Shadow

மருத்துவம்

நாம் ஏன் பால் அருந்த வேண்டும்?

நாம் ஏன் பால் அருந்த வேண்டும்?

மருத்துவம்
பாலில் பெரும்பாலும் பசும்பால் அல்லது எருமைப் பால் பயன்படுத்தப்படுகின்றன. அரிதாக ஆட்டின் பாலையும் அருந்துகின்றனர். பாலைப்போல் சத்துள்ள உணவு வேறொன்றும் இல்லை. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பசும்பாலே தாய்பால். பசும்பால் எளிதில் ஜீரணமாகும். எனவே குழந்தைகளுக்கு பசுவின் பாலே சிறந்ததாகும். பல ஆயுர்வேத மருந்து உண்பவர்களுக்கு பசும்பாலே பரிந்துரைக்கப்படுகிறது. நமது உடலுக்குத் தேவையான புரதம், கனிய உப்புக்கள், கொழுப்பு, கேல்சியம், உயிர்ச்சத்து வகைகள் என்பன அனைத்தும் பாலில் அடங்கியுள்ளன. அதனால் அனைவரும் நாள்தோறும் பிரதான உணவு வகைகளுக்கு மேலதிகமாகக் குறைந்தது ஒரு கோப்பை பாலாவது அருந்த வேண்டும். உடலின் சூட்டைப் பாதுகாக்க கொழுப்பு வேண்டும். அதுவும் பாலில் நிரம்ப உள்ளது. விசேஷம் என்னவென்றால் இதிலுள்ள கொழுப்பு எளிதில் செரிமானம் அடையக் கூடியது. பாலைக் காய்ச்சும்போது மேலே ஆடை படிகிறதல்லவா? அதுதான்...
சீனாவில் இருதய நோய் குறைவு..! ஏன்.? எப்படி.!

சீனாவில் இருதய நோய் குறைவு..! ஏன்.? எப்படி.!

மருத்துவம்
பாராம்பரிய சீனத்து உனவுகள் நோய்களைத் தடுக்கும், ஆற்றலுடையன. சிட்டக்கிவகை காளான்களினால் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தவை. கிசகா மோரி (Kisaka mori) என்னும் ஜப்பானிய அறிஞர் சிட்டக்கி காளான்களினது நோய் தீர்க்கும் இயல்பை வெளிக்காட்டினார். சிட்டக்கி காளான்களிலுள்ள எரிட்ரீன் (Eritasenina) என்னும் பதார்த்தம் குருதிக் கொலஸ்ட்ரோலின் அளவை மிக விரைவாகக் குறைக்கக் கூடியது. இதனைத் தவிர சிட்டக்கி காளான்களின் மருத்துவத்தன்மையான பல்வேறு பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு நோய்களைத் தடுப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. லென்டினன் (Lentinan) என்னும் பதார்த்தம் புற்று நோயைத் தடுக்கக்கூடிய ஆற்றலுள்ளதா எனத் தீவிரமாக ஆராயப்படுகிறது. அதனைவிடக் கொர்டினெலின் (Cortinelin) என்னும் பதார்த்தம் நுண்ணுயிர் கொல்லியாகத் தொழிற்படக்கூடியது. எனவே சிட்டக்கி காளான் உணவுகள், உ...
தினம் ஒரு மூலிகை

தினம் ஒரு மூலிகை

மருத்துவம்
மூலிகை என்பது எங்கோ காட்டில் மட்டுமே கிடைக்கும் அபூர்வ வஸ்து என்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை எல்லாம் நம் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கின்றன. நாம்தான் அவற்றை கவனிப்பதில்லை என்கிறார் திரு.குப்புசாமி அவர்கள். "மூலிகை வளம்" குப்புசாமி ஐயா என இணையவெளியில் பிரபலமான திரு.குப்புசாமி அவர்கள் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. தற்போது முழுநேரமாக அரிய மூலிகைகளை தேடி சேகரித்து தன் தோட்டத்தில் வளர்த்து வருகிறார். மூலிகைகள் தொடர்பான தன்னுடைய ஆய்வுகளையும் அனுபவங்களையும் அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.அதன் தொடர்ச்சியாக நம்முடைய 'இது தமிழ்' வாசகர்களுக்காக மூலிகைகளைப் பற்றிய அறிமுகத்தை "தினம் ஒரு மூலிகை" என்னும் தலைப்பில் தொடராக அளிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் அரிய தகவல்களுடன் "தினம் ஒரு மூலிகை"....
காஸ்ரையிடிஸ் – அமில அபாயம்

