Shadow

Tag: சிங்கம்புலி

கடைசி உலகப்போர் விமர்சனம்

கடைசி உலகப்போர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஐ.நா.வில் இருந்து பிரியும் சீனாவும் ரஷ்யாவும், 'ரிபப்ளிக் (O.N.O.R.)' எனும் கூட்டமைப்பை உருவாக்கி, அமீரகம், இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் முதலிய எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கிறது. ரிபப்ளிக்கில் இணையாத அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மீது போர் தொடுக்கப்படுகிறது. இந்தியாவுடனான தொடர்பில் இருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட்டு அல்லலுகிறது. இலங்கையின் தனிப்படையினர் உதவியோடு, தமிழ்நாட்டை தன்வசத்திற்குக் கொண்டு வருகிறான் சீனன் ஒருவன். தமிழ்நாட்டு முதல்வர் நாசரை மிரட்டி தமிழ்நாட்டை ரிபப்ளிக்கில் சேர்த்துவிடுகிறான். நாயகன் தமிழ் எப்படித் திட்டமிட்டு தமிழ்நாட்டை சீன ரிபப்ளிக் ஆதிக்கத்தில் இருந்து மீட்கிறான் என்பதே கதை. கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம், தயாரிப்பு என இந்தப் படத்தின் ஆல்-இன்-ஆல் ஹிப்ஹாப் தமிழா ஆதிதான். ஆசையும் அனுபவமின்மையும் சேரும் புள்ளிதான் இப்படத்தின் மையக்கரு. ...
கடைசி உலகப்போர் – ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே

கடைசி உலகப்போர் – ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே

சினிமா, திரைச் செய்தி
ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் "கடைசி உலகப்போர்" ஆகும். மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுந்தர். சி, "என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார். அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது. ...
”என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும் தான் என் வெற்றிக்கு காரணம்.” – மைக் மோகன்

”என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும் தான் என் வெற்றிக்கு காரணம்.” – மைக் மோகன்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் மோகன் நடிக்கும் 'ஹரா' பட டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு Official Teaser https://www.youtube.com/watch?v=NZNAOnLXlCw 🔥🔥 தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் 'ஹரா'. கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி.  இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது. இந்நிகழ்வில்... தயாரிப்பாளர் S P மோகன் ராஜ் பேசியதாவது… பத்திரிகை நண்பர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். இப்படம் நாங்கள் தயாரிக்கும் ...
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
“என் படத்துல, ஒண்ணு, நாயகன் கத்திப் பேசணும். இல்லன்னா, கத்தியால பேசணும்.” - இயக்குநர் முத்தையா நீதி, நேர்மை, நியாயம். அதற்காக அடி, வெட்டு, குத்து என களத்தில் இறங்கி வெளுக்கிறார் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். நீதி, நேர்மைக்காக அடிக்கிறார் எனப் பார்த்தால், ரிஷி ரித்விக்கை அடித்துவிட்டு அவரது கூலிங் கிளாஸை எடுத்துக் கொள்கிறார். ‘என்னய்யா உன் நியாயம்?’ என யோசித்தால், ‘என்னை அடிச்சுட்டான்’ என ரிஷி ரித்விக்கும் அவரது அப்பாவை மறுபடியும் சண்டைக்கு அழைத்து வருகிறார். 'என்னங்கடா இது சின்னப்புள்ளத்தனமா இருக்கே!' என பார்வையாளர்கள் நெற்றியைச் சுருக்க, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கமோ அவரையும் சீரியசாகப் போட்டு வெளுக்கிறார். அவர் ஃப்ரேமில் சண்டை செய்து கொண்டேயிருக்க, படத்தில் மூன்று மூத்த வில்லன்கள், அவர்களது வாரிசுகளாக ஏழு இளைய வில்லன்கள். தமிழ்ச்செல்விக்கு 100 ஏக்கர் நிலமும், 6 பெரிய வீடு...
பவுடர் விமர்சனம்

பவுடர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பவுடர் என்பதைக் குறியீடான தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. பவுடர் போட்ட முகங்களுக்கும், அசலான முகங்களுக்கும் உள்ள வேறுபாடினைக் காட்ட முயற்சி செய்துள்ளார். படத்தின் நாயகன் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதிக்கு நல்லது செய்யாத அரசியல்வாதியைக் கொல்லும் ஒரு இளைஞர் குழாம், மகளை ஏமாற்றியவனைக் கொல்லும் வையாபுரி, மருத்துவர் வித்யாவைக் காதலிப்பதாக ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுக்கும் ராணவ், கொரோனாவால் வருமானம் இல்லாமல் போய்விடும் ஒப்பனைக் கலைஞர், திறமையான காவல்துறை அதிகாரியான நிகில், மைனா வீட்டில் திருட வரும் ஆதவன் ஆகியோர்களைச் சுற்றி ஓர் இரவில் நடக்கும் கதைதான் பவுடர். கொரோனாக் காலகட்டத்தில் மிக எளிமையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இரவு ஊரடங்கு அமுலில் இருந்த நேரத்தில், ஓர் இரவில் நடக்கும் கதையாகப் படத்தை எடுத்துள்ளார். தாதா 87 படத்தில், இரண்டாம் பாத...
“அமெரிக்கால படிச்ச தம்பியா இது?” – சிங்கம்புலி | விருமன்

