
ஹரிஹர வீரமல்லு விமர்சனம் | Hari Hara Veera Mallu review
முதல் பாகமான இப்படத்திற்கு, Sword Vs Spirit என உபதலைப்பு வைத்துள்ளனர்.
வாளின் (Sword) முனையில் மதத்தைப் பரப்பும் ஒளரங்கசீப்பிற்கு எதிராக, கோயில்களையும் இந்துத் தர்மத்தையும் காக்கும் பொருட்டு மனவலிமையுடைய (Spirit) ஹரிஹர வீரமல்லு புரட்சி செய்கிறார். ஹரிஹர வீரமல்லு சனாதனத்தை ஒழுகி (நெறிப்படி நடக்கும்) வாழும் ஒரு கற்பனையான கதாபாத்திரம். ஒளரங்கசீப்பை எதிர்த்து, அவர் வசமுள்ள கோகினூர் வைரத்தை, மீண்டும் கோல்கொண்டாவிற்கு ஹரிஹர வீரமல்லு கொண்டு வர நினைத்தால் எப்படியிருக்கும் என்ற புனைவே இப்படம்.
இந்தப் புனைவுக்கான களத்தை உருவாக்கியவர் படத்தின் இயக்குநர்களில் ஒருவரான கிருஷ் ஜாகர்லாமுடி. ஃபேன்டஸிக்கான இந்த அற்புதமான அடித்தளம் படத்தின் பலம். ஆனால் படத்தை ஒற்றை ஆளாக ஹரிஹர வீரமல்லுவையே சுமக்க வைத்திருப்பது படத்தின் ஆகப் பெரிய குறை. வைரங்களைத் திருட ஒரு குழுவினை உருவாக்குகிறார் வீரமல்லு. அவர்களில் ஒருவர்...