Shadow

சினிமா

சட்டமும் நீதியும் விமர்சனம் | Sattamum Neethiyum review

சட்டமும் நீதியும் விமர்சனம் | Sattamum Neethiyum review

OTT, Web Series, திரை விமர்சனம்
தனது மகள் வெண்ணிலாவைக் கடத்தி விட்டார்கள் என்று காவல்நிலையத்தில் புகாரளிக்கச் செல்கிறார் குப்புசாமி. காவல்துறை அவரது புகாரைப் பதியாமல் துரத்தி விட, இயலாமையின் உச்சத்தில் நீதிமன்ற வளாகத்தில் தனக்குத் தீயிட்டு மாய்த்துக் கொள்கிறார் குப்புசாமி. நீதிமன்றத்துக்குள் சென்று வாதிடாத, வீட்டினரால் மதிக்கப்படாத வக்கீலான சுந்தரமூர்த்தி, பொதுநலவழக்காகக் குப்புசாமியின் வழக்கைப் போடுகிறார். குப்புசாமி யார், வெண்ணிலாக்கு என்னானது என்ற கேள்விகளுக்குப் பதில் தேடியவண்ணம் பயணிக்கிறது சட்டமும் நீதியும் தொடர். சுந்தரமூர்த்தியின் உதவியாளர் அருணாவாக நடித்துள்ளார் நம்ரிதா. சுந்தரமூர்த்தியிடம் பரிந்துரைக் கடிதம் பெற்ற ஒரே காரணத்திற்காக, அருணாவை யாரும் உதவியாளராகச் சேர்த்துக் கொள்ள மறுக்கின்றனர். வெடுக்கென்ற நேர்கொண்ட பேச்சும், எதற்கும் அஞ்சாமல் விசாரணையை மேற்கொள்ள நினைக்கும் ஆர்வமும் கொண்டவராக உள்ளார் அருணா. வழக்க...
அக்யூஸ்ட் – இருக்கை நுனியில் அமர வைக்கும் த்ரில்லர்

அக்யூஸ்ட் – இருக்கை நுனியில் அமர வைக்கும் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில், உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தொகுப்பாளர் ஷ்யாம், “இந்தத் திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் உதயாவும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸும் ஒன்றிணைந்து பணியற்றிருக்கிறார்கள். நாங்கள் இந்தப் படத்தின் திரைக்கதையின் வேகத்தைக் குறைப்பதற்காக சில உத்திகளைக் கையாண்டிருக்கிறோம். ஏனெனில் இந்தப் படத்தின் திரைக்கதை மிக வேகமாக இருக்கும்” என்றார். இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், ''கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் என்னுடைய திரையுலக வாழ்க்கை தமிழில் தான் தொடங்கியது. சுந்தர்.சி, தனுஷ், அர்ஜுன் ஆகியோர் நடித்த படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 400 பாடல்களுக்கு மேல் நடன இயக்குநராகப் பணிய...
ட்ரெண்டிங் விமர்சனம் | Trending review

ட்ரெண்டிங் விமர்சனம் | Trending review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இன்றைக்கு இணையத்தில் எது ட்ரெண்டிங்காக இருக்கிறதோ, அதுதான் நாட்டின் பேசுபொருள் என்பதால் படத்தின் தலைப்பையே ட்ரெண்டிங் என வைத்துவிட்டார்கள். கலையரசனும் ப்ரியாலயாவும் கணவன் மனைவி ஆவர். படத்தில் முதல் ஷாட்டிலே இருவரும் யூட்யூபில் தங்களின் ரீல்ஸைப் பதிவேற்றுகிறார்கள். அவர்களது ரீல்ஸின் வியூவ்ஸ் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் இந்தத் தம்பதியின் வருமானமும் உயர்கிறது. இச்சூழலில் இவர்களின் யூட்யூப் சேனல் முடக்கப்படுகிறது. அடுத்து என்ன செய்வது என அவர்கள் யோசிக்கும் போது ஒரு ப்ரைவேட் ஃபோன்கால் ஒன்று இவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது. அந்த விளையாட்டு ஏற்படுத்தும் வினைகளும் விடைகளும் தான் படம். அளவாக நடித்தாலே போதும் என்ற ரேஞ்சிலே படத்தில் வருகிறார் நாயகன் கலையரசன். ப்ரியாலயா இப்படத்தில் பெரிய சர்ப்ரைஸ் செய்துள்ளார். அழகு, நடிப்பு இரண்டிலுமே ஸ்கோர் செய்துள்ளார். குறிப்பாக எமோஷ்னல் காட்சிகளில் மிக...
பன் பட்டர் ஜாம் விமர்சனம் | Bun Butter Jam review

