Shadow

Tag: ஜெகன் சேட்

22 நொடி – 8 வயது சிறுவன் நிகழ்த்திய உலக சாதனை

22 நொடி – 8 வயது சிறுவன் நிகழ்த்திய உலக சாதனை

சமூகம்
சிறு பிராயத்திலேயே உலகசாதனை படைத்துள்ளான் 8 வயது சிறுவனான ஹேம்தேவ். சென்னை வேளச்சேரி 4A, DAV பப்ளிக் பள்ளியில் படித்து வரும் சிறுவன் ஹேம்தேவ் படிப்பைப் போலவே விளையாட்டிலும் படு சுட்டி. சிறுவயதிலே உடல் சார்ந்த பயிற்சியில் அதி தீவிரமாக இயங்கி வரும் ஹேம்தேவ் 22 நொடியில் நான்கு கால் ஓட்டத்தில் 100 மீட்டர் ஓடி உலகசாதனைப் படைத்துள்ளார். இச்சிறுவனை அமைச்சர் அன்பரசன் நேரில் பாராட்டி விருதை வழங்கியுள்ளார். ஹேம்தேவ் அடைந்த இந்தப் பெருமை மிகு புகழால் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் ஹேம்தேவ் பெற்றோரான சக்திவேல் தமிழ்செல்வி. மேலும், ஹேம்தேவ் வேளச்சேரி பேருந்து நிலையம் அருகேயுள்ள வேதாஸ்ரீனி குங்பூ கிளாஸில் மாஸ்டர் வேதகிரி அவர்களிடம் தீவிரமாக குங்பூ கற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ...
நாய்சேகர் விமர்சனம்

நாய்சேகர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கொண்டாடும் வகையிலான படங்கள் பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் வெளியாவது மக்களின் மனதிற்கும் ஆரோக்கியம். சினிமாவிற்கும் ஆரோக்கியம். அந்த வகையில் இந்தப் பொங்கலுக்கு ஒரு ஆரோக்கிய வரவு நாய்சேகர். மனிதனிடம் மிருகங்களின் குணம் உண்டு என்பார்கள். ஒருவேளை முழுக்க முழுக்க ஒரு மனிதனுக்குள் ஒரு மிருகத்தின் நடவடிக்கைகள் கலந்து விட்டால் என்னவாகும்? இப்படியான ஆர்வம் எழும் ஒரு கருவைக் கதையாகப் பிடித்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார். ஹீரோ சதீஷ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர். அவருக்கு சிறு வயது முதலே நாய் என்றால் அலர்ஜி. அவரது வீட்டருகே ஒரு விஞ்ஞானி நாயின் டி.என்.ஏவை மனிதனுக்குள் கடத்தும் பரிசோதனை செய்துவருகிறார். அதற்காகவே ஒரு நாயை அடைத்துப் போட்டு அவர் வளர்த்து வருகிறார். ஒருநாள் அந்த நாய் வெளியில் வந்து சதீஷைக் கடித்து விடுகிறது. நாய் கடி...
ரைட்டர் விமர்சனம்

ரைட்டர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காவல்துறையின் அசல் முகங்களை அப்படியே அப்பட்டமாகப் பதிவு செய்துள்ளது ரைட்டர். தன் சர்வீஸில் யாரையும் அடித்திராத நேர்மையான காவல்துறை எழுத்தர் சமுத்திரக்கனி. அவருக்கு இரு மனைவிகள். அவருடைய ஒரே லட்சியம் போலீஸ் யூனியன் அமைக்க வேண்டுமென்பதே. அதற்காகவே அவர் வெவ்வேறு ஸ்டேஷனுக்குத் தூக்கி அடிக்கப்படுகிறார். அப்படி அவர் மாற்றலாகிச் செல்லும் ஒரு காவல்நிலையத்தில் அப்பாவி இளைஞன் ஹரிக்கு ஓர் அநீதி இழைக்கப்படுகிறது. அதற்கு சமுத்திரக்கனியும் ஒரு காரணமாகி விட, அதை அவர் எப்படி சரி செய்தார் என்பதே ரைட்டரின் பயணம். தேவைக்கேற்ற தொந்தி, குற்றவுணர்வில் தடுமாறும் வார்த்தைகள் என சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார். அதிகம் பேசாமல் இவர் நடித்திருக்கும் படம் என்பது கூடுதல் சிறப்பு. போலீஸிடம் மாட்டிக்கொள்ளும் அடிமட்ட இளைஞனாக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஹரி. ஓரிரு காட்சி என்றாலும் சுப்பிரமணிய சிவா அசத்தலாக ...
தூநேரி விமர்சனம்

தூநேரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அமானுஷ்ய கதைகள் என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அப்படியான கொண்டாட்டங்களை ஏற்படுத்தவே தூநேரி படம் முயற்சி செய்திருக்கிறது. ஊர்க்காலவனாக இருக்கும் கருப்பசாமி என்கிற ஜான் விஜய் ஒரு கட்டத்தில் ஊரார்களாலே கொல்லப்படுகிறார். பின் கொன்றவர்களைப் பேயாக மாறி பழி வாங்குகிறார். இப்படியான சம்பவம் நடக்கும் ஊருக்கு மாற்றலாகி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிவின் கார்த்தி நடக்கும் கொலைகளை எப்படி தடுக்கிறார் என்பதுதான் படத்தின் மையக்கரு. கருவிலேயே நடிக்கத் தெரியும் என்பது போல படத்தில் வெள்ளக்கனியாக வரும் சிறுவன் அபிஜித் அபாரமாக நடித்திருக்கிறான். ஜான் விஜய், கருப்பசாமி கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். இன்ஸ்பெக்டர் இன்னும் கூட முனைப்போடு நடித்திருக்கலாம். ஒரு பேய் படத்திற்கான கதையைத் தேர்ந்தெடுத்தவர்கள் அதற்கான விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்குவதில் கூடுதல் சிரத்தையைச் செலுத்தியிருக்கலாம் அறி...
ஜெயில் விமர்சனம்

ஜெயில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் 25 சிறந்த படங்களைத் தேர்வு செய்தால் அதில் வசந்தபாலனின் படம் ஒன்று நிச்சயம் இடம்பெறும். அப்படியொரு படைப்பாளி வசந்தபாலன். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ஜெயில் மீது எல்லாருக்கும் இயல்பாய் ஒரு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அதுவும் தனது இப்படம் ‘நில உரிமை’யைப் பற்றிப் பேசுகிறது என மிகவும் அழுத்தமாகப் பதிந்த வண்ணம் இருந்தார். ஆனால் படம் அதை நோக்கிப் பயணிக்கிறதா என்பது கேள்விக்குறியே! வடசென்னை காவேரி நகரில் திருட்டு வேலைகள் செய்கிறார் நாயகன் ஜீவி. அவரது நண்பர் ராமு போதைப்பொருள் விற்கிறார். இவ்விருவர்களின் எந்தச் செயல்களையும் ரசிக்காத எதிர் அணி ஒன்று இவர்களிடம் உரசிக் கொண்டே இருக்கிறது. இரு டீமையும் தனக்குள் வைத்து தன் பாக்கெட்டையும் வேலையையும் காப்பாற்றிக் கொள்கிறார் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ரவிமரியா. ஒரு கட்டத்தில் ராமுவைக் கொலை செய்கிற...
ஆன்டி இண்டியன் விமர்சனம்

ஆன்டி இண்டியன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்துத்துவர்களைத் தவிர்த்து ஏனையோர் தேசவிரோதிகள் எனப் பொருள்பட ஹெச்.ராஜா மொழிந்த 'ஆன்டி இண்டியன்' என்ற கோபச் சொல்லையே தலைப்பாக்கி அசத்தியுள்ளார் ப்ளூசட்டை மாறன். அது கவன ஈர்ப்பிற்காக மட்டுமல்லாமல் கதையோடு ஒன்றி வருவது மேலும் சிறப்பு. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் ஆகப்பெரும் பலம் என்று மார் தட்டிச் சொல்லும் அரசியல் வாதிகள், வேற்றுமைகளை வளர்த்தெடுப்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்பதையும், மதம் மனிதனைப் பண்படுத்தும் வேலையைத் தான் செய்யச் சொல்கின்றன, ஆனால் மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் தான் அதை வைத்து மனிதர்களைப் புண்படுத்துகிறார்கள் என்பதையும் ஆன்டி இண்டியன் சமரசமின்றி எடுத்துரைக்கிறது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள மயிலாப்பூர் தொதியில் சுவர் ஆர்டிஸ்ட் பாட்ஷா என்பவர் கொலையுண்டு இறந்துவிடுகிறார். அவர் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்றாலும் அவரது அம்மா இந்து. அதே சமயம் சுனாமி ந...
லாபம் விமர்சனம்

