Shadow

Tag: நிகில்

விஜயபுரி வீரன் விமர்சனம்

விஜயபுரி வீரன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ஸ்டான்லி டாங்கின் ‘தி மித் (2005)’, ‘குங்ஃபூ யோகா (2017)’ ஆகிய படங்களில், ஜாக்கிசான் தொல்பொருள் ஆராய்ச்சியாளராகத் தோன்றிக் கலகலப்பாகச் சாகசம் செய்திருப்பார். கங்குவா நாயகி திஷா பட்டானியுடனும், சோனி சூத்-உடனும் இணைந்து குங்ஃபூ யோகா படத்தில் நடித்திருப்பார். அப்படங்களின் தொடர்ச்சியாக, ‘எ லெஜெண்ட் (தி மித் 2)’-வாக வெளியாகியுள்ளது. தமிழில், விஜயபுரி வீரன் என மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். பனிப்பாறையில் ஒரு பழங்கால மரகதப் பதக்கம் கிடைக்கிறது. அப்பதக்கம் கிடைத்தது முதல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராம் அவர்களுக்கு, விநோதமான கனவுகள் வருகின்றன. அக்கனவுகளில், விஜயபுரி வீரனான வீராங்கனின் வாழ்க்கை பற்றியும், மரகதப் பதக்கம் பற்றியும், அவரது காதலி பற்றியும் தெரிய வருகிறது. அக்கனவு அவரைக் கபாடபுரம் மறைத்து வைக்கும் பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்கிறது.  AI தொழில்நுட்பத்தின் உதவியால், ...
பயோஸ்கோப் விமர்சனம்

பயோஸ்கோப் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பதினான்கு வருடங்களுக்கு முன் “வெங்காயம் (2011)” எனும் படத்தை இயக்கியிருந்தார் சங்ககிரி ராச்குமார். இயக்குநர் சேரனின் முயற்சியால், அப்படம் மீண்டும் 2012 இல் மறுபடியும் வெளியானது. வெங்காயம் படத்தை எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் எப்படி எடுத்தார் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் ராச்குமார் சங்ககிரி. ஜோதிடத்தையும், நரபலி சடங்கையும் மிகக் காத்திரமாக சாடிய படம் வெங்காயம். அப்படத்தில் தன்னைத்தான் வில்லனாகச் சித்தரிக்கிறார்கள் என அறியும் செல்வாக்கான ஜோதிடர், ராச்குமாரின் படப்பிடிப்பை நிறுத்த முயற்சி செய்வதோடு, படம் வெளியாகக் கூடாதென்பதற்காகவும் காய்களை நகர்த்துகிறார். அப்படியே ஒரு படம் எடுக்கப்பட்டாலும், அப்படத்தை வெளியிட எத்தகைய சங்கடங்கள் எழும் என்பதையும், சினிமாவிற்குள் இருப்பவர்கள் வியாபாரத்தில் எப்படி ஏமாற்றுவார்கள் என்பதையும் சொல்லியுள்ளார் சங்ககிரி ராச்குமார். இந்தப் படத்தில் நடித்தவ...
சூது கவ்வும் 2 விமர்சனம்

சூது கவ்வும் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பொழுது, இந்த நாடும் நாட்டு மக்களும் என்னாவார்கள் என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றுள்ளது படம். 'சொதப்பினா ஒத்துக்கணும்' என்ற கடைசி விதிக்கு உட்பட்டு, கடத்தல்காரர்களின் தலைவன் குருநாத் சிறைக்குச் செல்கிறார். அவர் சிறையில் இருந்து வந்ததும், அவருக்கு மட்டுமே தெரியக்கூடிய அம்முவின் மரணத்திற்குக் காரணம் நிதி அமைச்சர் அருமை பிரகாசம் என குருநாத்திற்குத் தெரிய வருகிறது. அருமை பிரகாசத்தைப் பழிவாங்க நினைக்க, அது குருநாத் குழுவை எங்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. சூது கவ்வும் முதல் பாகத்தையும், இரண்டாம் பாகத்தையும் மிக அழகாக இணைத்துள்ளனர். வாகை சந்திரசேகரைக் கொண்டு அமைக்கப்பட்ட பின் கதை சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியையும், பாபி சிம்ஹ்சவையும் கதைக்குள் கொண்டு வந்த விதமும் ரசிக்க வைக்கிறது. இப்பாகத்தில், இரண்டு நல்ல 'சைக்கோ' காவல்துறை ...
இயக்குநர் வ.கெளதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’

இயக்குநர் வ.கெளதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’

