32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 20 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 20)
“மிராய்: எதிர்காலத்தின் நம்பிக்கை” – தேஜா சஜ்ஜா அயல் சினிமா

“மிராய்: எதிர்காலத்தின் நம்பிக்கை” – தேஜா சஜ்ஜா

தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்” ஆகும். பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தேஜா சஜ்ஜா, “ஆக்‌ஷன், அட்வென்ட்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் – மிராய். ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். […]

02/09/2025 Dinesh R
ரவி மோகன் ஸ்டியோஸ் – திறமைகளுக்குக் கதவு திறக்கப்படும் சினிமா

ரவி மோகன் ஸ்டியோஸ் – திறமைகளுக்குக் கதவு திறக்கப்படும்

நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தைப் பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “BROCODE” திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர். இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான ரவி மோகன், “இந்த தருணத்தில் நான் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் இயக்குநராகி விட்டேன். நான் இயக்குநரானால் யோகி […]

01/09/2025 Dinesh R
“உங்க படத்தில் நடிக்கணும்” – சிவகார்த்திகேயன் டூ ரவி மோகன் சினிமா

“உங்க படத்தில் நடிக்கணும்” – சிவகார்த்திகேயன் டூ ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தைப் பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன், “தயாரிப்பு நிறுவனம் என்பது சாதாரண விஷயம் அல்ல. நம்முடைய கனவைத் திரையில் கொண்டு வரக்கூடிய மிகவும் பொறுப்பு மிகுந்த விஷயம். ரவிமோகன் சாரை எனக்கு அவ்வளவாகத் தெரியாது. நான் சார் என்று தான் கூப்பிடுவேன். சினிமா துறையில் அவர் என்னைவிட சீனியர். பராசக்தி படத்தின் போது தான் அவருடன் நெருங்கிப் பழகக் […]

01/09/2025 Dinesh R
“ஆறு வருடம் கழித்து..” – யோகி பாபு ! ரவி மோகன் ஸ்டுடியோ சினிமா

“ஆறு வருடம் கழித்து..” – யோகி பாபு ! ரவி மோகன் ஸ்டுடியோ

நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தைப் பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். இயக்குநர் ராஜா மோகன், “ரவியுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 17 வயது இருக்கும் போது அவனுக்கு 11 வயது. அப்போது பரதநாட்டியம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக அரங்கேற்றம் செய்தான். அப்போது, அவ்வளவு வருடமாக மிரட்டி உருட்டிக் கொண்டிருந்த அவனை அண்ணாந்து பார்த்தேன். அதேபோல் இன்றும் அண்ணாந்து பார்க்கிறேன். புதுப்பேட்டை படத்தில் […]

01/09/2025 Dinesh R
சாண்டல்வுட்: சிவண்ணாவுடன் இணையும் KVN ப்ரொடக்‌ஷன்ஸ் – வடேயார் மூவிஸ் அயல் சினிமா

சாண்டல்வுட்: சிவண்ணாவுடன் இணையும் KVN ப்ரொடக்‌ஷன்ஸ் – வடேயார் மூவிஸ்

ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின்  புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும்  செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட […]

01/09/2025 Dinesh R
Wayfarer Films – துல்கர் சல்மானின் லோகா அயல் சினிமா

Wayfarer Films – துல்கர் சல்மானின் லோகா

துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வேஃபேரர் ஃபிலிம்ஸ் பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத்தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப்படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் வேஃபேரர் ஃபிலிம்ஸ்க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படத்தின் மூலம் புதிய சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. எல்லைகளை […]

01/09/2025 Dinesh R
நவீன கால இளைஞர்களின் காதல் கதையில் அனஸ்வரா ராஜன் – அபிஷன் ஜீவிந்த் சினிமா

நவீன கால இளைஞர்களின் காதல் கதையில் அனஸ்வரா ராஜன் – அபிஷன் ஜீவிந்த்

சியோன் ஃபிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற பூஜை விழாவினில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன், RJ பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ், டிடி, ஆகியோர் […]

