Shadow

சினிமா

படையாண்ட மாவீரா – காடுவெட்டி குருவின் வாழ்க்கைப்படம்

படையாண்ட மாவீரா – காடுவெட்டி குருவின் வாழ்க்கைப்படம்

சினிமா, திரைச் செய்தி
நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொ...
ராஜபுத்திரன் விமர்சனம் | Rajaputhiran review

ராஜபுத்திரன் விமர்சனம் | Rajaputhiran review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தனது மகன் பட்டா மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார் செல்லய்யா. அவனை வேலைக்கே அனுப்பாமல் அரசனின் மகன் போல் சொகுசாக வளர்க்கிறார் செல்லய்யா. பார்த்துப் பார்த்துப் பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் பட்டா, உண்டியல் பணத்தைப் பட்டுவாடா செய்யும் தொழிலில் ஈடுபட்டுப் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். தனது மகனை அப்பிரச்சனையில் இருந்து செல்லய்யா மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. செல்லய்யாவாக பிரபு நடித்துள்ளார். ஒரு மகிழ்ச்சியான தந்தையாக மிகப் பூரிப்பாகப் படம் முழுவதும் வருகிறார். முக்கால்வாசி படம் ஓடிய பிறகு, ஒரு காட்சியில் இமான் அண்ணாச்சியிடம், "நான் வேலைக்குப் போலாம் என இருக்கேன்" என்கிறார் பிரபு. மகனை வேலைக்குப் போக விடாமல் தடுப்பதால், இவர் உழைத்து மகனைச் செல்லம் கெஞ்சுகிறார் என்ற யூகத்திற்கு வேட்டு வைத்து விடுகிறார் அறிமுக இயக்குநர் மகா கந்தன். 'சின்ன தம்பி காலத்து பிரபுவைக் காணலாம்' என இயக்குநர...
Mission: Impossible – The Final Reckoning விமர்சனம்

Mission: Impossible – The Final Reckoning விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய ‘மிஷன் இம்பாசிபள் (1996 – 2025)’ படத்தொடர் அதன் கடைசி அத்தியாயத்தை எட்டியுள்ளது என்று கசிந்த செய்தியே படத்தின் மீதான எதிர்பார்பை அதிகப்படுத்தியிருந்தது. அதற்கேற்ற வகையில், ஈத்தன் ஹன்ட்க்கு ட்ரிப்யூட் செய்வது போல், படத்தலைப்பிற்கு முன்பே பழைய படங்களில் இருந்து கையாளப்பட்ட ஷாட்ஸ்களைக் காட்டுகின்றனர். படம் நெடுகேவும், நண்பர்களுக்காக அவர் மிஷனில் எடுத்த ரிஸ்க்களைப் பற்றி மற்ற கதாபாத்திரங்கள் அங்கலாய்த்துக் கொண்டே உள்ளனர். ‘இப்படியாப்பட்ட உன்னை வழிக்குக் கொண்டு வருவது ரொம்பச் சுலபம்’ என வில்லன் தீர்க்கமாக நம்புகிறார். அதை ஈத்தனிடமே சொல்கிறார். அப்படியே ஈத்தனை வழிக்குக் கொண்டு வரவும் முயற்சி செய்கிறார். உலகையே தனது ஆளுகைக்குள் கொண்டு வரும் உருபொருளை (Entity) எப்படியாவது தடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் அமெரிக்க அரசு தள்ளப்படுகிறது. இல்லையேல் மூன்றாம் உல...
ஒளிப்பதிவில் உச்சம் தொடும் வேம்பு பட கேமரா மேன் குமரன்

