Shadow

Tag: நிகில்

சூது கவ்வும் – 2 | சூரு என்றால் என்ன?

சூது கவ்வும் – 2 | சூரு என்றால் என்ன?

சினிமா, திரைத் துளி
தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரிப்பில் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'சூது கவ்வும் 2' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து மண்டைக்கு சூரு ஏறுதே எனும் உற்சாகமிக்க பாடல் திங்கட்கிழமை மாலை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைக் கல்லூரியிலும், லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் பயின்ற எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ள இப்பாடலை, பிரபல மலேசிய கலைஞர் கண்ணன் கணபதி, முன்னணி சிங்கப்பூர் கலைஞர் ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடலைப் பற்றி, "திரைப்படத்தின் பின்னணியில் வரும் பாடலான இதில், இதுவரை திரையுலகில் பயன்படுத்தப்படாத ...
பிரதீப் ரங்கராஜன் – அஷ்வத் மாரிமுத்து இணையும் புதுப்படம்

பிரதீப் ரங்கராஜன் – அஷ்வத் மாரிமுத்து இணையும் புதுப்படம்

சினிமா, திரைத் துளி
தென் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் இந்த புதிய படத்தை 'ஓ மை கடவுளே' புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இது ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் 26 ஆவது படைப்பாகும். கலகலப்பு மிக்க உணர்ச்சிப்பூர்வமான இந்தத் திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆவார். இணை கிரியேட்டிவ் தயாரிப்பாளராக ஐஷ்வர்யா கல்பாத்தி பங்க...
குறைந்த செலவில் நிறைந்த தரத்தைத் திரையுலகிற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸின்  நோக்கம் – இயக்குநர் ஹரி

குறைந்த செலவில் நிறைந்த தரத்தைத் திரையுலகிற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸின் நோக்கம் – இயக்குநர் ஹரி

சினிமா, திரைத் துளி
கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரி, டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட குட்லக் ஸ்டுடியோஸை கடந்த வருடம் தொடங்கினார். கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, 5.1 மிக்ஸிங் மற்றும் டப்பிங் வசதி கொண்ட புதிய ஸ்டுடியோவை இயக்குநர் ஹரி தொடங்கினார். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் திரையுலகத்திற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்று கூறிய இயக்குநர் ஹரி, தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள...
”பார்த்திபன் சாரின் ‘புதிய பாதை’யே இன்னும் பழைய பாதையாகவில்லை” – இயக்குநர் பேரரசு

”பார்த்திபன் சாரின் ‘புதிய பாதை’யே இன்னும் பழைய பாதையாகவில்லை” – இயக்குநர் பேரரசு

சினிமா, திரைச் செய்தி
உலகிலேயே முதல் முறையாகத் திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச த்ரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசையையும் ட்ரெய்லரையும் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. ட்ரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேர...
கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் விமர்சனம்

கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நேசம் முரளி. அரசியல்வாதியின் மகன் ஒருவன் பெண்களிய எல்லாம் கடத்தி மானபங்கப்படுத்தி, தொடர் சித்திரவதை செய்து வருகிறான். IAS பயிற்சி வகுப்பிலுள்ள மாணவனை, ஒரு பெண் காவல்துறை அதிகாரி கைது செய்கிறார். ப்ளேடு பக்கிரி எனும் ரெளடியின் பெயரில் அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார். அந்த மாணவனை அவ்வதிகாரி ஏன் கைது செய்கிறார், அந்த மாணவன் எப்படித் தப்பிக்கிறான் என்பதும்; படுபாதக செயல்களில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதி மகனுக்கும், அப்பெண் காவலதிகாரிக்கும், மாணவனுக்கும் என்ன சம்பந்தம் என்பதுமே படத்தின் கதை. தன் மேலதிகாரியை ஒருதலையாகக் காதலிக்கும் பாத்திரத்தில் கஞ்சா கருப்பு நடித்துள்ளார். அவர் நகைச்சுவை என்ற பெயரில் செய்யும் சேட்டையைப் பொறுத்துக் கொள்ள பிரம்ம பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது. வையாபுரியும் அவர் பங்குக்கு நையப...
ஒரு தவறு செய்தால் விமர்சனம்

