Shadow

Tag: ஆட்டிசம்

எழுதாப் பயணம் – ஒரு போராட்ட வீரரின் கள அறிக்கை

எழுதாப் பயணம் – ஒரு போராட்ட வீரரின் கள அறிக்கை

கட்டுரை, சமூகம், புத்தகம்
ஒரு ஆட்டிசக் குழந்தையின் அம்மாவாக, சிறப்புக் குழந்தைகளின் ஆசிரியையாக, தனது அனுபவங்களை அழகாகத் தொகுத்து, 'எழுதாப் பயணம்' எனும் நூலை எழுதியுள்ளார் லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன். இந்நூலின் சிறப்பம்சம், எவருக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ள ரொம்ப எளிமையான மொழிநடையே ஆகும். சமூகத்தில், ஆட்டிசம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை. அது ஏற்படுவதற்கு முன்பாகவே, அதை வைத்துச் சம்பாதிக்க சிலர் தொடங்கிவிட்டனர். நம் மக்களின் அறியாமை மேல உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில், ஆட்டிசத்துக்குத் தீர்வு உண்டு என மக்களை நம்ப வைத்து பணம் பார்க்கின்றனர். லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் போன்றோர் தொடர்ந்து, இத்தகைய வலையில் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள் ஏமாந்து விடக்கூடாதென, கிடைக்கும் அத்தனை சந்தர்ப்பத்திலும் பேசி வருகின்றனர். ஆனாலும், ஆட்டிசம் பற்றி, பொதுவெளியில் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லவேண்டிய அவசியம் இன்னும் அப்படியே...
ஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்

ஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்

கவிதை, படைப்புகள்
கம்பிகளில் தொத்திக் கொண்டிருந்த பாடல்கள் ஒவ்வொன்றாக இறக்கத் தொடங்கின கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு நான் யார் என்பதற்கான ஒரு வார்த்தையின் பிறப்பை செவிமடுக்க ஆரம்பித்தேன். பளீச்சென்ற கிளியைப் பிடிக்கத் திறந்தே இருக்கும் கூண்டுகளைப்போல என் கண்களை வைத்துக் கொண்டு எனக்குள் இருக்கும் உலகைப் பிடிக்க நடை பயில்கிறேன் மூன்றடிகள் முன்னோக்கி மூன்றடிகள் பின்னோக்கி திரும்பத் திரும்ப நடக்கிறேன். என் பாதையினால் உலகைச் சுற்ற விழைகிறேன். சுற்றிச்சுற்றி வருகிறேன் எடையற்று மேலெழும்பி கீழே விழுகிறேன். அம்மாவின் திரைச்சீலைகளைப் போல் மேகங்கள் ஈரமாகவும் மென்மையாகவும் உள்ளன. என் வாயில் ஒரு புளிப்புச் சுவை உள்ளது படுக்கைக்கு அருகிருக்கும் ஒரு விளக்கு போல நிற்கிறேன் இதமான கைகளின் வன்முறையான தொடுதலின் போதோ கூர்மையாக நோக்கும் அன்பான பார்வையினாலோ ஒரு துப்பாக்கி பின்நகர்வது போல் பின்னிடுகிறேன...
ஆட்டிசம் 2019

ஆட்டிசம் 2019

Others, காணொளிகள், மருத்துவம்
ஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும் நியூரோக்ரிஷும் இணைந்து, AVTISM: Think Different என்ற கருத்தரங்கை நிடத்தினார்கள். ராதிகா செளந்தரராஜன், நித்யா மோகன், உஷா ராமாகிருஷ்ணன், விவேக் மிஸ்ரா, ரேமா ரகு ஆகிய மருத்துவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. அதில் குறிப்பாக, ‘Neuromodulation for challenging behaviours” என்ற தலைப்பில், TMS சிகிச்சை முறை பற்றி மருத்துவர் விவேக் மிஸ்ரா விளக்கியது ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தவல்லது. TMS – Transcranial Magnetic Stimulation ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தலையில் கருவி பொறுத்தி, மூளையின் புரணியில் (Cortex) மின்காந்தப் புலத்தால் தூண்டுவதுதான் இச்சிகிச்சை முறையாகும். இதனால் குழந்தைகளின் anxiety அளவு குறைவதோடு, அவர்களின் intrapersonal skills-ஸும் அதிகரிக்கிறது. அமெரிக்காவில், மன அழுத்தத்த...
ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்

ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்

சமூகம்
“எதிர்காலத்தில் என் குழந்தை தன் பணிகளை தானே செய்து கொள்ளும்படி வளர்வானா?” எல்லா ஆட்டிச நிலைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இக்கேள்வி இருக்கும். உண்மையில் எல்லோருக்கும் அது சாத்தியமா என்பதை நான் அறியேன். ஆனால் பலருக்கும் அது சாத்தியம் என்பதை நம்புகிறேன். நம் குழந்தை அந்த இடத்தை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். புராணங்களில் சொல்லப்பட்ட பூமா தேவியை விட, அதிகம் பொறுமை மிக்கவர்களாகp பெற்றோர் மாறவேண்டும். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வதிலோ, கேட்பதிலோ எப்படி நம் குழந்தைகள் சலிப்படைவதில்லையோ, அதைப்போல பல மடங்கு நாமும் கற்றுக் கொடுப்பதில் மாறவேண்டும். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இன்னும் கூடுதலாக அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவேண்டும். அதில் ஆட்டிச நிலைக்குழந்தைகளை ஈடுபடுத்தவேண்டும். அவர்கள் அதைப் பற்றிக்கொள்ள, சில நா...
ஆட்டிசம் – விழிப்புணர்வு கருத்தரங்கு

ஆட்டிசம் – விழிப்புணர்வு கருத்தரங்கு

மருத்துவம்
ஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ஏப்ரல் 8 அன்று, ட்ரைமெடும் நியூரோக்ரிஷும் இணைந்து, The Future of Autism Care என்ற கருத்தரங்கை நிகழ்த்தினார்கள். ட்ரைமெட்-இல், மனம் மற்றும் மூளைப் பராமரிப்பிற்கான பிரத்தியேக சிகிச்சை முறையை வடிவமைத்துள்ளனர். ‘புத்தி (Buddhi)’ என்ற அந்தத் திட்டத்தின் கீழ், வித்யாசாகரிலுள்ள 7 முதல் 21 வயது வரையுள்ள 20 ஆட்டிச சிறுவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்தாற்போல் 7 நாட்கள், ஆயுர்வேதம் (Shriroabhyanga), Acupressure, Refloxology போன்ற 21 வகையான தெரபிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ட்ரைமெடின் இந்தச் சிகிச்சை முறையால், குறிப்பிட்டுச் சொல்லும்படியான நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அந்த ஆய்விற்கு ஒத்துழைத்த 18 பேரின் முடிவுகள் பின்வருமாறு:   Sleep Appetite Behavorial Problem Good result 15 10 ...
தி அக்கெளன்டன்ட் விமர்சனம்