இது புதிது, சினிமா, திரைத் துளி
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். 'கனவே கலையாதே', 'மகிழ்ச்சி' ஆகிய படங்களையடுத்து வ.கௌதமன் இயக்கும் மூன்றாவது படமாகும். 'மகிழ்ச்சி'யைத் தொடர்ந்து நாயகனாக அவருக்கு இது இரண்டாவது திரைப்படம். மண்ணையும் மக்களையும் காக்க வீரம், ஈரம், அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இப்படம். படையாண்ட மாவீரனுக்கு எதிராக மன்சூரலிகான், 'ஆடுகளம்' நரேன், 'பாகுபலி' பிரபாகர், 'வேதாளம்' கபீர், மதுசூதனராவ், தீனா என ஆறு பேர் மோதுகின்றனர். பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இப்படைப்பில் நெருப்பு தகிக்கும் நான்கு சண்டைக் காட்சிகளை ஸ்டன்ட் சில்வா வடிவமைக்க, நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் படையாண்ட மாவீர...
சொர்க்கவாசல் விமர்சனம்

சொர்க்கவாசல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'இந்தப்  படத்தின் வகைமை சர்வைவல் த்ரில்லர். இதைப் புரிந்து கொண்டு ரசிகர்கள் படம் பார்க்க வேண்டும்' என ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார் எழுத்தாளர் தமிழ் பிரபா. செய்யாத கொலைக்காகச் சிறைக்குச் செல்கிறான் பார்த்திபன். சிறையைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சிகாமணியை ஒடுக்க நினைக்கிறார் காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் குமார். எதிர்பாராத விதமாக சிகாமணி இறந்து விட, சிறைக்குள் கலவரம் மூள்கிறது. அந்தக் கலவரத்தை யார் யார் எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. சிறைக்குள் நடக்கும் கலவரத்தை விசாரிக்க வருகிறார் இஸ்மாயில். அவரது விசாரணையில் இருந்தே கதை விரியத் தொடங்குகிறது. வேகமாகப் பேசும் நட்டிக்கு நிதானமாக விசாரிக்கும் பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். சிறைச்சாலையையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சிகா எனும் சிகாமணியாக செல்வராகவன் நடித்து...
கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்

கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாமனிதன் படத்தின் நீட்சியாகவே உள்ளது. ஒரு ஆண், தன் குடும்பத்துக்காக எந்த எல்லைக்குச் செல்வான் என்று மீண்டுமொரு முறை அழுத்தமாகப் பதிந்துள்ளார் சீனு ராமசாமி. செல்லதுரையும், அவன் தங்கையும் நிராதரவாக ஆண்டிபட்டிக்கு வருகின்றனர். கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமியின் ஆதரவில் வளர்கின்றனர். தன் தங்கைக்காகவே வாழுகிறான் செல்லதுரை. வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பமாக, செல்லதுரையின் தங்கை ஒருவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்; சிறு வயதில் தன்னை விட்டுச் சென்ற தாயைப் பார்க்கின்றான்; வேறொரு மணம் புரிந்து கொள்ளும் தந்தையும் அவனைத் தேடி வருகிறார். இவற்றை செல்லதுரை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. கதையின் மாந்தர்களைத் துரிதமாக அறிமுகப்படுத்திவிட்டு, முதல் பாதி முழுவதும் கோர்வையற்ற காட்சிகளாலும் வசனங்களாலும் ஒப்பேற்றியுள்ளார். இடைவேளைக்குப் பிறகே படம் தொடங்குகிறது. முதற்பாதியை ஒப்பேற்ற நாயகி...
அந்தகன் விமர்சனம்

அந்தகன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்ற பொருள். 'அந்தாதுன்' எனும் ஹிந்திப்படத்தின் உரிமையை வாங்கி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் தியாகராஜன். பார்வையற்றவரான க்ரிஷ், பியானோ இசைக்கலைஞராக ஜூலியின் ரெஸ்டோபாரில் பணியில் சேருகிறார். அவரைத் தனது கல்யாண நாளன்று, தன் வீட்டில் வந்து வாசிக்கும்படி நடிகர் கார்த்திக் கேட்டுக் கொள்கிறார். க்ரிஷ், நடிகர் கார்த்திக்கின் வீட்டிற்குச் செல்ல, அங்கே கார்த்திக்கின்மனைவி சிமியால் கார்த்திக் கொல்லப்பட்டு இறந்துகிடக்கிறார். பார்வையற்றவர் என்ற போதும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததால் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார் கிரிஷ். எப்படி அப்பிரச்சனையில் இருந்து மீள்கிறார் என்பதே படத்தின் கதை. ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகராகவும், ஆட்டோ ஓட்டுநராகவும் முரளி எனும் பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். சிம்ரனை, 'ஆம்பளப் பொறுக்கி' எனத் திட்டுகிறார். சின்ன பாத்திரம்த...
“சிம்ரன் உற்ற நண்பி; வனிதா என் சகோதரி” – பிரஷாந்த் | அந்தகன்

