32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 128 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 128)
துக்ளக் தர்பார் விமர்சனம் OTT

துக்ளக் தர்பார் விமர்சனம்

அமாவாசைகளால் நிரம்பியது அரசியல்களம். சிங்கம் என்றழைக்கப்படும் சிங்காரவேலன் அப்படியொரு நபர். எதிர்பாராத விதமாக அவருக்குத் தலையில் அடிபட, சிங்கத்துக்குள் இருந்து ஒரு நல்ல மனம் படைத்த ஆளுமை பெளர்ணமி போல் உருவாகிறான். சிங்கத்துக்குள் இருக்கும் பெளர்ணமி மக்களுக்கு நல்லது செய்யப் பார்க்க, அமாவாசையோ மக்களை வஞ்சித்துச் சம்பாதிக்கப் பார்க்கிறான். துக்ளக் தர்பார் போல், சிங்கத்திற்குள் இருக்கும் ஆளுமைகள் சிங்கத்தைத் தன்வயப்படுத்த அவனை ஒரு வழி செய்கின்றனர். சிங்கத்தை எந்த ஆளுமை வசப்படுத்தியது என்பதே படத்தின் கதை. கவுன்சிலர் […]

12/09/2021 Dinesh R
“நான் தான் அந்த பஃபூன்” – மீண்டும் வடிவேலு! சினிமா

“நான் தான் அந்த பஃபூன்” – மீண்டும் வடிவேலு!

லைகா நிறுவனம் சார்பில் ‘புரொடக்சன் 23’ என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இயக்குநர் சுராஜ் பேசுகையில், ”கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோகமயமாக இருந்தபோது நானும் வடிவேலுவும் சிரித்துப் பேசி உருவாக்கிய கதை இது. வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்ததில்லை. அவருடைய ரீ-என்ட்ரி முழுநீள […]

11/09/2021 Dinesh R
டாக்டர் – 100% பொழுதுபோக்கு சினிமா சினிமா

டாக்டர் – 100% பொழுதுபோக்கு சினிமா

KJR ஸ்டுடியோஸ் மற்றும் SK ப்ரொடக்ஷன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில், ‘டாக்டர்’ படத்தின் வெளியீடு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. டாக்டர் படம் வரும் அக்டோபர் 2021 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி J.ராஜேஷ், “டாக்டர் திரைப்படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே, இந்தத் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தமிழில் புதுமையான, இது போன்ற ஒரு ப்ளாக் காமெடி திரைப்படம், […]

11/09/2021 Dinesh R
டிக்கிலோனா விமர்சனம் சினிமா

டிக்கிலோனா விமர்சனம்

ஓர் அம்பாஸிடர் கார் டிக்கியில் இருந்து படம் தொடங்குகிறது. ஷங்கரின் ‘ஜென்டில் மேன்’ உலகத்திற்கு அளித்த indoor game களில் ஒன்று ‘டிக்கிலோனா’. இந்தப் படமும், சில விளையாட்டுகளை (!?) அடிப்படையாகக் கொண்டதே என்பதால் இப்பெயர் பொருத்தமாக இருக்கும் என படக்குழு தீர்மானித்திருக்கலாம். ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா; நயன்தாராக்கு த்ரிஷாவே மேல்’ என்பது தான் படத்தின் ஒன்லைன். எதிர்பார்ப்புகள் பொய்த்து விரக்தியான வாழ்க்கை வாழும் ஒருவனுக்கு கால இயந்திரம் (Time machine) கிடைத்து, தனது கடந்த காலத்தை […]

11/09/2021 Dinesh R
லாபம் விமர்சனம் சினிமா

லாபம் விமர்சனம்

ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவுக் குரலாக தமிழ்த்திரையில் எஸ்.பி.ஜனநாதனின் குரல் எப்பொழுதும் ஒலிக்கும். தன் படங்களின் வழியே எளிய மக்களுக்கு எதிராக இருக்கும் முதலாளித்துவத்தையும், அதற்கு துணைபோகும் அமைப்புகளையும் அரசையும் அவரது படங்கள் கேள்வி கேட்கும். லாபத்திலும் அந்தக் கேள்வியை எழுப்பி, கேள்விக்கான விடைகளை வசனங்களாக அள்ளித் தெளித்துள்ளார். கம்னியூசத்தை அவ்வளவு எளிதில் மக்களுக்குப் புரிய வைக்க முடியாது என்ற பொதுப்புத்தியில் சம்மட்டி வைத்து அடிப்பது எஸ்.பி.ஜனநாதனின் பாணி. எதையுமே மிக எளிதாகப் புரிய வைக்கும் வல்லமை […]

