32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3883 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 28 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 28)
விஜய் கனிஷ்காவிற்கு அறிமுக நடிகருக்கான எடிசன் விருது சினிமா

விஜய் கனிஷ்காவிற்கு அறிமுக நடிகருக்கான எடிசன் விருது

ரைசிங் ஸ்டார் விஜய் கனிஷ்காவுக்குச் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற எடிசன் விருதுகள் 2025இல், அவரது நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘ஹிட் லிஸ்ட்’டில் தலைசிறந்த நடிப்பிற்காக வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தை சூர்யகதிர் காக்கல்லர் மற்றும் கே. கார்த்திகேயன் இயக்கத்தில், ஆர். கே. செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கே. எஸ். ரவிகுமார் தயாரிப்பில் வெளியானது. ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தில் விஜய் கனிஷ்காவின் […]

23/05/2025 Dinesh R
ஏஸ் விமர்சனம் | Ace review இது புதிது

ஏஸ் விமர்சனம் | Ace review

சீட்டுக்கட்டு விளையாட்டில், மிகக் குறைந்த மதிப்பும், அதே சமயம் அதிக மதிப்புமிக்க சீட்டாக ஏஸ் கருதப்படுகிறது. மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ஒரு கடினமான சவாலைத் தனது இடு இணையற்ற திறமையால் முடிக்கும் நபரைச் சுட்டுகிறது. குற்றப் பின்னணியுடைய நபர், மலேஷியாவிற்குச் செல்கிறார். பிரச்சனைகளில் சிக்காமல் அமைதியான வாழ நினைப்பவரைப் போல்ட் கண்ணன் எனக் கருதி வேலையில் சேர்த்து விடுகிறார் அறிவுக்கரசன். கண்ணன்க்கு வேலை கொடுத்த கல்பனாவிற்கு வங்கியில் கடன் சிக்கல், கண்ணனின் காதலி ருக்மிணிக்கு வேலையில் நீட்டிக்கவும், […]

23/05/2025 Dinesh R
மாமன் விமர்சனம் | Maaman review சினிமா

மாமன் விமர்சனம் | Maaman review

அக்கா மகனுடன் நாயகனுக்கு ஏற்படும் அதீத பிணைப்பும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே படத்தின் கதை. மாமனுக்கு மிஞ்சிய உறவில்லை என்பது பழமொழி. அதிலும் குறிப்பாகத் தமிழர்கள், ‘தாய்மாமன்’ உறவிற்கு எப்பொழுதும் கூடுதல் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் அளித்து வந்துள்ளனர். இரண்டு, மூன்று தசாப்தங்களாக உறவினர்களின் பாராமுக மனப்போக்கைக் கிண்டல் செய்யும் வழக்கம் மிகுந்துவிட்ட போதிலும், நண்பர்கள் தங்களுக்குள் ‘மாமா – மச்சான்’ என்றே உறவுமுறை கொண்டு அழைத்துக் கொள்வது 80 களில் தொடங்கி, போன தசாப்தம் வரையிலுமே கூட […]

16/05/2025 Dinesh R
மெட்ராஸ் மேட்னி | ஃபர்ஸ்ட் லுக் Movie Posters

மெட்ராஸ் மேட்னி | ஃபர்ஸ்ட் லுக்

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், […]

14/05/2025 Dinesh R
வசூல் சாதானை புரியும் டூரிஸ்ட் ஃபேமிலி | Sasikumar சினிமா

வசூல் சாதானை புரியும் டூரிஸ்ட் ஃபேமிலி | Sasikumar

பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. பகவதி பெருமாளின் மனைவியாக நடித்த நடிகை சௌந்தர்யா, “என் சந்தோசத்தை சொல்ல அளவே கிடையாது. எனது 8 வருட திரைப்பயணத்தில் […]

14/05/2025 Dinesh R
“DD Next Level காமெடி ட்ரீட்டாக இருக்கும்” – சந்தானம இது புதிது

“DD Next Level காமெடி ட்ரீட்டாக இருக்கும்” – சந்தானம

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம் நடித்துள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ குறித்த தகவல்களைப் பகிரும் வகையில் கலகலப்பான முறையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன் சந்தானம், திரைப்படத்தை வெளியிடும் நடிகர் ஆர்யா, இயக்குநர் பிரேம் ஆனந்த் கலந்து கொண்டனர். இயக்குநர் பிரேம் ஆனந்த், “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு […]

13/05/2025 Dinesh R
Love Insurance Kompany – செப்டம்பர் 18 வெளியீடு சினிமா

Love Insurance Kompany – செப்டம்பர் 18 வெளியீடு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany)’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியைப் படக்குழுவினர் பிரத்தியேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.‌ பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்புத் […]

12/05/2025 Dinesh R
ஏஸ் | ACE Trailer | Vijay Sethupathi Trailer

ஏஸ் | ACE Trailer | Vijay Sethupathi

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘ஏஸ் (ACE)’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தைத் தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி.ஆர்., சிவகார்த்திகேயன், அருண் விஜய், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ் (ACE)’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி […]