“சிம்ரன் உற்ற நண்பி; வனிதா என் சகோதரி” – பிரஷாந்த் | அந்தகன்

சினிமா, திரைச் செய்தி
'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் பேசிய கதையின் நாயகன் பிரஷாந்த் பேசுகையில், '' 'அந்தகன்' அருமையான படைப்பு. இந்தத் திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அனைவருடனும் மறக்க இயலாத அனுபவம் இருக்கிறது. இதில் ஐயா கனி சாரை மறக்க முடியாது. அவரை நான் ஐயா என்று தான் அழைப்பேன். அவரையும் சசிகுமாரையும் அலுவலகத்தில் இருக்கும் போது நான் நேரில் சென்று சந்தித்து இருக்கிறேன். அந்தத் தருணத்திலிருந்து இருவரையும் பின் தொடர்கிறேன். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தேர்வு நடைபெறும் போது இயக்குநரின் பட்டியலில் கனி ஐயாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு இயக்குநர் கனி சாரு...
அந்தகன் என்றால் என்ன? – இயக்குநர் தியாகராஜன்

அந்தகன் என்றால் என்ன? – இயக்குநர் தியாகராஜன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
அந்தகன் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பார்வையற்றவன் என்று பொருள். 'அந்தாதுன்' எனும் ஹிந்திப் படத்திற்கு உரிமை வாங்கு, பிரஷாந்தை கதையின் நாயகனாக நடிக்க வைத்து இயக்கியுள்ளார் தியாகராஜன். 'அந்தகன் - தி பியானிஸ்ட்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் தியாகராஜன், ''இன்றைய தினம் அனைவரையும் சந்திப்பதற்கு முக்கியமான காரணம் இன்று நண்பர்கள் தினம். உலகம் முழுவதும் இருக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நண்பர்களாகத்தான் பழகினார்கள். படப்பிடிப்பு ஒன்பது மணி என்றால் அனைவரும் ஒன்பது மணிக்கு படப்பிடிப்புத் தளத்தில் இருப்பார்கள். படப்பிடிப்பு அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கும். திட்டமிட்டதை விட படப்பிடிப்பை சீக்கிரமாக நிறைவு செய்து விடுவோம். சமுத்திரக்கனி, அந்த காலகட்டத்திய என்னை நினைவுப்படுத்துபவர். தோற...
“தமிழிற்கு எஸ்; தெலுங்கிற்கு நோ” – சமுத்திரக்கனி | அந்தகன்

“தமிழிற்கு எஸ்; தெலுங்கிற்கு நோ” – சமுத்திரக்கனி | அந்தகன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, "சசியை பல இடங்களில் நண்பன் பிரஷாந்த் நினைவுப்படுத்தினார். ஒரு முறை சசிக்குமார் கையில் வாட்ச் ஒன்றை அணிந்திருந்தார். அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன். மாலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன், 'வா' என்று அழைத்துக் கொண்டு ஒரு கடிகார கடைக்கு அழைத்துச் சென்றான். அங்கு என்னிடம், 'நீ என் வாட்ச்சைப் பார்த்தாய் அல்லவா..! அதனால் உனக்குப் பிடித்த வாட்சை வாங்கிக்கொள்' என்றார். அவரிடம் உரிமையாக, 'எனக்கு அந்த வாட்ச் தான் பிடித்திருக்கிறது. அதனால் தான் அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன்' என்றேன். உடனே அவர், 'சரி அதை நீ கட்டிக் கொள். எனக்கு ஏதாவது ஒன்றைப் புதிதாகத் தேர்ந்தெடுத்துக் கொடு'' என்றார். அதேபோல் நண்ப...
BOAT விமர்சனம்

