Shadow

Tag: எஸ்.ஜே.சூர்யா

வதந்தி – உண்மை நடக்கும் பொய் பறக்கும்

வதந்தி – உண்மை நடக்கும் பொய் பறக்கும்

OTT, Web Series, இது புதிது
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ்த் தொடரான 'சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதளத் தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதளத் தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' முன்னோட்ட வெளியீட்டு ...
வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி | ஆவலும் எதிர்பார்ப்பும்

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி | ஆவலும் எதிர்பார்ப்பும்

இது புதிது
அமேசான் ப்ரைம் வீடியோ, ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் நேரடி தமிழ்த் தொடரை டிசம்பர் 2 ஆம் தேதி அன்று வெளியிடுகிறது. புஷ்கரும் காயத்ரியும் தயாரித்திருக்கும், இருக்கையின் நுனியில் அமர வைக்கப் போகும் இந்த த்ரில்லர் தொடரை, ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவும், சஞ்சனாவும் இத்தொடரின் மூலம் ஓடிடியில் அறிமுகமாக உள்ளார்கள். இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு, திரைத்துறையினரிடமும் மக்களிடமும் அதிகமாகவே உள்ளது. அட்லீ, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், நடிகை கோபிகா ரமேஷ், ஷிவ் பண்டிட் ஆகியோர், தொடரின் மீதான தங்களது ஆவலையும் எதிர்பார்ப்பையும் சமூக ஊடகங்களில் பதிந்துள்ளார். இயக்குநர் அட்லீhttps://twitter.com/atlee_dir/status/1593161780439945217?s=48&t=14vEtj3Esmwd_raeaO8ndwஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்https://twitter.com/karthiksubbaraj/status/1593181749223510018?s...
கடமையை செய் விமர்சனம்

கடமையை செய் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'முத்தின கத்திரிக்கா' படத்தை இயக்கிய வெங்கட் ராகவனின் அடுத்த படைப்பு. இவர் இயக்குநர் சுந்தர். சி-யிடன் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். சிவில் இன்ஜினியரான எஸ்.ஜே.சூர்யா, தேவ் பில்டர்ஸ் கட்டிய அடுக்குமாடி கட்டடமொன்று இடிந்து விழும் தருவாயில் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரைப் பேசவிடாமல் செய்ய, வேன் இடித்து அவரைக் கொல்லப் பார்க்கின்றனர். அவ்விபத்தால், அவர் ஸ்டூப்பர் (Stupor) நிலைக்குச் சென்றுவிடுகிறார். அதாவது, மூளை விழிப்பு நிலையில் இருந்தாலும், உடல் இயக்கம் ஸ்தம்பித்துவிடும். அவர், தன்னைச் சுற்றி நடப்பனவற்றை அனைத்தையும் கவனிப்பார், பேச நினைப்பார் ஆனால் அவரால் முடியாது. இந்தக் குறைபாடுகளை மீறி எப்படி எஸ்.ஜே.சூர்யா, அந்தக் குடியிருப்பில் வாழ்பவர்களை எப்படிக் காப்பாற்றுகின்றார் என்பதுதான் படத்தின் கதை. மிக சீரியசான கதையில், சேஷு, மொட்டை ராஜேந்திரன் போன்றோர்களைக் கொண்டு நகைச்சுவைக்கும் மு...
“பாகவதர் காலத்துல இருந்து சினிமாவில் வராத கதை” – எஸ்.ஜே.சூர்யா

