Shadow

Tag: ஜெகன் சேட்

குட் நைட் விமர்சனம்

குட் நைட் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாம் அன்றாடம் வாழ்வில் கடக்கும் தருணங்களை சிறந்த கலைப்படைப்பாக மாற்றும் சினிமாக்கள் மலையாளத்தில் தான் அடிக்கடி வரும் என்ற பிம்பத்தைத் தமிழ் சினிமா நொறுக்கத் துவங்கியுள்ளது. அதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது குட்நைட் படம். படத்தின் கதைப்படி ஹீரோ மணிகண்டனுக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. அவரை அறியாமல் அவர் விடும் குறட்டைச் சத்தம் தன் வீட்டையும் தாண்டிக் கேட்கும் அளவிற்கு வலிமையுடையது. அந்தக் குறட்டைச் சத்தத்தால் அவரது அக/புற வாழ்வில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்தான் படத்தின் திரைக்கதை. எல்லா மனிதர்களோடும் நிச்சயமாக கனெக்ட் ஆகக் கூடிய கதை என்பதால் கதை மாந்தர்கள் அனைவருமே நமக்கு நெருக்கமாகி விடுகிறார்கள். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...’ படத்தின் விஜய்சேதுபதியை சில இடங்களில் நினைவூட்டினாலும், அளவுக்கு அதிகமாகவே ரசிக்க வைக்கிறார் ஹீரோ மணிகண்டன். அவரது மச்சானாக வரும் ரமேஷ் தி...
குலசாமி விமர்சனம்

குலசாமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பிரபலங்களுக்கு ஆசை நாயகியாக மாற்ற முனைந்த பேராசியரியைப் பற்றிய வழக்கு. அந்த வழக்கை கதையின் முக்கிய மையச்சரடாகக் கொண்டு விமலுக்கு ஒரு தங்கச்சி எமோஷ்னலைப் புகுத்தி, ஓர் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் ஷரவண சக்தி. மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவிகள் சிலருக்குப் பாலியல் ரீதியிலான அழுத்தம் வருகிறது. மேலும் பெண்களைக் கொடூரமாகக் கற்பழிக்கும் நபர்கள், மிகக் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். விமல் மேற்படியுள்ள சம்பவங்களில் எப்படி லிங்க் ஆகிறார் என்பதாக விரிகிறது குலசாமியின் திரைக்கதை. விமல் அழுகை, சோகம், கோபம் என அவருக்கே உரித்தான அரிதாரங்களை களைத்துப் போட்டு இப்படியான சோக அவதாரத்தில் ஆடியிருக்கிறார். விளைவு? தேக்கமான அவரது ஸ்கிரீன் ப்ரசெனஸ் படத்திற்குள் ந...
காலேஜ் ரோடு விமர்சனம்

காலேஜ் ரோடு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கல்வியென்பது நமது தேவையன்று; அது ஒவ்வொருவரின் உரிமை என்பதை கமர்ஷியலுடன் சொல்லியுள்ளது காலேஜ் ரோடு திரைப்படம். சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றைக் கண்டுபிடித்துள்ள லிங்கேஷ், அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சி செய்கிறார். அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ், வங்கிக் கொள்ளைச் சம்பவங்களுடன் எப்படி தொடர்புப்படப்படுகிறார் என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணமென்ன என்பதையும், கல்வி எப்படியானவர்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும், பல அதிரடி திருப்பங்களோடு விரிவாகப் பேசுகிறது படத்தின் திரைக்கதை. முதன்மை நாயகனாக லிங்கேஷ், இந்தப் படத்தில் மிக முதிர்ச்சியான நடிப்பை நன்றாக வழங்கியுள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவர...
காரி விமர்சனம்

காரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர் என்ற கிராம மக்களின் இறை நம்பிக்கை சார்ந்த ஒரு கதையைக் கையில் எடுத்துள்ளார் இயக்குநர் ஹேமந்த். ரியலிஸ்டிக்கான மேக்கிங்கால் படத்தையும் நெருக்கமாக உணர முடிகிறது. குதிரை ஜாக்கியான சசிகுமார் சென்னையில் தன் தந்தை ஆடுகளம் நரேனோடு வசிக்கிறார். ஆடுகளம் நரேன் சிறு உயிர்களையும் தன் உயிரென நேசிக்கக் கூடியவர். சசிகுமார் வாழ்வையும் சமூகத்தையும் ஏனோதானோ என ஏற்பவர். சசிகுமாரின் சொந்தக் கிராமமான காரியூரில் கருப்பசாமியின் திருவிழாவை நடத்த வேண்டிய ஒரு சூழல் வருகிறது. அதை நடத்த சசிகுமாரின் வருகை தேவையாக இருப்பதால் ஊர் சசிகுமாரை நாடுகிறது. சசிகுமாருக்கும் ஊருக்குச் செல்வதற்கான ஒரு எமோஷ்னல் காரணம் அமைய, சசிகுமார் ஊருக்குச் சென்று தன் ஊரின் வேரை எப்படிக் காக்கிறார் என்பது காரியின் திரைக்கதை. மிகையில்லாத நடிப்பு தான் சசிகுமாரின் பலம். சரியான ஜாக்கி இல்லையென்றால் குதிரை தறி...
யூகி விமர்சனம்

யூகி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு மிஸ்ஸிங் கேஸை அடிப்படையாக வைத்து, அதோடு சிற்சில எமோஷ்னல் விசயங்களையும் தூவிப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். படத்தின் துவக்கத்திலே கயல் ஆனந்தி காணமால் போனதிற்கான விசாரணை துவங்குகிறது. அடுத்த காட்சி ஜான்விஜய் கொலை செய்யப்படுகிறார். இவை சம்பந்தமான விசாரணைகளும் விபரிப்புகளும் நடைபெறுகின்றன. ஒரு பக்கம் மாலை போட்ட கெட்டப்போடு நட்டி விசாரணைகளை நடத்துகிறார். மறுபுறம் டிடெக்டிவான நரேன், கதிரோடு இணைந்து விசாரிக்கிறார். இந்த மூன்று விசாரணைகளின் பின்னணியிலும் ஒரே விசயம் தான் பின்னப்பட்டிருக்கிறது. மேலும் இவர்கள் மூவரில் ஒருவரே இதைச் செய்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. அது யார் என்பதே படத்தின் திரைக்கதையாக விரிகிறது டிடெக்டிவ் ஆபிசராக நரேன் பொருத்தமான உடல்மொழியை வெளிப்படுத்தி அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். நட்டி நடிப்பில் இயல்புத்தன்மை மிஸ்ஸிங். ஒருவேளை அவரது கேரக்டரின் வடிவம...
ப்ரின்ஸ் விமர்சனம்

ப்ரின்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஊரடங்கு தளர்வுக்குப் பின் தமிழ்சினிமாவிற்கே பெரும் எனர்ஜி கொடுத்தபடம் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர். அதன் பிறகு டான் படத்திலும் வசூல்வேட்டை ஆடினார் சிவகார்த்திகேயன். அடுத்து அவரது நடிப்பில், ப்ரின்ஸ் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு இருந்தது. முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே வைத்து எழுதப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை நிறைய படங்களாக வந்திருக்கிறது. இருப்பினும் திரைக்கதையை ரசிக்கும்படி உருவாக்கியுள்ளார் இயக்குநர் அனுதீப். கடலூர் மாவட்டம் தேவகோட்டை என்ற ஊரில் பள்ளியில் சோஷியல் பாடமெடுக்கும் ஆசிரியராக இருக்கும் சிவகார்த்திகேயன், ஒரு நல்ல ஆசிரியர் இல்லை என்பதை ஓரிரு காட்சிகளிலே கவனப்படுத்தி விடுகிறார்கள். சிவகார்த்திகேயன் வேலை செய்யும் பள்ளிக்கு ஆசிரியையாக வருகிறார் பிரிட்டிஷ் மரியா. இருவரும் காதலில் விழுகிறார்கள். இவர்கள் காதலுக்கு சத்யராஜின் எதிர்ப்போடு சேர்த்து மேலும் ...
விஷமக்காரன் விமர்சனம்