10/09/2021 Dinesh R
சூரரைப் போற்று – ஹிந்தி ரீமேக்! சினிமா

சூரரைப் போற்று – ஹிந்தி ரீமேக்!

‘சூரரைப் போற்று’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய‌ நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான, 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனமும், அபூன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனமும் இணைந்து ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு, கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்தப் […]

08/09/2021 Dinesh R
லாபம் படத்தின் கதையென்ன? – எஸ்.பி.ஜனநாதன் | விஜய் சேதுபதி சினிமா

லாபம் படத்தின் கதையென்ன? – எஸ்.பி.ஜனநாதன் | விஜய் சேதுபதி

விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7c ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக […]

03/09/2021 Dinesh R
“வரி ஏய்ப்பு செய்கின்றன திரையரங்குகள்” – ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு சினிமா

“வரி ஏய்ப்பு செய்கின்றன திரையரங்குகள்” – ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (30.07.2021) சென்னையில் நடைபெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாத் திரையரங்குகள் தொடர்பாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் இராதாகிருஷ்ணனிடம் உரையாடினோம். இந்தக் கூட்டம் எதற்காக? என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன? திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு விற்பனை முழுக்க கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும், இணையத்தில் நுழைவுச்சீட்டு பதிவு செய்யும்போது கிடைக்கிற சேவைத் தொகையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும், […]

02/08/2021 Dinesh R
ராஜாமகள் | தந்தை – மகள் பாசப்போராட்டம் சினிமா

ராஜாமகள் | தந்தை – மகள் பாசப்போராட்டம்

க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிப்பில், ஹென்றி இயக்கும் புதிய படம் ராஜாமகள். இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கன்னிமாடம் புகழ் வெலினா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் பக்ஸ், ஜீ தமிழ் புகழ் பேபி பிரிதிக்சா, குக்கூ புகழ் ஈஸ்வர், 100% காதல் புகழ் மாஸ்டர் ஜோஸ்வா, பிரமேலதா, பெராரே, திரைப்பட்டறை ராம், விஜய்பாலா ஆகியோர் நடிக்கிறார்கள். நிக்கிகண்ணன் ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார், பி.அஜித்குமார் படத்தொகுப்பில், மணி அமுதவன் பாடல் வரிகளில், சங்கர் ரங்கராஜன் இசையமைப்பில் […]

02/07/2021 Dinesh R
‘பீஸ்: நல்லவற்றை விதைக்கணும்’ – கிரிப்டோ நாயகன் கணேஷ் தேசிங் சினிமா

‘பீஸ்: நல்லவற்றை விதைக்கணும்’ – கிரிப்டோ நாயகன் கணேஷ் தேசிங்

“எந்தத் துறையாக இருந்தாலும் அதில் அந்தந்தப் படிப்பைக் கற்ற நிபுணர்கள் தான் இருக்கணும், இருப்பார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் இன்ஜினீயரிங் முடித்திருக்கிறேன். ஆனால் கிரிப்டோ கரன்ஸி ட்ரேடிங்கில் இருக்கிறேன்” எனும் கணேஷ் தேசிங், விருதுநகரைச் சேர்ந்த ஓர் அக்மார்க் தமிழர். பார்ப்பதற்குத் தேர்ந்த கதாநாயகன் லுக்கில் இருக்கும் இவர் சினிமாவில் வைத்திருக்கும் முதல் படி நடிகராக அல்ல தயாரிப்பாளராக. மிகச் சிறப்பான கதையம்சங்களைத் தன்னகத்தே கொண்ட மலையாள சினிமாவில், ‘பீஸ்’ என்ற படத்தில் இணை தயாரிப்பாளராகப் […]

