
அது வாங்குனா இது இலவசம் விமர்சனம்
சரக்கு வாங்கினால் ஊறுகாய் இலவசம் என விஜய் டிவி ராமர் நகைச்சுவையாகத் தலைப்பைக் குறியீட்டு வசனமாகச் சொல்கிறார். எனினும், குற்றம் செய்தால் தண்டனை இலவசம் என்பதே படத்தின் ஒருவரிக்கதை.
ஒரு பெண் கொல்லப்படுகிறாள்; சிறைப்பட்ட ஒருவன் அழுகின்றான்; அந்த அழுகையால் பீர் பாண்டியின் தூக்கம் தடைப்படுகிறது; அத்தடையையும் மீறித் தூங்கிக் கனவு காண்கின்றான் பீர் பாண்டி; அவன் கனவில் வரும் பாடலில் அவன் குடிகார அரசனாக இருக்கின்றான்; அக்கனவில் அறிமுகமாகும் கதாபாத்திரங்கள் சிறையில் பீர்பாண்டியின் அறைவாசிகளாக இருக்கிறார்கள்; அவர்கள் ஏன் சிறைக்கு வந்தார்கள் எனக் கோர்வையற்ற கதைச்சொல்லால் தலையைக் கிறுகிறுக்கும்படி செய்துவிடுகிறது படத்தின் முதற்பாதி திரைக்கதை. பீர்பாண்டியும், அவனது நண்பர்களும் சிறையை விட்டு வெளியேறியதும் ஒரு பெண்ணின் மீது இரண்டாம் பாதியில் காதலில் விழுகிறார்கள். காதலை வாங்க முயற்சி செய்யும் அவர்கள...