Shadow

சினிமா

நிபுணன் விமர்சனம்

நிபுணன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் 150வது படம். ரத்தத்தில் தோய்ந்த துணி உடுத்திய பொம்மை ஒன்று டி.எஸ்.பி. ரஞ்சித் காளிதாஸிற்கு வருகிறது. அதன் பின் தொடர் கொலைகள் நடக்கின்றன. யார் ஏன் எதற்குச் செய்கிறார் என்பதை ரஞ்சித் துப்புத் துலக்குவது தான் படத்தின் கதை. கலை இயக்குநர் ஆறுச்சாமியும், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவும் தான் கேமிராவுக்குப் பின்னுள்ள படத்தின் உண்மையான ஹீரோக்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு கதகளி ஓவியம் ஒரு பக்கம் கோணலாகச் சாய்வதில் தொடங்குகிறது படம். படம் போரடிக்காமல் (bore) போக முக்கியமான காரணம் அதன் அசத்தலான விஷுவல்ஸ்களால் தான். கடைசியில் முகமூடியை அவிழ்க்கும் கதாபாத்திரத்தினைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் கதாபாத்திரங்களையும் மிகக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் அருண் வைத்யநாதன். அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி என டீமாகப் புலனாய்வு செய்கின்றனர். டி.எஸ்.பி. ரஞ்சித் காளிதா...
சஸ்பென்ஸ் வருடத்தில் – சஸ்பென்ஸ் படம்

சஸ்பென்ஸ் வருடத்தில் – சஸ்பென்ஸ் படம்

சினிமா, திரைச் செய்தி
ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஜூன் 25 அன்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். படத்தின் இயக்குநர் ஜாய்சன் பேசுகையில், “இது என்னுடைய முதல் தமிழ்த் திரைப்படம். இது ஒரு த்ரில்லர் படம். நடிகர் ரகுமான், நடிகை இனியா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்’ எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்தர் பேசுகையில், “இந்தப் படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். அவருடன் பாடல் எழுதிய அனுபவம் மறக்க முடியாத நினைவுகள். சென்னையிலி...
ஆண்டி செர்கிஸின் ஏப்ஸ் அனுபவம்

ஆண்டி செர்கிஸின் ஏப்ஸ் அனுபவம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஹேப்பி ஹாபிட், ஸ்டார் வார்ஸ், பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் போன்ற லைவ் ஆக்ஷன் படங்களின் பின்னால் இருக்கும் நபர் ஆண்டி செர்கிஸ். சீசரின் நடை, உடல்மொழி, பாவனைகளுக்குச் சொந்தக்காரர். “சீசரின் அசாதாரணமான சாதனை என்னவென்றால் மனிதர்களையும் மனிதக்குரங்குகளையும் பேலன்ஸ் செய்து நடக்கும் பாங்கு தான். முதல் பாகத்தில், தன்னை ஒரு மனிதனாக நினைத்து வளரும் சீசர், மனிதகுரங்குகளுடன் அடைக்கப்பட்டதும் தானொரு மனிதக்குரங்கென உணர்கிறது. தனது இனத்திற்காக ஒரு சமூகத்தை உருவாக்கி, மனிதர்களுடன் போருக்குத் தயாராகும் அளவு பிரமிக்கத்தக்க வகையில் வளர்கிறது. தன்னையொரு லீடராக உனர்கிறது. தன் குடும்பத்தையும், தன் இனத்தையும் மிகவும் நேசிக்கும் சீசர் இரண்டையுமே அழகாகப் பேணிக் காக்கிறது” என அவருக்கு அழியாப் புகழ் தேடித் தந்த சீசர் பற்றிக் கூறுகிறார் ஆண்டி செர்கிஸ். படம் பார்த்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக பேட் ஏப் எனும் புது கதாபாத்திர...
விக்ரம் வேதா விமர்சனம்

