32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 21 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 21)
அர்ஜுன் – அபிராமி – ப்ரீத்தி முகுந்தன் | AGS 28 சினிமா

அர்ஜுன் – அபிராமி – ப்ரீத்தி முகுந்தன் | AGS 28

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ என மெகா வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, 28 ஆவது படைப்பாகக் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் சென்னையில் துவங்கியது. ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை, பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அனைத்துத் […]

20/08/2025 Dinesh R
“கணக்கு எப்படி இருக்க?” – உதயா உற்சாகம் | Accused movie சினிமா

“கணக்கு எப்படி இருக்க?” – உதயா உற்சாகம் | Accused movie

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான திரைப்படம் அக்யூஸ்ட் ஆகும். ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘அக்யூஸ்ட்’ படக் குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழாவினை வடபழனி பரணி ஸ்டூடியோவில் நடத்தினர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என்.பன்னீர்செல்வம், ”படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து […]

16/08/2025 Dinesh R
கூலி விமர்சனம் | Coolie review இது புதிது

கூலி விமர்சனம் | Coolie review

மேன்ஷன் ஓனரான தேவா, தன் நண்பன் ராஜசேகர் இறந்ததாகக் கேள்விப்பட்டு விசாகப்பட்டினம் செல்கிறார். ராஜசேகர் கொல்லப்பட்டிருக்கிறார் என அறிந்து, கொலையாளியைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். கொலையாளியைக் கண்டுபிடித்துப் பழிவாங்கினாரா இல்லையா என்பதே படத்தின் கதை. ஃப்ளாஷ்-பேக்கில், 5821 என்ற எண் கொண்ட வில்லையை அணிந்த கூலியாக இளம் ரஜினியை அசத்தலாக ரீ-கிரியேட் செய்துள்ளனர். அவருக்கும் சக கூலியாக வரும் ராஜசேகருக்குமான நட்பு நன்றாக இருந்தாலும், அழுத்தம் போதவில்லை. ராஜசேகராக சத்யராஜ் நடித்துள்ளார். ரஜினியின் அறிமுக பாடல் தவிர்த்து, ரஜினியிசம் […]

14/08/2025 Dinesh R
நறுவீ – மலைவாழ் குழந்தையரின் கல்வி சினிமா

நறுவீ – மலைவாழ் குழந்தையரின் கல்வி

ஹரீஷ் சினிமாஸ் வழங்கும், தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக் M இயக்கத்தில், மலைவாழ் மக்களின் நலன்களைப் பற்றிப் பேசும் ஹாரர் த்ரில்லர் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “நறுவீ” ஆகும். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலைவாழ் மக்களின் குழந்தையருக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில், இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார் A. அழகு பாண்டியன். அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில், […]

12/08/2025 Dinesh R
தேசபக்தி திரைப்பட விழா: ஆகஸ்ட் 11 முதல் 13 வரை சினிமா

தேசபக்தி திரைப்பட விழா: ஆகஸ்ட் 11 முதல் 13 வரை

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமும் (NFDC), இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகமும் (NFAI) இணைந்து, ஆகஸ்ட் 11 முதல் 13 வரை தாகூர் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேசபக்தி திரைப்பட விழா’ நிகழ்கிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11.00 மணிக்குத் தொடங்கப்பட்ட பின், 11.30 மணிக்கு எஸ். ராம் சர்மாவின் ‘ஷாஹீத் (1965)’ திரைப்படம் திரையிடப்பட்டது. திரையிடத் திட்டமிடப்பட்ட 11 படங்களில், 7 முழு நீள திரைப்படங்களும், 4 ஆவணப்படங்களும் அடக்கம். […]

12/08/2025 Dinesh R
“இது மாதிரி ஒரு கதை கேட்டதே இல்லை” – நடிகர் சுனில் | Indra movie சினிமா

