Shadow

சினிமா

“விரைவில் அடுத்த படம்” – இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்

“விரைவில் அடுத்த படம்” – இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்

திரைத் துளி
திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் அவர்களின் இல்ல விழாவில், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். ‘காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகனின் மகள்கள் சுவேதா, சுருதி ஆகியோரின் ருதுமங்கள விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் திரு.ஜெயக்குமார், திரு.தங்கமணி, முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் திருமதி.வளர்மதி, திரு.தளவாய் சுந்தரம், நடிகர்கள் ராமராஜன், சிங்கமுத்து, அனுமோகன், தியாகு, நடிகை ரிசா, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், சக்தி சிதம்பரம், இசையமைப்பாளர் செளவுந்தர்யன், கவிஞர்கள் முத்துலிங்கம், பிறை சூடன், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம், சினிமா மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏரா...
வேலையில்லா பட்டதாரி – 2 விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'இன்ஜினியர் ஆஃப் தி இயர்' பட்டம் வாங்கும் ரகுவரன் மீண்டும் வேலையில்லாப் பட்டதாரி ஆகி விடுகிறார். வி.ஐ.பி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எனும் சொந்த நிறுவனம் தொடங்குகிறார். அதுவும் கை விட்டுப் போய் விடுகிறது. பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்.டி. வசுந்தராவாக கஜோல். அனைத்திலும் பெஸ்ட், எப்பவும் ஃபர்ஸ்ட் என்பதுதான் அவரது கொள்கை. எப்பவும் வெந்நீரில் காலை நனைத்துக் கொண்டது போல் ஓர் அவசரத்துடனும், முழு மேக்கப்புடனுமே திரையில் வலிய வருகிறார் கஜோல். அவரால் ஒரு நிமிடத்தைக் கூட வேஸ்ட் செய்ய முடியாத அளவு பிஸியான கதாபாத்திரமாம். ஆனாலும், நம்பர் 1 இன்ஜினியர் ஆன ரகுவரனைக் கார்னர் செய்ய தன் பொன்னான நேரத்தையும், கோடிக்கணக்கில் பணமும் செலவழிப்பார் என்பது முரணாக உள்ளது. மனைவி என்றாலே கத்திக் கொண்டே இருப்பார் என்பதைப் படத்தின் முதல் பாதியில் தேவைக்கு அதிகமாகவே பதிகிறார். சிகரெட் பிடி...
“நடனமும் நடிப்பும் என் உயிர்” – அனுஷா

“நடனமும் நடிப்பும் என் உயிர்” – அனுஷா

சினிமா, திரைத் துளி
மூன்றாவது வயதிலேயே காலில் சலங்கை கட்டி நடனமாடியவர் அனுஷா நாயர். கேரளாவில் இயற்கை எழில் நிறைந்த ஆலப்புழாவில் பிறந்து பெங்களூரில் படித்து வளர்ந்தவர் அனுஷா நாயர். பிரபலமான மலையாள டெலிஃபிலிம்களிலும் கதாநாயகியாக வலம் வரவே, சுரேஷ்கோபி ஹீரோவாக நடித்த 'தாவளம்' படத்தில் நெடுமுடி வேணுவின் மகளாகச் சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இதுவே அனுஷா நாயருக்குத் தமிழில் வாய்ப்புக் கிடைக்கக் காரணமாய் அமைந்தது. அனுஷா நாயர், 'மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி' படக்குழுவினர்களின் கண்ணில் பட அவர்களது அடுத்த படமான, 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி' யில் மாலினி என்று பெயரை மாற்றி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் பகத் ஃபாசில் நடித்த 'அன்னயும் ரசூலும்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் நடனத்தில் கவனத்தைச...
மகிழ்ச்சியில் திளைக்கும் கதாநாயகன்

மகிழ்ச்சியில் திளைக்கும் கதாநாயகன்

சினிமா, திரைச் செய்தி
விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்னு விஷால் தயாரிக்கும் முதல் படம் கதாநாயகன் ஆகும். இப்படத்தில் விஷ்னுவிஷால் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான லெக்ஷ்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், "விஷ்னுவிடம் குழந்தை முகம் உள்ளது. மேலும் எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும் முயற்சியும் இருக்கிறது. இது அவரைக் கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். படத்தின் இயக்குநர் முருகானந்தம் மிகவும் திறமையானவர். ஒரு நடிகர் மக்களிடத்தில் எந்த மாதிரியான இடத்தைப் பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வேலை வாங்குகிறார். இந்தப் படம் கண்டிப்பாக ஒரு ஃபேமில...
ஆக்கம் விமர்சனம்

