Shadow

சினிமா

பண்டிகை மகிழ்ச்சியில் கிருஷ்ணா

பண்டிகை மகிழ்ச்சியில் கிருஷ்ணா

சினிமா, திரைத் துளி
கிருஷ்ணா நடிப்பில், அறிமுக இயக்குநர் பெரோஸ் இயக்கத்தில், வருகின்ற 14 ஆம் தேதி வெளி வரவுள்ள படம் பண்டிகை. "கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்கள் படம் வெளி வருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வைத் தந்ததோ, அதே உணர்வைப் பண்டிகை படமும் தருகிறது. இயக்குநர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். எங்களுக்குள் உள்ள பரஸ்பர தோழமையும், புரிதலும் இந்தப் படத்தில் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் காட்டும் கவனம், அவரது இலக்கு வெற்றி மட்டுமே என்பதைச் சொல்லும். சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கோர்க்கப் பட்ட இந்தக் கதை என் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என்பதைத் தீர்மானமாகச் சொல்ல முடியும். அன்பு - அறிவு இரட்டையர் அமைத்து உள்ள சண்டை காட்சிகள் எனக்கு மிகப் பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்து ஹீரோ தரும் என்பதும் உத்திரவாதம். இந்தப் படத்தில் எனக்கு இணையாக நடித்துள்ள ஆனந்தி ஒரு ராசியான வெற்றிப் பட நாயகி ...
ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் விமர்சனம்

ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஸ்பைடர்- மேன் படங்களின் ரசிகர் நீங்களென்றால், கண்டிப்பாக இது உங்களுக்கான படமில்லை. மார்வல் ஸ்டுடியோஸ், கதை சொல்லும் பாணியில் மிகுந்த வேறுபாடினைக் காட்டியுள்ளனர். ஸ்பைடர்-மேனுக்குப் புது அடையாளம் கொடுத்துள்ளார் திரைக்கதையாசிரியர்களில் ஒருவரும், இயக்குநருமான ஜோன் வாட்ஸ். ‘ஹோம்கமிங்’ என்றால் பள்ளியை விட்டுச் சென்ற சீனியர்களை அமெரிக்க மாணவர்கள் வரவேற்கும் வருடாந்திர நிகழ்வு. ஸ்பைடர்-மேன் படித்து வரும் பள்ளி அதற்காகத் தயாராகி வருகிறது. நம்மூரில், 14 வயது நிரம்பிய பதின்ம சிறுவனுக்கு இருக்கும் ஆகப் பெரும் சவால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு. ஸ்பைடர்-மேனுக்கோ, சூப்பர் ஹீரோ ஆகவேண்டும்; அவெஞ்சர்ஸ் குழுவில் இடம் பிடிக்கவேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. ஏதாவது நல்லது செய்து சூப்பர் ஹீரோ ஆகி விட வேண்டுமென வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். அதற்காக, முகவரியைத் தேடித் தவிப்பவர்களுக்குக் கூட உதவுகிறா...
மாம் விமர்சனம்

மாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆனந்தையும் அவரது மகள் ஆர்யாவையும், தன் குடும்பமாக வரித்து அளவில்லாப் பாசத்தைப் பொழிகிறார் தேவகி. ஆனால் ஆர்யாவால் தேவகியை அம்மாவாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்நிலையில் உடன் படிக்கும் மாணவன் ஒருவனால் ஆர்யா பலத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறாள். நொறுங்கிப் போகும் மகளை மீட்பதோடு, தேவகி எப்படி தன் அன்பை மகளுக்குப் புரிய வைக்கிறார் என்பது தான் படத்தின் கதை. இரண்டு லாலிவுட் (லாகூர்/பாகிஸ்தான் சினிமா) நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒன்று, ஸ்ரீதேவியின் கணவராக நடித்திருக்கும் அத்னான் சித்திக்; மற்றொன்று, ஸ்ரீதேவியின் மகளாக நடித்திருக்கும் சாஜல் அலி. அத்னான் சித்திக் பார்ப்பதற்கு 'துருவங்கள் பதினாறு' ரஹ்மான் போல் அசத்தலாக உள்ளார். மனைவியைச் சமாதானம் செய்வதாகட்டும், தாயை மறக்க முடியாமல் தேம்பும் மகளைத் தேற்றுவதாகட்டும், குற்றவாளிகள் நிரபராதியெனத் தீர்ப்பளிக்கப் படும்பொழுது கோபப்ப...
கர்மா கட்டும் ‘கட்டம்’

கர்மா கட்டும் ‘கட்டம்’

சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரையுலகில் , 2017 ஆம் ஆண்டை, இளம் இயக்குநர்களுக்கான வருடம் என்று தான் சொல்ல வேண்டும். புதிய முயற்சிகள் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இணைய உள்ளது, "முரண்" திரைப்படத்தின் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ராஜன் மாதவ் இயக்கும், கட்டம் திரைப்படம் ஆகும். Icreatewonder என்கிற புதிய நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. புது முகங்கள் நிவாஸ் மற்றும் நந்தன் கதாநாயகர்களாக நடிக்க இவர்களுடன் நாயகியாக நடித்து உள்ளார் ஷிவ்தா நாயர். நவீன்- ஜே.சி.பால் இரட்டையர் இசை அமைக்க , டேமேல் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட்ரமணன் படத்தொகுப்பில், பிரேம் அரங்கமைப்பில் , சந்தியா ஜனா தயாரிக்கிறார். "க்ரைம் த்ரில்லர் தமிழ்த் திரையுலகுக்குப் புதியதன்று. ஆனால் நாங்கள் கையாண்டு இருக்கும் ‘கர்மிக் திரில்லர் (Karmic thriller)’ யுத்தி மிகவும் புதிது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ப...
நாகேஷ் திரையரங்கம் – வழக்கு தொடர்ந்த ஆனந்த் பாபு

நாகேஷ் திரையரங்கம் – வழக்கு தொடர்ந்த ஆனந்த் பாபு

சினிமா, திரைத் துளி
சமீபத்தில், நாகேஷ் திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி நடிப்பில் இசாக் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனர் ராஜேந்திர எம். ராஜன் தயாரித்துள்ளார். நாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிட தடைகேட்டு, மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். 'என்னுடைய தந்தை நாகேஷ், 1958ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர். அவர் சென்னை தியாகராய நகரில், நாகேஷ் தியேட்டர் என்ற ஒரு திரையரங்கைச் சொந்தமாக நடத்தினார். டிரான்ஸ் இந்தியா நிறுவன தயாரிப்பில், ஐசக் என்ற முகமது இசாக் என்பவர் இயக்கத்தில், 'நாகேஷ் திரையரங்கம்' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. திகில் ...
மாம்: பெண்ணின் வலிமை

மாம்: பெண்ணின் வலிமை

சினிமா, திரைத் துளி
‘ஒருபோதும் பெண்ணுடைய வலிமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். ஏனெனில் சவால் என்று வந்துவிட்டால், அவள் நரகத்தையும் விலை பேசுவாள்’ என்பதுதான் ‘மாம்’ படத்தின் மையக்கரு. தேவகி சபர்வால், கணவர் ஆனந்துடனும் இரு அழகான பெண் குழந்தைகள் ஆர்யாவுடனும் பிரியாவுடனும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். ஆனால் ஏனோ ஒரு தாயுள்ளத்தின் உண்மையான மனமகிழ்ச்சியைத்தான் இன்னும் உணரவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. ஆரியாவால் தன் தந்தையிடம் காட்டும் நெருக்கத்தை தன் தாயிடம் காட்ட இயலவில்லை. ஒரு மகள் தன்னுடைய தாயின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பெறுகிறாள், ஆனால் ஒரு தாய் தன்னுடைய மகளின் வாழ்வில் அத்தனை முக்கியத்துவம் பெறுவதில்லை என ஆர்யா திடமாய் நம்புகிறாள். வார்த்தைகளால் சொல்லாவிடினும், ஒரு தாய்க்குத் தானே தெரியும் தன் மகளை பற்றி என்று, தேவகியும் தன் மகள் ஒரு நாள் புரிந்துகொள்வாள் எனப் பொறுமையாகக் காத்திருக்கிறாள். இந்த...
மாம் – மொத்த உலகத்திற்குமான படம்

மாம் – மொத்த உலகத்திற்குமான படம்

சினிமா, திரைச் செய்தி
“மாம் ஒரு ஹிந்திப் படம். ஆனா அது மொத்த இந்தியாவிற்கான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. ஏன், உலகம் முழுவதற்குமான கதையைக் கொண்டது. சைனா, அமெரிக்கா, ஈரோப் என எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், குடும்பம் என்ற அமைப்பை ரொம்ப மதிக்கிறாங்க. இந்தப் படம் பெற்றோர்கள் செய்யும் தியாகம் பற்றிப் பேசுகிறது” என்றார்படத்தின் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான். “என் கணவர் இந்தக் கதையின் கருவை என்னிடம் சொன்னார். இப்படத்தை நான் கண்டிப்பாகப் பண்ணணும்னு முடுவு பண்ணேன். பின் கதையை டெவலப் செய்யவே இரண்டு வருடமானது. நானும் ரவியும் (இயக்குநர் ரவி உதய்வார்), இந்தப் படத்திற்கு எப்படியாவது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என விரும்பினோம். என் கணவர் போனி கபூர், ரஹ்மானை இசையமைக்க அழைத்து வந்தார். அவர் இசையில் நான் நடிக்கும் முதல் படம். ஏ.ஆர்.ரஹ்மான் எங்கள் படத்திற்கு இசையமைத்துள்ளதால், இந்தப் படத்திற்கான வீச்சு மிகப் பெ...
சிலந்திகளுக்கு நடுங்கும் ஸ்பைடர்-மேன்

