Shadow

Tag: Pentagan Public Relations

KISC | Be Fast – பக்கவாதத்திற்கான ஒருங்கிணைந்த மையம்

KISC | Be Fast – பக்கவாதத்திற்கான ஒருங்கிணைந்த மையம்

மருத்துவம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவனை, பக்கவாதம் மற்றும் பெருமூளையின் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, நவீன ஒருங்கிணைந்த பக்கவாதம் மையத்தைத் (KISC – Kauvery Integrated Stroke Centre) தொடங்கியுள்ளது. பக்கவாதம், அல்லது மூளை தாக்குதல், என்பது உடல் இயக்கமின்மைக்கும், மரணத்திற்குமான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். சராசரியாக நான்கு பேரில் ஒருவர் என்ற சதவிகிதத்தில், ஏதோ ஒரு கட்டத்தில் இந்நோயால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக பக்கவாதம் அமைப்பு கூறுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கும் ஒருவர் மூளை தாக்குதலால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதத் தாக்குதலுக்கு ஆட்பட்டு, அதன் பின்விளைவுகளால் 10 கோடியே 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடத்திற்கு 1 கோடியே 22 லட்சம் பேர் புதிதாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 14 கோடியே 30 லட்சம் பேர் பக்கவாதத்தின...
ரவீந்திர சங்கீதம் – தாகூருக்கு இசை அஞ்சலி

ரவீந்திர சங்கீதம் – தாகூருக்கு இசை அஞ்சலி

சமூகம்
கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 163 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ‘Sur O Lohori (இசையும் தாளகதியும்)’, கலை மற்றும் கலாச்சார நிறுவனம் மூலம் மெல்லிசை இசை அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருபது பாடல்களுடன் நூறு குரல்களில் இசைக்கப்பட்ட ரவீந்திர சங்கீதம், சென்னையில் கோலாகலமாக அரங்கேறியது. ஒரு பான் இந்தியா நிகழ்வாக, நாட்டின் 11 முக்கிய நகரங்களில் இக்கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கலாச்சார நிறுவனம் நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. 1994 இல் ரவீந்திர சங்கீதப் பாடகராக இருக்கும் ஸ்வாதி பட்டாச்சார்யாவால், 2015 இல் தொடங்கப்பட்ட Sur O Lohori – கலை மற்றும் கலாச்சார நிறுவனம், சென்னை நிகழ்விற்குப் பொறுப்பேற்றது. இந்நிகழ்வில் வங்காளிகள் மட்டுமல்லாமல், நூறு பாடகர்களில், தமிழ், தெலுங்கு, ஒடியா, கொங்கனியைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்களுக்கும் பங்கேற்றுப் பாடினர். ஸ்வாதி பட்...
ஆழ் மூளை தூண்டுதல் (DBS) – காவேரி மருத்துவனையின் சாதனை

ஆழ் மூளை தூண்டுதல் (DBS) – காவேரி மருத்துவனையின் சாதனை

இது புதிது
முதன்முறையாக, ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 55 வயதுடைய நபருக்கு ஆழ் மூளை தூண்டுதல் (DBS – Deep Brain Stimulation) அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முன்னோடி முயற்சியானது, நடுக்கம் போன்ற அறிகுறிகளைப் போக்கவும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இயக்கக் கோளாறுகளை அறுவைச்சிகிச்சை மூலம் நிர்வகிப்பதற்கான களத்தை அமைத்துத் தரும். ஐம்பத்தைந்து வயதான திரு. எம்.ஏ., பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு, தனது நாட்டில் நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவரது அறிகுறிகள் தொடர்ந்து மோசமடைந்து, அவரது நிலைக்கு அவர் எடுத்துக் கொண்ட மருந்துகள் மற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தியதால், அவரது நரம்பியல் நிபுணர் அவரை மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதரிடம் பரிந்துரைத்தார். பரிந்துரையைத் தொடர்ந்து, நோயாளி ரேடியல் சாலையிலுள...
மே 4 – இயக்குநர்கள் தினம் கொண்டாட்டம்