ஆக்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே! அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!' என்ற கண்ணதாசனின் இந்த வரிகள் தான் படம் சொல்லும் கருத்து. ஆக்கம் என்றால் முன்னேற்றம், வளர்ச்சி எனப் பொருள் கொள்ளலாம். அது, ஒரே சூழலில் வளர்ந்த இருவருக்கு எப்படி அமைகிறது என்பதோடு படம் முடிகிறது. பலமுறை பார்த்துப் பழகிப் புளித்துப் போன கதை. வடச்சென்னையில் பிறந்து வளரும் ஒருவனுக்குச் சென்னையையே கலக்கும் ரெளடி/தாதா ஆகவேண்டும் என்று ஆசை.  படத்தின் ஒளிப்பதிவும், சில நுணக்கமான டீட்டெயிலிங்கும் அசர வைக்கின்றன. ஒரு மரண ஊர்வலத்தில் நாயகன் ஆடிக் கொண்டு வருவதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்கேயே G.A.சிவசுந்தரின் ஒளிப்பதிவு உங்களை ஈர்க்கத் தொடங்கிவிடும். அந்த ஊர்வலம், தொழுகை நேரத்தில் மசூதியைக் கடக்கும் பொழுது அமைதி காக்கின்றது.  சொக்குவாக சத்தீஷ் ராவண். அன்றாடம் நாம் க...
சதுரஅடி 3500 விமர்சனம்

சதுரஅடி 3500 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாஃபியாகளிடம் ரியல் எஸ்டேட் சிக்கிக் கொண்டது என்பதன் குறியீடு தான் படத்தின் தலைப்பு. ஸ்டீஃபன் எனும் சிவில் இன்ஜினியர் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்படுகிறார். அவரது ஆவி அந்த பில்டிங்கில் சுற்றுவதாக பீதி பரவ, அதை விசாரிக்க எஸ்.ஐ. கர்ணா நியமிக்கப்படுகிறார். ஸ்டீஃபன் கொலையிலுள்ள மர்மமென்ன என்பதுதான் படத்தின் கதை. படம் நேரடியாகக் கதைக்குச் செல்லாமல், கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வதற்குப் போதுமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ரஹ்மான், நிகில் மோகன், தலைவாசல் விஜய், ஸ்வாதி தீக்ஷித், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, ஆகாஷ், இனியா, மனோபாலா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தின் அறிமுகம் முடிந்த பின்னும், திரைக்கதை சூடு பிடிக்காதது படத்தின் மிகப் பெரும் குறை. அதை விட கொடுமையான சங்கதி, ரஹ்மான் இரண்டே காட்சிகளில் தலைகாட்டுவதோடு மாயமாகி விடுகிறார். நாயகி ஸ்வாதி தீக்ஷித்தோ மூன்றே மூன்று காட்சியிலும...
அம்மண அம்மண தேசத்தில – பாடல்

அம்மண அம்மண தேசத்தில – பாடல்

Songs, காணொளிகள், சினிமா
“கொலை விளையும் நிலம் - ஆவணப்படத்தின் மூலம் சமீபத்தில் தனுஷ் அவர்கள் கரங்களால் 125 பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நிதி உதவி கிடைத்திருக்கிறது. இன்னும் பலர் உதவிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள். அத்தனைக்கும் காரணம் ஊடக நண்பர்கள் தான். ஓர் ஆவணப்படம் தானே என்பதைத் தாண்டி அது பேசிய விஷயத்துக்காகவே பெரிய அளவில் கொண்டு சேர்த்துவிட்டீர்கள். அதற்காக நானும் எனது படக்குழுவும் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறோம். “ - இயக்குநர் ராஜீவ் காந்தி ஜீ.வி. பிரகாஷின் ஆக்ரோஷமான இசையில், ராஜூ முருகன் அண்ணனின் கோப வரிகளில் உருவாகி, கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தில் இடம்பெற்ற அம்மண தேசம் பாடலை இன்று காலை 10 மணிக்கு இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டார்....
“சென்ஸார் மறுக்கும் மர்மமென்ன?” – இயக்குநர் ராகேஷ்

“சென்ஸார் மறுக்கும் மர்மமென்ன?” – இயக்குநர் ராகேஷ்

சினிமா, திரைத் துளி
எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' படத்திற்குச் சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் 'திலகர்' படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா தத்தா; இன்னொருவர் அஞ்சனா. இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்'கோபி, ‘சதுரங்க வேட்டை' புகழ் வளவன், 'நான் மகான் அல்ல' ராம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 1 அன்று சென்ஸார் அதிகாரிகளால் தணிக்கை செய்யப் பார்க்கப்பட்டது. இதுகுறித்து இயக்குநர் ராகேஷ் கூறியதாவது, “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன, இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திய கதையாகும். ஒவ்வொரு நாளும் பெண்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோதச் சம்பவங்கள் நி...
“நன்றி. ஜெய்ஹிந்த்!” – நிபுணன் அர்ஜூன்