11/05/2025 Dinesh R
ரெட்ரோ | படக்குழுவிற்கு வைர மோதிரம் பரிசளிப்பு சினிமா

ரெட்ரோ | படக்குழுவிற்கு வைர மோதிரம் பரிசளிப்பு

2டி என்டர்டெய்ன்மென்ட், ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் குழுவினர் பிரத்தியேக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் […]

11/05/2025 Dinesh R
கஜானா விமர்சனம் | Ghajaana review சினிமா

கஜானா விமர்சனம் | Ghajaana review

நாகமலையில் புதையுண்டிருக்கும் பொக்கிஷத்தை யாளி எனும் மிருகம் காவல் காக்கிறது. அப்பொக்கிஷத்தை அடைய நினைக்கும் மனிதர்கள் அனைவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். காசியப முனிவர்க்கு ஆரி, சூரி என இரண்டு மனைவிகள் என ஒரு கிளைக்கதை பிரிகிறது. ஹிந்துப் புராணத்தின்படி, காசியப முனிவர், தக்ஷனின் எட்டு மகள்களை மணம் புரிந்தவர். அதில், கத்ரு எனும் மனைவியின் மூலமாக 1000 நாகர்களும், கத்ருவின் இளைய சகோதரி வினதா மூலமாக அருணன், கருடன் என இரண்டு மகன்களும் பிறந்தனர். இந்தப் […]

09/05/2025 Dinesh R
நிழற்குடை விமர்சனம் | Nizharkudai review சினிமா

நிழற்குடை விமர்சனம் | Nizharkudai review

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். நிழற்குடையின் அருமையோ வெயில், மழை என இரண்டிலும் தெரியும். நிழற்குடையை மனித உறவுகளுக்கான குறியீட்டுத் தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். நிரஞ்சனும் லான்சியும் காதலித்துக் கல்யாணம் செய்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால், தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு நிலா என்றொரு குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தையைப் பார்த்துக் கொள்ள கேர்-டேக்கரை நியமிக்கிறார்கள். ஆனால் கேர்-டேக்கர் ஒத்து வராததால், ஆசிரமத்தில் இருந்து ஜோதிம்மாவை அழைத்து வருகின்றனர். திடீரென நிலா காணாமல் […]

09/05/2025 Dinesh R
Bison: Kaalamaadan | தீபாவளி 2025 சினிமா

Bison: Kaalamaadan | தீபாவளி 2025

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” திரைப்படம் வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின் ஆழமான கதையைச் சொல்ல வருகிறது. நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், […]

08/05/2025 Dinesh R
தண்டர்போல்ட்ஸ் விமர்சனம் | Thunderbolts review இது புதிது

தண்டர்போல்ட்ஸ் விமர்சனம் | Thunderbolts review

தானோஸ் மார்வெலில் ஏற்படுத்திய வெறுமைக்குப் பிறகு, மீண்டும் மார்வெலின் மேஜிக் இப்படத்தில்தான் துளிர்ந்துள்ளது. ‘பன்னண்டம்’ என இடியாப்ப குழப்பம் இல்லாத எளிமையான நேரடிக் கதையென்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். சி.ஐ.ஏ.-வின் இயக்குநர் வேலன்டினா, அவெஞ்சர்ஸ் இல்லாத குறையைப் போக்குவதற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும், “சென்ட்ரி” எனும் சூப்பர் பவர் மிக்க ஒரு மனிதனை உருவாக்கும் முயற்சியில், O.X.E. எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சட்டவிரோதமான முறையில் மனிதர்களைக் கொண்டு பல சோதனைகளை நடத்தி, அதில் தோல்வி காணும் […]

06/05/2025 Dinesh R
“அலப்பறை செய்யும் கவர்ச்சி மாம் நான்” – கஸ்தூரி | DD Next Level சினிமா

“அலப்பறை செய்யும் கவர்ச்சி மாம் நான்” – கஸ்தூரி | DD Next Level

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16 Aம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்நிகழ்வில் பேசிய நடிகர் நிழல்கள் ரவி, “சினிமாவில் ஹீரோவாக நடித்து விட்டேன், வில்லனாக நடித்து விட்டேன், கேரக்டராகவும் […]

06/05/2025 Dinesh R
மிஷ்கின் @ DQ 40 படப்பூஜை| I am Game அயல் சினிமா

மிஷ்கின் @ DQ 40 படப்பூஜை| I am Game

Wayfarer Films தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் துல்கர் சல்மானின் 40 ஆவது திரைப்படமான “ஐ அம் கேம்” படத்தின் பூஜை, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் மற்றும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ் உட்பட படக்குழுவினர் கலந்து கொள்ளத் திருவனந்தபுரத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. “RDX” புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் […]

05/05/2025 Dinesh R