Shadow

Tag: விஜய் சேதுபதி

சங்கத்தமிழன் விமர்சனம்

சங்கத்தமிழன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தில், விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயரே படத்தின் தலைப்பாகும். மருதமங்கலத்தில் காப்பர் ஃபேக்டரி நிறுவ நடக்கும் முயற்சியைச் சட்டத்தின் உதவியோடு சங்கத்தமிழன் எப்படித் தடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இடைவேளை வரையிலான படத்தின் முதற்பகுதி சுமார் 1 மணி 10 நிமிடங்கள் கால அளவு ஓடுகிறது. கதையைத் தொடங்காமல், விஜய் சேதுபதியும் சூரியும் அநியாய மொக்கை போடுகிறார்கள். கதை தொடங்காததால், கதையோடு இயைந்த நகைச்சுவைக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விஜய் சேதுபதி மாஸோ மாஸ் என்பதை நிறுவுவதற்காக மட்டுமே படத்தின் முதற்பாதியை உபயோகித்துக் கொண்டுள்ளார் இயக்குநர் விஜய் சந்தர். இரண்டாம் பாதியில், ஸ்டெர்லைட் பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளார் இயக்குநர். அப்பிரச்சனையில் நிகழ்ந்த அரசு பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசாமல், வழக்கமான கார்ப்ரேட் வில்லனின் அட்டூழியம் என்பதாகப் படம் பயணிக்கிறது. அந்தப் பயண...
மயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’

மயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’

சினிமா, திரைச் செய்தி
அல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய ராதா ரவி, "சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படிப் பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியைப் பாராட்டுகிறேன். சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். அதனை நினைத்து பார்த்திபன் மிகுந்த வேதனையடைந்தார். பார்க்க பார்க்க தான் மக்களுக்கு படம் பிடிக்கும். உடனே, தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று இன்னும் நீடிக்கச் செய்ய வேண்டுமென்று கூறி வந்தேன். சிறு படங்களுக்கு குறைந்தது 5 நாட்களாக திரையரங்கில்...
சென்னை பழனி மார்ஸ் விமர்சனம்

சென்னை பழனி மார்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆரஞ்சு மிட்டாய் படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி வசனமெழுத, பிஜு விஸ்வந்தாத் இயக்கியுள்ள படம் 'சென்னை பழனி மார்ஸ்'. நாயகனின் தந்தை ஒரு விஞ்ஞானி. மார்ஸ்க்குப் போகவேண்டும் என்பது அவரது ஆசை. அவரால் முடியாததைச் சாதிக்க நினைக்கிறார் போதைப் பொருளுக்கு அடிமையாகும் அவரது மகனான. நாயகன் மார்ஸ் போனாரா இல்லையா என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை, மார்ஸ் (செவ்வாய் கோள்) பூமிக்கு அருகில் வருமாம். அப்பொழுது ஏதோ ஒரு மலையில் போய் நின்றால், செவ்வாய்க் கிரகத்துக்கு உறிஞ்சப்படுவார்கள் என ஆஸ்ட்ரோ-பிசிக்ஸ் விஞ்ஞானியான நாயகனின் தந்தை நம்புகிறார். புதிரான ஒரு கணக்கிற்கு விடை கண்டுபிடித்து, அது "பழனி மலை" எனக் கண்டுபிடிக்கிறான் நாயகன். ஒரு பிரமிட் போல் சின்ன கருவி + ஸ்பேஸ் சூட் (space suit) தான் தேவை. மலையின் மீது நின்றால் நேராக செவ்வாய் கிரகம் தான். படத்தோடு கொஞ்சம் கூட ஒட்டவே முடி...
சிந்துபாத் விமர்சனம்

சிந்துபாத் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1001 இரவு அரேபியக் கதைகளில், ஏழு கடற்பயணயங்கள் மேற்கொண்ட சிந்துபாத்தின் கதை தனித்துவமானது. அதனால் தான் இதுநாள் வரை தினத்தந்தியின் கன்னித்தீவில் அவர் வாசம் செய்து வருகிறார். மனைவி வெண்பாவைக் காப்பாற்ற, சிந்துபாத் எனப் பெயரிடப்பட்ட போலி பாஸ்போர்ட்டில் தாய்லாந்து பறக்கிறான் திரு. மனைவியை எப்படிக் காப்பாற்றினான் என்பதுதான் படத்தின் கதை. கேட்கும் திறன் சற்றே குறைந்த பலே திருடன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். பர்ஸ், மோதிரம், பிரேஸ்லட், செயின் என விஜய் சேதுபதி அனைவரிடமும் திருடினாலும், கழுத்தில் காயத்தை ஏற்படுத்துவது மாதிரி செயின் பறிப்பில் எல்லாம்  ஈடுபடாத நல்லவர். சத்தமாய்ப் பேசும் அஞ்சலியின் உரத்த குரலைக் கேட்டதும் காதலில் விழுகிறார். காதல் கனிந்ததும் திருட்டுத் தொழிலை விடுகிறார். அஞ்சலி மலேசியா திரும்பும் நாள் அன்று, விமான நிலையத்தில், அஞ்சலியைக் குனியச் சொல்லி, சட்டென ...
மாணவி உதயகீர்த்திகாவின் கனவை நனவாக்கிய விஜய் சேதுபதி