விஷமக்காரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்குச் சாதகமான விஷயத்தை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது இயல்பு. ஆனால் உளவியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தி மற்றவர்களைத் தனக்கான விஷயங்களைச் செய்ய வைப்பது நிச்சயமாக ஆச்சரியமான சங்கதிதான். அப்படியான ஆச்சரியம் ஒன்றை லைஃப் கோச்சராக இருக்கும் நாயகன் வி செய்கிறார். அந்தச் செய்கையின் விளைவு என்ன என்பதை விஷமக்காரனில் காணலாம். மனரீதியாக மற்றவர்களுக்கு தைரியம் கொடுக்கும் நாயகன் வி, தன் மனைவியும், தன் காதலியும் ஒருசேர தனக்கு வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் ஏற்படும் தரமான சம்பவங்களை சுவராசியமாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். இயக்குநர் வி தான் படத்தின் நாயகனும். சிற்சில இடங்களில் மட்டுமே பாஸ்மார்க் வாங்குகிறார். நாயகிகளில் அனிகா விக்ரமன் நிறைய இடங்களில் கவனிக்க வைக்கிறார். மற்றொரு நாயகியான சைதன்யா ரெட்டி நடிப்பு ஓகே ரகம். படத்தில் இந்த மூவர் மட்டுமே பிரதான பாத்திரங்கள். ...
திரைப்பாடல் வானின் ஒரே நிலா | வைரமுத்து

திரைப்பாடல் வானின் ஒரே நிலா | வைரமுத்து

சினிமா
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வரலாற்றில் வைரமுத்து நிகழ்த்தியிருப்பது யாரும் எட்டியிராத சாதனை. இனியும் யாரும் எட்டமுடியாத சாதனை. வைகறை மேகங்களில் வெளிப்பட்ட சொல்லாட்சி புதுப்புது பிரவாகமெடுத்து பாடல்கள் வழியே இன்று வரையிலும் நின்று ஆட்சி செய்கின்றன. 'இதுவொரு பொன்மாலைப் பொழுது'-இல் அடியெடுத்து வைத்த வைரமுத்துவின் சந்தப்பயணம் எப்படிப் பார்க்கினும் மலைக்கவே வைக்கிறது. சங்க இலக்கியங்களின் உள்ளடக்கங்களைப் பாடல்களில் புகுத்திய வல்லமையை எப்படித்தான் மனிதர் வகுத்தாரோ! ‘ஆயிரம் நிலவே வா’ படத்தில், ‘அந்தரங்கம் யாவுமே’ எனத் துவங்கும் பாடலில், ”பாவை உடலில் கோடி மலரில் ஆடை அணிந்தேன், ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிந்தேன்” என ஒரு குறுங்கவிதையின் குறும்பு அவ்வரிகளில் கொப்பளிக்கும். தத்துவப் பாடல்களில் வைரமுத்து கொடி நாட்டவில்லை என்ற விமர்சனத்தை வைரமுத்து காலத்திய சினிமாக்களின் வணிகத்தேவை. மற்றும் ரசன...
காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிறு வயதிலேயே ராசி கெட்டவர் என்ற பிம்பத்தைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட விஜய்சேதுபதிக்கு இரு காதல் ஒரே நேரத்தில் மலர்கிறது. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பெரும்பாவம் என இருவரையுமே காதலிக்கிறார். இவர், இரண்டு ட்ராக்கிலும் ட்ரெயின் ஓட்டுவது காதலிகளுக்குத் தெரிய வர, அடுத்தடுத்து என்னாகிறது என்பதைக் கலகலப்பாகச் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். காத்துவாக்குல ரெண்டு காதலையும் சமாளிக்கும் இடங்களில் விஜய்சேதுபதி காதல் சேதுபதியாகக் கோலேச்சுகிறார். அவர் நடனமாடச் சிரமப்படும் போதும் அவர் மேல் நமக்கே பரிதாபம் வருகிறது. சமந்தாவிற்கும் நயனுக்கும் வராதா என்ன? நயன்தாரா சென்டிமென்ட் காட்சிகளில் கவனம் ஈர்த்தாலும் அவருக்கான வெளி படத்தில் நிறைய இருந்தாலும் இளைஞர்களின் கிளாப்ஸை அள்ளுவதென்னவோ சமந்தா தான். சின்னச் சின்ன மேனரிசங்களில் அசத்தி விடுகிறார். ஒரு கதாபாத்திரத்தின் மனம் என்ன நினை...
மன்மத லீலை விமர்சனம்