01/09/2025 Dinesh R
Lokah Chapter 1: Chandra விமர்சனம் அயல் சினிமா

Lokah Chapter 1: Chandra விமர்சனம்

இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோயின் படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது இப்படம். தன் சக்திகளை மறைத்துக் கொண்டு, பெங்களூருவில் சாதாரணளாக வாழ்கிறாள் சந்திரா. சந்திராவின் சக ஊழியை மிரட்டும் முருகேசனைத் தாக்குகிறாள் சந்திரா. உடலுறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்தும் முருகேசனும், அவனது ஆட்களும் சந்திராவைக் கடத்துகின்றனர். சந்திராவைக் காப்பாற்ற விரையும் அவளது பக்கத்து வீட்டுக்காரப் பையனான சன்னிக்கு, சந்திரா தான், கேரளத் தொன்மவியல் வியந்தோதும் கள்ளியங்காட்டு நீலி எனத் தெரிய வருகிறது. காணாமல் போகும் முருகேசனை விசாரிக்கும் காவலதிகாரி […]

31/08/2025 Dinesh R
சொட்ட சொட்ட நனையுது விமர்சனம் | Sotta Sotta Nanaiyuthu review சினிமா

சொட்ட சொட்ட நனையுது விமர்சனம் | Sotta Sotta Nanaiyuthu review

காரைக்குடியைச் சேர்ந்த செல்வந்தனான ராஜாவிற்கு தலையில் சொட்டை தோன்றி முழு வழுக்கையாக மாறிவிடுகிறது. அதனால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் ராஜாவிற்குக் கல்யாணமும் தள்ளிப் போகிறது. எதிர் வீட்டில் வசிக்கும் ராயல் பாட்டியின் வீட்டுக்குப் படிப்பு முடித்து வரும் அவரது பேத்தி பிரியாவை ராஜா விரும்ப, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமாகிறது. இந்நிலையில், கல்யாணத்துக்கு முன் தினம் கல்யாணத்தை ராஜாவே நிறுத்துகிறான். கல்யாணத்தை ராஜா ஏன் நிறுத்தினான், அதன் பின் என்னாகிறது என்பதே படத்தின் கதை. அறிமுக இயக்குநரான […]

29/08/2025 Dinesh R
“எனக்குக் கிடைத்த 50 ஆசீர்வாதங்கள்” – நமீதா கிருஷ்ணமூர்த்தி | காந்தி கண்ணாடி சினிமா

“எனக்குக் கிடைத்த 50 ஆசீர்வாதங்கள்” – நமீதா கிருஷ்ணமூர்த்தி | காந்தி கண்ணாடி

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், ஜெய் கிரண் தயாரிப்பில், ‘ரணம்’ பட இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில், KPY பாலா நாயகனாக நடித்துள்ள படம் “காந்தி கண்ணாடி” ஆகும். நமீதா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடிக்க, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, அமுதவாணன், மனோஜ், மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு விவேக் – மெர்லின் இசை அமைத்திருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் தமிழகம் முழுக்க […]

29/08/2025 Dinesh R
வீரவணக்கம் விமர்சனம் | Veeravanakkam review இது புதிது

வீரவணக்கம் விமர்சனம் | Veeravanakkam review

“வசந்தத்திண்டே கனல் வழிகளில்” என்று மலையாளத்தில், 2014 ஆம் ஆண்டு வந்த படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வீர வணக்கமாக வெளியிட்டுள்ளனர். நீதி மறுக்கப்பட்டவனுக்கு இரக்கம் காட்டுபவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட் – P.கிருஷ்ண பிள்ளை கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான P.கிருஷ்ண பிள்ளையின் (1906 – 1948) சரிதத்தை ஒட்டி, இப்படம் இயற்றப்பட்டுள்ளது. E.M.S.நம்பூதிரிபாட், A.K.கோபாலன் ஆகியோரும் P.கிருஷ்ண பிள்ளை தொடங்கும் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்குகின்றனர். இப்படம் நிகழும் காலகட்டம் 1940 […]