மாணவி உதயகீர்த்திகாவின் கனவை நனவாக்கிய விஜய் சேதுபதி

சமூகம், சினிமா
தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் . தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5% / 'A " கிரேடு). 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 'இஸ்ரோ" " சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம் . தற்போது, போலந்து நாட்டில் உள்ள விண்வெளி "Analog austronaut training centre" என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ASTRONAUT பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது. பயிற்சிக் கட்டணம், தங்குமிடம் கட்டணம், உணவுச் செலவுகள், விமானக் கட்டணம் ஆகிய வகையில், இப்பயிற்சிக்கு, எட்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் தேவைப்படுகிறது. மாணவியின் பறிச்சிக்காக...
‘சிந்துபாத்’ பற்றி விஜய் சேதுபதி

‘சிந்துபாத்’ பற்றி விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக் பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில், S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் பேசிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, “பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் இயக்குநர் அருண் உடனான அறிமுகம் நட்பாக மாறியது. அதன் பிறகு அவர் எனக்கு சௌகரியமான நண்பராக மாறினார். பிறகு அவரிடம், என்னைத் தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து இயக்குவதற்கு முயற்சி செய் என்று அறிவுரை கூறினேன். ஆனால் திரையுலகில் யாரும் அவரை நம்பவில்லை. பிறகு நானே அழைத்து சேதுபதி பட வாய்ப்பைக் கொடுத்தேன். அதன் பிறகு நானே சில முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்லுமாறு வாய்ப்பினை உரு...
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் விமர்சனம்

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சூப்பர் வில்லன் (!?) தானோஸின் ஒரே ஒரு சொடுக்கினால் கரைந்து போன பாதிக்கும் மேற்பட்ட மனித இனத்தை மீட்க, எஞ்சியிருக்கும் அவெஞ்சர்ஸ் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர். இறுதியில் சூப்பர் ஹீரோகளுக்கே வெற்றி! முடிவு சுபம் தான் எனினும், அந்த வெற்றியை அடைய அவர்கள் மேற்கொள்ளும் அந்த உணர்ச்சிகரமான பயணம், இந்தப் படத்தைத் திரையுலக வரலாற்றின் மிக முக்கியமான படமாக உயர்த்துகிறது. ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில், சூப்பர் ஹீரோ படம் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது என்றே சொல்லவேண்டும். அவெஞ்சர்ஸில் சிலர் அதி சக்தி படைத்தவர்கள், சிலர் மிகவும் புத்திசாலிகள், சிலர் நவீன உபகரணங்களுடன் தங்கள் பராக்கிரமத்தை உயர்த்திக் கொண்டவர்கள். அவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு புள்ளி என்றால், ஒரு குடும்பமாக இணைந்து உலகைக் காக்கவேண்டுமென்ற அவர்களது எண்ணமே. எத்தனை புரிதலின்மைகள் உருவாகி உரசிக் கொண்டாலும், இறுதியில் ஒற்றும...
சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாழ்வின் ரகசியத்தைப் பற்றிச் சொல்லும் 175 நிமிடங்கள் ஓடும் நீளமான படம். மணமாகிவிட்ட வேம்பு, தனது கல்லூரிக் காதலனுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் இறந்து விடுகிறான்; பள்ளியைக் கட்டடித்து விட்டு பிட் படம் பார்க்கும் பள்ளி மாணவர்களின் ஒருவனது அம்மா அந்தப் படத்தில் தோன்றுகிறார்; வீட்டை விட்டு ஓடிப் போய்விட்ட தந்தையை முதல்முறையாகப் பார்க்கக் காத்திருக்கும் சிறுவன் முன் ஷில்பா வந்து இறங்குகிறாள்; தற்கொலை செய்து கொள்ள கடலில் இறங்கி சுனாமியில் சிக்கிய தன்னைக் காப்பாற்றிய ஒரு சிலையை ஆண்டவராக எண்ணி சதா பிரார்தித்துக் கொண்டிருக்கிறான் தனசேகர். இப்படி நான்கு கிளைக்கதைகளை ஒன்றிணைக்கும் தரமான கலகலப்பான அடலட் (A) மூவியாக சூப்பர் டீலக்ஸ் உள்ளது. நீளத்தை மட்டும் கத்தரித்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு கூடி சலிப்பு தட்டாமல், முதல் பாதியைப் போலவே இரண்டாம் பாதியையும் ரசித்திருக்க இயலும். முக்கி...
இது ரசிகர்களின் பேட்ட

