
கூலி விமர்சனம் | Coolie review
மேன்ஷன் ஓனரான தேவா, தன் நண்பன் ராஜசேகர் இறந்ததாகக் கேள்விப்பட்டு விசாகப்பட்டினம் செல்கிறார். ராஜசேகர் கொல்லப்பட்டிருக்கிறார் என அறிந்து, கொலையாளியைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். கொலையாளியைக் கண்டுபிடித்துப் பழிவாங்கினாரா இல்லையா என்பதே படத்தின் கதை.
ஃப்ளாஷ்-பேக்கில், 5821 என்ற எண் கொண்ட வில்லையை அணிந்த கூலியாக இளம் ரஜினியை அசத்தலாக ரீ-கிரியேட் செய்துள்ளனர். அவருக்கும் சக கூலியாக வரும் ராஜசேகருக்குமான நட்பு நன்றாக இருந்தாலும், அழுத்தம் போதவில்லை. ராஜசேகராக சத்யராஜ் நடித்துள்ளார். ரஜினியின் அறிமுக பாடல் தவிர்த்து, ரஜினியிசம் எனும் மேஜிக்கையோ, ரஜினியின் வசீகரத்தையோ தூண்டி விடும் எழுத்தோ, பிரத்தியேக ஷாட்ஸோ படத்தில் இல்லை. அதையும் மீறி ரஜினி, தன்னிருப்பை அட்டகாசமாகப் படம் முழுவதும் நிறைக்க முயற்சித்துள்ளார். அதற்கு அவருக்கு ஒரு வசன உச்சரிப்போ, ஒரு விசிலோ கூடப் போதுமானது. தயாளாக நடித்துள்ள ஷெளபி...