29/08/2025 Dinesh R
His story of இதிஹாஸ் | அமைதியிலிருந்து வலிமைக்கு நகரும் நாகரிக மறுமலர்ச்சி அயல் சினிமா

His story of இதிஹாஸ் | அமைதியிலிருந்து வலிமைக்கு நகரும் நாகரிக மறுமலர்ச்சி

‘ஹிஸ் ஸ்டோரி ஆஃப் இதிஹாஸ்’ எனும் ஹிந்தித் திரைப்படம், இந்தியப் பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள திரிக்கப்பட்ட வரலாற்றுக் கதைகளைக் கேள்விக்கு உட்படுத்தும் ஓர் அர்ப்பணிப்புள்ள ஆசிரியரின் பயணத்தைப் பற்றியதாகும். மன்பிரீத் சிங் தாமி எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை, பஞ்சகர்மா ப்ரொடக்ஷன்ஸால் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம், பார்வையாளர்களைத் தங்கள் பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்கவும், வரலாற்று உண்மைகளை விமர்சன ரீதியாக மறு மதிப்பீடு செய்யவும், கடந்த காலத்தைப் பற்றிய அவர்களின் அடிப்படை புரிதலை மறுபரிசீலனை செய்யவும் தூண்டும். இந்திய வரலாற்றை […]

28/08/2025 Dinesh R
நறுவீ விமர்சனம் | Naruvee review சினிமா

நறுவீ விமர்சனம் | Naruvee review

மலைவாழ் குழந்தையர்க்குக் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்துகிறது நறுவீ திரைப்படம். நறுவீ என்றால் நறுமணம் எனப் பொருள்படுமாம். கல்வியின் அவசியம் குறித்த படமென்பது படத்தின் ஒருவரிக் கதையாக இருந்தாலும், அதை ஹாரர் த்ரில்லர் படமாகத் திரைக்கதையில் மாற்றம் செய்துள்ளனர். குன்னூர் மலையிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்கு வின்சு ரேச்சல், Vj பப்பு, பாடினி குமார் முதலியோர் வருகிறார்கள். இவர்களுக்கு உதவ கேத்தரின் இணைகிறார். பெரும் காஃபி பவுடர் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர்களது வருகைக்குப் பின்னுள்ள காரணம் வணிகம் […]

26/08/2025 Dinesh R
இந்திரா விமர்சனம் | Indra review சினிமா

இந்திரா விமர்சனம் | Indra review

குடித்து விட்டு போலீஸ் ஜீப்பினை ஓட்டி விபத்தினை ஏற்படுத்தியதால், இடைக்கால பணி நீக்கத்தில் உள்ளார் காவல்துறை அதிகாரியான இந்திரா. குடிப்பழக்கம் அதிகமானதால் கண் பார்வையையும் இழந்து விடுகிறார் இந்திரா. அவரைக் கண்ணுக்குக் கண்ணாய்ப் பார்த்துக் கொள்ளும் அவரது காதல் மனைவி கயல் பூட்டிய வீட்டிற்குள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். வேலை, கண் பார்வை, காதல் மனைவி என அனைத்தையும் இழந்து வேதனையில் வாடும் கோபக்கார இந்திரா கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரது முயற்சி கைக்கூடியதா இல்லையா […]

22/08/2025 Dinesh R
மதர் | தற்கால கணவன் மனைவி உறவுச்சிக்கல் பற்றிய படம் சினிமா

மதர் | தற்கால கணவன் மனைவி உறவுச்சிக்கல் பற்றிய படம்

ரேசர் என்டர்பிரைசஸ் வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “மதர்” ஆகும். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி உறவு சிக்கலனாதாக மாறியுள்ளது.ஒரு சிறு சந்தேகம் ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். நவீன கால தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி, குடும்பத்தோடு அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில், […]

20/08/2025 Dinesh R