பன் பட்டர் ஜாம் விமர்சனம் | Bun Butter Jam review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நல்ல கலகலப்பான யூத்-ஃபுல்லான படம். ராஜு ஜெயமோகன் பாவ்யாவைக் காதலிக்கிறார். ராஜுவின் நண்பனும் அதே பெண்ணைக் காதலிக்கிறார். ராஜுவின் பக்கத்து வீட்டுப் பெண்ணான ஆதியா, VJ பப்புவைக் காதலிக்கிறார். யார் யாருடன் இணைந்தார்கள் என்பதுதான் படத்தின் முடிவு. படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்கள் அனைத்தையும் மிக நேர்த்தியாக எழுதியுள்ளார் இயக்குநர் ராகவ் மிர்தாத். சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, கெளரவத் தோற்றத்தில் நடித்துள்ள விக்ராந்த், ராஜுவின் நண்பனாக வரும் மைக்கேல் தங்கதுரை, VJ பப்பு, பப்புவின் கோவக்கார அப்பா என கதாபாத்திர வடிவமைப்பிலேயே படத்தின் கலகலப்பிற்கு உறுதி செய்துள்ளார் ராகவ் மிர்தாத். இரண்டாம் பாதியில், காதலியின் வீட்டில் மாட்டிக் கொண்டு, VJ பப்பு திண்டாடும் காட்சிகள் ஓர் உதாரணம். முதற்பாதியில், ஆதியாவும் ராஜுவும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் அனைத்துமே கலகலப்பிற்கு உத்திரவாதமளிக்கி...
காளிதாஸ் 2 – டீசர் | பரத் | அஜய் கார்த்திக்

காளிதாஸ் 2 – டீசர் | பரத் | அஜய் கார்த்திக்

Teaser, காணொளிகள், சினிமா, திரைத் துளி
பரத், புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன், ஜீ.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காளிதாஸ் 2' திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, ராஜா ரவீந்தர், டி.எ.ம் கார்த்திக், 'சிங்கம்' ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமா...
Kutti Story Pictures | எம்.எஸ்.பாஸ்கர் | ஃப்ராங்க்ஸ்டர் ராகுல்

Kutti Story Pictures | எம்.எஸ்.பாஸ்கர் | ஃப்ராங்க்ஸ்டர் ராகுல்

சினிமா, திரைத் துளி
குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.காமெடி நடிகராக பிரபலமான 'ஃப்ராங்க்ஸ்டர்' ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம்.எஸ்.பாஸ்கரும், ஃப்ராங்க்ஸ்டர் ராகுலும் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை திவாகர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரேம் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைக்க, ஷிஜூ அலெக்ஸ் ...
ஆகஸ்ட் 16 | சென்னை நேரு விளையாட்டரங்கில் Himesh Reshammiya Capmania Tour

ஆகஸ்ட் 16 | சென்னை நேரு விளையாட்டரங்கில் Himesh Reshammiya Capmania Tour

சமூகம், சினிமா
இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாகத் தயாரித்து, உருவாக்கி நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்களின் பேராதரவு பெற்று சாதனை படைத்த 'யுவன் 360', 'சோனு நிகம் லைவ்', 'விஜய் ஆண்டனி 3.0', 'டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்' உள்ளிட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பிரபல இசைக் கலைஞர் ஹிமேஷ் ரேஷாமியா சென்னையில் முழுக்கப் பங்குபெறும் நிகழ்ச்சியை நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் முன்னணி இசை நிறுவனமான சரிகம உடன் இணைந்து வழங்க உள்ளது. பாலிவுட்டில் தனக்கெனத் தனி முத்திரை பதித்துள்ள ஹிமேஷ் ரேஷாமியா, தமிழில் கமல் ஹாசன் நடித்த 'தசவாதாரம்' வெற்றிப் படத்திற்கு இ...
ரெஜினா கசாண்ட்ரா இன் The Wives திரைப்படம்