“இது மாதிரி ஒரு கதை கேட்டதே இல்லை” – நடிகர் சுனில் | Indra movie

ஜே.எஸ்.எம் மூவி புரொடக்‌ஷன்ஸ், எம்பெரர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படத்தின் பெயர் ’இந்திரா’ ஆகும். சீரியல் கொலை பின்னணியில் மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் […]

11/08/2025 Dinesh R
நாளை நமதே விமர்சனம் | Naalai Namadhey review இது புதிது

நாளை நமதே விமர்சனம் | Naalai Namadhey review

நந்தன் பேசிய அரசியலை, அதை விடச் சிறப்பாகவும் அழுத்தமாகவும் இப்படம் பேசியுள்ளது. நந்தன் படத்தின் போதாமையாக, பலவீனமான கதாபாத்திர வார்ப்பு அமைந்திருந்தது. இப்படத்தின் பலமாக இருப்பதே, யதார்த்தமான அழுத்தமான கதாபாத்திரங்களின் வார்ப்புதான்! சிவதாணுபுரம் எனும் கிராமத்தைத் தனித்தொகுதியாக அறிவிக்கிறது அரசு. அக்கிராமத்தைச் சார்ந்த ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்களைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிடக்கூடாதென மிரட்டி விட்டுச் செல்கிறார்கள். சுதந்திரப் போராட்ட தியாகியான, அமுதாவின் தாத்தாவைத் தேர்தலில் நிற்கும்படி கம்யூனிஸ்ட் கட்சியினரும், மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் […]

08/08/2025 Dinesh R
காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம் சினிமா

காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்

வடசென்னையில் ஜிம் வைத்திருக்கும் ஜீவா, மேகாவை உருகி உருகிக் காதலிக்கிறார். அப்பகுதி இளைஞர்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் போது, ரத்னா அவர்கள் கையில் கத்தியைக் கொடுத்துச் சீரழிக்கிறான். அதனால் கோபமுறும் ஜீவா, ‘மாஸ்’ எனும் அடைமொழியுடன் ரத்னாவை எதிர்க்கிறான். மோதல் முற்றும் தருவாயில் ஜீவாவின் காதலை நிரந்தரமாக இழக்கிறாள் மேகா. ஆனால், காற்று வாக்கில் காதலை இழந்தாலும், நூதனமான முறையில் மீண்டும் ஜீவாவுடனே இணைகிறார் மேகா. படத்தின் சண்டை இயக்குநராகப் பணிபுரிந்திருக்கும் சூப்பர் சுப்புராயனுக்கு, இது திரையுலகில் […]

07/08/2025 Dinesh R
பேய் கதை – குதூகல த்ரில்லர் சினிமா

பேய் கதை – குதூகல த்ரில்லர்

ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜீன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. நடிகை ஆஷ் மெலோவிற்குத் தமிழில் வெளியாகும் முதற்படம் இது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, படத்தின் இசை & முன்னோட்டத்தை வெளியிடப் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். படத்தின் இயக்குநர் ஜீன் மோசஸ், ”’பேய் கதை’ கம்ப்ளீட் […]

06/08/2025 Dinesh R
Janaki v/s State of Karala – மெளனமாக்கும் முயற்சிக்கு எதிராக | Zee 5 OTT

Janaki v/s State of Karala – மெளனமாக்கும் முயற்சிக்கு எதிராக | Zee 5

வரும் சுதந்திர தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க, அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது ஜீ5. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” ஒரு அழுத்தமான மலையாளத் திரைப்படமாகும். இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்க, J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். சுரேஷ் கோபி தார்மீக ரீதியாகச் செயல்படும் வழக்கறிஞர் டேவிட் […]

05/08/2025 Dinesh R
Oh God Beautiful – பரிதாபம் ப்ரொடக்‌ஷன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் Movie Posters

Oh God Beautiful – பரிதாபம் ப்ரொடக்‌ஷன்ஸின் ஃபர்ஸ்ட் லுக்

பரிதாபங்கள் ப்ரொடக்‌ஷன்ஸ் வழங்கும், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஃபேண்டஸி – ஃபேமிலி எண்டர்டெயினர் ஜானரில், எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் சார்லி சாப்ளின் மேக்கப்பில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக நியாய தராசு ஏந்தி நிற்கிறார் சுதாகர். தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளைப் […]