விக்ரம் வேதா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பு போடும் முன்பே படம் என்ன மாதிரியான ஜானர் என 2-டி அனிமேஷன் மூலம் கோடிட்டுக் காட்டிவிடுகின்றனர் புஷ்கர் - காயத்ரி. அந்த 2டி குறும்படத்தில், வேதாளம் விக்கிரமாதித்யன் தோளைச் சுற்றிக் கொண்டு, ஒரு கதையைச் சொல்லவா எனக் கேட்கிறது. வேதா எனும் ரெளடி புதிர் போட, காவல்துறை அதிகாரி விக்ரம் அதை எவ்வாறு அவிழ்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பு ஆச்சரியமூட்டுகிறது. முதல் ஃப்ரேமிலேயே கதை தொடங்கி விடுகிறது. சின்னச் சின்ன வசனங்களிலும் ஆழமாய்ப் புதிராயும் கதை பொதிந்துள்ளது. படம் முடியும் பொழுதுதான், படத்தின் அனைத்துக் காட்சியும் ஒன்றோடு ஒன்று எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது எனத் தெரியும். மாதவன் தனது நேர்த்தியான நடிப்பால் கட்டுக்கோப்பாய் ரசிகர்களைப் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அசத்தலாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. மாதவனின் நேர்த்தியை ரசிப்...
வார் ஃபார் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ் விமர்சனம்

வார் ஃபார் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சீசர், தனது தலைமைக் குணத்தால் மனிதக் குரங்குகளை மட்டுமல்ல, மனிதர்களையும் கவர்ந்த ஒப்பற்ற தலைவர். மனிதர்களின் கொலை வெறித் தாக்குதல்களில் இருந்து தன் இனத்தைக் காக்க நினைக்கிறார் சீசர். அதற்கு முன்பே கலோனலால் அவரது மனைவியும் மகனும் கொல்லப்படுகிறார்கள். சினம் கொள்ளும் சீசர், தன் இனத்தைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி விட்டு, கலோனலைக் கொன்று பழி வாங்கப் புறப்படுகிறார். சீசர் கலோனலைக் கண்டுபிடிக்கும் முன், கலோனல் அவரது இனத்தைப் பிடித்துச் சிறையில் அடைத்து, அடிமைகள் போல் வேலை வாங்குகிறார். சீசரும் கலோனலிடம் சிக்கிக் கொள்ள, ஏப்ஸ்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே இந்த அற்புதமான படத்தின் கதை. லோகன் படத்தை, சிறுமி டாஃப்னீ கீன் அழகாக்கியது போல், இப்படத்தை அமியா மில்லர் எனும் சிறுமி அற்புதமாக்கியுள்ளார். மனிதக் குரங்கு லூக்கா இறக்கும் பொழுது, அதன் காதில் பூவை வைத்து சிறுமி சிந்தும் கண்ணீர், பார்வ...
திரி விமர்சனம்

திரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'இளைஞர்களைத் தூண்டி விடுதல் என்ற பொருளில் திரி எனப் படத்திற்குத் தலைப்பு வச்சிருக்கேன்' என இயக்குநரே தனது தலைப்பிற்கான பொருளை இசை வெளியீட்டு மேடையில் விளக்கியுள்ளார். படித்த மாணவனுக்கும், அரசியல் செல்வாக்குள்ள கல்வியறிவு இல்லாக் கல்லூரித் தாளாளருக்கும் நடக்கும் பிரச்சனையே 'திரி' படத்தின் கதை. கதைக்குள் செல்வதற்கு முன், பாரம்பரியமான முறையில் மிக அதிக நேரத்தைக் கதாபாத்திர அறிமுகத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளார் இயக்குநர் அசோக் அமிர்தராஜ். ஹீரோவின் தந்தை, ஒழுக்கத்தின் மீது செலுத்தும் அதீத கவனத்தைத் தேவைக்கும் அதிகமான காட்சிகள் மூலம் பதிந்துள்ளனர். அதாவது, கதையோடு பொருத்திச் சொல்லாமல், தனிக் காட்சிகளாகச் சொருகியுள்ளார் இயக்குநர். அஷ்வினுக்கும் ஸ்வாதிக்கும் இடையேயான காதல் காட்சிகள் சொதப்பல் ரகம். சுவாரசியப்படுத்த வேண்டிய காட்சிகளை எல்லாம் தவறவிட்டது படத்தின் மிகப் பெரிய பலவீனம். படத்தின் முதல்...
பண்டிகை விமர்சனம்

