32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 127 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 127)
வித்யூத் ஜம்வாலின் ‘சனக்’: காதல் + ஆக்ஷன் த்ரில்லர் சினிமா

வித்யூத் ஜம்வாலின் ‘சனக்’: காதல் + ஆக்ஷன் த்ரில்லர்

வித்யூத் ஜம்வால் நாயகனாக நடித்திருக்கும் ‘சனக்’ படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 5 அன்று வெளியானது. பணயக் கைதியை மையப்படுத்திய இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதியன்று பிரத்தியேகமாக வெளியாகிறது. ஹிந்தி திரை உலகில் பணயக் கைதியை மையப்படுத்திய திரைப்படங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, ஜீ ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து ‘சனக்- ஹோப் அண்டர் சீஜ்’ திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாக்கி இருக்கிறார். இப்படத்தின் சண்டைக் […]

06/10/2021 Dinesh R
தனுஷ்கோடியில் அஞ்சலியும், நிவின் பாலியும் சினிமா

தனுஷ்கோடியில் அஞ்சலியும், நிவின் பாலியும்

அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தற்போது சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தனது திரையுலகப் பயணத்திலேயே மிகப் பெரிய படமாக இதை எதிர்பார்க்கிறார் சிலம்பரசன் TR. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதுவரை சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் […]

05/10/2021 Dinesh R
லிஃப்ட் விமர்சனம் OTT

லிஃப்ட் விமர்சனம்

விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ புகழ் கவின் நாயகனாக நடித்துள்ள ‘லிஃப்ட்’ திரைப்படத்தினை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. அலுவலகத்தில் தனது முதல் நாள் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும் குரு பிரசாத், லிஃப்டில் மாட்டிக் கொள்கிறான். அமானுஷ்ய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகித் தப்பிக்க வழியின்றித் திணறிக் கொண்டிருக்கும் குரு பிரசாத்துடன், மனிதவள மேலாளரான ஹரினியும் சேர்ந்து சிக்கிக் கொள்கிறாள். இருவரையும் பாடாய்ப்படுத்தும் அமானுஷ்ய சக்தி எது, அதிலிருந்து எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. […]

02/10/2021 Dinesh R
எளிய மக்களைக் காக்கும் சூரன் – ‘ஜெய் பீம்’ சினிமா

எளிய மக்களைக் காக்கும் சூரன் – ‘ஜெய் பீம்’

சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படம், இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. இயக்குநர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள். இப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது. பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், நடிகைகள் ரஜிஷா விஜயன், […]

01/10/2021 Dinesh R
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம் OTT

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்

யார் ஆண்டாலும் கவலையில்லாமல் வாழ கெட்டப் பய காளியால் 1978 இல் முடிந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில், யார் ஆண்டாலும் அவர்களால் ஒரு பயனும் இல்லையென்ற விரக்தியிலேயே மக்கள் வாழ்கின்றனர். படத்தின் மையப்பகுதியாக அந்த விரக்தியே உழல்கிறது. பூச்சேரி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த குன்னிமுத்து என்பவர் வளர்க்கும் காளை மாடுகளான வெள்ளையனும் கருப்பனும் காணாமல் போய் விடுகிறது. அவை சமூகத்தில் ஏற்படுத்தும் சலசலப்பைப் பற்றியும், அச்சலசலப்பு, மாடுகள் கிடைக்க எந்த அளவு உதவின என்பதாகப் பயணிக்கிறது படத்தின் […]

28/09/2021 Dinesh R
அனபெல் சேதுபதி விமர்சனம் OTT

அனபெல் சேதுபதி விமர்சனம்

ஒரு மிகப் பெரிய அரண்மனை. பெளர்ணமி அன்று அங்கு யாரேனும் தங்கினால், அவர்கள் மரணமடைந்து விடுவார்கள். அத்தகைய அரண்மனைக்குள், திருட்டைத் தொழிலாகக் கொண்ட ஓர் ஏமாற்றுக்காரக் குடும்பம் நுழைகிறது. பின் என்னாகிறது என்பதை, பேய்ப்படத்திற்கான டெம்ப்ளேட்டில் இருந்து மாறாமல் காட்சிப்படுத்தியுள்ளார் தீபக் சுந்தர்ராஜன். இயக்குநர் சுந்தர்.சி-இன் அரண்மனை, அரண்மனை 2, ஜாக்ஸன் துரை, பெட்ரோமேக்ஸ் என தமிழில் வரிசை கட்டிக் கொண்டு, அண்மையில் வந்த பேய்ப்படங்களின் வரிசையே மிக நீளம். பார்த்துப் பழகி அலுத்துவிட்ட ஒரு ஜானரில், […]