இது ரசிகர்களின் பேட்ட

சினிமா, திரை விமர்சனம்
தீபாவளி பொங்கலுக்கான காத்திருப்புகள் மறைந்து போயிருந்த போதிலும், பட்டாசுகளும் பொங்கப்பொடியும் நினைவுகளின் தூசிக்கு அடியில் உறங்கிப் போயிருந்தாலும் எப்போதுமே குறையாமல் இருப்பது ரஜினி பட ரிலீஸ் மட்டுமே. லிங்கா, கோச்சடையான் மழுங்கி, கபாலி நல்லா இருக்கா இல்லையா என்று மழுப்பி காலா நல்லா இல்லன்னு சொன்னா இந்துத்துவா ஆகிருமோன்னு குழம்பி, 2.0 தலைவா 'உன்னால டயலாக்க ஒழுங்கா பேச முடியல தலைவா, இனி நடிப்பு வேணாம்' எனப் பரிதாபம் கொள்ளச்செய்த நிலையிலும், "பேட்ட பேட்ட" என்ற பரபரப்பு உச்சத்திற்குச் சென்றிருந்தது என்றால் அதற்கு ஒரே காரணம் ரஜினி. எப்போதுமே ஜெயிக்கிற குதிரை அது. அந்தக் குதிரையை சரியான களத்தில் விட்டால் எப்படியிருக்கும் என்பதை செய்து காட்டி இருக்கிறது பேட்ட. படம் ஆரம்பித்ததில் இருந்தே ரஜினியிசம் தான். 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!' என்ற முதல் வசனத்தில் இருந்து, 'இந்த ஆட்டம் போதுமா கொழந்த?' என...
சீதக்காதி விமர்சனம்

சீதக்காதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரங்கு நிறைந்த பார்வையாளர்களின் கைத்தட்டலில் பரிணமிக்கும் மேடை நாடகக் கலைஞன், சுமார் 25 ஆண்டுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய பார்வையாளர்கள் முன் சுருங்கி விடுகிறான். அரங்கத்திற்கு வாடகை தருவதே சிரமமாகிவிட்ட நிலையிலும், நடிப்பின் மேலுள்ள காதல் காரணமாகத் தொடர்ந்து நாடகம் நடத்துகிறார் ஐயா ஆதிமூலம். தனது பேரனுக்கான மருத்துவச் செலவினைப் பற்றிய பரிதவிப்போடு, சுஜாதாவின் 'ஊஞ்சல்' நாடகத்தில் உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும்பொழுதே அமரராகிறார் ஐயா ஆதிமூலம். ஐம்பது ஆண்டு காலம் நடிப்பிற்காக மட்டும் வாழ்ந்த ஐயா, அவரது மறைவிற்குப் பின்னும் நடிப்பின் மேலுள்ள காதலால், யார் மூலமாகவாது நடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அவரது பேரனின் மருத்துவச் செலவுக்கும், அவரது நாடகக் குழுவுக்கும் பணம் கிடைக்கிறது. ஆக, ஐயா ஆதிமூலம் செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதி போல், தன் குடும்பத்தினருக்கும் நாடகக் குழுவிற்கும...
விஜய் ‘சேதுபதி’ – குற்றாலம் டூ தாய்லாந்து

விஜய் ‘சேதுபதி’ – குற்றாலம் டூ தாய்லாந்து

சினிமா, திரைத் துளி
பாகுபலி 2 வெற்றிப் படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் பட நிறுவனமான கே புரொடக்சன்ஸ், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக் இணைந்து சூப்பர் ஹிட்டான பியார் பிரேமா காதல் வெற்றிப் பபடத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். "இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடை பெற்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. 40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்படத்தின் பெரும்பகுதி வெளி நாட்டில் படமாகிறது என்பது சிறப்பம்சம். அந்தளவுக்கு கதையும் சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளி நாடுகளில் நடத்துகிறோம்" என்றார் இயக்குநர் அருண்க...
’96 விமர்சனம்