பண்டிகை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் சண்டைப் போட்டிக்குப் பெயர் தான் பண்டிகை. பணத் தேவையின் பொருட்டு, நாயகன் கிருஷ்ணாவைப் பண்டிகையில் தோற்கும்படி பேசித் தயார் செய்கிறார் சித்தப்பு சரவணன். நாயகனோ சண்டையில் வென்று விட, சரவணனோ குடும்பம், வீடு, கடை என அனைத்தையும் இழந்துவிடுகிறார். அதிலிருந்து சரவணனை நாயகன் எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. விறுவிறுப்பான முதற்பாதி ஒரு கதையாகவும்; இரண்டாம் பாதியைத் தனிக் கதையாகவும் கொண்டு திரைக்கதை நீள்கிறது. கிருஷ்ணாவின் கேரியரில் இது அவருக்கு மிக முக்கியமான படமாக அமையும். படபடப்பாகப் பேசி, சதா துள்ளலான உடல்மொழியுடன் தோன்றும் கதாபாத்திரங்களை விட, இந்த சீரியசான ரோல் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. அறிமுக இயக்குநர் ஃபெரோஸ், கிருஷ்ணாவிடமிருந்து மிகத் தேர்ந்த நடிப்பை வாங்கியுள்ளார். படத்தின் ஆச்சரியங்களில் ஒன்றாக நிதின் சத்யா உள்ளார். முந்திரி சேட்ட...
பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது

பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது

சினிமா, திரைத் துளி
அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சரோஜா படத்துக்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாரிக்கும் படம் பார்ட்டி. ஜூலை 12 அன்று, இந்தப் படத்தின் பூஜை நடந்தது. சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளம் பார்ட்டியில் பங்கேற்கிறது. முதல் முறையாக பிரேம்ஜி, வெங்கட் பிரபுவின் படத்துக்கு இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். பிஜி தீவுகளில் படமாக்கப்பட இருக்கும் ‘பார்ட்டி’ படத்தின் நட்சத்திர அறிமுகம், மிகப் பெரிய அளவில் வெங்கட் பிரபுவிற்கே உரிய பாணியில் நடந்தது. ‘பார்ட்டி’ மீதான எதிர்பார்பை உருவாக்கியுள்ளது வெங்கட் பிரபு & கோ....
பண்டிகையின் மூன்று பாடல்

பண்டிகையின் மூன்று பாடல்

சினிமா, திரைத் துளி
ரங்கூன் படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் R.H.விக்ரமின் அடுத்த படம் 'பண்டிகை '. இந்தப் படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாகும். கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். விஜயலக்ஷ்மி தயாரித்துள்ளார். இப்படத்தைக் குறித்து இசையமைப்பாளர் R.H. விக்ரம் பகிர்ந்து கொள்கையில், ''பெரோஸ் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் அவருடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியாகவும் சுலபமாகவும் இருந்தது. இப்படத்தில் 3 பாடல்கள் மட்டுமே எனத் தெளிவாகக் கூறிவிட்டார். அதனால் ஒவ்வொரு பாடலும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் நானும் பெரோஸும் உறுதியாக இருந்தோம். இப்படத்தின் முதல் பாடல் 'காங்ஸ்டர் ராப்' வகையைச் சேரும். இப்படத்தின் கதைக்களத்தைத் தெளிவாகச் சித்தரிக்கும் பாட்டு இது. கதாநாயகன் , வில்லன் மற்றும் மக்கள் கோணத்தில் எழுதப்பட்ட பாட்டு இது. இந்தச்...
சீசரின் பிரம்மாண்டமான போர்

சீசரின் பிரம்மாண்டமான போர்

அயல் சினிமா, திரைத் துளி
விஞ்ஞான ரீதியிலான நவீனங்களில் ‘ஆக்ஷன்’ அம்சங்களை அழகுறப் பாங்காகப் பொறுத்தி, உணர்வுபூர்வமான காட்சியமைப்புகளைப் பொருத்தமாக இடையே இணைத்து உருவாக்கப்படும் பிரம்மாண்டமான படைப்புகள் பெரிதாகப் பேசப்படும். ‘தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ தொடர் திரைப்படங்கள் அத்தகைய அம்சங்கள் நிறைந்தவை. அத்திரைத் தொடர்களின் 4-வது பதிப்பு, 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கான்குவெஸ்ட் ஆஃப் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ ஆகும். சிறிது இடைவெளிக்குப் பிறகு, 2011 இல் அச்சங்கிலித் தொடர், ‘தி ரைஸ் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ என்கிற தலைப்பில் ரூபர்ட் வியாட்டின் இயக்கத்தில் உருவானது. அதன் தொடர் படம் தான், 2014இல் வெளியான, ‘டான் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’. அப்படத்தை இயக்கியிருந்த மேட் ரீவ்ஸ் உருவாக்கியுள்ள சங்கிலித் தொடரின் அடுத்த பதிப்புதான், ‘வார் ஃபார் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’. மேற்குறிப்பிட்ட மூன்று படங்களின் திரைக்கதையை அமை...