Shadow

Tag: நிகில்

KGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை

KGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
தென்னியாவில், கோலிவுட், டாலிவுட், மாலிவுட் போல் சாண்டல்வுட் தனது பிராந்தியத்தைத் தாண்டிப் பெரிதும் சலனத்தை ஏற்படுத்தவில்லை. விதிவிலக்கான சில படங்களைத் தவிர்டத்து, சாண்டல்வுட் தத்தித் தத்தியே நடை பழகி வந்தது. தற்போது, கன்னடத் திரையுலகமும் தனது பிராந்தியத்தை விட்டுத் தாவிப் பாயத் தொடங்கியுள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தாலே அது தெரியும். கே.ஜி.எஃப் (KGF) என்பது கோலார் கோல்ட் ஃபீல்ட் (கோலார் தங்க வயல்) என்பதன் சுருக்கமாகும். அக்டோபரில் வெளியான, வில்லன் எனும் கன்னடத் திரைப்படம் தான் இதுவரை வெளியான கன்னட படங்களிலேயே அதிக பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டது. அதனுடைய பட்ஜெட் சுமார் 45 கோடி ஆகும். டிசம்பர் 21 அன்று வெளியாகவுள்ள கே.ஜி.எஃப் அந்தச் சாதனையை முறியடிக்கவுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 90 கோடியாகும். எப்படிப் பாலிவுட்டில், 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’...
பில்லா பாண்டி விமர்சனம்

பில்லா பாண்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜீத்தின் தீவிர ரசிகர் பில்லா பாண்டி. அவரும், அவரது அத்தை மகள் சாந்தினியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, பாண்டியை ஒருதலையாகக் காதலிக்கும் இந்துஜாவால் பாண்டிக்கு மிகப் பெரும் பிரச்சனை எழுகிறது. சூழ்நிலைகள்மிக மோசமாகி, 'தல'ச்சாமியின் அருள் அவரை எப்படிக் காப்பாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கதை இடைவேளையில் தான் தொடங்குகிறது. அதுவரை, மேஸ்திரியாக வரும் தம்பி ராமையாவின் 'மீ டூ' அத்தியாயங்கள் கொலையாகக் கொல்கிறது. 'கருப்பட்டி மிட்டாய் வாங்கிக் கொடுத்தால் போதும். யாரை வேண்டுமானாலும் சம்மதிக்க வைத்துவிடுவேன்' என படத்தின் 35% நீளம் அவருக்காக மட்டுமே ஒதுக்கப்படுகிறது. படத்தின் நீளம் குறைந்தாலும் பரவாயில்லையென, நகைச்சுவை என்ற பெயரில் தம்பி ராமையா செய்யும் அசட்டுத்தனங்களைக் கத்தரித்து எறிந்திருக்க வேண்டும் படக்குழு. காமெடியனுக்கும், வில்லனுக்கும்  கேரக்டர் டீட்டெயிலிங்கில் பெரிய வித்தியாசம...
2.0 எனும் அதி பிரம்மாண்டம்

2.0 எனும் அதி பிரம்மாண்டம்

சினிமா, திரைச் செய்தி
300 கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம், 550 கோடிக்கு நீண்டுவிட்டது என்கிறார் ரஜினி. ஆனாலும், படம் அதனை வசூலித்துவிடும் என்கிறார் ரஜினி மிக நம்பிக்கையுடன். படத்தொகுப்பாளர் ஆண்டனி, மூன்று முறை எடிட்டிங் செய்துள்ளார். ஒன்று, அனிமேஷன் வடிவிலான ப்ரீ-விஷுவலைசேஷன்; இரண்டு, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல்; மூன்றாவது, விஷுவல் எஃபெக்ட்ஸ்களுடன் என மொத்தம் மூன்று முறை முழுப் படத்தையும் தொகுத்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அப்படியே! படம் தொடங்கும் முன் ஒருமுறை, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல் மற்றொரு முறை, தற்போது, அட்டகாசமான விஷுவல் எஃபெக்ட்ஸ்களுக்கு ஈடு செய்யும் வகையில் இசையமைத்து வருகிறார். உலகத்திலேயே முதல் முறையாக, செளண்ட் டிசைனிங்கில் 4டி (4D - SRL) தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி. உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை விட, உருவாக்கியுள்ளார் என்பதே சரி. தங்களது புதிய பரிமாணத்திற்கு...
வெள்ளி விழா காணும் ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’

வெள்ளி விழா காணும் ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’