மே 4 – இயக்குநர்கள் தினம் கொண்டாட்டம்

அயல் சினிமா
உலகிலேயே அதிக திரைப்படங்களை இயக்கி உலக சாதனை படைத்த பெருமைமிகு தெலுங்கு இயக்குநர் தாசரி நாராயண ராவ் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், மே 4 ஆம் தேதியை "இயக்குநர்கள் தின”மாக அறிவித்து, தெலுங்கு இயக்குநர்கள் கடந்த ஐந்து வருடமாகக் கொண்டாடிவருகின்றனர். தெலுங்கு இயக்குநர்கள் சங்கத்திற்கு நலநிதி வழங்குவதே முக்கிய நோக்கம் என்றும், இந்த ஆண்டு “இயக்குநர்கள் தின” விழாவை வரலாறு காணாத வகையில் நடத்தவுள்ளதாகவும் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் பா. வீர சங்கர் தெரிவித்தார். ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் மைதானத்தில், தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சாய் ராஜேஷ், திங்கள்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் (திரையை உயர்த்தும் நிகழ்வு) விழாவின் விவரங்களை வெளியிட்டார். மேலும், மற்றொரு துணைத் தலைவர் வசிஷ்டா, இந்த ஆண்டு வெளியான புதுமுக இயக்குநர்களின் ...
Aim For SEVA | ஆட்டிச நிலையாளர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவை

Aim For SEVA | ஆட்டிச நிலையாளர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவை

மருத்துவம்
சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு மாதத்தைக் குறிக்கும் 6 ஏப்ரல் 2024 அன்று, மாண்புமிகு தமிழக ஆளுநர் ஸ்ரீ ஆர்.என்.ரவி அவர்கள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Aim for Seva - சுவாமி தயானந்த க்ருபா இல்லத்தின் (கிருபா) வளாகத்திற்குச் சென்று குடியிருப்புகள், மருத்துவ நிலையம், பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல புதிய வசதிகளைத் திறந்து வைத்தார். அவருடன், நிர்வாக அறங்காவலரான திருமதி ஷீலா பாலாஜி, ஸ்வாமி சாக்ஷாத்க்ருதானந்த சரஸ்வதி மற்றும் திரு. ரவீ மல்ஹோத்ரா (அறங்காவலர்கள்- Aim for Seva), புத்தி கிளினிக் நிறுவனரும் மருத்துவருமான எண்ணபாடம் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர். மாண்புமிகு ஆளுநர் தனது உரையில், நீண்ட கால பராமரிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, அத்தகைய குழந்தையின் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மனதில் எழுப்பும் கேள்வி, "எனக்குப் பிறகு என்ன?" என்பதைச் சுட்டிக் காட்டினார். இந்தச் சூழலில், இந்த வசதியை முன்னோ...
Godzilla X King: The New Empire விமர்சனம்

Godzilla X King: The New Empire விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பூமியின் மேற்பரப்புக்குக் கீழுள்ள பூமியின் அடியாழத்திலிருந்து (Hollow Earth) புது அச்சுறுத்தல் முளைத்திட, கிங் காங்கும், காட்ஸில்லாவும் இணைந்து தடுக்கின்றனர். பூமிக்கு மேற்பரப்பில் இருக்கும் காட்ஸில்லா, டைட்டன்கள் எனும் இராட்சச ஐந்துகளிடம் இருந்து உலகைக் காப்பாற்றிக் கொண்டு ரோம் நகரத்து கொலசியத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளது. கிங் காங்கோ, பூமியின் அடியாழத்தில் வேட்டையாடிக் கொண்டு தன் காட்டு வாழ்க்கையில் மகிழ்வாக இருக்கிறது. இந்நிலையில், பூமியின் அடியாழத்தில் இருந்து வினோதமான சமிக்ஞைகள் வருகின்றன. அதே சமயம், வாய் பேசமுடியாத காது கேளாதவளும், ஐவி பழங்குடியின் கடைசி நபரும், ஐலீனின் தத்து மகளுமான ஜியாவிற்கும் அந்த சமிக்ஞைகளை உணருகிறாள். தன்னை யாரோ, பூமியின் அடியாழத்திலிருந்து உதவி கேட்பதாக உணருகிறாள். அந்த சமிக்ஞையை உணரும் காட்ஸில்லாவும் நகரத் தொடங்குகிறது.ஜியா, ஐலீன், பெர்னி ஹேயஸ், ட்ரேப...
காவேரி மருத்துவமனையின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை

காவேரி மருத்துவமனையின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை

மருத்துவம்
ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை தனது முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை பிப்ரவரி 21ஆம் தேதி அன்று வெற்றிகரமாகச் செய்தது. நாற்பத்திரண்டு வயதான பெண், இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு காரணமாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டயாலிசிஸ் (கூழ்மப்பிரிப்பு/ சிறுநீர் பிரித்தல்) செய்து வந்தார். அவர், குடும்ப சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரது சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவரது தாய் ஒரு சிறுநீரகத்தை வழங்கியிருந்தார். அவரது குடும்பத்தில், தானம் கொடுக்க வேறொருவர் இல்லாததால், அவர் மருத்துவமனையின் இறந்த நன்கொடையாளர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில் இறந்தவரின் சிறுநீரகம் நன்கொடையாக வழங்கப்பட்டதன் காரணமாக, நோயாளிக்கு கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் முத்துக்குமார் P...
ஹோலி ஜாலி சென்னை | வண்ணங்களால் என்னை நிரப்பு

ஹோலி ஜாலி சென்னை | வண்ணங்களால் என்னை நிரப்பு

Others, காணொளிகள், சமூகம்
வட இந்தியாவின் வசந்த காலக் கொண்டாட்டங்களில் மிக முக்கியமான திருவிழா 'ஹோலி பண்டிகை' ஆகும். மக்களிடையே மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும், இணக்கத்தையும் ஏற்படுத்தி, புது நம்பிக்கையை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்ட விழா ஹோலி. வண்ணங்களாலும், இசையாலும், நடனத்தாலும், இனிப்புகளாலும், மகிழ்ச்சியான குதூகலமான நீர் விளையாட்டுகளாலும் நிரம்பியது ஹோலி. தமிழ்நாட்டில், 'காமன் பண்டிகை' என காதலை முன்னிறுத்தும்விதமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகக் கொண்டாட்டம், சற்று மாறுபட்டு, கோயிலுக்குச் சென்று புதிய தொடக்கத்திற்கான மக்களின் வழிபாடாக உள்ளது. Mohey Rang De (வண்ணங்களால் என்னை நிரப்பு) என்ற பெயரில், இந்த ஆண்டு ஹோலி பண்டிகையைச் சென்னையில் கோலாகலமாகக் கொண்டாட India Festive Book ஓர் அறிவிப்பை ஃபிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியிட்டது. அதில் பங்கு கொண்டு தேர்வானவர்களுக்கான இறுதிப் போட்டி, இன்று சென்னை நாவலூரின் அருகே தாழ...
Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கானின் ஆளுகைக்கு உட்பட்ட ஹைதராபாத் மாகாணத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பங்களையும், அதன் விளைவாக ஹிந்துக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும் பற்றிப் பேசுகிறது இப்படம். மிர் ஒஸ்மான் அலி கானை யோசிக்கவிடாமல், எப்படி காஸிம் ரஸ்வி, ரஸாக்கர் ஆயுதப்படையை உருவாக்கி ஹைதராபாத் மாகாணத்து மக்கள் மீது வரிச் சுமையையும், ஹிந்து மத சடங்குகளையும் திருவிழாக்களையும் பொதுவில் கொண்டாடத் தடையையும் விதித்தார் என்பதே படத்தின் திரைக்கதை. பாஜகவைச் சார்ந்த குடூர் நாராயண ரெட்டி, இப்படத்தை சுமார் 40 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளார். முதல் பாதி முழுவதுமே, காணச் சகியாக் காட்சிகளாகவே உள்ளன. ஊரைக் கொளுத்துவது, பெண்களைப் பலாத்காரம் செய்வது, எதிர்ப்பவர்களைக் கொல்வது என ரஸாக்கர்களின் கொடுமையை விரிவாகக் காட்டுகின்றனர். வரலாற்றைத் தெரிய...
மா காவேரி கருத்தரிப்பு மையம் – குழந்தை வரம் வேண்டுவோருக்கான வரப்பிரசாதம்

மா காவேரி கருத்தரிப்பு மையம் – குழந்தை வரம் வேண்டுவோருக்கான வரப்பிரசாதம்

மருத்துவம்
சென்னையின் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில், கருத்தரித்தல் மற்றும் கருவுறுதல் தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு, சிறந்த மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக “மா காவேரி கருத்தரிப்பு மையம்” தொடங்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த நிபுணர் மருத்துவக் குழுவுடன் அதிநவீன உபகரணங்கள் உட்பட உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், இந்த மேம்பட்ட கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன், புதிய அதிநவீன மையத்தை திறந்து வைத்து, ‘மா காவேரி கருத்தரிப்பு மையம், குழந்தை பெற விரும்பும் தம்பதிகளுக்கு சிறந்ததொரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது’ எனப் பாராட்டினார். கருத்தரிப்பு மையமானது முழு வசதியுடன் கூடிய கரு ஆய்வகம், அதிநவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள், மேம்பட்ட நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் பரந்த அளவ...
“அறுவைச் சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை” – மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர்

