Shadow

Tag: ஸ்ரீ வெங்கடேஷ்

கடாவர் விமர்சனம்

கடாவர் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
கடாவர் (Cadaver) என்றால் உயிரற்ற உடல் எனப் பொருள். படப்பை காட்டுக்குள், காருடன் சேர்ந்து எரிக்கப்பட்ட சடலம் ஒன்று கிடைக்கிறது. முற்றிலும் உருக்குலைந்த அந்தச் சடலத்தைக் கொண்டு, போலீஸ் சர்ஜனான பத்ராவின் உதவியோடு கொலை செய்யப்பட்ட நபரை அடையாளம் காண்கிறது காவல்துறை. கொலை செய்யப்பட்ட நபர் யார், கொலையாளி யார், கொலைக்கான மோட்டிவ் என்ன என்பது போன்ற விசாரணைக்கான பதிலே படத்தின் முடிவு. இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ்க்குத் தமிழில் இது முதற்படம். மலையாளத்தில் அவரது முதற்படம் ஜோசஃப். இரண்டு படத்திற்குமான ஒற்றுமை என்னவென்றால், இரண்டின் கருவுமே ஏறக்குறைய ஒன்றேதான். சஸ்பென்ஸைத் தக்கவைக்க உதவும் ரஞ்சின் ராஜினுடைய பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஏசிபி (ACP) விஷாலாக ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார். பத்ரா தான் மாஸ்டர் ப்ரெயின் என்பதால், இவரது பாத்திரத்திற்கான டீட்டெயிலிங் கம்மியாகவே உள்ளது. ஆனாலும் தன் க...
கடாவர் – மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் | அமலாபால் தயாரிப்பு

கடாவர் – மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் | அமலாபால் தயாரிப்பு

சினிமா, திரை விமர்சனம், திரைத் துளி
அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன்முதலாகத் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. அறிமுக இயக்குநர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். வருகின்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற்றது. இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர், “2016 ஆம் ஆண்டில் இந்தக் கதையினை கதாசிரியர் அபிலாஷ் பிள்ளையுடன் இணைந்து திரைக்கதை எழுதினோம். பல்வேறு தயாரிப்பாளர்களைச் சந்தித்து இந்தக் கதையைக் கூறியபோது ஒவ்வொருவரும் பல ஆலோச...
லால் சிங் சத்தா – அதுல் குல்கர்னியின் திரைக்கதை | ஆமிர் கான்

லால் சிங் சத்தா – அதுல் குல்கர்னியின் திரைக்கதை | ஆமிர் கான்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் ஆமிர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் ‘லால் சிங் சத்தா’. ஆமிர்கான் ப்ரொடக்ஷன்ஸ், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இதில் ஆமிர்கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாக சைதன்யா, மோனா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ப்ரீதம் இசையமைத்திருக்கிறார். ஃபாரஸ்ட் கம்ப் எனும் ஆங்கிலப் படத்தினைத் தழுவி அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும், தமிழின் முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. ...
“இந்திக்கு எஸ்; இந்தித் திணிப்புக்கு மட்டுமே நோ” – உதயநிதி ஸ்டாலின் | லால் சிங் சத்தா

பூசாண்டி வரான் விமர்சனம்

பூசாண்டி வரான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பூச்சாண்டி எனும் தலைப்பு கிடைக்காததால், ஆனாலும் அத்தலைப்புத்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், பூசாண்டியில் சமரசமாகியுள்ளது படக்குழு. மலேஷியாவில் எடுக்கப்பட்டுள்ள தமிழ்ப்படம். கதாபாத்திரங்கள் அனைவருமே பரிச்சயம் அற்ற முகங்கள் என்றாலும், பூச்சுகளற்ற இயல்பான மனிதர்களாய்த் திரையில் நடித்துள்ளதால், மனதோடு ஒட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் நேசத்துடன் பேசிக் கொள்வதும், அவர்களது விருப்பங்களும், ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொள்வதும் என நம்மில் ஒருவராக மாறி விடுகின்றனர். நாயகி ஹம்சினி பெருமாள் முதல் அனைவருமே சிறப்பாக நடித்திருந்தாலும், கதையை முன்னகர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கும் ஷங்கர் கதாபாத்திரத்தில் வரும் தினேஷ் சாரதி கிருஷ்ணன் பிரமாதப்படுத்தியுள்ளார். க்ளைமேக்ஸில் அவரெடுக்கும் முக்கியமான முடிவொன்று, அவரை எதிர்நாயகனாக்கினாலும், படத்தின் நாயகன் என்று குறிப்பிடும்படி சிறப்பாகத் தன் பங...
“பூசாண்டி வரான்” – மலேஷியத் தமிழ்ப்படம்

“பூசாண்டி வரான்” – மலேஷியத் தமிழ்ப்படம்

சினிமா, திரைத் துளி
வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் “பூ சாண்டி வரான்” படத்தை வெளியிடுகிறார். ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி "பூசாண்டி வரான்" என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. JK விக்கி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணியை இயக்குநர் JK விக்கியே செய்துள்ளார். இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மை சம்பவங்கள் பிண்ணணியோடு உருவாக்கப்படுள்ள இந்த த்ரில்லர் படத்தை மலேசிய தமிழ் மக்கள் வெகுவாக ரசித்...