19/09/2021 Dinesh R
“இதழும் இதழும் இணையட்டுமே!” – இயக்குநர் ஆர்வா சினிமா

“இதழும் இதழும் இணையட்டுமே!” – இயக்குநர் ஆர்வா

சன்னி லியோன், யோகி பாபு, ஜி.பி.முத்து, தர்ஷா குப்தா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கும், ”ஓ மை கோஸ்ட்” என்ற படத்தை VAU மீடியா எண்டர்டெயின்ட்மென்ட் & White Horse Studios இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் தற்பொழுது ’அப்பா காண்டம்’ என்னும் குறும்படத்தை இயக்கிய ஆர்வாவின் இயக்கத்தில் ”இதழும் இதழும் இணையட்டுமே” என்ற பெயரில் ஒரு வெப்சீரீஸைத் தயாரித்திருக்கிறார்கள். இந்த வெப் சீரிஸில் கதாநாயகனாக ’பிளாக் ஷீப்’ கலையரசன் தங்கவேல், […]

18/09/2021 Dinesh R
நான்-ஸ்டாப் விருது வேட்டையில் ‘கோட்டா’ திரைப்படம் சினிமா

நான்-ஸ்டாப் விருது வேட்டையில் ‘கோட்டா’ திரைப்படம்

இயக்குநர் அமுதவாணனின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் வெளியான கோட்டா திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளைக் குவித்தது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை சினிமா மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள பல பிரபலங்கள் வெளியிட்டிருந்தார்கள். அத்துடன் கோட்டா திரைப்படத்தின் பயணம் நின்று விடவில்லை. இன்றைய தேதி வரை சுமார் 64 சர்வதேச விருதுகளைக் குவித்துள்ளது. இதன் பிறகும் இன்னும் பல விருதுகளைக் குவிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். […]

16/09/2021 Dinesh R
ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றிய அரண்மனை 3 சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றிய அரண்மனை 3

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிப் பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 படமும் நகைச்சுவைப் பேய்ப் படமாக உருவாகியுள்ளது. தற்போது, அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான போது இயக்குநர் சுந்தர்.சி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, கலைஞர் தொலைக்காட்சி CFO S.கார்த்திகேயன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா, […]

15/09/2021 Dinesh R
“காணாமல் போன 2 காளைகளைத் தேடி!” – இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் சினிமா

“காணாமல் போன 2 காளைகளைத் தேடி!” – இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப். 15) நடிகர் சூர்யா வெளியிட்டார். எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கை பற்றி நையாண்டித்தனத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம், செப்டம்பர் 24ஆம் தேதி அன்று, 240 நாடுகளிலும் […]

15/09/2021 Dinesh R
தீபாவளிக்கு வெளியாகும் ஆரியின் ‘பகவான்’ சினிமா

தீபாவளிக்கு வெளியாகும் ஆரியின் ‘பகவான்’

பிக்பாஸ் மூலம் மக்களின் இதயங்களை வென்ற நடிகர் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பகவான் திரைப்படத்திற்காக மிகப் பிரமாண்டமான பாடல் காட்சி, கலா மாஸ்டர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் காளிங்கன் இயக்கத்தில் AMMANYA MOVIES சார்பில் C.V. மஞ்சுநாதா தயாரிக்கும் மித்தாலஜிகல் திரில்லர் திரைப்படம் “பகவான்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானபோதே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரையிலும் தோன்றியிராத வகையில் வித்தியாசமான தோற்றத்தில் இப்படத்தில் ஆரி அர்ஜுனன் நடித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை […]

13/09/2021 Dinesh R
பார்டர் – அருண்விஜயின் ஆக்ஷன் த்ரில்லர் சினிமா

பார்டர் – அருண்விஜயின் ஆக்ஷன் த்ரில்லர்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் தேசபக்தி கொண்ட ஆக்ஷன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் ‘அருண்விஜய்யின் பார்டர்’. ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படமும் இணைகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து […]

12/09/2021 Dinesh R