
Cochlear Implant – தனிமையிலிருந்து அன்பு சூழ் ஒலிக்குள்
பூரண அமைதியாக மட்டுமே இருக்கும் ஓர் உலகைக் கற்பனை செய்யுங்கள். திடீரென, அவ்வுலகில் மாற்றம் ஏற்பட்டு, ஒலியை உணரும் திறன் பெற்று உங்கள் மனதுக்குப் பிரியமானவருடனும், உலகத்துடனும் தொடர்பு ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அத்தகைய மாற்றத்தைச் சாத்தியமாக்குகிறது ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை. நவீன மருத்துவ முன்னேற்றத்தாலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பான நிபுணத்துவத்தாலும், காதுக்குள், உட்செவியில் நுண்கருவி பொருத்தப்பட்டு, பல காலங்களாகப் போராடி வந்த செவிப்புலன் இழப்பில் இருந்து மீட்டு, நம்பிக்கையையும் ஒலியையும் அளிக்கிறது காவேரி மருத்துவமனை.
காது கேளாமை என்பது பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உடல்நலப் பிரச்சினையாகும். பிறவியிலேயே காது கேளாமை அல்லது மூளை காய்ச்சல், நாள்பட்ட காது தொற்றுகளுடன் பிறந்த குழந்தைகள் முதல் மனச்சோர்வு மற்றும் தனிமை போன்ற உளவியல் மற்றும் சமூக தாக்கங்களைச் சமாளிக்கும் வய...















