் கர்வப்பட்டுக் கொள்வாரோ அதே போல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார...

9 டிகிரி குளிரில் – ஜுங்கா சாயிஷா
“இந்தப் படத்தில், ஒரு காட்சியில் நடிக்கும் போது சாயிஷா அளித்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. மைனஸ் 9 டிகிரி குளிரில் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, குளிர் தாங்க முடியாமல் தவித்தார். அவரது உதடுகள் நீலநிறமாக மாறியது. அவரது அம்மா பதறினார். நாங்களும் உடனே மருத்துவ உதவிக்காக அவரை அனுப்பி வைத்தோம். ஆனால் அந்தக் கார் திரும்பவும் படப்பிடிப்புத் தளத்திற்கே வந்தது. இன்னும் சில ஷாட்கள் தான் மீதமிருக்கிறது. அதை நடித்து விட்டு மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்கிறேன் என்றார். இதை என்னால் மறக்க முடியாது” என நெகிழ்ந்தார் ஜுங்கா படத்தின் இயக்குநர் கோகுல்.
படத்தின் நடித்த அனுபவத்தைப் பற்றி சாயிஷா பகிர்ந்த போது, “இப்போது தான் தமிழ் பேசுவதற்குக் கற்றுக் கொண்டு வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன். வெளிநாட்டில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி சார், இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் அருண் பாண்...

ஜுங்கா என்றால் என்ன? – விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, “இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரேமாதிரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இந்தப் படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில் தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விசயங்களைப் பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்.
இதில் பஞ்ச் இருக்கா? இல்லையா? என்று என்னிடம் கேட்பதை விட, அதை ரசிகர்க...

அதர்வாவின் பூமராங் – இயக்குநர் கண்ணன்
“பூமராங் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, படத்தை முடிக்க 90 நாட்கள் தேவைப்படும் என்று தெளிவாகத் தெரிந்தது. மேலும் மிக அதிகமான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். 4 வெர்சன் திரைக்கதை இருந்தது, ஒரு நாளைக்கு 2 காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருந்தோம். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் 45 நாட்களில் படப்பிடிப்பை முடிப்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறியிருக்கும்" என்றார் இயக்குனர் கண்ணன்.
மேலும், "முழுப் படமும் அதர்வாவைச் சார்ந்தது. அவரிடம் இருந்து 3 வித்தியாசமான தோற்றங்கள் இந்தப் படத்துக்குத் தேவைப்பட்டது. புரோஸ்தடிக் மேக்கப் செயல்முறையின் போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். மிகச்சிறந்த புரோஸ்தடிக் ஒப்பனைக் கலைஞர்களான ப்ரீத்தி ஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா 12 மணி நேர உழைப்பிற்குப் பிறகு அதர்வாவுக்குச் சிறந்த, சரியான தோற்றத்தைக் கொண்டு வந...

மர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம்
பத்து செகண்ட் முத்தம் - தமிழ் நாவல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களைத் தீவிரமாக படித்து வந்த ரசிகர்கள் இந்தத் தலைப்பை மிக நெருக்கமாக உணர்வார்கள். இந்தத் தலைப்பினைத் தனது படத்திற்குச் சூட்டியுள்ளார் இயக்குநர் வின்செண்ட் செல்வா.
அவர் கூறும்போது, "சுஜாதா சாரின் பத்து செகண்ட் முத்தம் நாவலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களைக் கண்டுபிடிப்பதைச் சொல்வது தான். அந்தத் தலைப்பு என்னை ஈர்த்தது, என் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களைக் கண்டுபிடிப்பார், அதனால் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். இதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இது என்னுடைய புது ஸ்கிரிப்ட்.
ஒரு முக்கியமான கதாப்பத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற தம்பி ராமையா தவிர்த்து மொத்தமும் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வின்செண்ட் செல்வா. அதைப் பற்றிக் ...

ஜீவி – விஞ்ஞானமும் மெய்ஞானமும்
'8 தோட்டாக்கள்' படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடிக்கிறார்கள். பாபுதமிழ் கதை, வசனம் எழுத, புதுமுக இயக்குனர் V.J.கோபிநாத் இயக்குகிறார்.
ஜீவி படத்தைப் பற்றி இயக்குநர் V.J.கோபிநாத், “இப்படம் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது” என்றார்.
முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி, ரமா ஆகியோர் நடிக்கிறார்கள்.
>> ஒளிப்பதிவு - பிரவீன்குமார்
>> இசை - சுந்தரமூர்த்தி K.S
>> படத்தொகுப்பு - பிரவீன் K.L
>> கலை - வைரபாலன்
வெற்றிவேல் சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில், 8 தோட்டாக்களுக்குப் பிறகு ஜீவி படத்தை இரண்டாம் படமாகத் தயாரிக்கப்படுகிறது. பிக்பிரிண்...







