சாயா படத்தில், நாயகி காயத்ரி ஒரே டேக்கில் நீண்ட பெரிய வசனத்தை படத்தில் இரண்டு இடத்தில் பேசி நடித்துள்ளார். ஒரு காட்சியில் நாயகன் வெளியூரிலிருந்து வருவார். அப்போது நாயகி அவரை வரவேற்று திருஷ்டி சுத்திப்போடுவார். கிட்டத்தட்ட இருபத்தைந்து வகையான திருஷ்டியை மூச்சுவிடாமல் ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார்.
இன்னொரு காட்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் பத்து முதல்வர்கள் பேர் சொல்ல வேண்டும் எனக் கேட்க, நாயகி காயத்ரி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை தமிழகத்தை ஆண்டது யார் யார் என மூச்சுவிடாமல் பேசி நடித்து யூனிட்டின் கைத்தட்டலை வாங்கியுள்ளார்.
நாயகி காயத்ரி கூறும்போது, நீ”ண்ட வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடிக்கவேண்டும் என்று இயக்குநர் பழனிவேல் கூறியபோது பயந்தேன். ஆனால் இயக்குநர் பழனிவேல் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். தமிழ் தெரிந்த நாயகி என்பதால் புரிந்து பேசி ஒரே ட...
“பைரவா படத்துடன் 'சாயா' படத்தை வெளியிடலாமென்று முடிவெடுத்துக் களமிறங்கினோம். நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல். பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அதற்கு எப்போ வழிபிறக்கும்னு தெரியலை.
போதாக்குறைக்கு நம்ம வீட்டில் ஒரு இளைய தளபதி ரசிகர் இருக்கிறார். அவர், ‘எங்கள் தளபதி படம் வெளியாகும்போது நீங்கள் எப்படி வெளியிடலாம்?’ என ஒரே தகராறு. வீட்டிலேயே எதிர்ப்பிருந்தா எப்படி வெளியிடுறது? தள்ளிப்போட வேண்டியதாயிற்று.
மறுபடியும் வெளியிட தேதி குறித்தபோது சல்லிக்கட்டு போராட்டம். ஒட்டுமொத்த நாடே களமிறங்கி நிற்கும்போது நான் எப்படிப் படத்தை வெளியிடுவேன்? தள்ளி வைத்தேன். இப்போதும் போகன் வருகிறது என்கிறார்கள். வரட்டும். ஆனால் இது சமூகத்திற்குச் சொல்லவேண்டிய கருத்துள்ள படம். மக்களுக்கான படம். தைரியமாக வெளியிடுகிறேன்” என்கிறார் இயக்குநர் வி.எஸ்.பழனிவேல்....
1967 இல், இயக்குநர் திரிலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் படம் "அதே கண்கள்". அந்தப் படத்திற்கு மிகக் கச்சிதமாகத் தலைப்பு பொருந்தியது போல், இப்படத்திற்குப் பொருந்தவில்லை.
ரெஸ்டாரன்ட் ஓனரான சமையல் கலைஞர் வருணுக்குத் தீபா மீது காதல் ஏற்படுகிறது. தீபாவிடம் காதலைச் சொன்ன அன்றே ஏற்படும் விபத்தில், கண் பார்வையை மீண்டும் பெறுகிறான் வருண். ஆனால், அவனது காதலி தீபா பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் போய் விடுகிறது. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
நெடுஞ்சாலை, ஜீரோ ஆகிய படங்களிலேயே தன் நடிப்பை நிரூபித்து விட்டவர் ஷிவதா. எனினும் இந்தப் படத்தின் மூலம் தான் பரவலாகக் கவனிக்கப்படுவார் என்பது திண்ணம். தீபா எனும் பாத்திரத்தில் பார்வையாளர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறார். அறிமுக காட்சியிலேயே அசத்திவிடுகிறார். அவரது குணாம்சமும் கடைசி ஃப்ரேம் வரை ஈர்க்கி...
காபில் என்ற ஹிந்தி வார்த்தைக்குத் 'திறமையுள்ள' அல்லது 'சாதித்து முடிக்கக் கூடிய' எனப் பொருள் கொள்ளலாம். தமிழில், 'பலம்' என்ற தலைப்பில் டப் செய்து வெளியிட்டுள்ளனர்.