ரெஜினா கசாண்ட்ரா இன் The Wives திரைப்படம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைத் துளி
Rocket Boys, Jaat, Farzi, Kesari Chapter 2 போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசாண்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறார். இப்புதிய திரைப்படம் "தி வைவ்ஸ்" எனும் தலைப்பில் உருவாகிறது. உணர்வுமிக்க, சிக்கலான கதாபாத்திரங்களை நம்பிக்கையுடன் திரையில் கொண்டு வரும் ரெஜினா, இந்தப் படத்திலும் ஒரு முக்கியமான கதாநாயகி வேடத்தில் நடிக்கவுள்ளார். இது அவருடைய திறமைகளை மேலும் வெளிக்கொண்டு வரும் ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுர் பந்தார்க்கர், Fashion, Page 3, Heroine போன்ற படங்களில் பெண்களின் உணர்வுகளையும் வாழ்க்கைப் பாதைகளையும் மையமாகக் கொண்டு கதைகளை இயக்கியுள்ளார். தற்போது, ‘தி வைவ்ஸ்’ மூலமாக மீண்டும் அதே பாதையைத் தொடர்கிறார். இந்தப...
கெவி விமர்சனம் | Gevi review

கெவி விமர்சனம் | Gevi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கெவி என்றால் ஆழமான பள்ளத்தாக்கு எனப் பொருள். கொடைக்கானலுக்குக் கீழுள்ள ஒரு மலைப்பகுதியில், பாண்டிய தேசத்தைச் சேர்ந்த மக்கள் குடி புகுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில், குளிர் பிரேதசங்களைத் தேடும் முயற்சியில், கெவி மக்களின் உதவியோடு கொடைக்கானலைக் கண்டடைகின்றனர் வெள்ளையர்கள். அவர்களின் வரவிற்குப் பிறகு, வெள்ளகெவி என்று அப்பகுதி அழைக்கப்படுகிறது. சாலை வசதியற்ற கெவியில் வாழும் மக்கள் மிகவும் துயருகின்றனர். ஓரிரவு, கொடி சுற்றிக் கொள்வதால் கர்ப்பிணியான மந்தாரை மிகவும் அவதியுறுகிறார். ஊரே ஒன்று கூடி, மந்தாரையை டோலியில் தூக்கிக் கொண்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் செல்கின்றனர். அதே இரவில், சாலை வசதி கேட்டுக் கோபப்பட்டான் என்பதற்காக மந்தாரையின் கணவனான மலையனைக் காவல்துறையினர் அடித்துக் கொல்ல முயற்சி செய்கின்றனர். அந்த இரவு எப்படி விடிகிறது என்பதுதான் படத்தின் முடிவு. படக்குழுவினர் மிரட்டியுள்ளன...
கவின் – பிரியங்கா மோகன் | Think Studios

கவின் – பிரியங்கா மோகன் | Think Studios

சினிமா, திரைத் துளி
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில கவின், பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார். ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்தத் திரைப்படத்தை, திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்களும், படப்பிடிப்பு குறித்த தகவலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் கவினும், பிரியங்கா மோகனும் முதன்ம...
“விவாகரத்து அவசியமா?” – இயக்குநர் பாண்டிராஜ் | தலைவன் தலைவி

“விவாகரத்து அவசியமா?” – இயக்குநர் பாண்டிராஜ் | தலைவன் தலைவி

சினிமா, திரைச் செய்தி
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாண்டிராஜ், “'தலைவன் தலைவி' என்ற இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணங்களும் அற்புதமானது. இந்த படத்திற்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஒரு உண்மை சம்பவத்திலிருந்து இந்தக் கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவிற்காக குலதெய்வ ஆலயத்திற்கு சென்ற போது நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் தான் ஆகாச வீரன் - பேரரசி. நேரில் பார்த்ததைப் படமாக எடுக்க முடியாது. ஆனால், ‘இப்படி இருந்தால் எப்படி இருக்க...
தலைவன் தலைவி: Full package family entertainer | விஜய் சேதுபதி