மன்மத லீலை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு வீடு, ஒரு வாசல் என 2020 இல் மனைவி மகளோடு வாழ்ந்து வரும் அசோக் செல்வனுக்கு, மனைவி மகள் ஊருக்குப் போகும் கேப்பில் ஒரு அழகு பதுமை மூலமாக ஒரு ‘வாய்ப்பு’ வருகிறது. அதை அவர் பயன்படுத்தினாரா? பயன்பட்டாரா? அடுத்து என்ன நடந்தது? இதுவொரு லைவ் கதை. வருடம் 2010! முரட்டு சிங்கிளாக இருக்கும் அசோக் செல்வன் முகநூல் மெஸெஞ்சர் மூலமாக ஒரு பெண்ணுக்கு நூல் விட்டு அப்பெண்ணின் வீட்டிற்கே சம்பவம் நடத்தக் கிளம்பிச் செல்கிறார். சம்பவம் என்னானது என்பது ஒருகதை. இந்த இரண்டு கதைகளையும் சரியாக முடித்துப் போட்டுப் படத்தை முடித்ததில் தான் வெங்கட்பிரபு வெற்றி பெறுகிறார். அசோக் செல்வன் அலட்டிக் கொள்ளாமல் அசால்டாக நடித்துள்ளார். 90’ஸ் கிட்ஸ் அனைவரும் பொறாமைப்படும் நடிப்பும் லீலையும். ஸ்ரும்தி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியாஸ்யுமன் ஆகிய மூவரும் கொடுத்த வேலைக்குக் குறை வைக்கவில்லை. ரியாஸ்வுமன் மட்டும் கொடுத்த வேலையை விட,...
செல்ஃபி விமர்சனம்

செல்ஃபி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கற்றோர்க்குச் செல்லுமிடம் எல்லாம் சிறப்பு என்பர். ஆனால் இன்று ஒரு எளிய பின்னணி உடையவர்கள் கல்வியில் கரை சேர்வதற்குள் திக்கித் திணற வேண்டியுள்ளது. கல்விச் சேவை, கடமை என்ற நிலையில் இருந்து விலகி வியாபாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதால் தான் எளியவர்கள் திண்டாடுகிறார்கள். மேலும் தனியார் கல்லூரிகளில் மருத்துவச் சீட்டுப் பெறுவதற்கு எத்தனை லட்சங்களைக் கொட்ட வேண்டியுள்ளது. அந்த லட்சங்களைப் பெறுவதற்கு கல்லூரி நிறுவனம் என்னென்ன கூத்துகளை எல்லாம் அரங்கேற்றுகிறது என்பதை ஃப்ளாஷ் அடித்துக் காட்டியுள்ளது செல்ஃபி படம். படத்தின் நாயகன் ஜீ.வி.பிரகாஷ், அவரின் நண்பராக வரும் நசீர் பாத்திரம் இருவரும் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்து கமிஷன் அடிக்கிறார்கள். இதையே பெரும் தொழிலாகச் செய்து வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். கெளதம் வேலையை ஜீ.வி. செய்ய, அதனால் ஜீ.வி.க்கு சில இழப்புகள் வர, மேலும் சில ஆடுபுலி ஆட்டம் அர...
கடைசி விவசாயி விமர்சனம்

கடைசி விவசாயி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேச்சிலும் எழுத்திலும் முதல் இடத்தில் வைக்கப்படும் விவசாயிகள், அவர்களுக்கான தேவைகளின் போது கடைசி இடத்திலே வைக்கப்படுகிறார்கள். "உழவன் தான் உலகின் வேர்" என்று கவித்துவமாகச் சொன்னாலும் அவர்களின் பாடுகள் அப்படி இல்லை. கடைசி விவசாயி படத்தில் விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பிரச்சாரம் செய்ய வாய்ப்பிருந்தும், அதை மிக நுணுக்கமாகத் தவிர்த்து ஒரு 83 வயது விவசாயினுடைய வாழ்வைக் கண்முன்னே நிறுத்தி அசத்தி இருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். உசிலம்பட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் குளிக்கவும் கணக்குப் பார்த்து செலவு செய்யும் கஞ்சர்கள் போல் தான் தண்ணீர் வருகிறது. வயல்கள் வறண்டு கிடக்கின்றன. 15 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் ஒரு யானையை வாங்கி அதை வைத்து ஜீவனம் நடத்துகிறது ஒரு குடும்பம். பலரும் நிலங்களை விற்றுவிட்டு குளத்து வேலைக்குச் சென்று கஞ்சி குடிக்கிறார்கள். இப்படியான ஊரில் ஒற்றை ஆளான...
22 நொடி – 8 வயது சிறுவன் நிகழ்த்திய உலக சாதனை