“அமெரிக்கால படிச்ச தம்பியா இது?” – சிங்கம்புலி | விருமன்

சினிமா, திரைத் துளி
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான சிங்கம் புலி, “மண் சார்ந்த படைப்புகளுக்கு சரியான தேர்வாக முத்தையாவை 2டி தேர்ந்தெடுத்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி முத்தையா கூறும்போது நாமும் இப்படத்தில் இடம் பெற வேண்டும் என்று அவருடன் தொடர்பில் இருந்தேன். முத்தையா ஒருவரிடம் கதை கூறினால், அவர் அப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று அர்த்தம். ஒரு காட்சியை அவரிடம் கூறினால், அதற்கு பல காட்சிகளைக் கூறுவார். எல்லாவற்றைய...
பன்னிகுட்டி விமர்சனம்

பன்னிகுட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கருணாகரன், யோகிபாபு, சிங்கம்புலி, விஜய் டிவி ராமர், பழைய ஜோக் தங்கதுரை, திண்டுக்கல் லியோனி, T.P.கஜேந்திரன் ஆகியோரோடு ஓர் அழகான பன்னிகுட்டியும் நடித்துள்ளது. வேலையில்லா உத்ராவதிக்குத் தொட்டதெல்லாம் பிரச்சனையாகத் தெரிய, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தூக்கு மாட்டிக்க பலமுறை முயல்கிறார். அவரை ஒருமுறை காப்பாற்றும் ப்ரூனே, கோடாங்கியிடம் அழைத்துச் செல்கிறார். சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அவர் சொல்லும் பரிகாரத்தைச் செய்ததும், அவரது பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நல்லது நடக்கிறது உத்ராவதிக்கு. மகிழ்ச்சியில் கோடாங்கிக்கு நன்றி சொல்ல வரும் வழியில், பன்னிக்குட்டி ஒன்றின் மீது மோதி விடுகிறார் உத்ராவதி. அப்பன்னிக்குட்டியின் மீது மீண்டும் வண்டியில் மோதினால்தான் நடக்கும் நல்லது தொடரும், இல்லையெனில் நிலைமை மேலும் மோசமாகிவிடும் எனச் சொல்லி விடுகிறார் கோடாங்கி. திட்டாணிக்குக் கல்யாணம் நடக்கவேண்டுமெனில், ராணி எனும்...
தி லயன் கிங் விமர்சனம்

தி லயன் கிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
1994 இல் வெளியான 'தி லயன் கிங்' படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்கள், சில வருடங்களிலேயே தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். டிஸ்னி ஸ்டியோஸின் வரலாற்றிலேயே, இப்படம் ஒரு மைல்கல். இப்படத்தைப் பார்த்த அத்தனை பேரையுமே, இசையால், அனிமேஷனால், 'ஹகுனா மடாடா (எதற்கும் கவலைப்படாதே)' எனும் உயரிய சித்தாந்தாத்தாலும் கொள்ளை கொண்டது. அந்தப் படத்தை நினைத்தாலே ஒரு மகிழ்ச்சியான சிலிர்ப்பு ஏற்படும். சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின், அப்படம் 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 2016 இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தி ஜங்கிள் புக் குதூகலத்தில், டிஸ்னி இப்படத்தைப் பிரம்மாண்டமாய்த் தயாரித்து வெளியிடுகிறது. அதுவும் 'டிஸ்னி இந்தியா', நேரடியாகத் தமிழிலேயே 'டப்' செய்து வெளியிட்டிருப்பது மேலும் சிறப்பு. வில்லன் சிங்கம், ராஜா சிங்கத்தைக் கொன்று, குட்டி சிங்கத்தையும் கொல்...
தி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்

தி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் - ஆக்ஷன் படமான 'தி லயன் கிங்' படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். தி லயன் கிங் படத்தின் தமிழ்ப் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த், ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினர். “1994 ஆம் ஆண்டு, 2டி அனிமேஷனில் வெளியான திரைப்படத்தின் புதிய பதிப்பு தான் 'தி லயன் கிங்'. எங்கள் டிஸ்னி நிறுவனத்துக்கு இது ஒரு ஸ்பெஷலான படம். இது குடும்ப உணர்வுகளைப் பேசும் படம். கதை சொல்லும் விதம் தனித்துவமாக இருக்கும். தந்தை, மகன் பாசம் தான் படத்தின் கரு. இந்திய மக்கள் பார்த்து மகிழ அவரவர் மொழிகளில் திரைப்படத்தை வெளியிடும் முய...
என்ன தவம் செய்தேனோ விமர்சனம்