காஸ்ரையிடிஸ் – அமில அபாயம்

மருத்துவம்
இன்று இளம் வயதினர் மற்றும் நடு வயதினரையும் பாதிக்கும் பிரதான ஒரு நோயாக வயிற்றில் அமிலம் சுரத்தல் நோய் (Gastritis) காணப்படுகிறது.தொண்டைக் களம் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் கீறல்கள் மற்றும் புண் என்பனவும், முன் சிறுகுடல் என்பன இதற்கு காரணமாக அமைகின்றன. இந்தப் புண் பெப்டிக் அமில புண் (Pepiteutine Diseases) என்று அழைக்கப்படுகிறது.இந்நோய் இரண்டு வகைகளைக் கொண்டது. ஒன்று  பாக்டீரியா தாக்கத்தால் ஏற்படுவது. மற்றொன்று புகைப்பிடித்தல, மதுபானம் அருந்துதல், சில வலி நிவாரண மருந்துவகைகளை அதிகளவில் உட்கொள்ளல், மிளகாய் மற்றும் சரக்குப் பொருட்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளல், மன அழுத்தம், மன நோய், நீண்ட நாட்களாக இருக்கும் புண், சிறுநீரகத்தின் செயற்பாடு குறைவடைதல் போன்ற காரணங்களால் வயிற்றில் மற்றும் சிறுகுடல் சுவர்களில் புண் ஏற்படலாம்.காஸ்ரையிடிஸ் நோயின் அறிகுறிகள்:~வயிற்றின்...
ஊளைச்சதைக் கோளாறு

ஊளைச்சதைக் கோளாறு

மருத்துவம்
சிலர் உடல் பருத்து சதைகள் தொங்கி நடக்கக் கூட சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதே போல் உடல் எடை அளவிற்கு அதிகமாக அதிகரிப்பதை தான் ஊளைச்சதை (Obesity) என்கிறோம்.மேலை நாடுகளில் இது ஒரு சமூக நோயாகக் காணப்படுகிறது. இந்நோயால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவதால் இது ஓர் சமூக நோயாகக் கருதப்படுகிறது. ஆனால், கீழை நாடுகளில் இது போன்ற பாதிப்புகள் பெரும்பாலானவர்களிடம் காணப்படாததால் இதை ஒரு சமூக நோயாகப் பார்ப்பதில்லை. எனினும் இந்நோய் அதிகரிக்காமல் காக்க வேண்டும். எனவே மக்கள் இதைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு படிவதாலேயே ஊளைச்சதை ஏற்படுகிறது.பொதுவாகவே பல்வேறு காரணங்களை இதற்கு குறிப்பிடலாம். உடல் பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு உணவு வகைகளை உண்ணுதல் ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு அதிகமாக உண்ணப்படும் உணவால் கலோரிகள் கொழுப்புத் திசுவாக மாற்றப...
உணர்ச்சிகள்

உணர்ச்சிகள்

மருத்துவம்
 உடலும், மனமும் வெளிப்படுத்தும் தெரிவிப்புக் குறிகளே உணர்ச்சிகள். சில நேரங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறோம். இரண்டுமே தவறில்லை. ஆனால் உணர்ச்சிகளை அடக்கி வைப்பதுதான் தவறு.அடக்கி வைக்கிற உணர்ச்சிகள் எரிமலையாய் வெடிக்கும். உடல் சார்ந்த விதத்திலும், மனம் சார்ந்த விதத்திலும் அது தீங்கினயே விளைவிக்கும். நம் உடல் சார்ந்த நோய்களில் எழுபது சதவீதமானவை அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளாலேயே வருபவை. அவை கொஞ்சம் கொஞ்சமாய் நம் உடலையும், மனத்தையும் அரித்துத் தின்றுவிடும். "மனக் காயத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவே நாம் உணர்ச்சிகளை அடக்கி வைக்கிறோம்" என்கிறார் தீபக் சோப்ரா. ஆனால் உணர்ச்சிகளை அடக்க முயல்வது தான் உண்மையில் நம்மை வேதனைக்குள்ளாக்கி விடும் என்பதை நாம் உணருவதில்லை. நாம் உணர்ச்சிகளை எவ்வளவு தான்அடக்கி வ...