“பாகவதர் காலத்துல இருந்து சினிமாவில் வராத கதை” – எஸ்.ஜே.சூர்யா

சினிமா, திரைத் துளி
சுந்தர்.சி-யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் வெங்கட் ராகவன், “கடமையை செய்” எனும் படத்தை இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆன்ந்த், மொட்டை ராஜேந்திரன், சேஷு, வின்சென்ட் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்பட்த்தைப் பற்றிப் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து, அதாவது சினிமா தோன்றிய காலத்திருந்து வராத கதையை இயக்குநர் எடுத்துள்ளார். அதை என்னால் உறுதியாகக் கூற முடியும். கோமா பற்றி நம்ம எல்லாருக்கும் தெரியும். அதில் ஸ்டூப்பர்ன்னு ஒன்னிருக்கு. கோமா என்றால், ப்ரெயின் டெத், பாடி டெத், ஆனா உள்ளிருக்க்க் கூடிய இன்னர் ஆர்கன்ஸ் மட்டும் வொர்க் பண்ணிட்டிருக்கும். அதாவது, ஹார்ட், கிட்னி போண்றவை வொர்க் பண்ணும். ஆனா மொத்த சிஸ்டம் ஷட். ஸ்டூப்பர் என்பது என்னென்னா, ப்ரெயின் ஆக்டிவாக இருக்கும். பாடி டெத். அவனால் பேச முடியும். ஆனா வெளில இருக்கிறவங்களுக்குக் கேட்காது. அப்படியொரு...
“நிஜத்தில் பேயைப் பார்ப்பது சுலபம்” – விஜய் ஆண்டனியிடம் எஸ்.ஜே.சூர்யா

“நிஜத்தில் பேயைப் பார்ப்பது சுலபம்” – விஜய் ஆண்டனியிடம் எஸ்.ஜே.சூர்யா

திரைச் செய்தி
தமிழ் மொழிக்கென்றே பிரத்தியேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, அசத்துகீரது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது “ஆன்யா’ஸ் டுடோரியல்” எனும் இணையத் தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. பாகுபலியை உருவாக்கிய ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரைத் தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, “பெரிய ஓடிடி நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆஹாவிற்கு வாழ்த்துகள். படத்தை இயக்குவதே பெரிய சவாலான விஷயம் எனும்போது, ஒரு வெப் சீரிஸை இயக்குவது என்பது மிகப் பெரிய விஷயம். ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி அவர் சிறப்பான விஷுவல்களை கொடுக்க கூடியவர். அவர் பணிபுரிவதை வள்ளி மயில் எனும் எனது பட...
“மாநாடு: என்னைப் போல பேசும் குழந்தைகள்” – மகிழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா

“மாநாடு: என்னைப் போல பேசும் குழந்தைகள்” – மகிழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா

சினிமா, திரைச் செய்தி
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 25 ஆவது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்தப் படத்தின் நன்றி நவில்தல் விழா, டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “சமீபகாலமாக ஓடிடி வந்துவிட்டது, கொரோனா வந்துவிட்டது, மழை வந்தால் கூட்டம் வராது என்றெல்லாம் பலவிதமான எதிர்மறை வார்த்தைகளாகவே பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மாநாடு திரைப்படத்தின் வெற்றி தகர்த்துவிட்டது. நல்ல படம் வந்தால் மக்கள் குடையைப் பிடித்துக் கொண்டு கூட கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்பதை இந்தப் படம் நிரூபித்துவிட்டது....
அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம்

அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம்

சினிமா, திரைச் செய்தி
இந்தியத் திரையுலகின் பிதாமகன், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து தமிழ் வாணன் இயக்கத்ததில் அவர் நடிக்கவுள்ள படத்தின் பெயர் "உயர்ந்த மனிதன்". திருச்செந்தூர் முருகன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமன்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்கப்பட உள்ளது. "ஒரு துணை இயக்குநராகத் திரையுலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம்" என்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மார்ச் 2019 இல் படப்பிடிப்புத் துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறம...
மெர்சல் விமர்சனம்