05/08/2025 Dinesh R
Hombale Films | மகா அவதார் நரசிம்மா – முதல் வாரத்தில் 53 கோடி வசூல் அயல் சினிமா

Hombale Films | மகா அவதார் நரசிம்மா – முதல் வாரத்தில் 53 கோடி வசூல்

ரசிகர்களைப் பரவசப்படுத்தும் வகையிலும், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெளியான மகா அவதார் நரசிம்மா முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய ‘மகாஅவதார் நரசிம்மா’ இந்தியாவில் வெளியான ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. காட்சி ரீதியாக சக்தி வாய்ந்த கதை மூலம் இப்படம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது […]

03/08/2025 Dinesh R
சரண்டர் விமர்சனம் | Surrender review ஆன்‌மிகம்

சரண்டர் விமர்சனம் | Surrender review

தேர்தல் நேரம் என்பதால் தனது தப்பாக்கியைத் திருமழிசை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான். அதை வாங்கி வைக்கும் ரைட்டர் பெரியசாமி, துப்பாகியைத் தவற விட்டுவிடுகிறார். ட்ரெயினி எஸ்.ஐ.யான புகழிடம், வெளியில் தெரியாமல் ரகசியமாகத் துப்பாக்கி கண்டுபிடிக்கும் வேலை ஒப்படைக்கப்படுகிறது. கனகராஜ் எனும் ரெளடி, தேர்தல் செலவுக்காகப் பத்து கோடியை ஆய்வாளர் வில்லியம்ஸிடம் கொடுத்துவிடுகிறார். அந்தப் பணம் காணாமல் போகிறது. கனகராஜின் தம்பி (ஸ்பாட் படத்தின் நாயகன் கெளஷிக்), ஒரு சின்ன தகராறில் ரைட்டர் […]

01/08/2025 Dinesh R
Chennai Files முதல் பக்கம் விமர்சனம் சினிமா

Chennai Files முதல் பக்கம் விமர்சனம்

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்றச்சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் எனப் பொருள்படும். க்ரைம் நாவல் எழுத்தாளரின் வாழ்க்கையைப் பற்றி ஒரு பத்திரிகையில் தொடராக எழுத முடிவு செய்யப்படுகிறது. அதற்கு உதவுவதற்காக எழுத்தாளரின் மகனான பிரபாகரன் சென்னைக்கு வருகிறார். சூளைமேட்டு காவல் நிலைய ஆய்வாளரான ராமையாவிற்கு வழக்குகளில் உதவுகிறார். சென்னையில் நடக்கும் தொடர் கொலைகளின் சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க உதவுகிறார் வெற்றி. சிங்கப்பூர் ஆணழகன் பட்டத்தை வென்ற மகேஸ்வரன் தேவதாஸ், […]

01/08/2025 Dinesh R
போகி விமர்சனம் | Bhoghee review சினிமா

போகி விமர்சனம் | Bhoghee review

தேவையில்லாதவற்றை ஒழிப்பதைப் போகி பண்டிகையாகக் கொண்டாடுவர். அப்படிச் சமூகத்திற்குத் தேவையில்லாதவர்களை ஒழிப்பதை, ‘போகி’ எனும் தலைப்பின் மூலமாக உணர்த்துகிறார் இயக்குநர் S. விஜயசேகரன். இந்தியாவை உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை அமைத்துள்ளனர். மறைத்து வைக்கப்படும் கேமராவின் மூலமாகத் தமிழ்ப் பெண்களை வீடியோ எடுத்து ஆபாச தளங்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கிறது மலேஷியாவைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு ரகசிய கூட்டமைப்பு (Syndicate). சிலர் மர்மான முறையில் கொல்லப்படுகின்றனர். காவல்துறை இந்த இரண்டு வழக்குகளையும் தீவிரமாகக் […]

31/07/2025 Dinesh R