’96 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பத்தாம் வகுப்பில் மலரும் காதலை, K.ராமச்சந்திரனும் ஜானகி தேவியும் உணர்ந்தாலும், அதைப் பரஸ்பரம் சொல்லிக் கொள்ளும் முன்பு ஒரேடியாகப் பிரிந்து விடுகின்றனர். சரியாக 22 வருடங்களுக்குப் பின், ஓர் ஒருங்குகூடலில் சந்திக்கின்றனர். அவர்கள் சந்தித்துக் கொள்ளும் ஓரிரவு, காலத்தை உறைய வைத்து, இசையாயக் கரைந்து, அவர்களோடு பார்வையாளர்களையும் பின்னோக்கிக் கொண்டு சென்று விடுகிறது. மனதில் பதிந்துள்ள மிக மென்மையான பதின் காலத்து இனிய நினைவுப் பொக்கிஷங்களைக் கச்சிதமாக மீட்டுகிறார் கோவிந்த் வசந்தா. இசையால் என்னென்ன மாயம் செய்யமுடியும் என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார். ஆனால், அப்படி க்யூட்டான பால்யம் வாய்க்கப் பெறாதவர்களுக்குக் கூட, அந்தக் குறுகுறுப்பான ஓர் இனிய அவஸ்தையை உண்டாக்கிவிடுவது தான் 96 படத்தின் சாதனை. பள்ளிப்பருவத்தில், ஜானகி பாடும் பாடல்கள் அனைத்தும் மிக அட்டகாசம். இளையராஜாவை ஏன் போன மில்லியனத...
செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா எனப் பன்முகம் கொண்ட சேனாபதியின் குற்றவியல் சாம்ராஜ்ஜியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, அவரது மூன்று மகன்களுக்குள் வாரிசுப் போட்டி நடக்கிறது. அதனால் சிந்தப்படும் ரத்தத்தால், சேனாபதி சாம்ராஜ்ஜியத்தின் பரந்து விரிந்த வானம் சிவக்கத் தொடங்குகிறது. போட்டிப் போட்டுக் கொண்டு சிவக்க வைத்துள்ளனர் அரவிந்த் சுவாமி, அருண் விஜய் சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர். கதாபாத்திரங்கள் தேர்வு கனகச்சிதம் என்றால், அவர்களை அறிமுகப்படுத்திய விதத்திலும், மெல்ல கதைக்குள் இழுத்த யுக்தியிலும் மணிரத்னம் அசத்தியுள்ளார். படத்தின் முதல் பாதி செம கிளாஸாக, மணிரத்னத்திற்கே உரித்த ஸ்டைலிஷான ஃப்ரேமிங்கால் கவர்கிறார். கேங்ஸ்டர் படத்திற்கான அமர்க்களமான அஸ்திவாரத்தைப் போட்டு விடுகிறார். தலைக்கட்டு சாய்வதோடு முதல் பாதி முடிய, 'மணிரத்னம் இஸ் பேக்டா (backda)' என்ற பரவச குரல்களைக்...
இமைக்கா நொடிகள் விமர்சனம்

இமைக்கா நொடிகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலையை ரசித்துச் செய்யும் ஒரு கொலைக்காரன், அவனைப் பிடிக்க நினைக்கும் ஒரு பெண் சி.பி.ஐ. அதிகாரி என இருவருக்கு இடையில் நடக்கும் ஆடுபுலியாட்டம்தான் இமைக்கா நொடிகள் படத்தின் கதை. ருத்ராவெனும் சைக்கோவாக அனுராக் கஷ்யப் அதகளப்படுத்தியுள்ளார். அனுராகின் அட்டகாசமான உடற்மொழியுடன், மிரட்டும் முகபாவனையுடன், மகிழ் திருமேனியின் கம்பீரமான குரல் செம்புலப் பெயல் நீர் போல் ஒன்றிக் கொள்கிறது. ட்ரெய்லரிலேயே அந்த ரசவாதத்தினை உணரலாம். படத்திலேயோ, அது தொடக்கம் முதல் கவ்விக் கொள்கிறது. வில்லனாக அனுராக் கஷ்யபையும், அவருக்கு டப்பிங் தர மகிழ் திருமேனியையும் தேர்வு செய்ததற்காகவே இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதை முழுதும் ரசிக்க முடியாதளவுக்கு, குறுக்கும் நெடுக்குமாக அதர்வா - ராஷி கண்ணாவின் காதல் அத்தியாயம் குறுக்கிடுகிறது. படத்தின் நீளமோ அயர்ச்சித் தருமளவுக்கு இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களாக உள்ளது. ந...