ரோஹன் பாண்டியராஜ்க்கும், சுப்ரியாவுக்கும் கண் பார்வை இல்லையெனினும், முதல் சந்திப்பிலேயே சுப்ரியா மீது காதல் வயப்படுகிறார் ரோஹன். திருமணம் ஆன இரண்டாவது நாளே அவர்கள் வாழ்வின் போக்கையே இரண்டு நபர்கள் சீர்குலைக்கின்றனர். விவேகத்தையும் நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக் கொண்டு வாழும் ரோஹன், தன் வாழ்க்கையை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
உறுத்தாத டப்பிங் மிகப் பெரிய ஆறுதல். சில இடங்களில் கைதட்டலும் பெறுகிறது. ரோஹன் தன் மனைவி சுப்ரியாவிடம் ரஜினி குரலில் பேசும் காட்சியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். படத்தின் நாயகனான ரோஹனும் டப்பிங் ஆர்டிஸ்ட் தான்; அதுதான் அவன் பலமும். ஒட்டுமொத்த படமும் ஒரு மென்கவிதை போல் ...
பொங்கலுக்கு ஒரு படம், நாயகன் விஜயின் கணக்கில் வரவு வைக்கவேண்டுமென்ற ஆவலில் உருவாகியுள்ள படம்.
தீமையை எதிர்த்து ஒற்றை ஆளாய்ப் போராடி, பைரவா வாகை சூடுவதுதான் படத்தின் கதை.
வில்லனாகப்பட்டவர் கல்வித் தந்தை, நாயகி மருத்துவம் படிக்கும் மாணவி, விஜய் மாஸ் ஹீரோ என்பதை முதல் பாதியில் நீட்டி முழக்கியும், வில்லனை நாயகன் எப்படி வீழ்த்துகிறார் என்பதை இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர். சுவாரசியமோ, புதுமையோ, திருப்பமோ அற்ற திரைக்கதையின் நீளம் சற்றே அதிகம்.
விஜய் அழகாக, அசத்தலாக, இளமையாகத் துள்ளலோடு படம் நெடுகே வருகிறார். நாயகனின் அறிமுகம் தான் மாஸ் ஹீரோ படத்தின் டோனை செட் செய்ய உதவுவது. மிகப் பரிதாபகரமாக அதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர் பரதன். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்குத் தகுந்தபடி 'மாஸ்' எனும் விஷயம் முழுப் படத்திலுமேயே மிஸ்ஸிங். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் சோபிக்கவில்லை.
மர...
ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவான காபில் எனும் ஹிந்திப் படம் தமிழில், “பலம்” என்ற பெயரில் டப்பிங் செய்யப்படு வெளிவரவுள்ளது..
31 வயதான பிண்ணனிக் குரல் கலைஞனான ரோஹன் தனது பெரும்பான்மையான வாழ்கையை ஸ்டுடியோக்களிலும், இரவைத் தனது இல்லத்திலும் கழிக்கிறான். பிறப்பிலேயே பார்வையற்றவனான ரோஹனுக்கு அனைவரும் வாழும் ஒரு சாதரணமான வாழ்க்கையை மேற்கொள்வதே அவன் வாழ்வின் கனவாக இருக்கிறது. ஒரு தருணத்தில் சுப்ரியாவைச் சந்திக்க நேர, அவள் மீது காதல் வயப்படுகிறான்.
ரோஹனின் நேர்மையும், தன்னம்பிக்கையும் அவளைக் கவர்கிறது. ஒருவர் மீது ஒருவர் பேரன்பை வைத்திருக்கும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்திருந்தால் வாழ்வில் எதுவும் சாத்தியமே என்ற நிலையில் எதிர்பாராத விதமாக ரோஹன் சுப்ரியாவைப் பிரிய நேரிடுகிறது.
சுப்ரியாவின் பிரிவு ரோஹனின் வாழ்க்கையை இருளில் தள்ள...
அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம்
க்ரீட் என்றால் நம்பிக்கை. அசாசின்ஸ்க்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. விருப்பம் போல் வாழுபவர்கள். சுதந்திர உணர்வோடு திரிபவர்கள். ஆனால், டெம்ப்ளர்ஸ்களோ அதீத ஒழுக்கக் கோட்பாடுகள் உடையவர்கள். மக்களின் சிந்தனையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, உலகையே ஒழுக்கமாக மாற்றத் துடிப்பவர்கள். அப்பேராசை சாத்தியமாக அவர்களுக்கு அசாசின்களிடமுள்ள ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’ எனும் விதை தேவைப்படுகிறது. அதிலிருந்து தான் மனிதனின் முதல் ஒழுங்கீனச் செயல் பிறந்ததாகக் கருதுகிறார்கள். அவ்விதையை மட்டும் டெம்ப்ளர்ஸ்கள் அடைந்து விட்டால், அதைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ஒழுக்கமான உலகைக் கொண்டு வந்துவிடலாம் என நினைக்கின்றனர்.
ஆறு நூற்றாண்டுகளாக ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’-ஐத் தேடி வருகிறார்கள் டெம்ப்ளர்ஸ். 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, அக்கொய்லர் (Aquilar de Nerha) என்பவர் அதை மறைத்து விடுகிறார். இந்த நூ...
பிக்சார் அனிமேஷன் படங்களில், கதை சொல்லும் முறையில் ஒரு மேஜிக் இருக்கும். பொம்மையோ, காரோ, ரோபோவோ, எலியோ, மீனோ என இப்படி எதுவாக இருந்தாலும், அதை உயிருள்ள கதாபாத்திரங்களாக நம்மை உணரச் செய்து விடுவார்கள்.
இல்லூமினேஷன் என்டர்டெய்ன்மென்ட், தனதுமினியன்ஸ் எனும் கதாபாத்திர உருவாக்கத்தால், வயது வித்தியாசமின்றி அத்தனை ரசிகர்களையும் தன் பால்கவர்ந்தவர்கள். அவர்கள் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஹிட்டான மினியன்ஸ் படத்திலேயே கூட, பிக்சார் ஏற்படுத்தும் மேஜிக் இல்லாமல் இருந்தது. ஆனால், "சிங் (SING) படத்தில் மாயம் செய்துள்ளனர் இல்லூமினேஷன் என்டர்டெய்ன்மென்ட்.
பஸ்டர் மூன் எனும் கோலா கரடிக்கு, தன் தியேட்டரில் பிரம்மாண்டமான இசைப் போட்டி நடத்த ஆசை. கையிருப்போ தொள்ளாயத்து சில்லறை மட்டுமே இருக்கிறது. தனது அசிஸ்டென்ட்டான பச்சை ஓனானிடம் 1000 டாலர்கள் பரிசுத் தொகை என அறிவிக்கச் சொல்கிறார். ஆனால், மூதாட்டியான பச்சை ஓனானின...
'நைட் நாஸ்டால்ஜியா (Knight Nostalgia)' என்பது கார்த்திக் நரேனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர். இப்பெயர், படத்தின் கதையோடு மிக நெருக்கமாகப் பொருந்துகிறது. விபத்து நடந்த இரவை நாஸ்டாலஜியா போல் தான் மனக்கண்ணில் கொண்டு வந்து அலசுகிறார் ரஹ்மான். ரஹ்மான் தான் இந்தப் படத்தில் வரும் knight எனக் கொள்ளலாம். கதை சொல்லும் பாணியும், தொழில்நுட்பத்தை நேர்த்தியாகக் கையாண்டுள்ள விதமும் மிகவும் ஃப்ரெஷாக உள்ளது. 21 வயது இயக்குநர் கார்த்திக் நரேன் பார்வையாளரை முழுவதும் தன் வயப்படுத்தி உள்ளார்.
பூங்காவின் அருகே ஒரு வாலிபர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்; அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் இளம்பெண் மர்மமான முறையில் காணாமல் போகிறார். இவ்விரு வழக்கையும் கவனிக்கும் இன்ஸ்பெக்டர் ரஹ்மானின் ஒரு பகலிரவு விசாரணை தான் படத்தின் கதை.
மிக மிகச் சாதாரணமான ஒரு கதை. கதையைக் கோர்வையாக்கி நேர்க்கோட்டில் பார்த்தால், எந்த முடிச்சுகளு...