ஒளிப்பதிவில் உச்சம் தொடும் வேம்பு பட கேமரா மேன் குமரன்

சினிமா, திரைச் செய்தி
அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது வேம்பு படம். மெட்ராஸ் (ஜானி) ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடிக்க, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். முக்கிய வேடங்களில் மாரிமுத்து, ஜெயராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இது உருவாகி, பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஒளிப்பதிவாளர் குமரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. தனது சினிமா பயணம் மற்றும் வேம்பு படம் குறித்து குமரன், “நான் கல்லூரியில் பி.டெக். படித்து முடிப்பதற்கு முன்பாகவே சினிமாவில் எனக்குப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துவிட்டது. மருதமலை படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வைத்தியிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவருடன் மலையாளம், கன்னட மொழிகளி...
ராஜபுத்திரன் – தந்தை மகனுக்கிடையான பாசப்படம்

ராஜபுத்திரன் – தந்தை மகனுக்கிடையான பாசப்படம்

சினிமா, திரைச் செய்தி
கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம்.சஃபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்க, கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி. உதயகுமார் உடன் நடிப்பில் மகா கந்தன் இயக்கியுள்ள படம் ‘ராஜ புத்திரன்’ ஆகும். இப்படம் மே மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவர் இயக்குநர் வசந்த் அவர்களிடமும், நந்தா பெரியசாமி அவர்களிடமும் பணிபுரிந்தவர் ஆவார். இவ்விழாவில் பேசிய இயக்குநர் மகா கந்தன், “தந்தை மகன் இருவருக்கும் உள்ள பாசத்தை மையமாக வைத்து இக்கதை உருவாகி இருக்கிறது. வெற்றி கதை கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் பிரபு சாரைப் பிடிப்பதற்காக நான் கடும் முயற்சி செய்ய வேண்டி இருந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு அவரைச் சந்தித்து கதை கூறினேன். அவருக்குப் பிடித்திரு...
வேம்பு விமர்சனம் | Vembu review

வேம்பு விமர்சனம் | Vembu review

சினிமா, திரை விமர்சனம்
அழகான கிராமத்து வாழ்வியலைச் சித்தரிக்கும் படமாகக் கவர்கிறது வேம்பு. சிலம்பாட்டத்தில் சாதிக்கவேண்டும் என்பதும், அதன் மூலமாக அரசு வேலைக்குச் செல்லவேண்டும் என்பதும் வேம்பு எனும் இளம்பெண்ணின் ஆசை. அதற்கு உற்றதுணையாக இருக்கும் வேம்புவின் தந்தை, மூப்பின் காரணமாக மகளுக்குக் காலாகாலத்தில் கல்யாணம் செய்து வைக்கவேண்டுமென எண்ணி, தங்கை மகன் வெற்றிக்கு மகளைக் கட்டிக் கொடுக்கிறார் வேம்புவின் தந்தை. கல்யாணமான அன்றே வெற்றிக்குப் பார்வை பறிப் போக, வேம்புவின் வாழ்க்கை எத்தகைய சிக்கல்களுக்கு உள்ளாகிறது என்றும், அதிலிருந்து அக்குடும்பம் மீண்டதா என்பதே படத்தின் கதை. A.குமரனின் ஒளிப்பதிவு அட்டகாசமாய் அமைந்துள்ளது. கிராமம் என்றாலே தேனி, தஞ்சை என பெரும்பாலும் தமிழ் சினிமா தஞ்சம் அடையும். வறண்ட பூமி என்றால் ராம்நாடு சென்றுவிடும். இப்படத்தில் கிருஷ்ணகிரி – குப்பம் (ஆந்திரம்) சாலை மருங்கே உள்ள உட்புற கிராமங்களைக் ...
மையல் விமர்சனம் | Myyal review