சிலந்திகளுக்கு நடுங்கும் ஸ்பைடர்-மேன்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
குடும்பம், படிப்பு, காதலி என ஒரு வட்டத்திற்குள் வாழ்க்கை நடத்தி வரும் ஓர் இளைஞன், பொதுமக்களது பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்க விழையும் அதீத சக்தி பெற்ற வில்லன், தலைதூக்க முற்படும் தருணங்களிலெல்லாம் உருமாறி, செவ்வண்ணத்தில் கட்டம் போடப்பட்ட உடையணிந்து, பொது மக்களின் பாதுகாவலனாகச் செயல்படத் தயாராகிவிடுவான்! அவன் ஸ்பைடர்மேன். ஆனால், ஸ்பைடர் மெனாக நடிக்கும் 21 வயது இளைஞனான டாம் ஹாலண்டிற்கு சிலந்திகள் என்றால் பயம். 2016இல் வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்தில் ஸ்பைடர்மேனாக அறிமுகமானார் டாம் ஹாலண்ட். ஜூலை 7, 2017 அன்று வெளியாகும் ‘ஸ்பைடர்-மேன்: ஹோம் கமிங்’ படத்தில் சோலா சூப்பர் ஹீரோவாகத் தோன்ற உள்ளார். அவரது வழிகாட்டியாக டோனி ஸ்டார்க் எனும் அயர்ன் மேனும் படத்தில் வருகிறார். அதைப் பற்றி அயர்ன் மேனாக நடிக்கும் ராபர்ட் டெளனி ஜூனியர், “டோனி ஸ்பைடரை நெருக்கமாகக் கண்காணித்து, அவெஞ்சர்ஸ் ...
தங்கரதம் விமர்சனம்

தங்கரதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் வெற்றி ஓட்டும் டெம்போ வேனின் பெயர் ‘தங்கரதம்’ என்பதே படத்தின் தலைப்பிற்குக் காரணம். ஆனாலும், டாஸ்மாக் பாரில் வரும் பாடலில், ‘தங்கரதம் போல ஸ்டீல் பாடி’ என குடிக்காரர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனைப் புகழும் வரி ஒன்று வருகிறது. கரியாம்பட்டியிலிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்குக் காய்கறிகளை இரண்டு டெம்போ வேன் கொண்டு செல்கிறது. ஒன்று, நாயகன் வெற்றியுடைய ‘தங்கரதம்’; இன்னொன்று, கதாநாயகியின் அண்ணன் செளந்தரராஜாவினுடைய ‘பரமன்’ வேன். இருவருக்குமிடையே எப்பொழுதும் பலமான தொழிற்போட்டி நிலவி வருகிறது. நாயகனுக்கோ நாயகி மீது காதல்! அவர்கள் காதல் என்னானது என்பதே படத்தின் கதை. மிக அழகானதொரு கதையை எடுத்தாண்டுள்ளார் இயக்குநர் பாலமுருகன். கிராமிய மனம் கமிழும் இந்த மென் காதல் கதைகளின் காலம் முடிந்து இரண்டு தசாப்தங்கள் போலாகிவிட்டது. இரண்டு மணி நேரத்திற்குக் குறைவான படமாய்க் குறைத்தும், ஒப்பேத்துவதற்கான...
டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம்

டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
2010இல் தொடங்கியது ‘டெஸ்பிக்கபிள் மீ’ தொடர். அதில் வரும் மினியன்ஸ் எனும் திரைப்பாத்திரங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த பரவலான வரவேற்பின் காரணமாக வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. சமீபத்தில், மினியன்ஸ் போன்று மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்ற திரைப்பாத்திரம் வேறில்லை என்றே சொல்லவேண்டும். சமூக வலைத்தளங்களில் எமோட்டிகான்களாகப் பயன்படுத்தப்படும் மினியன்ஸ், மக்களின் எல்லா விதமான உணர்ச்சிகளையும் தங்கள் சின்னஞ்சிறு மஞ்சள் உருவங்களின் மூலம் பிரதிபலிக்கின்றன. மக்களுக்கு மினியன்ஸிடமுள்ள மோகத்தினை மனதில் கொண்டே, யுனிவர்சல் பிக்சர்ஸ் முதல் முறையாக டெஸ்பிக்கபிள் மீ தொடரில் வந்திருக்கும் மூன்றாம் பாகத்தைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். முந்தைய பாகங்களில், வெறுக்கத்தக்க வில்லனாக இருந்து, மூன்று அநாதை சிறுமிகளுக்கு நல்ல தகப்பனாக மாறி, லூசி வைல்டின் கரம் பிடித்து ஏ.வி.எல்.(Anti-Villia...
லண்டனில் இசை ஆல்பம் – ஸ்ருதிஹாசன்

லண்டனில் இசை ஆல்பம் – ஸ்ருதிஹாசன்

சினிமா, திரைத் துளி
நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்திப் படம், ‘பெஹன் ஹோகி தேரி. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைத் தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதிஹாசன். படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன், “இந்தப் படம், என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது. எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. படத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் எனக்குத் தந்தை மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட! அவருடைய அறிவுரை எனக்குத் திரையுலகிலும், சொந்த வாழ்க்கையிலும் பேருதவியாக இருக்கும். படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியது எனக்கு ச்சந்தோஷத்தைக் கொடுத்தது” என்றார். முன்னதாக இப்படத்தின் விளம்பரத்திற்காக ஓய்வேயில்லாமல் இந்தியா முழுவத...