Shadow

Tag: Aha Original

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனைக் கதைக்களமாகக் கொண்டு நடக்கும் திரைப்படம். குறைவான லோக்கேஷன்களில், திரைக்கதையை நம்பி விரைவாக எடுத்து முடிக்கப்பட்ட பட்ஜெட் படம் என்பதே இதன் சிறப்பம்சம். இப்படம், ஆஹா ஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறது. டி பிக்சர்ஸ் சார்பாக, இப்படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் தயாள் பத்மனாபன். சிறந்த இயக்குநருக்கான கர்நாடக அரசின் விருதினை இரண்டு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  வேலையில் இருந்து வரும் ஜெய்குமார், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறான். அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கிறான். அடுத்த நாள் ஜெய்குமார் இறந்து கிடக்கிறான். பசவண்ணர் அனாதை ஆசிரமத்தில் ஜெய்குமாருடன்  ஒன்றாக வளரும் நண்பர்கள், அவனது மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் திட்டமிடுவதோடு சரி, அந்தத் திட்டம் தானாக நடக்கிறது. எப்படி எவரால் எனும் சுவ...
உடன்பால் விமர்சனம்

உடன்பால் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஹா தமிழில், டிசம்பர் 30 அன்று வெளியாகிறது இத்திரைப்படம். பரமனுக்குக் கடன் அதிகமாகிவிட, வீட்டை விற்று அதிலிருந்து மீளலாமெனத் திட்டமிடுகிறான். அதற்காகத் தங்கை கண்மணியை வீட்டிற்கு வரவைத்து, அம்மாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளன்று அப்பாவிடம் பேச நினைக்கிறார். வீட்டை விற்க ஒத்துக் கொள்ளாத விநாயகம், வள்ளலார் காம்ப்ளக்ஸ்க்குச் சென்றுவிடுகிறார். அந்த காம்ப்ளெக்ஸ் இடிந்து விழ, அரசாங்கம் அந்த காம்ப்ளக்ஸ் விபத்தில் இறந்தவர்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவிக்கிறது. தேவை, பணம், குடும்பம், சகோதர - சகோதரி பந்தம், குயுக்தி, கடன் சிக்கல் என மனித மனங்களை ஆக்கிரமிக்கும் உணர்வுகளைக் கலகலப்பாகத் தொட்டுச் செல்கிறது படம். இந்தப் படத்தின் கதையை, விநாயகத்தின் குடும்பக்கதை என இரண்டு வார்த்தையில் சொல்லலாம். விநாயகமாக சார்லி நடித்துள்ளார். அவரது அனுபவத்திற்கு அசால்ட்டாய் ஸ்கோர் செய்யக்கூடிய பாத்திரத்...
ஆஹாவில் ஜீவா தொகுத்து வழங்கும் கேமிங் ஷோ | சர்க்கார் வித் ஜீவா

ஆஹாவில் ஜீவா தொகுத்து வழங்கும் கேமிங் ஷோ | சர்க்கார் வித் ஜீவா

Others, OTT, காணொளிகள், திரைத் துளி
ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரைத்தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவிகித பிரத்தியேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் தளங்களில் வலைதளத் தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய 'கேம் ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனைத் துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது.  இந்த விளை...
ஆன்யா’ஸ் டுடோரியல் விமர்சனம்