ஒரு தவறு செய்தால் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘எங்க வீட்டுப் பிள்ளை’ எனும் படத்தில், 1965 இல் கவிஞர் வாலியால் எழுதப்பட்ட ‘நான் ஆணையிட்டால்’ பாடலில் வரும் ஒரு வரியைப் படத்திற்குத் தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர் மணி தமோதரன். பாடலில் அடுத்த வரியான, ‘அதைத் தெரிந்து செய்தால்’ என்ற வரியையும் சேர்த்தே, கதையின் ஓட்டத்தை உருவாக்கியுள்ளார். திரைத்துறையில் உள்ள நண்பர்கள் மூவர்க்கு, தங்கியிருக்கும் அறையைக் காலி செய்யவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. பிறரின் தேவையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், சுலபமாகச் சம்பாதிக்கலாமென பாடத்தைக் கோயம்பேடு மார்க்கெட்டில் கற்கின்றனர். தொழில்நுட்பம் தெரிந்த இளம்பெண் ஒருவரது துணையுடன், கே.கே.நகரில் நடக்கும் தேர்தலைப் பயன்படுத்திப் பெரும்பணம் பார்க்க நினைக்கிறார்கள். ஓர் அழகான ஃப்ளாஷ்-பேக் காட்சியில், தன் பள்ளிக்காதலை நினைவுகூருகிறான் நாயகன். அந்த மான்டேஜஸ்க்கு, டி.ஆர். குரலில் ஒரு நெடுங்கவிதை ஒலிக்கப்படுகிறது. ப...
கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ ஒன்றைத் தருவிப்பதையோ, வரவைப்பதையோ கான்ஜுரிங் எனச் சொல்வார்கள். அப்படி மந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்கின்றான் கண்ணப்பன். அவனுடன் டெவில் ஆர்ம்ஸ்ட்ராங்கும், சைக்காட்ரிஸ்ட் ஜானியும், கண்ணப்பனின் குடும்பத்தினரும் சிக்கிக் கொள்கிறார்கள். தப்பித் தவறித் தூங்கினால், அந்த அமானுஷ்ய கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். அதில் இருந்து எப்படித் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. கதாபாத்திரங்களின் அறிமுகத்திற்கான நேரத்தை கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, நேராகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். சதீஷ் தனியாகச் சிக்கிக் கொண்ட காட்சிகளில், தொழில்நுட்பத்தின் உதவியால் அச்சுறுத்த முயற்சி செய்துள்ளனர். ஹாலிவுட்டின் கான்ஜுரிங் சீரிஸ் படங்களே பார்வையாளர்களை அச்சுறுத்தத் திணறி வரும் சூழலில், கோலிவுட் படங்கள் தஞ்சம் அடைவது நகைச்சுவையில். இப்படம் அ...
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கத்தியால் ஒருவர் கண்ணில் வரவழைக்கும் கண்ணீரை விட, கலையால் ஒருவர் கண்ணில் வரவழைக்கப்படும் கண்ணீர் துளி சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்துவதற்கான உயிர்த்துளி என்பதை ஒருவித கோணத்தில் கூறிய திரைப்படம் ஜிகர்தண்டா. அதே கருத்தை மற்றொரு மாற்றுக் கோணத்தில் இன்னும் அழுத்தமாக, தீவிரமாகப் பேசியிருக்கும் திரைப்படம் தான் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. ”கலையை நீ தேர்ந்தெடுக்கவில்லை; கலை தான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறது” என்கின்ற கனமான கவித்துவமான வரிகளுடன் துவங்குகிறது திரைப்படம். அந்த வரிகளுக்கான நியாயத்தை ஒவ்வொரு காட்சியிலும் சிறுகச் சிறுக கடத்தி, படம் முடியும் அந்தக் கடைசி ஃப்ரேமில் அந்த வார்த்தைகளில் இருக்கும் உண்மையை நிரூபிக்கிறது. 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் இருக்கும் சில சாயல்கள் இப்படத்திலும் உண்டு. உதாரணத்திற்கு ஊரே பார்த்து நடுங்கும் ஒரு கொலைகார ரெளடி, அவனை நாயகனாக வைத்து படம் எடுக்க வேண்டிய நி...
“வெற்றிமாறனை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசை” – அமீர் | மாயவலை