லாபம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவுக் குரலாக தமிழ்த்திரையில் எஸ்.பி.ஜனநாதனின் குரல் எப்பொழுதும் ஒலிக்கும். தன் படங்களின் வழியே எளிய மக்களுக்கு எதிராக இருக்கும் முதலாளித்துவத்தையும், அதற்கு துணைபோகும் அமைப்புகளையும் அரசையும் அவரது படங்கள் கேள்வி கேட்கும். லாபத்திலும் அந்தக் கேள்வியை எழுப்பி, கேள்விக்கான விடைகளை வசனங்களாக அள்ளித் தெளித்துள்ளார். கம்னியூசத்தை அவ்வளவு எளிதில் மக்களுக்குப் புரிய வைக்க முடியாது என்ற பொதுப்புத்தியில் சம்மட்டி வைத்து அடிப்பது எஸ்.பி.ஜனநாதனின் பாணி. எதையுமே மிக எளிதாகப் புரிய வைக்கும் வல்லமை அவரிடம் உண்டு. அதை இப்படத்தில் சற்று அதிகமாகவே முயற்சி செய்து பார்த்துள்ளார். லாபத்தைப் பற்றியும் லாபத்தில் இருந்தே அனைத்து ஊழலும் உருவாகிறது என்பதையும் ஒரு குழந்தைக்கு விஜய் சேதுபதி சொல்லிக் கொடுக்கும் காட்சி வழியாகப் படம் பார்ப்பவர்களுக்கும் புரிய வைத்துள்ளார் ஜனநாதன்...
சுந்தர தெலுங்கில் நெடுநல்வாடை

சுந்தர தெலுங்கில் நெடுநல்வாடை

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நல்லபடைப்பு தனக்கான அங்கீகாரத்தை அதுவாகவே தேடிக் கொள்ளும் என்பதற்கான ஒரு நல்லபடைப்பு தனக்கான அங்கீகாரத்தை அதுவாகவே தேடிக்கொள்ளும் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது நெடுநல்வாடை திரைப்படம். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி தமிழ்சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் நெடுநல்வாடை. தமிழ் இலக்கியத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்து மிக அற்புதமான கதையை எழுதி, வெகு சிறப்பான அழகியலோடு படத்தை இயக்கி இருந்தார் அறிமுக இயக்குநர் செல்வகண்ணன். படத்தின் சிறப்பம்சங்கள் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது. 2019-ல் சிறந்த படம் என பலரும் தங்கள் விரல்களாலும் குரல்களாலும் நெடுநல்வாடையைப் பற்றிப்பேசிக்கொண்டே இருந்தார்கள். இப்படி எல்லோராலும் பேசப்பட்ட இப்படம் தற்போது தெலுங்கு பேசியிருக்கிறது. தெலுங்கில் நல்ல சினிமாவை விரும்பி வரவேற்கும் சானிஷா கிரியேசன்ஸ் என்ற நிற...
நான் இனி நீ.. நீ இனி நான் | ஜெகன் சேட் – நூல் விமர்சனம்

நான் இனி நீ.. நீ இனி நான் | ஜெகன் சேட் – நூல் விமர்சனம்

கட்டுரை, புத்தகம்
குறுநாவல் என்று கூடச் சொல்ல முடியாத ஒரு நெடுங்கதை. ரோலர்கோஸ்டர் போல் விறுவிறுவென ஓடும் 90'ஸ் கிட் ஒருவரின் காதல் கதை. முதல் வரியிலேயே, தான் பார்த்த பெண்ணின் அழகு பற்றிய பிரமிப்பில் இருந்து தொடங்குகிறது ஜெயராமனின் காதல் கதை. பேச்சுமொழியில், தனக்கு நெருங்கிய ஒருவரிடம் ஜெயராமன் கதை சொல்வது போல் எழுதியுள்ளார் ஜெகன் சேட். ஒருவரின் காதல் கதையை, அவர் வாயாலேயே கேட்பதுதான் எத்தனை சுவாரசியம்? இயக்குநர் ராஜேஷின் (ஒரு கல் ஒரு கண்ணாடி) ஆரம்பக் கால படங்கள் போல் தொடங்கும் கதை, கே. பாலசந்தரின் உறவுச் சிக்கல்களைப் பேசும் கதையைப் போல் முடிகிறது. அந்த சிக்கல்களையும், சுந்தர்.சி பாணியில் கலகலப்பாகவே அணுகியுள்ளார் ஜெகன் சேட். ஜெயராமன் தனது கதையைச் சொல்லும் போக்கில் பல அதிர்ச்சிகளைத் தருகிறார். அவரிடம் ஒரு பெண், 'நீ விர்ஜினா?' என வினவுகிறார். 90'ஸ் கிட்ஸ்களுக்குத்தான் தெரியும், அது எத்தனை வலி மிகுந்த கலாச்சார...
காட் ஃபாதர் விமர்சனம்