ஆன்யா’ஸ் டுடோரியல் விமர்சனம்

OTT, Web Series
ஆஹா தமிழில், ஜூலை 1 அன்று வெளியாகியிருக்கும் அமானுஷ்ய இணையத்தொடர். மிகுந்த கொடுமையான பால்யத்தைக் கொண்ட லாவண்யா எனும் இளம்பெண், தன் பால்யம் ஏற்படுத்திய வடுவிலிருந்து மீள வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சிறுவயதில், தன் சகோதரியால் லாவணி என அழைக்கப்படுவதால், சகோதரியின் மீதுள்ள கோபத்தால் அப்பெயரை ஆன்யா என மாற்றிக் கொள்கிறார். பேயும் இல்ல பிசாசும் இல்ல என நம்ப விரும்பும் ஆன்யா, தனது இன்ஸ்டாகிராம சேனலான ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’-இல் ஒப்பனை பற்றிய காணொளி போடும் பொழுது, அவளது பின்னால் ஓர் உருவம் பதிவாகிறது. அந்த வீடியோ மிகவும் வைரலாக, ஆன்யா அதன் மூலமாகக் கிடைக்கும் பிரபல்யத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள். லாவணி எனும் ஆன்யாவாக நிவேதிதா சதீஷ் நடித்துள்ளார். ஆன்யாவின் மூத்த சகோதரி மதுவாக ரெஜினா கசாண்ட்ரா நடித்திருந்தாலும், நிவேதிதா தான் தொடரின் நாயகி. இருவருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்...
பெண்கள் கூட்டனியில் உருவாகியுள்ள “ஆன்யா’ஸ் டுடோரியல்”

பெண்கள் கூட்டனியில் உருவாகியுள்ள “ஆன்யா’ஸ் டுடோரியல்”

திரைத் துளி
தமிழ் மொழிக்கென்றே பிரத்தியேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, அசத்துகீரது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது “ஆன்யா’ஸ் டுடோரியல்” எனும் இணையத் தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. பாகுபலியை உருவாக்கிய ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரைத் தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நிவேதிதா சதீஷ், “இந்தத் தொடர் எனக்கு மிகவும் நெருக்கமான தொடர். இது போன்ற பெரிய படைப்பில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்தத் தொடரில் எனது திறமையைக் காட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஒரு பெண்கள் குழுவில் பயணித்தது மகிழ்ச்சி. திரைத்துறையில் அறிமுகமான போது பல இடங்களில் நான் நிராகரிக்கபட்டுள்ளேன், இப்போது அதையெல்லாம் க...
“நிஜத்தில் பேயைப் பார்ப்பது சுலபம்” – விஜய் ஆண்டனியிடம் எஸ்.ஜே.சூர்யா

“நிஜத்தில் பேயைப் பார்ப்பது சுலபம்” – விஜய் ஆண்டனியிடம் எஸ்.ஜே.சூர்யா

திரைச் செய்தி
தமிழ் மொழிக்கென்றே பிரத்தியேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, அசத்துகீரது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது “ஆன்யா’ஸ் டுடோரியல்” எனும் இணையத் தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. பாகுபலியை உருவாக்கிய ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரைத் தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, “பெரிய ஓடிடி நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆஹாவிற்கு வாழ்த்துகள். படத்தை இயக்குவதே பெரிய சவாலான விஷயம் எனும்போது, ஒரு வெப் சீரிஸை இயக்குவது என்பது மிகப் பெரிய விஷயம். ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி அவர் சிறப்பான விஷுவல்களை கொடுக்க கூடியவர். அவர் பணிபுரிவதை வள்ளி மயில் எனும் எனது பட...
“வாரம் ஒரு புது தொடர்” – ஆகாவென அசத்தும் ஆஹா

“வாரம் ஒரு புது தொடர்” – ஆகாவென அசத்தும் ஆஹா

திரைத் துளி
தமிழ் மொழிக்கென்றே பிரத்தியேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, அசத்துகீரது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது “ஆன்யா’ஸ் டுடோரியல்” எனும் இணையத் தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. பாகுபலியை உருவாக்கிய ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரைத் தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில், ஆஹா தமிழ் சார்பில் அஜித் தாகூர், “ஆஹா எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் புதுமையான கதைகள் கொண்ட படைப்புகளை வெளியிடுகிறது. 190 நாடுகளில் ஆஹா ஓடிடி வெற்றிகரமாக ஸ்ட்ரீம் ஆகிறது. அதற்கு உங்களது ஆதரவு தான் காரணம். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ஆஹா தமிழ் தளத்தை நிறுவினோம். இப்போது 2 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களைக் கடந்து வெற்றிகரமாகச...
“கல்லூரி நட்பு அந்தஸ்து பார்க்காது” – தர்ஷன்