மையல் விமர்சனம் | Myyal review

சினிமா, திரை விமர்சனம்
ஆடு திருடனான மாடசாமிக்கும், மந்திரம் – தந்திரம் தெரிந்த அல்லிக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் சமய சந்தர்ப்பம் சாதகமாக இல்லாததால் அவர்கள் பிரிய நேரிடுகிறது. அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. மையல் என்பது மயக்கம் அல்லது மோகம் எனப் பொருள் கொள்ளலாம். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் ஜெயமோகன். மைனா படத்தில் கிளைச்சிறை பொறுப்பதிகாரி பாஸ்கராக நடித்திருந்த சேது, இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மையல் படத்தின் இயக்குநர் APG ஏழுமலை, மைனா படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் ஆவார். மையலின் முடிவும் மைனா படத்தை ஒத்தே அமைந்திருந்ததை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். கிணற்றில் விழும் மாடசாமிக்கும், அவரைக் காப்பாற்றும் அல்லிக்கும் இடையே மலரும் காதல் கவித்துவமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் முதற்பாதியில் வரும் இந்த அத்தியாயம் மிகவும் ரசிக்கும்படியாக...
விஜய் கனிஷ்காவிற்கு அறிமுக நடிகருக்கான எடிசன் விருது

விஜய் கனிஷ்காவிற்கு அறிமுக நடிகருக்கான எடிசன் விருது

சினிமா, திரைத் துளி
ரைசிங் ஸ்டார் விஜய் கனிஷ்காவுக்குச் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற எடிசன் விருதுகள் 2025இல், அவரது நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான அதிரடி த்ரில்லர் திரைப்படமான 'ஹிட் லிஸ்ட்'டில் தலைசிறந்த நடிப்பிற்காக வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தை சூர்யகதிர் காக்கல்லர் மற்றும் கே. கார்த்திகேயன் இயக்கத்தில், ஆர். கே. செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கே. எஸ். ரவிகுமார் தயாரிப்பில் வெளியானது. 'ஹிட் லிஸ்ட்' திரைப்படத்தில் விஜய் கனிஷ்காவின் கதாபாத்திரம் நல்ல விமர்சனங்களையும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது. கனிஷ்கா திரையில் தோன்றிய விதமும், வசீகரிக்கும் கதை சொல்லலும், அப்படத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்....
ஏஸ் விமர்சனம் | Ace review

ஏஸ் விமர்சனம் | Ace review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சீட்டுக்கட்டு விளையாட்டில், மிகக் குறைந்த மதிப்பும், அதே சமயம் அதிக மதிப்புமிக்க சீட்டாக ஏஸ் கருதப்படுகிறது. மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ஒரு கடினமான சவாலைத் தனது இடு இணையற்ற திறமையால் முடிக்கும் நபரைச் சுட்டுகிறது. குற்றப் பின்னணியுடைய நபர், மலேஷியாவிற்குச் செல்கிறார். பிரச்சனைகளில் சிக்காமல் அமைதியான வாழ நினைப்பவரைப் போல்ட் கண்ணன் எனக் கருதி வேலையில் சேர்த்து விடுகிறார் அறிவுக்கரசன். கண்ணன்க்கு வேலை கொடுத்த கல்பனாவிற்கு வங்கியில் கடன் சிக்கல், கண்ணனின் காதலி ருக்மிணிக்கு வேலையில் நீட்டிக்கவும், சொந்த வீட்டைத் தக்கவைத்துக் கொள்ளவும் பணம் தேவைப்படுகிறது. அதற்காக போக்கர் விளையாடி பணம் ஈட்ட நினைக்கிறார் போல்ட் கண்ணன். ஆனால், அப்போட்டியை நடத்தும் தர்மா, விளையாட்டில் அவர்களை ஏமாற்றி கடவுச்சீட்டைப் பிடுங்கிக் கொள்வதோடு, கொடுத்த கடனை வட்டியோடு அடைக்கும்படி மிரட்டுகிறார். இந்த அனைத்து...
மாமன் விமர்சனம் | Maaman review