சினிமா, திரைச் செய்தி
ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்-பும் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாகப் படங்களை வாங்கி விநியோகம் செய்தோம். ஆண்பாவம், விடிஞ்சா கல்யாணம், எங்க ஊரு பாட்டுக்காரன், உள்ளே வெளியே, உள்ளத்தை அள்ளித்தா என நிறைய படங்களுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர். அதன் பின்பு லத்தீப்-உம் நானும் இணைந்து தனியாகப் "பொற்காலம்" படத்தை விநியோகம் செய்தோம். அந்தப் படத்தைப் பாராட்டி எழுதாத பத்திரிகைகளே கிடையாது. தமிழ்நாட்டோட பெரிய ஏரியான்னு சொல்ற NSC- இல் படங்களை வெளியிட்டோம். அவ்வளவு பெரிய ஏரியாவுல நாங்க நல்ல படங்களை ரிலீஸ் பண்ணாலும், நாங்க படத்தை மட்டும் தியேட்டருக்குக் கொண்டுபோய் சேர்த்தோம். அந்தப் படத்தை மக்கள்கிட்ட கொண்டுபோனது பத்திரிகைத்துறை தான். அஜித் உடன் வாலி, வில்லன், முகவரி, ஆரம்பம் என நிறைய வெற்றிப் படங்களை விநியோகம் செய்தோம். விஜய் உடன் சச்சின், திருப்பாச்சி, கத்தி, மெர்சல் எனப் பிரமிக்கிற வ...
ஷேடஸ் ஆஃப் ஷாஹோ – பிரபாஸின் பிறந்தநாள் பரிசு

ஷேடஸ் ஆஃப் ஷாஹோ – பிரபாஸின் பிறந்தநாள் பரிசு

சினிமா, திரைத் துளி
ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த பிரத்தியேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ஆம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான 'சாஹோ' திரைபடத்தின் "Shades of Saaho" எனும் பிரத்தியேக முன்னோட்டத்தை வெளியிட்டார். இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. இது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த பாகுபலி 2 படத்திற்குப் பிறகு  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரபா...
தொரட்டி – இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் கதை

தொரட்டி – இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் கதை

சினிமா, திரைத் துளி
1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களின்  அடிப்படையில் தொரட்டி தமிழ்த் திரைப்படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர். இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்தக் கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.  படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்காக அந்தப் பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து, அப்பகுதி மக்களுடன் இரண்டரக் கலந்து படத்தில் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த திரையிடல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அன்பை, காதலை, உறவுகளின் உணர்வுகளை , கருவறுக்கும் கோபத்தை இயல்பாகவும் உயிரோட்ட...
தாதா 87 இயக்குநரின் அடுத்த படம்

தாதா 87 இயக்குநரின் அடுத்த படம்

சினிமா, திரைத் துளி
சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் "தாதா 87" படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். "தாதா 87" படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது ஏ எஃப் எஃப் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, நடிகர் அம்சன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். தல அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரியின் சூப்பர் சினியராகவும் அம்சன் நடிக்கின்றார். மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்புத் தரப்புக் கூறியுள்ளது....
செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா எனப் பன்முகம் கொண்ட சேனாபதியின் குற்றவியல் சாம்ராஜ்ஜியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, அவரது மூன்று மகன்களுக்குள் வாரிசுப் போட்டி நடக்கிறது. அதனால் சிந்தப்படும் ரத்தத்தால், சேனாபதி சாம்ராஜ்ஜியத்தின் பரந்து விரிந்த வானம் சிவக்கத் தொடங்குகிறது. போட்டிப் போட்டுக் கொண்டு சிவக்க வைத்துள்ளனர் அரவிந்த் சுவாமி, அருண் விஜய் சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர். கதாபாத்திரங்கள் தேர்வு கனகச்சிதம் என்றால், அவர்களை அறிமுகப்படுத்திய விதத்திலும், மெல்ல கதைக்குள் இழுத்த யுக்தியிலும் மணிரத்னம் அசத்தியுள்ளார். படத்தின் முதல் பாதி செம கிளாஸாக, மணிரத்னத்திற்கே உரித்த ஸ்டைலிஷான ஃப்ரேமிங்கால் கவர்கிறார். கேங்ஸ்டர் படத்திற்கான அமர்க்களமான அஸ்திவாரத்தைப் போட்டு விடுகிறார். தலைக்கட்டு சாய்வதோடு முதல் பாதி முடிய, 'மணிரத்னம் இஸ் பேக்டா (backda)' என்ற பரவச குரல்களைக்...
சிம்புக்கு ஜோடியாக ஃபேஷன் இளவரசி டயானா எரப்பா

சிம்புக்கு ஜோடியாக ஃபேஷன் இளவரசி டயானா எரப்பா

சினிமா, திரைத் துளி
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் "செக்கச்சிவந்த வானம்" படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா. கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். பின்பு 2012 இல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாகப் பங்கேற்றார். பின்பு கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் வீக், கௌச்சர் வீக் போன்ற பிரசதிபெற்ற ஃபேஷன் பத்திரிக்கைகளில் இடம்பெற்றார் நடிகை டயானா எரப்பா. இவரது எளிமையான அழகு, நளினம் மற்றும் நடையழகு ஆகியவை அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஃபேஷன் பத்திரிக்கைகள் இவரை ஓர் இளவரசியாகக் கொண்டாடின. மேலும் சர்வதேச ஃபேஷன் பத்திரிக்கைகளான வோக், எ...