“கல்லூரி நட்பு அந்தஸ்து பார்க்காது” – தர்ஷன்

சினிமா, திரைச் செய்தி
அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வேற லெவல் ஹிட்டப்பா என்று ஆகியிருக்கிற ‘கூகுள் குட்டப்பா’படத்தின் தயாரிப்பாளரும் அதன் முன்னணி கதாபத்திரத்தில் ஜொலித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தின் நாயகன் தர்ஷன் நாயகி லாஸ்லியா ஆகியோருடன் சென்னை, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காலை கலந்துகொண்டார். ‘கூகுள் குட்டப்பா’ மிக விரைவில் ஆஹா ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து ஆஹா ஓ.டி.டி தளம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் உற்சாகமாக விசிலடித்து ஆர்ப்பாட்டமாக இக்குழுவினரை வரவேற்ற நிலையில் அந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “உங்கள் ஆரவாரத்தைப் பார்க்கும்போது எனக்கு என் கல்லூரிக் காலங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. அப்போதெல்லாம் என் கல்லூரியின் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் க...
பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
விக்ருதி எனும் மலையாளப் படத்தைத் தமிழில், 'பயணிகள் கவனிக்கவும்' என மீள் உருவாக்கம் செய்துள்ளனர். விக்ருதி என்ற மலையாளச் சொல்லிற்கு சில்மிஷம் எனப் பொருள் கொள்ளலாம். சோர்வில் தன்னை மறந்து தூங்கும் எழிலனைக் குடிக்காரர் எனக் கருதும் ஆண்டனி, தூங்கிக் கொண்டிருக்கும் நபரைப் புகைப்படமெடுத்து, போதையில் கிடக்கிறாரென மீம்ஸ் உருவாக்கி சமூக ஊடகத்தில் உலாவ விடுகிறார். ஆண்டனியின் சில்மிஷம், வாய் பேசவும் காது கேட்கவும் இயலாத எழிலனையும், அவனது குடும்பத்தையும் எப்படிப் பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. எழிலனான விதார்த் அசத்தியுள்ளார். கலங்க வைக்கும் விதார்த், க்ளைமேக்ஸில் விவரிக்க முடியாத ஒரு உணர்ச்சியை அளிக்கிறார். மலையாளப் படங்களுக்கே உரிய மென்மையான கவிதையோட்டமாகப் படம் நகர்கிறது. யாரோ ஒருவன் போகிற போக்கில் செய்த ஒரு விஷயம், எழிலனை நிலைகுலைய வைக்கிறது. போராட்டமான வாழ்க்கையிலுள்ள ஆறுதலே அவனது குடும்பம்...
பயணிகள் கவனிக்கவும் – எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மரியாதை

பயணிகள் கவனிக்கவும் – எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மரியாதை

சினிமா, திரைத் துளி
'பயணிகள் கவனிக்கவும்' படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா, இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர் எழுத்தாளர் பாலகுமாரனின் வாரிசைச் சந்தித்து விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுமுகமான தீர்வு காணப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள். இது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரான 'பயணிகள் கவனிக்கவும்' என்ற திரைப்படம், எதிர்வரும் 29. 4. 2022 ஆம் தேதியன்று ஆஹா டிஜிட்டல் தளத்தில், 'ஆஹா ஒரிஜினல்' படைப்பாக வெளியாகிறது. இந்நிலையில் 'பயணிகள் கவனிக்கவும்' என்ற படத்தின் தலைப்பில், 1993...
பயணிகள் கவனிக்கவும் | சமூக வலைத்தளத்தால் ஏற்படும் பின்விளைவுகள்

பயணிகள் கவனிக்கவும் | சமூக வலைத்தளத்தால் ஏற்படும் பின்விளைவுகள்

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
'பயணிகள் கவனிக்கவும்' படத்தின் முன்னோட்டத்தினை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர். இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷாம்நாத் நாக் இசையமைத்திருக்கிறார். மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ்ப் பதிப்பான 'பயணிகள் கவனிக்கவும்' படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்...