தி அக்கெளன்டன்ட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மிக நிறைவானதொரு ஆக்‌ஷன் த்ரில்லர். க்றிஸ்டியன் வொல்ஃப் ஓர் ஆட்டிச சிறுவன். படம் முக்கியத்துவம் பெறுவது இந்தப் புள்ளியில்தான். அது மேலும் விசேஷமாவது, அதில் வரும் வித விதமான மனிதர்களால். "க்றிஸ்டியனை எங்களிடம் விட்டுப் போங்க. இந்தக் கோடையில் மட்டுமாவது.. பணம் எதுவும் வேண்டாம். இலவசமாக.. நாங்க அவனைப் பொறுப்பா கவனிச்சிக்கிறோம்" என்கிறார் ஹார்பர் நியூரோசயின்ஸ் நிறுவனத்தின் தலைவர். "இவர்கள் போன்றவர்களுக்கு, திடீர் சத்தமும் வெளிச்சமும் பாதுகாப்பற்ற உணர்வைத் தருவதால் கத்துறாங்க. ஸ்பெஷல் கிட்ஸைப் பார்த்துக் கொள்வது ஒரு சவால்" என்பார் அந்நிறுவனத்தின் தலைவர். அதற்கு க்றிஸ்டியனின் அம்மா, "மற்ற குழந்தைகளுக்கு அப்படி நேரும்போது, அது சவால். உங்க குழந்தைகளுக்கு அப்படியாகும் போது அது பிரச்சனை" என்பார் மன அழுத்தத்தில். அவருக்கு க்றிஸ்டியனை அங்கேயே விட்டுவிட வேண்டுமென எண்ணம். இராணுவ அதிகாரியான க்றிஸ்டியனின்...
‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம்

‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம்

கட்டுரை, புத்தகம்
ஆட்டிசம் பற்றிய புரிதலைப் பரவலாக்கும் முயற்சியில், ‘ஆட்டிசம் – சில புரிதல்கள்’ என்ற புத்தகத்தை 2013 இல் எழுதினார் பாலபாரதி. ஆனால் இத்தகைய துறை சார்ந்த புத்தகங்கள் எவரையும் சுலபமாகக் கவர்ந்து விடுவதில்லை. ‘ஆட்டிசம் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, நாங்க என்ன பண்ணப் போறோம்?’ என்ற மெத்தனம் காரணமாக இருக்கலாம். அவர்களுக்கு பாலபாரதி சொல்லும் இரண்டு விஷயங்கள் என்னவென்றால், உங்கள் சுற்றுவட்டத்தில் இருக்கும் குழந்தைகளை அடையாளம் காணவும், அக்குழந்தைகளுக்கு முன்கூட்டிய பயிற்சிகளைத் தொடங்குவதற்கும் நீங்கள் உதவக்கூடும். அதற்கு ஆட்டிசம் பற்றிய புரிதல் உங்களுக்கும் அவசியம். குறைவான ஆட்டிசப்பாதிப்பு உள்ள குழந்தைகளை சாதாரணப் பள்ளிகளுக்கு அனுப்புங்கள் என்று மருத்துவர்களும் தெரபிஸ்ட்களும் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இக்குழந்தைகளை பெரும்பாலான பள்ளிகள் சேர்த்துக் கொள்ள மறுத்துவிடுகின்றன. அதற்கு பள்ளி சொல...
ஹரிதாஸ் விமர்சனம்

ஹரிதாஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆட்டிசம் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே!! ஆட்டிச குறைபாடுள்ள சிறுவனுக்கும், அச்சிறுவனுக்கு உறுதுணையாக இருக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பே படத்தின் கதை.  ஹரிதாஸ் என்னும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனாக ப்ருத்விராஜ் தாஸ் நடித்துள்ளான். படத்தில் அவன் பேசும் ஒரே வார்த்தை 'அப்பா'. கேமிரா பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஆட்டிசம் என்னும் குறைபாடுள்ள சிறுவனாகவே படத்தில் வாழ்ந்துள்ளான் என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் விசேடத்தன்மைக்கு முழுப் பொறுப்பு.. இந்த சிறுவனும் அவனது நடிப்பும் மட்டுமே. கைகளை வைத்திருக்கும் பாங்கு, நடை, எங்கேயோ பார்வையைக் குவித்திருப்பது, சத்தத்தால் ஈர்க்கப்படாமல் இருப்பது, கடைகளில் உள்ள பொருட்களை நேராக்குவது, குதிரைகளைக் காணும் பொழுது தன்னை மறக்கும் லயம் என அசத்தியிருக்கும் ப்ருத்விராஜின் முதுகில் படம் பயணிக்கிறது. ஹரிதாஸ் தனக்கிருந்த குறைபாடுகளில் இ...