BOAT விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சென்னை மீது ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்ற தகவலால் பதற்றத்துக்கு உள்ளாகின்றனர் மக்கள். கடலுக்குள் சென்று தப்பிக்கலாம் என குமரனின் துடுப்புப்படகில் சிலர் ஏறிக் கொள்கின்றனர். கரையில் இருந்து 12 மைல் தொலைவு கடலுக்குள் சென்று விட்டால், ஆங்கிலேயரின் ரோந்து படகு தொல்லையில் இருந்தும், வானில் இருந்து குண்டு வீசப்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்து விடலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. அத்துடுப்புப்படகில் நூலகர் முத்தையா, மயிலாப்பூர்வாசி நாராயணன், அவரது மகள் லட்சுமி, பாலக்காட்டு முகமது ராஜா, விஜயவாடா விஜயா, அவரது மகன் மகேஷ், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட லால் சேட்டு, துடுப்புப்படகுக்காரர் குமரன், குமரனின் பாட்டி முத்துமாரி ஆகியோர் உள்ளனர். பாதி வழியில் இர்வின் எனும் வெள்ளைக்காரரும் அப்படகில் அழையாத வேண்டா விருந்தாளியாகச் சேர்ந்து கொள்கிறார். இவர்களுடன் படகிற்குள் ஒரு எலி, படகிற்கு வெளியே ஒரு சுறா. ...
“மேக்கப்பை சீராக்கிக் கொள்ள முடியாது” – கெளரி கிஷன் | BOAT

“மேக்கப்பை சீராக்கிக் கொள்ள முடியாது” – கெளரி கிஷன் | BOAT

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போட்' திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள்.நாயகி கௌரி கிஷன், ''நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற வளரும் கலைஞர்களின் கனவாக இருக்கும். இந்தப் படத்தில் நடித்ததைப் பெருமிதமாகக் கருதுகிறேன்.இந்தப் படத்தில் லட்சுமி என்ற இளம் பெண் கதாபாத்திரத்த...
“என் குருவின் சீடனாக..” – எம்.எஸ்.பாஸ்கர் | BOAT

“என் குருவின் சீடனாக..” – எம்.எஸ்.பாஸ்கர் | BOAT

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போட்' திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள். நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், ''சிம்பு தேவனின் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருக்கிறேன். இப்படத்திலும், 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' படத்திலும் நடிக்கும் போதுதான் கஷ்டப்பட்டேன். அந்தப் படத்தில் குதிரை என்றால் இந்தப் படத்தி...
BOAT படம் எப்படி உருவானது? – இயக்குநர் சிம்புதேவன்

BOAT படம் எப்படி உருவானது? – இயக்குநர் சிம்புதேவன்

சினிமா, திரைச் செய்தி
நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான 'போட்' படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படம் எப்படி உருவானது என்பது பற்றி இயக்குநர் சிம்புதேவன், ''நான் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ஃபேன்டஸி, காமெடி என வித்தியாசமான வகைமையில் இருக்கும். இந்தப் படத்திலும் இவை இரண்டும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நல்ல வாய்ப்பை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் பிரேம்குமார் தான் வழங்கினார். அவரை முதன்முதலாக சந்தித்து அரை மணி நேரம் இந்தக் கதையை விவரித்தேன். இந்தக் கதை என் மனதில் நீண்ட நாளாக இருக்கும் கதை. கொரோனா காலகட்டத்தின் போது நான் எழுதிய 'கசடதபற' எனும் படைப்பு வெளியானது. அந்தத் தருணத்திலேயே 'போட்' கதையை எழுதிக் கொண்டிருந்தேன். இந்தக் கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன போது, 'இ...
இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வெற்றிவேல், ஜமீன் வீட்டில் பெண் எடுக்கிறார். தான் சம்பந்தம் செய்யவுள்ளது திவாலான ஜமீன் எனத் தெரியாமல், கல்யாணம் முடிந்ததும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். ஏமாற்றத்துடனே தன் வாழ்க்கையைத் தொடரும் வெற்றிவேலின் வீட்டில், சென்னைக்கு வெடிகுண்டு வைக்க வரும் பயங்கரவாதி ஒருவன் எதிர்பாராதவிதமாக இறந்து விடுகிறான். பிறகு என்னானது என்பதே படத்தின் கதை. ஜமீன் விஜயகுமாராகத் தம்பி ராமையா அறிமுகமானதில் இருந்து படத்தின் கலகலப்பு இரட்டிப்பாகிறது. படத்தினைத் தாங்கும் கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது மகனாக நடித்துள்ள பாலசரவணன், சிற்சில காட்சிகளில் மட்டும் அசத்தியுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில், சந்தானம் சமாளிக்கும் பொழுது, குழப்பத்துடன் தரும் ரியாக்ஷங்களில் ரசிக்க வைக்கிறார். வெற்றிவேலின் மனைவி தேன்மொழி பாத்திரத்தில், பிரியாலயா நாயகியாக அறிமுகமாகியுள்ள...