மெர்சல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மெர்சலாயிட்டேன் என்றால் மிரண்டு விட்டேன் எனப் பொதுவாக பொருள் கொள்ளலாம். இந்தத் தலைப்பை அட்லி, இயக்குநர் ஷங்கரின் ஐ படத்தின் மெர்சலாயிட்டேன் பாடலின் வரிகளில் இருந்து 'இன்ஸ்பையர்' ஆகி எடுத்திருக்கச் சாத்தியங்கள் உள்ளன. கபிலனின் அந்தப் பாடல் வரிகளைப் பார்த்தால், பயத்தால் மிரள்வது மெர்சல் அல்ல என்று புரியும். ஒரு திகைப்பில், ஆச்சரியத்தில் எழும் பரவச உணர்வு என்பதாக மெர்சலுக்குப் பொருள் வருகிறது. படத்தில் அத்தகைய மெர்சல் உணர்வு மூன்று நபர்களுக்கு எழுகிறது. முதலாவதாக, ஃபிரான்ஸ் கேஃபே-வில் காஜல் அகர்வாலுக்கு. கையிலிருக்கும் ஒரு பணத் தாளில் இருந்து, விஜய் நிறைய பணம் வர வைக்கும் பொழுது. இரண்டாவதாக, நியூஸ் சேனல் வாசலில் நிற்கும் சமந்தாவிற்கு. பந்து பொறுக்கிப் போடும் தம்பி தான் ஐந்து ரூபாய் டாக்டர் மாறன் எனத் தெரிய வரும் பொழுது. மூன்றாவதாக, கிராமத்தில் பெரிய மருத்துவமனைக் கட்டடத்தை டீன் எஸ்.ஜே.சூர்யா...
இறைவி விமர்சனம்

இறைவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெண்களை, குறிப்பாக மனைவியை ஆண்கள் எப்படி நடத்துகிறார்கள்? கணவனின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் மனைவி எனும் இறைவிகளுக்கு இருக்கும் பொறுமை, அனுசரணை, விட்டுக் கொடுக்கும் மனோபாவம் போன்றவை ஆண்களுக்கு உண்டா என்ற கேள்வியை முன் வைக்கிறது படம். பள்ளி மாணவி பொன்னி, புதிதாகத் திருமணமாகும் ஐ.டி. துறை ஊழியை யாழினி, மூத்த மகனின் திருமணத்தில் களைத்திருக்கும் மீனாக்ஷி ஆகிய மூன்று பெண்களைப் பற்றியும், அவர்களைச் சார்ந்திருக்கும் ஆண்களையும் பற்றிய கதை இது. தயாரிப்பு நிறுவனங்களின் லோகோ போடும்பொழுதே எழும் மழையின் பின்னணி இசை, நம்மை ஏதோ ஓர் அனுபவத்திற்காகத் தயார்ப்படுத்துகிறது. பொன்னி, யாழினி, மீனாக்ஷி ஆகிய மூவருக்கும் மழையில் இறங்கி நனைய ஆசை இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சூட்சமத் தளைகள் அவர்கள் நனைவதைத் தடுத்து கையை மட்டும் நீட்டி மழையைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதிக்கிறது. இம்மூவரில், ஒருவரை மட்டும...
இசை விமர்சனம்

இசை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்குக் கிடைக்கும் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் தனது திறமை மட்டுமே காரணமென நம்பும் ஒருவன், அவனுக்கு ஏற்படும் தொய்வுக்கும் இயலாமைக்கும் மட்டும் மற்றவர் செய்யும் சதிதான் காரணமென நம்புவான். செயலூக்கம் குறைந்த சாமானிய மனிதனின் கற்பிதமிது. அப்படித்தான் மகத்தான இசைக் கலைஞரான வெற்றிச்செல்வன் தன் சறுக்கலுக்கு தனது சிஷ்யன் ஏ.கே.ஷிவாதான் காரணமென கோபம் கொள்கிறார். தனது கோபத்தை வெற்றிச்செல்வன் எப்படித் தணித்துக் கொள்கிறார் என்பதுதான் இசை படத்தின் கதை. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் படம் வந்துள்ளது. சம கால பாணி பற்றிலாம் கவலைப்படாமல், தனது பிரத்தியேக முத்திரையுடன் அசராமல் களமிறங்கியுள்ளார். ரத்தமும் சதையுமாக பழி வாங்கப் புறப்படும் தமிழ்ப்பட வில்லன்களைப் போலன்றி, நாயகனுக்கு உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்த முயல்கிறார் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன். இது போன்ற உளவியல...