
மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3
ஃப்ரான்ஸில் உள்ள ‘மெக் கஃப்’ என்கிற மிகப் பெரிய அனிமேஷன் ஸ்டூடியோவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட படம்தான், ‘டெஸ்பிக்கபிள் மீ’ திரைப்படம். 69 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அப்படம், 543.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துக் குவித்தது. அதன் தொடர் படமாக 2013 இல் வெளிவந்த டெஸ்பிக்கபிள் மீ 2 அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டு 970.8 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்தது. அவ்விரு படங்களையும் பியரீ காஃபின் மற்றும் க்ரிஸ் ரெனாட் ஆகிய இருவரும் இயக்கியிருந்தனர். மூன்றாவது தொடர் சங்கிலித் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள மகத்தானதொரு முப்பரிமாணத் திரைக்காவியம் தான், ‘டெஸ்பிக்கபிள் மீ 3’. இடையே, 2015இல், ‘டெஸ்பிக்கபிள் மீ’ படத்தொடர்களின் முன்னோடியாக 74 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட படம், ‘மினியன்ஸ்’. பியரீ காஃபினோடு இ...