என்ன தவம் செய்தேனோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மகளை, மாப்பிள்ளையை, அவர்களது கைக்குழந்தையைக் கொல்லத் தேடி அலையும் சாதிச் செருக்குள்ள தந்தை, ஒரு கட்டத்தில் தன் மகளைப் பெற்றதற்கு, 'என்ன தவம் செய்தேனோ!' என உணருவதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. இயக்குநர் பேரரசின் உதவியாளரான முரபாசெலன் இப்படத்தை இயக்கியுள்ளார். 'மாயிலைத் தோரணம்' எனப் பெயர் சூட்டப்பட்டு சென்சார் செர்ட்டிஃபிகேட் வாங்கியுள்ளனர். சுப நிகழ்வுகளுக்குக் கட்டப்படுபவை மாயிலைத் தோரணங்கள். அப்படியொரு சுப நிகழ்வை நோக்கித்தான் படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்குகிறது. ஆனால், படத்தில் தொடர் 'ட்விஸ்ட்'களைத் தொடக்கம் முதலே அளித்துக் கொண்டு வருகிறார் இயக்குநர். க்ளைமேக்ஸிலும் அதைத் தொடர்கிறார். "பாக்கியம்மாஆ" எனத் தன் மகளை அன்போடு வாரி அணைக்கும் ஒரு தந்தையால் எப்படித் தன் மகளைக் கொல்ல வெறியோடு அலைய முடிகிறது? சாதிப் பெருமிதம் என்ற முட்டாள்த்தனம் ரத்தப்பாசத்தையும் விடக் கனமானதா என்ன? ஆனால், ஏனோ படம்...
கருப்பன் விமர்சனம்

கருப்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை அன்புச்செல்வியைத் திருமணம் செய்து வைக்கிறார் மாயி. கண் பார்வையற்ற கருப்பனின் தாயை அன்புச்செல்வி பிரியமாகப் பார்த்துக் கொள்வதால், படிப்பறிவுள்ள தன் பணக்கார மனைவி மீது ஓவர் காதலுடன் இருக்கிறார் படிக்காத ஏழை கருப்பன். அன்புச்செல்வியை ஒருதலையாகக் காதலிக்கும் கதிர் அவர்களைப் பிரித்து விடுகிறான். கருப்பன் மீண்டும் தன் மனைவியுடன் எப்படிச் சேர்ந்தார் என்பதே படத்தின் கதை. வீரம், காதல், வஞ்சம், பிரிவு, துக்கம், சுபம் என கதை ஓட்டம் மிக எளிமையாகவும் பரீச்சயமாகவும் இருக்கிறது. அதனை மீறி சுவாரசியப்படுத்துவது படத்தின் கதைமாந்தர்கள் தான். சிங்கம்புலியைக் கூட ரசிக்கும்படி திரையில் உலவ விட்டுள்ளதே இயக்குநர் பன்னீர் செல்வத்தின் வெற்றி. குடித்து விட்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு சிங்கம்புலியுடன் ஆட்டம் போடும் காட்சி சூப்பர். அது அப்படியே நீண்டு, 'ஆலுமா டோலும...
சேது பூமி விமர்சனம்

சேது பூமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மறவர் குலத்தைச் சேர்ந்த குமரனைக் கொல்ல முயல்கின்றனர். அவனது காதலி புது மலரின் தாய் மாமனைக் கொன்று விடுகின்றனர். அதனாலெழும் சிக்கல்களைச் சமாளித்து நாயகன் குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் தலைப்பைக் கொண்டே படம் நடக்கும் களம் ராமநாதபுரம் என யூகிக்கலாம். வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் முத்துராமலிங்கத் தேவரை வழிபட உதவியதே அன்றி, களம் கதைக்கு உதவவில்லை. சம்பிரதாயமான முறையில் கதாபாத்திர அறிமுகங்கள் முடிந்தும், படத்தின் முதற்பாதி இலக்கற்றே பயணிக்கிறது. நாயகன், நாயகிக்கிடையேயான காதல் காட்சிகளில் இன்னும் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கலாம். சாமி எனும் கதாபாத்திரம் வீழ்ந்ததும் படம் சூடு பிடித்து ஓடத் துவங்குகிறது. நாயகனுக்கு இணையான சாமி எனும் கதாபாத்திரத்தில் படத்தின் இயக்குநர் கேந்திரன் முனியசாமியே நடித்துள்ளார். 'நீ துரியோதனன் பக்கமிருக்கும் கர்ணன் மாதிரிய்...