22 நொடி – 8 வயது சிறுவன் நிகழ்த்திய உலக சாதனை

சமூகம்
சிறு பிராயத்திலேயே உலகசாதனை படைத்துள்ளான் 8 வயது சிறுவனான ஹேம்தேவ். சென்னை வேளச்சேரி 4A, DAV பப்ளிக் பள்ளியில் படித்து வரும் சிறுவன் ஹேம்தேவ் படிப்பைப் போலவே விளையாட்டிலும் படு சுட்டி. சிறுவயதிலே உடல் சார்ந்த பயிற்சியில் அதி தீவிரமாக இயங்கி வரும் ஹேம்தேவ் 22 நொடியில் நான்கு கால் ஓட்டத்தில் 100 மீட்டர் ஓடி உலகசாதனைப் படைத்துள்ளார். இச்சிறுவனை அமைச்சர் அன்பரசன் நேரில் பாராட்டி விருதை வழங்கியுள்ளார். ஹேம்தேவ் அடைந்த இந்தப் பெருமை மிகு புகழால் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் ஹேம்தேவ் பெற்றோரான சக்திவேல் தமிழ்செல்வி. மேலும், ஹேம்தேவ் வேளச்சேரி பேருந்து நிலையம் அருகேயுள்ள வேதாஸ்ரீனி குங்பூ கிளாஸில் மாஸ்டர் வேதகிரி அவர்களிடம் தீவிரமாக குங்பூ கற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ...
நாய்சேகர் விமர்சனம்

நாய்சேகர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கொண்டாடும் வகையிலான படங்கள் பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் வெளியாவது மக்களின் மனதிற்கும் ஆரோக்கியம். சினிமாவிற்கும் ஆரோக்கியம். அந்த வகையில் இந்தப் பொங்கலுக்கு ஒரு ஆரோக்கிய வரவு நாய்சேகர். மனிதனிடம் மிருகங்களின் குணம் உண்டு என்பார்கள். ஒருவேளை முழுக்க முழுக்க ஒரு மனிதனுக்குள் ஒரு மிருகத்தின் நடவடிக்கைகள் கலந்து விட்டால் என்னவாகும்? இப்படியான ஆர்வம் எழும் ஒரு கருவைக் கதையாகப் பிடித்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார். ஹீரோ சதீஷ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர். அவருக்கு சிறு வயது முதலே நாய் என்றால் அலர்ஜி. அவரது வீட்டருகே ஒரு விஞ்ஞானி நாயின் டி.என்.ஏவை மனிதனுக்குள் கடத்தும் பரிசோதனை செய்துவருகிறார். அதற்காகவே ஒரு நாயை அடைத்துப் போட்டு அவர் வளர்த்து வருகிறார். ஒருநாள் அந்த நாய் வெளியில் வந்து சதீஷைக் கடித்து விடுகிறது. நாய் கடி...
ரைட்டர் விமர்சனம்

ரைட்டர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காவல்துறையின் அசல் முகங்களை அப்படியே அப்பட்டமாகப் பதிவு செய்துள்ளது ரைட்டர். தன் சர்வீஸில் யாரையும் அடித்திராத நேர்மையான காவல்துறை எழுத்தர் சமுத்திரக்கனி. அவருக்கு இரு மனைவிகள். அவருடைய ஒரே லட்சியம் போலீஸ் யூனியன் அமைக்க வேண்டுமென்பதே. அதற்காகவே அவர் வெவ்வேறு ஸ்டேஷனுக்குத் தூக்கி அடிக்கப்படுகிறார். அப்படி அவர் மாற்றலாகிச் செல்லும் ஒரு காவல்நிலையத்தில் அப்பாவி இளைஞன் ஹரிக்கு ஓர் அநீதி இழைக்கப்படுகிறது. அதற்கு சமுத்திரக்கனியும் ஒரு காரணமாகி விட, அதை அவர் எப்படி சரி செய்தார் என்பதே ரைட்டரின் பயணம். தேவைக்கேற்ற தொந்தி, குற்றவுணர்வில் தடுமாறும் வார்த்தைகள் என சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார். அதிகம் பேசாமல் இவர் நடித்திருக்கும் படம் என்பது கூடுதல் சிறப்பு. போலீஸிடம் மாட்டிக்கொள்ளும் அடிமட்ட இளைஞனாக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஹரி. ஓரிரு காட்சி என்றாலும் சுப்பிரமணிய சிவா அசத்தலாக ...