
வீர தீர சூரன் – பாகம் 2 | Veera Dheera Sooran review
காவல்துறை உயரதிகாரியான எஸ்.பி. அருணகிரி, கண்ணனையும் அவரது தந்தையான பெரியவர் ரவியையும் என்கவுன்ட்டரில் கொல்ல நினைக்கிறார். இதையறியும் பெரியவர் ரவி, தன் மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென நினைக்கிறார். அதற்காக எஸ்.பி.யைக் கொல்ல, மளிகைக் கடை வைத்திருக்கும் காளியை அணுகுகிறார். யார் யாரைக் கொன்றார்கள் என்பதே படத்தின் கதை.
படத்தின் முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்றுவிடுகிறார் இயக்குநர் S.U.அருண் குமார். தன் கணவன் ஃபோன் எடுக்காததால் பதற்றமடையும் ஒரு மனைவியின் கோபம், ஒரு நாள் இரவுக்குள் என்னென்ன களேபரங்களுக்குக் காரணமாகிறது எனும் கதையின் மையக்கருவே திடுக்கிட வைக்கிறது. மனித மனங்களின் சிடுக்குகளையும், அகங்காரத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும் நேர்த்தியாகத் திரைக்கதையில் கையாண்டுள்ளார் S.U.அருண் குமார். தனது வேலைக்கு உலை வைத்தவர்களைக் கொன்றே ஆகவேண்டுமென எஸ்.பி. அருணகிரியின் அதீத செயற்பாடுகள், அதி...