“வெற்றிமாறனை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசை” – அமீர் | மாயவலை

சினிமா, திரைச் செய்தி
அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'மாயவலை' ஆகும். சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் 'தயா' செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள 'மாயவலை' திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளார். சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்திர...
“வடசென்னை நண்பர்களின் ரீயூனியன் – நண்பர் சரண் | மாயவலை

“தீனா குழந்தை மாதிரி” – அமீர் | மாயவலை

ஹரா | மைக் மோகனின் ஜோடியாக அனுமோல்

ஹரா | மைக் மோகனின் ஜோடியாக அனுமோல்

சினிமா, திரைத் துளி
பதினான்கு வருடங்களுக்குப் பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'ஹரா' திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாகப் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, 'ஹரா' திரைப்படத்தின் அதிரடியான டீசர் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடிக்க மோகன் ஒப்பந்தமானார். இதன் காரணமாக, 'ஹரா' படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய போது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கெனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்குப் பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கத...
சான்றிதழ் விமர்சனம்

சான்றிதழ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருக்கும் கருவறை கிராமத்திற்கு சிறந்த கிராமத்திற்கான மத்திய அரசின் விருது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட, ஊர்மக்கள் அந்த விருதை ஜனாதிபதியே இங்கு வந்து தங்களுக்கு வழங்கவேண்டும், இல்லையென்றால் விருதைப் புறக்கணிப்போம் என்று கூறுகின்றனர். அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வந்த மந்திரி காரணமே இல்லாமல், ‘என்னையே எதிர்க்கிறீர்களா? இருங்க உங்களைப் பழிவாங்குகிறேன்’ என்று வெளியேறி எந்த ஆணியையும் புடுங்காமல் இருக்க, காரணமேயில்லாமல் அவரின் கரை வேஷ்டி பிடுங்கப்பட, காரணமேயில்லாமல் கண்டக் கண்ட கதாபாத்திரங்கள் எல்லாம் கதைக்குள் வர, காரணமேயில்லாமல் ஜனாதிபதி கொடுக்கவேண்டிய விருதை கவர்னர் கிராமத்திற்கே வந்து கொடுத்துவிட்டுப் போவதோடு முதல்பாதி முடிவடைய, காரணமேயில்லாமல் இரண்டாம் பாதி முழுக்க தறுதலை கிராமம் எப்படி கருவறை கிராமமாக மாறியது என்பத...
Infinity விமர்சனம்

Infinity விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதல் காட்சியில் ஒரு பெண் எரித்து கொல்லப்படுகிறாள். அவளின் பெற்றோர் புகார் அளிக்க இரு நாட்கள் கழித்து வர, அந்த இனிய நன்நாளில் மேலும் இரண்டு கொலைகள் விழுவதோடு, இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டரும் கொல்லப்படுகிறார். வேறு வழியின்றி இந்த வழக்கு இரண்டே நாளில் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படுகிறது. சிபிஐ-ஆக வரும் நட்டி முதல்பாதி முழுக்க ஜீப்பில் சுற்றுவதும், கீழ்நிலை அதிகாரியா அல்லது பணியாளா என்று கூடத் தெரியாத ஒரு கதாபாத்திரத்திற்கு கட்டளைகள் பிறப்பிப்பதுமாக இருந்துவிட்டு, படத்தின் கடைசி பத்து நிமிடத்தில் இவர்கள் தான் குற்றவாளி என்று சிலரைச் சுட்டுக் கொல்கிறார். படம் முடிந்தது என்று நாம் நினைக்கும் போது, இவர்களுக்குப் பின்னால் இருந்த ஒரு மாபெரும் வில்லன் வந்து ஆட்டம் இனி தான் தொடங்கப் போகிறது என்று உண்மையாகவே நம்மை மிரட்ட, INFINITY என்னும் தலைப்புக்கு ஏற்றார் போல் பாகம் 2 என்று போட்டு படத்தை ம...