மாமன் விமர்சனம் | Maaman review

சினிமா, திரை விமர்சனம்
அக்கா மகனுடன் நாயகனுக்கு ஏற்படும் அதீத பிணைப்பும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே படத்தின் கதை. மாமனுக்கு மிஞ்சிய உறவில்லை என்பது பழமொழி. அதிலும் குறிப்பாகத் தமிழர்கள், 'தாய்மாமன்' உறவிற்கு எப்பொழுதும் கூடுதல் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் அளித்து வந்துள்ளனர். இரண்டு, மூன்று தசாப்தங்களாக உறவினர்களின் பாராமுக மனப்போக்கைக் கிண்டல் செய்யும் வழக்கம் மிகுந்துவிட்ட போதிலும், நண்பர்கள் தங்களுக்குள் 'மாமா - மச்சான்' என்றே உறவுமுறை கொண்டு அழைத்துக் கொள்வது 80 களில் தொடங்கி, போன தசாப்தம் வரையிலுமே கூட உயிர்ப்புடன் இருந்தது. "நீ எனக்கு ரொம்ப முக்கியமான நபர்" என்ற குறியீட்டுச் சொல்லாகவே நட்பிற்குள்ளும் மாமன் என விளிக்கும் பழக்கம் நுழைந்தது. அந்தச் சொல்லும், உறவும் எப்படி மகத்துவம் வாய்ந்தது என்பதைப் படம் பேசுகிறது. பாசத்துடன் இருப்பதையே முழு நேர வேலையாகச் செய்து கொண்டிருப்பவரைப் பற்றிய படமிது. போதும...

மெட்ராஸ் மேட்னி | ஃபர்ஸ்ட் லுக்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் 'மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கே.சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள...
வசூல் சாதானை புரியும் டூரிஸ்ட் ஃபேமிலி | Sasikumar

வசூல் சாதானை புரியும் டூரிஸ்ட் ஃபேமிலி | Sasikumar

சினிமா, திரைச் செய்தி
பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. பகவதி பெருமாளின் மனைவியாக நடித்த நடிகை சௌந்தர்யா, “என் சந்தோசத்தை சொல்ல அளவே கிடையாது. எனது 8 வருட திரைப்பயணத்தில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இப்படிப்பட்ட வெற்றி மேடையில் முதல் முறையாகப் பேசுகிறேன். முதல் நன்றி அபிக்கு. வேறு யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அவர் தான் நான் வேண்டும் என என்னை காஸ்ட் செய்தார். சசிகுமார் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. சிம்ரன் மாதிரி ஒருவரை பார்த்ததே இல்லை. அவர் அவ்வளவு ஃப்ரெண்ட்லி. அவருடன் மீண்டு...
“DD Next Level காமெடி ட்ரீட்டாக இருக்கும்” – சந்தானம

“DD Next Level காமெடி ட்ரீட்டாக இருக்கும்” – சந்தானம

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' குறித்த தகவல்களைப் பகிரும் வகையில் கலகலப்பான முறையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன் சந்தானம், திரைப்படத்தை வெளியிடும் நடிகர் ஆர்யா, இயக்குநர் பிரேம் ஆனந்த் கலந்து கொண்டனர். இயக்குநர் பிரேம் ஆனந்த், "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற திருக்குறளுக்கு உதாரணமாக திகழ்பவர்கள் சந்தானம் மற்றும் ஆர்யா. அந்த நட்புதான் எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறது. இவ்வளவு பிரம்மாண்டமான இப்படத்தைத் தொடங்கும் போது நான் சந்தானத்திடம், 'முதலாளி கண்டிப்பா நான் பயங்கர ஹார்டு வொர்க் பண்ணி இந்தப் படத்தை சக்சஸ் பண்ணி உங்களுக்கும் ஆர்யா சாருக்கும் ச...
Love Insurance Kompany – செப்டம்பர் 18 வெளியீடு

Love Insurance Kompany – செப்டம்பர் 18 வெளியீடு

சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany)' திரைப்படத்தின் வெளியீட்டு தேதியைப் படக்குழுவினர் பிரத்தியேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.‌பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர...
ஏஸ் | ACE Trailer | Vijay Sethupathi

ஏஸ் | ACE Trailer | Vijay Sethupathi

Trailer, காணொளிகள், சினிமா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் 'ஏஸ் (ACE)’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தைத் தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி.ஆர்., சிவகார்த்திகேயன், அருண் விஜய், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏஸ் (ACE)’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ், பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர், ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன், ஜாக்கிநாரீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் ...