“நன்றி. ஜெய்ஹிந்த்!” – நிபுணன் அர்ஜூன்

சினிமா, திரைச் செய்தி
நிபுணன் திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான பங்கு ஊடகங்களுக்கு உண்டென நன்றி தெரிவித்தது நிபுணன் படக்குழு. "நிபுணன் வரவேற்பிற்குக் காரணம் ஊடகத்தின் நேர்மையான விமர்சனமே! அதனுடன் மக்களின் கருத்தும் ஒன்றிப் போனது இந்தப் படத்தின் வெற்றிக்குப் மிக பெரிய அடித்தளமாகும்" என்றார் தயாரிப்பாளர் உமேஷ். “ நிபுணன் படம் 2015-இல் தொடங்கிய பின் இரண்டு வெள்ளங்களைப் பார்த்துவிட்டது. இந்தக் கதை எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வந்தது. அர்ஜூன் சாரின் 150ஆவது படத்தை இயக்கியது எனக்கு மிக மிகப் பெருமை. இந்தப் படத்தில் என்னுடன் பணி புரிந்த அனைத்து நடிக நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் இயக்குநர் அருண் வைத்யநாதன். மலையாளத்தில் தான் இயக்கிய பெருச்சாழி போல், தமிழில் ‘பொலிட்டிகல் சட்டையர்’ படமெடுக்க ஆவல் இருப்பினும், அப்படம் எடுத்தால் த...
விவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து

விவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து

சினிமா, திரைத் துளி
பல கவிதை தொகுப்புகள், சிறு கதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்து, கவண் படம் மூலமாகத் திரைக்கதை எழுத்தாளரானார். தற்போது இவர், அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி, ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கும் விவேகம் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். விவேகம் குறித்து கபிலன் வைரமுத்து பேசுகையில், ''இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியது மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்று எனது பங்களித்ப்பை அளித்துள்ளேன். சினிமாவின் உயிர் நாடி அதன் திரைக்கதை என்பதை நம்புபவன் நான். பாடலாசிரியராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் திறம்பட நான் பணிபுரிய இயக்குநர் சிவா என் மீது முழு நம்பிக்கை வைத்து, வேண்டிய சுதந்திரத்தை அளித்ததே காரனம். அவரின் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை மேலும் பல உயரங்களுக்கு நிச்சயம் கொண்டு போகும். இப்பட...
மீசைய முறுக்கு –பாக்ஸர் தம்பி

மீசைய முறுக்கு –பாக்ஸர் தம்பி

சினிமா, திரைத் துளி
‘மீசைய முறுக்கு’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராம். படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த இவரின் நடிப்பைக் கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவர் பேசுகையில்,‘ நடிகனாக வேண்டும் என்று சிறுவயதிலேயே ஆசைப்பட்டேன். லயோலாவில் விஸ்காம் படித்து முடிக்கும் போது கூத்துப்பட்டறை, அல்கமி, லண்டன் டிரினிட்டி நடிப்பு பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சி பெற்று என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக நல்லதொரு வாய்ப்பிற்கான தேடலில் இருந்தேன். பிறகு நண்பர்களின் உதவியுடன் ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் ஆதியின் தம்பியாக நடித்தேன். படப்பிடிப்பு முழுவதும் இளைஞர் பட்டாளம் என்பதால் ஜாலியாக இருந்தது. சீனியரான விவேக் அவர்கள் பல இடங்களில் எங்களுக்குப் பேருதவி செய்திருக்கிறார். இயக்குநர் சொன்னதற்காக பாக்ஸிங் கூட கற்றுக் கொண்டே...
4 கதாபாத்திரங்களில் ‘சோலோ’ துல்கர்

4 கதாபாத்திரங்களில் ‘சோலோ’ துல்கர்

சினிமா, திரைத் துளி
துல்கர் சல்மான் நடிக்கும் சோலோ படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகிறது இப்படம். இந்தப் படத்தைப் பற்றிய அறிமுக விழாவில், இயக்குனர் மணிரத்னமும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். “சோலோ தான் என் முதல் தென்னிந்திய படம். டேவிட் பாதி டப் செய்யப்பட்ட படம். சோலோவைத் தமிழ் மற்றும் மலையாளத்தில் தனித்தனியாக படம் பிடித்திருக்கிறோம். நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது. இந்தப் படத்தில் 3 ஒளிப்பதிவாளர்களும் 11 இசையமைப்பாளர்களும் பணிபுரிகின்றனர் படத்தில் மொத்தம் 15 பாடல்கள் ” என்றார் இயக்குநர் பிஜாய் நம்பியார். “எனக்கு இதுவரை கிடைத்த படங்கள், இயக்குநர்கள் எல்லாமே நல்லதாகவே அமைந்திருக்கின்றன. நல்ல படங்களை எப்போதுமே கொடுக்க முனைகிறேன். தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் எப்போதும் ஊக்கம் அளிக்கிறார்கள். இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ஒரு ப...