Shadow

Tag: அர்ஜுன்

மார்டின் | பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் – 13 மொழிகளில் தயார்

மார்டின் | பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் – 13 மொழிகளில் தயார்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
வாசவி என்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மார்டின் ஆகும். வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில், தயாரிப்பாளர் உதய் K. மேத்தா, "ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்க வேண்டுமென, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நீண்ட பயணத்தில், அர்ஜுன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். துருவ...
ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் ‘மார்டின்’

ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் ‘மார்டின்’

சினிமா, திரைத் துளி
வாசவி என்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா நடிப்பில், பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது 'மார்டின்' திரைப்படம். இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குநர் AP அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரம்மாண்டத்தையும், துருவா...
ஹீரோ விமர்சனம்

ஹீரோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜென்டில் மேன் 2 என்றே படத்திற்குத் தலைப்பு வைத்திருக்கலாம். அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற நன்நோக்கமுடைய கொள்ளைக்காரன் சத்தியமூர்த்தியாக அர்ஜுன் வருகிறார். படத்தின் நாயகன் அவர் தான். ஸ்கூல் படிக்கும் பொழுது சக்திமான் தொடர் பார்த்து சூப்பர் ஹீரோ ஆகவேண்டுமென ஆசைப்படுகிறான் சக்தி. வளர்ந்த பின்னும் அந்த ஆசை விடாமல் சக்தியைத் துரத்த, ஜென்டில் மேன் சத்தியமூர்த்தியின் உதவியுடன், ஒரு முகமூடி அணிந்து சூப்பர் ஹீரோவாகி விடுகிறான் என்பதுதான் படத்தின் கதை. தொழிலதிபர் மகாதேவாக அபய் தியோல். சத்தம் போடாத, பணம் சம்பாதிப்பதில் கண்ணாக இருக்கும் காரிய வில்லனாக அசத்துகிறார். ஆனாலும், க்ளைமேக்ஸில் அவரை வழக்கமான சோப்ளாங்கி வில்லனாக்கி, சூப்பர் வில்லனாகப் பரிணமிக்க வேண்டியவரைச் சாதாரண வில்லனாக்கி உச்சபட்ச அநியாயம் செய்துள்ளார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். கடல் நீரில் ஓடும் வாகனத்தைக் கண்டுபிடித்ததற்கான பேடன்ட் உ...
போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கல்யாணத்திற்கு முன் தினம், நாயகனுக்குப் போதை ஏறி, அவன் புத்தி மாறுவதால், என்னென்ன விளைவுகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டு விபரீதமாகிவிடுவதுதான் படத்தின் மையக்கரு. உண்மையில், போதை தேடும் நபர்கள் எல்லாம் ஸ்டெடியாக இருக்க, மணப்பெண்ணான ஜனனியிடம் சும்மா விளையாட நினைக்கும் கார்த்திக்கின் வாழ்க்கை தலைகீழாய்ப் புரள்கிறது. சமீபத்திய ஸ்பைடர்-மேன் படத்தில், தொழில்நுட்பம் கொண்டு வில்லன் உருவாக்கும் மாய உலகத்தை, போதைப் பொடியை மூக்கினுள் இழுத்துக் கொண்டு உருவாக்கிக் கொள்கிறான் கார்த்திக். அவன் புத்தி எப்படி எல்லாம் மாறுகிறது என படம் பேசுகிறது. நல்ல த்ரில்லர் படமாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால், மெஸ்சேஜும் வேண்டுமென்ற இயக்குநர் K.R.சந்துருவின் உளக்கிடக்கை, அதற்கு எமனாகிவிட்டது. தலைப்பிலேயே அவரது விருப்பத்தைப் பட்டவர்த்தனமாய் உணர்த்திவிடுகிறார். போதை ஏறினால் புத்தி மாறிவிடும் எ...
கொலைகாரன் விமர்சனம்

கொலைகாரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நல்லதொரு த்ரில்லருக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்தது. அர்ஜுனும், விஜய் ஆண்டனியும் இணைந்திருக்கும் முதற்படம் என்பது எதிர்பார்ப்பைக் கூடுதலாக்கியது. ஒரு கொலை ஒன்று நடக்கிறது. ஒருவர் கொலைக்குப் பொறுப்பேற்று காவல்துறையில் சரணடைகிறார். அவர் தான் அந்தக் கொலையைப் பண்ணினாரா, ஏன் சரணடைந்தார் என்ற காவல்துறையின் விசாரணைதான் படத்தின் கதை. புலனாய்வு மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரி கார்த்திகேயனாக அர்ஜுன் நடித்துள்ளார். தான் தான் கொலையாளி என ஒருவர் சரணடைந்த பின்பும், வழக்கில் ஏதோ இடறுவதாக அதை நூல் பிடித்து முடிக்க நினைக்கும் அவரது தீவிரம் ரசிக்க வைக்கிறது. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும், அர்ஜுனின் பாத்திரமே முதன்மை நாயகனாக மனதில் பதிகிறது. சமய சந்தர்ப்பங்களால் நல்லவன் ஒருவன், ஒரு கொலையைச் செய்துவிட்டாலும், அவனைச் சட்டப்படி தண்டிப்பதா அல்லது மனசாட்சிபடி விட்டுவிடுவத...
என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் மீது தீவிர காதல் கொண்ட பெருங்கோபக்காரனான சூர்யா இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான். அவன் விருப்பப்பட்ட எல்லைக் காவல் வேலை, சூர்யாவிற்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. 'கோபம் வந்துச்சு. அடிச்சேன்' என்ற சூர்யாவின் அறிமுக அத்தியாயமே தூள். 'இவன் தான் சூர்யா' எனப் பார்வையாளர்களை முழுப் படத்திற்கும் தயாராக்கிவிடுகிறார் இயக்குநர் வம்சி. முறுக்கேறிய உடலுடம் ஸ்டைலிஷ் ஆக்டர் அல்லு அர்ஜுன், சூர்யா பாத்திரத்திற்குக் கனகச்சிதமாய்ப் பொருந்துகிறார். கோச்சா, ரவி வர்மா, பீட்டர் ஹெய்ன், ராம் லக்‌ஷ்மன் என நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்களும் சூர்யா பாத்திரத்திற்கு உரம் சேர்த்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். அதகளமான சண்டையில் தொடங்கும் படம், அதே போலொரு சண்டையினோடு இடைவேளையில் முடிகிறது. அதன் பின், அதிரடியான சண்டை ப்ரீ-க்ளைமேக்ஸில் தான் வருகிறது. ஆம், படத்தின் க்ளைமேக்ஸில் சண்டை இல்லை. ...