“அறுவைச் சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை” – மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர்

மருத்துவம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், நுண்ணிய இரத்தநாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை அகற்றும் மைக்ரோவாஸ்குலர் டிகம்ப்ரஷன் (MVD – Microvascular Decompression) எனும் ஒரு வெற்றிகரமான அறுவைச் சிகிச்சையைச் செய்து, நான்கு ஆண்டுகளாகப் பேசாத 85 வயது நோயாளியின் பேச்சை மீட்டெடுத்துள்ளனர். மேலும், முகத்திலுள்ள பாதிக்கப்பட்ட நரம்பினால் ஏற்படும் ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia) எனும் பயங்கரமான வலியில் இருந்தும் நிவாரணம் அளித்துள்ளனர். இந்த அறுவைச் சிகிச்சை, வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு பாதுகாப்பான விரைவான சிகிச்சை அளிக்கும், இன்ஸ்ட்யூட் ஆஃப் ப்ரெயின் & ஸ்பெயினின் நுட்பமான அறுவைச் சிகிச்சை திறனிற்கும், மேம்படுத்தப்பட்ட உணர்வகற்றும் (Anaesthesia) திறனிற்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தனது முகத்தின் இடது பக்கத்தில் மின்னதிர்வைப் போன்றதொரு வலியா...
பாதுகாப்பான பிரசவம் – RCOGஇன் மருத்துவக் கருத்தரங்கம்

பாதுகாப்பான பிரசவம் – RCOGஇன் மருத்துவக் கருத்தரங்கம்

மருத்துவம்
 யு.கே.வில் உள்ள 'தி ராயல் காலேஜ் ஆஃப் ஆப்ஸ்டட்ரிஷன் அண்ட் கைனகாலஜிஸ்ட் (RCOG)' என்பது உலகம் முழுவதும் உள்ள பெண்களின் உடல்நலத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட சர்வதேச நிறுவனமாகும். யு.கே.விற்கு வெளியே, மகப்பேறு மருத்துவர்கள், மகளிர் நோய் மருத்துவர்கள் என அதிக RCOG உறுப்பினர்களைக் கொண்ட நாடு இந்தியாவே! AICC ROCG இன் தெற்கு மண்டலத்து வருடாந்திர கருத்தரங்கு, ROCG தமிழ்நாடு கூட்டமைப்புடன் (ATNROCG) இணைந்து, ஜனவரி 20, 21 ஆகிய நாட்களில் சென்னையில் நிகழ்பெற்றது. இந்தக் கருத்தரங்கில், சென்னையிலுள்ள சீதாபதி க்ளினிக் & ஹாஸ்பிட்டலின் சீனியர் OBGYN-ஆன மருத்துவர் உமா ராம் அவர்களை, AICC RCOG இன் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனியர் OBGYN-ஆன அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் சுமனா மனோகர் அவர்கள் தெற்கு மண்டலத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். RCOGஇன் தலைவரான மருத்துவர் Ranee ...
மிக்ஜாம் சூறாவளியில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்

மிக்ஜாம் சூறாவளியில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்

மருத்துவம்
சென்னை மாநகரத்துக்குப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது மிக்ஜாம் புயல். மாநகரம் எங்கும் வெள்ள நீர் சூழ்ந்திருக்க, அடிப்படை வசதிகளைப் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்க இயலாத நிலை இருந்து. தாழ்வான பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மடிப்பாக்கம் குபேரன் நகரில் வசித்து வரும் திருமதி கற்பகம் கண்ணன் என்ற பெண் தனது கர்ப்ப காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் அவரது வீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து அவரைப் பத்திரமாக மீட்டனர். அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தெருக்களில் படகு மூலம் சவாரி செய்து, அவரைச் சரியான நேரத்தில் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர். பிறகு 45 நிமிடங்கள் படகு சவாரி செய்து நேரத்தை வீணாக்காமல் அருகில்...