தலைவன் தலைவி: Full package family entertainer | விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.விஜய் சேதுபதி, "எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது ஏராளமான சண்டை, சச்சரவுகள் இருந்தன. அதற்கு இடையில் தான் இப்படத்தின் பணி தொடங்கியது. படத்தின் இயக்குநரும், நாயகனும் ஒன்று சேர்ந்த தருணம் இருக்கிறதே, அதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இவருடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்று அவரும், இவரது இயக்கத்தில் பணியாற்றக் கூடாது என்று நானும் இருந்த காலகட்டம் அது. இரண்டு பேருக்கும் இடையில் தன...
மாரீசன் – திருடனும், அல்சைமர் பயணியும்

மாரீசன் – திருடனும், அல்சைமர் பயணியும்

Trailer, காணொளிகள், சினிமா
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு, பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராகப் பணியாற்றியுள்ள 'மாரீசன்' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, 'ஃபைவ் ஸ்டார்' கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தைக் கவனித்திருக்கிறார். கிராமியப் பின்னணிய...
மிசஸ் & மிஸ்டர் விமர்சனம் | Mrs & Mr review

மிசஸ் & மிஸ்டர் விமர்சனம் | Mrs & Mr review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாற்பதாவது வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது, தானொரு மகவை ஈன்றெடுக்க வேண்டுமென விரும்புகிறார் வித்யா. ஆனால், இந்த வயதிற்கு மேல் பெற்றோராவதை விரும்பாத அருண், மனைவி வித்யாவின் விருப்பத்திற்குச் செவிசாய்க்காமல் இருக்கிறார். இது, அவர்களைப் பிரிவிற்கு இட்டுச் செல்கிறது. வித்யாவின் விருப்பம் நிறைவேறியதா, அருண் ஏன் சம்மதிக்கவில்லை, கணவன் - மனைவி சண்டைக்குத் தீர்வென்ன என்பதற்கான விடையுடன் படம் முடிகிறது. தன் கணவனை வழிக்குக் கொண்டு வர வித்யா கையிலெடுக்கும் ஆயுதம் கவர்ச்சியாகும். பெண் இயக்குநர் படமெடுத்தால், பெண்ணின் உணர்வுகளை அழுத்தமாகப் பேசக்கூடிய வாய்ப்பு அமையும் என்பதைப் பொய்த்துப் போகச் செய்துள்ளார் வனிதா. பெண்களின் உடலைக் காட்சிப்பொருளாக்கி வணிகத்திற்குப் பயன்படுத்தும் (exploit) உரிமை ஆண் இயக்குநர்களுக்கு மட்டுமே உரித்தானது இல்லை என ஆணாதிக்க உலகத்திற்குச் சமத்துவத்தை இடித்துரைத்துள்ளார்....
ஓஹோ எந்தன் பேபி | Oho Enthan Baby review

ஓஹோ எந்தன் பேபி | Oho Enthan Baby review

சினிமா, திரை விமர்சனம்
'தேன் நிலவு (1961)' எனும் படத்தில், மிக பெப்பியான வார்த்தைகள 64 வருடங்களிற்கு முன்பே பயன்படுத்தி அசத்தியுள்ளார் கவிப்பேரரசு கண்ணதாசன். தற்போதும் வைப் செய்யும்படியான அவரது வார்த்தைகளைத் தலைப்பாகப் படத்திற்குச் சூட்டியுள்ளனர். இயக்குநராகும் முயற்சியில் உள்ள அஷ்வின், நடிகரான விஷ்ணு விஷாலைச் சந்தித்து கதை சொல்கிறார். காதல் கதையை எதிர்பார்க்கும் விஷ்ணு விஷாலுக்குத் தனது காதல் கதையையே சொல்கிறார் அஷ்வின். ஆனால், ஈகோவால் மீராவுடன் பிரேக்-அப் ஆகி நிற்கும் காதல் கதையை முழுமைப்படுத்த, மீராவைச் சந்தித்து உண்மைத்தன்மையுடன் கதையை முடிக்கச் சொல்கிறார் விஷ்ணு விஷால். மீராவைச் சந்திக்கச் செல்லும் அஷ்வினின் காதல் கைக்கூடியதா இல்லையா என்பதே படத்தின் முடிவு. அஷ்வினின் முதல் காதல் பள்ளியில் நிகழ்கிறது. அஷ்வினால் காதலிக்கப்படும் சீனியர் பாத்திரத்தில் வைபவி நடித்துள்ளார். அஷ்வின்க்குக் கிடைக்கும் மொட்டை மாடியி...