காட் ஃபாதர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எளிமையில் எண்ணற்ற வலிமையுண்டு என்பதை நிரூபித்து இருக்கிறது காட்ஃபாதர். ஒரு சாதாரண அப்பாவிற்கும், மற்றொரு தாதா அப்பாவிற்கும் முட்டல் வந்தால் முடிவு என்னாகும் என்பதைத் தான் காட்ஃபாதர் பேசி இருக்கிறது. திரைக்கதை அமைப்பில் வலுவாக இருக்கிறார் காட்ஃபாதர். அமைதியை விரும்பும் நட்டிக்கு மகன் என்றால் உயிர். அந்த மகனின் உயிரைத் தன் மகனுக்காக வாங்க நினைக்கிறார் வில்லன் லால். நட்டி தன் மகனைக் காப்பாற்ற அப்பார்ட்மென்ட் உள்ளிருந்தே எடுக்கும் முயற்சிகள், அதற்கு லால் எதிர்வினையாற்றும் செயல்கள் என படம் நெடுக பரபரப்பிற்குக் குறைவேயில்லை. நடிகர் நட்டிக்கு இந்தப் படம் நல்லதொரு அடையாளம். எல்லாக் காட்சிகளையும் சரியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். அவரின் மனைவியாக வரும் அனன்யாவும் குறை காண முடியாதளவில் தன் பங்களிப்பைக் கொடுத்துள்ளார். வில்லன் லானின் நடிப்பில் வீரியம் அதிகம். குட்டிப்பையன் அஸ்வந்த் அட...
இளைஞர்களைக் கவர்ந்த ‘ஓ மை கடவுளே’

இளைஞர்களைக் கவர்ந்த ‘ஓ மை கடவுளே’

சினிமா, திரைத் துளி
சென்ற வாரம் வெளியான படங்களில் 'ஓ மை கடவுளே' படம் வெற்றியை அடைந்துள்ளது. திரையரங்க உரிமையாளர்களிடம் இப்படம் பற்றிய ரிசல்ட்டைக் கேட்டபோது, "வெள்ளிக்கிழமை ஓப்பனிங்கில் படம் பெரிதாக பிக்கப் ஆகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இருநாட்களிலும் படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்களால் ரசிகர்கள் குவியத் துவங்கினார்கள். குறிப்பாக திங்கள் செவ்வாக்கிழமை கூட தியேட்டருக்கு இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்" என்றனர். மேலும், இப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை இன்று படக்குழு நடத்தினார்கள். விழாவில் ஹீரோ அசோக் செல்வன் இயக்குநர் அஸ்வத், தயாரிப்பாளர் டில்லிபாபு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். - ஜெகன் சேட்...
கடவுளாக நடிக்கும் விஜய் சேதுபதி – ஓ மை கடவுளே

கடவுளாக நடிக்கும் விஜய் சேதுபதி – ஓ மை கடவுளே

சினிமா, திரைச் செய்தி
“ஓ மை கடவுளே” எனும் திரைப்படம் காதலர் தினச் சிறப்புத் திரைப்படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரைகையாளர்கள் சந்திப்பில் பேசிய நாயகன் அசோக் செல்வன், "என் அக்கா அபிநயா செல்வம், என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். அவர் தைரியமாக இப்படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்குப் பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம். லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவிட்டார். அவருடன் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். சாராவை முதலில் நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் படம் பார்த்த பிறகு அவர் தான் மனதில் நின்றார்....
மாயநதி விமர்சனம்

மாயநதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அட்வைஸ் கேட்டகரியில் வரும் படங்கள் நல்ல கலைத்தன்மையோடு இருப்பதில்லை என்ற விமர்சனம் சமீபகாலமாக அதிகமாக வைக்கப்படுகிறது. அந்த விமர்சனத்திற்கு வலு சேர்ப்பது போல் தான் சில படங்களும் வெளியாகின்றன. "ஆ, ஊ"ன்னா சாட்டையைச் சுழட்டி விடுகிறார்கள். ஆனால் மாயநதி அதிலிருந்து விலகி ஒரு தனித்துவத்தைth தொட முயற்சி செய்துள்ளது. நாயகி வெண்பா, அப்பாவின் கனவைத் தன் நினைவெனக் கருதி 12-ஆம் வகுப்பில் முதலாவதாகத் தேர்ச்சி பெறப் படிக்கிறார். அவருக்குள் காதலனாக நுழைந்த ஆட்டோ டிரைவர் அபி சரவணன் படிப்பில் தேக்கத்தை ஏற்படுத்துகிறார். அப்பாவின் கனவுக்கும், இடையில் தோன்றிய அப்பாவித்தனமான காதலுக்கும் இடையில் என்னானது என்பதே படத்தின் கதை. அப்பாவாக ஆடுகளம் நரேனும், மகளாக வெண்பாவும் நடிப்பில் ஒரு அத்தியாயத்தை எழுதி இருக்கிறார்கள். அப்பா மகளுக்கான கெமிஸ்ட்ரி அத்தனை அழகாகப் பொருந்தியுள்ளது. அபி சரவணன் கேரக்டர் அந்தளவிற்கு ஸ்...
சைக்கோ விமர்சனம்

சைக்கோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கண் பார்வையற்ற காதலனின் கண் எதிரே அவரது காதலி, சைக்கோ கொலைகாரனால் கடத்தப்படுகிறார். காதலியை மீட்க நாயகன் போராடி எழுவது தான் இப்படத்தின் கதை. படத்தின் முதல் ஜீவன் இளையராஜா தான். அவரின் இசை இன்றி இப்படத்தோடு நிச்சயம் ஒன்ற முடியாது என்பது உறுதி. அடுத்து ரன்வீரின் அட்டகாசமான ஒளிப்பதிவு. இவை இரண்டும் தான் சைக்கோவின் கடவுள்கள். பெண்களின் தலையை வெட்டும் வித்தியாச சைக்கோ, கண்பார்வையற்ற ஹீரோ, வீல்சேரில் அமர்ந்தும் சிங்கமாக கர்ஜிக்கும் கதையின் நாயகி, ஒரே ஆடையில் ஒரே அறையில் தேங்கிக்கிடக்கும் கதாநாயகி, எந்தத் துக்கத்திலும் பாட்டுப் பாடும் காவல் அதிகாரி என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிஷ்கினின் தனித்துவ வார்ப்பு. ஆனால் யாருடைய கதாபாத்திரமும் வலிமையாக எழுதப்படவில்லை. அதனால் அவர்களுக்கு நேரும் சுக துக்கங்களில் நம்மால் பங்கெடுக்க முடியவில்லை. இது, சைக்கோவில் உள்ள ஆகப்பெரும் பிரச்சனை. முன்பாதி மெதுவாகச் ச...
பிழை விமர்சனம்

பிழை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகளை மையப்படுத்தி வரும் படங்களில், கதையினூடாக மறைமுகமாகவோ, நேராகவோ பாடம் புகட்டுதலும் இருக்கும். பிழை படமும் அப்படியான ஒரு முயற்சி தான். ஆனால் பிழை ஒரு நல்ல பாடத்தைத் தாங்கி வந்திருந்தாலும் ஒரு நல்லபடமாக உருபெற சற்றே திணறுகிறது. வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு கல்வி என்பது கசப்பாக இருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால், அக்குழந்தை மாணவர்கள் மட்டம் தட்டப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் சென்னை வர, அதன் பின் அவர்களுக்கு என்னானது என்பது தான் படத்தின் கதை. படத்தில் நடித்துள்ளவர்கள் எல்லாரும் சிறப்பாகவே நடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான பின்கதை ரைட்டிங் மிகவும் பின் தங்கி இருப்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் பார்வையாளர்களின் பொறுமையை மிகவுமே சோதித்து விடுகின்றனர். படிக்காமல் தனது உழைப்பால் முன்னேறியவர்களை மட்டும் கணக்கில் எடுத்...