02/06/2021 Dinesh R
The Great Indian Kitchen விமர்சனம் OTT

The Great Indian Kitchen விமர்சனம்

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ எனும் மலையாளப் படத்தை ஓடிடி தளங்களான அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் முதலியவை வாங்க மறுத்த நிலையில், நீஸ்ட்ரீம் எனும் தளத்தில், அப்படம் ஜனவரி 21, 2021, அன்று வெளியானது. ஒரு படத்தை வாங்குவதும் வாங்காததும், ஓடிடி தளங்களது தனிப்பட்ட நிர்வாக முடிவே எனினும், அவை வாங்க மறுப்பதற்குச் சுட்டிக் காட்டிய ஒரு காரணமே இப்படத்தின் மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவ்வசனம், ‘உச்சநீதி மன்றத்தினுடைய சபரிமலைத் தீர்ப்பு என்பது பெண்களின் கோயில் […]

22/04/2021 Dinesh R
கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும் சமூகம்

கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

கொடியன்குளம் கலவரம் தான் கர்ணன் படத்தின் கரு என நம்பத் தொடங்கிய இணைய திமுகவினர், தொடர்ந்து அதைப் பற்றிச் சமூக ஊடகத்தில் தங்கள் கோபத்தினைப் பதிந்து வந்தனர். இறுதியாக, திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, இணைய திமுகவினரைக் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி (!?) வைத்துள்ளார். ஒரு புனைவைப் புனைவாகப் பார்க்கச் சொல்லி உடன்பிறப்புகளிடம் நயமாகச் சொல்லிக் கடக்காமல், வரலாறு சரி செய்யப்படவேண்டும் என நல்லெண்ணத்தில் உதயநிதி ஸ்டாலினும் கர்ணன் திரைப்படக் […]

14/04/2021 Dinesh R
கர்ணன் – வரலாற்றுத் துல்லியமும், சமூக நீதியும் சமூகம்

கர்ணன் – வரலாற்றுத் துல்லியமும், சமூக நீதியும்

சினிமா என்பது வரலாற்றை உள்ளவாறே பதிவதல்ல. அது ஒரு கலை வடிவம். கலையென்பது புனைவு. ஆவணப்படுத்துதல் அதன் நோக்கம் இல்லை. தனக்கு உகந்தவாறு நிகழ்வுகளை வளைத்துக் கொள்ளும் சுதந்திரமும் உரிமையும் படைப்பாளிக்கு உண்டு. Inglourious Basterds எனும் படம் ஓர் உதாரணம். ஹிட்லரைக் கொல்வதாக டொரன்டினோ காட்சிப்படுத்தியிருப்பார். அது speculative fiction எனும் ஜானரைச் சேர்ந்தது. 97இல், வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கம் என்பவரது பெயரில் பேருந்துகளை அரசு இயக்கியது. அவரது “பெயர்” கொண்ட பேருந்தில் […]

13/04/2021 Dinesh R
கர்ணன் விமர்சனம் சினிமா

கர்ணன் விமர்சனம்

“என்னத்துக்கு பழங்கதைகள் எல்லாம் பேசிக் கொண்டு? முன்பு இப்படியான சாதியக் கொடுமைகள் நடந்திருக்கும். இப்போ அப்படியில்லை தானே? அதைச் சொல்லிக் காட்ட வேண்டிய அவசியமென்ன?” என்ற கேள்வியைக் கடக்காமல், இந்தப் படத்தைப் பார்க்கச் சுற்றம் சூழத் திரையரங்கிற்குச் செல்பவர்கள் பாக்கியசாலிகள். ஏன் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்? நாம் ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்தோம் என்பதை நினைவுப்படுத்தி நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளவா? இல்லை. எதேச்சதிகாரம், காலனிய ஆட்சியின் அடக்குமுறை, சுதந்திரத் தாகம், சுதந்திரத்துக்காகப் போராடிய மக்களின் எழுச்சி, அவர்களின் […]

10/04/2021 Dinesh R