Shadow

சினிமா

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மீண்டும் ஒரு அதகள சாகசத்தோடு காட்டுக்குள் பயணம் மேற்கொண்டுள்ளனர் ராக் & கோ. இம்முறை மேலும் கலகலப்பிற்கு உத்திரவாதமளித்துள்ளனர். எட்டி (Eddie) எனும் முதியவர் பாத்திரம் ஒன்று வருகிறது படத்தில். இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ள அப்பெரியவருக்கு, ஜுமான்ஜி விளையாட்டுக்குள் ஆஜானபாகு ராக்கின் உருவம் கிடைக்கிறது. அந்தப் பெரியவரின் மனநிலைக்கு ஏற்றவாறு, ராக்குடைய ப்ரேவ்ஸ்டோனின் முக பாவனைகள் மாறுவது காமிக்கலாக ரசிக்கும்படி உள்ளது. படத்தில் இன்னொரு ரசனையான கேரக்டர், திருடி மிங் ஃப்ளீட்ஃபூட் ஆகும். ஆவ்க்வாஃபினா எனும் அந்த நடிகை, ஸ்பென்சர் மிங் வடிவத்தை ஏற்கும் பொழுதும், பின் முதியவர் எட்டி அவ்வடிவத்தை எடுக்கும் பொழுதும் நல்ல வேறுபாடு காட்டியிருந்தார். திரையரங்கில் குழந்தைகள் ரசித்து மகிழும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நெருப்புக்கோழிகள் துரத்தும் பொழுது தப்பிக்கும் சாகசம், நகரும...
மெரினா புரட்சி விமர்சனம்

மெரினா புரட்சி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1965 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு 2016-ஆம் ஆண்டில் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மெரினா புரட்சி தான் பெரிய போராட்டம். அப்போராட்டத்திற்கான முதல் புள்ளியை வைத்தவர்கள் யார்? அப்போரட்டத்தின் போது நடைபெற்ற அரசியல் சூதாட்டங்கள் என்ன? அப்போராட்டத்திற்கு எதிராக நின்ற இரண்டு தமிழர்கள் பற்றிய தகவல்கள் என படம் பல ஆச்சர்யம் & அதிர்ச்சியூட்டும் விஷயங்களை ஆவணப்படுத்தி இருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் படமாகப் பதிவு செய்வதில் தான் இயக்குநர் எம்.எஸ் ராஜ் வெற்றி பெற்றுள்ளாரே ஒழிய இதை ஒரு நல்ல திரைக்கதையாக மாற்ற இயலவில்லை அவரால். ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு வேலை கேட்டு வருகிறார்கள் ஒரு இளைஞனும் இளைஞியும். சேனல் நிர்வாகி இவர்களுக்கான டெஸ்ட் ஆக ஜல்லிக்கட்டு வரலாற்றையும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் சேகரிக்கச் சொல்கிறார...
காளிதாஸ் விமர்சனம்

காளிதாஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
  காளிதாஸ் நல்ல சைக்காலஜிகல் த்ரில்லர் படம். பரத்துக்கு இந்த படம் நல்லதொரு கம்பேக்காக அமையும். அடிக்கடி மர்மமான முறையில் பெண்கள் இறந்து போகிறார்கள். அவை தற்கொலைகள் என்றும், அதற்குக் காரணம் ப்ளூவேல் கேம்தான் என பரத் நினைக்கிறார். பரத்தால் இந்த வழக்கை முடிக்க முடியாததால் சுரேஷ் மேனன் அவ்வழக்கைத் துப்பு துலக்க வருகிறார். இருவரும் சேர்ந்து அது கொலையா தற்கொலையா எனக் கண்டுபிடிப்பதுதான் கதை. இது போக, பரத் வீட்டுக்கே வராமல் போலீஸ் வேலையிலையே பிசியாக இருப்பதால் அவரது மனைவி, வீட்டு மாடியில் வாடைகைக்குக் குடியிருக்கும் ஆதவ் கண்ணதாசன் மீது காதல் கொள்கிறார். அதனால் அவருக்கு என்ன ஆச்சு என்பதுதான் செம க்ளைமேக்ஸ் ட்விஸ்ட். இதில் மிகுந்த சுவாரசியமான விஷயம், சுரேஷ் மேனனுக்கும் பரத்துக்கும் உள்ள உறவு. இப்படி ஒரு மேலதிகாரியும் இருப்பாரா என்று பார்வையாளர்களுக்குத் தோன்றும். பரத்துக்கு ஆலோசனை செய்வதாகட...
மலையாள இயக்குநரின் “அல்லி”

மலையாள இயக்குநரின் “அல்லி”

சினிமா, திரைச் செய்தி
‘செக்ஸி துர்கா’ எனும் படத்தை இயக்கிய சனல் குமார் சசிதரனின் ‘சோலா’ எனும் மலையாளப் படத்தை, “அல்லி” என்ற பெயரில் தனது ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் சார்பாக வெளியிடுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். நகர வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியும், அவரது காதலனும் யாருக்கும் தெரியாமல், ஒரு நாள் நகரத்திற்குச் சென்று வர விரும்புகிறார்கள். அவர்களின் பயணத்தில், மூன்றாவதாய் ஒரு நபர் இணைந்து கொள்கிறார். இந்தப் பயணத்தால், பள்ளி மாணவியின் வாழ்க்கை என்னானது என்பது தான் இப்படத்தின் கதை. “இதுபோன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகாது. ஆனால் படவிழாக்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் மட்டுமே வெளியாகும். இப்படத்தில் பாடல்கள், நகைச்சுவைகள், சண்டைக்காட்சிகள் என்று எந்த ஒரு விசயமும் இருக்காது. படம் முழுவதும் மிக எதார்த்தமாக தான் இருக்கும். இந்த படம் எடுக்க எந்த ஒரு வியாபார நோக்கமும...
ஜடா விமர்சனம்

ஜடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
    வடச்சென்னையில் செவன்ஸ் எனப்படும் விதிமுறைகளைப் பின்பற்றாத கால் பந்தாட்டத்தில் கலந்து கொள்ள கதிர் ஆசைப்படுகிறார். அந்த ஆட்டத்திற்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகளையும், அதனால் நிகழ்ந்த சில பயங்கரங்களையும் கோச் எடுத்துரைக்கிறார். அதை மறுத்துரைத்து, 'செவன்ஸ் ஆடுவேன்' என்பதில் உறுதியாக நிற்கிறார். அதற்கான காரணமும், முடிவில் செவன்ஸில் கதிர் அணி எப்படி வெற்றி கொண்டது என்பது தான் ஜடா. ஒரு படத்திற்குச் சிறந்த துவக்கம் மிக முக்கியம். அதை ஜடா இயக்குநர் குமரன் மிகச் சிறந்த முறையில் கையாண்டுள்ளார். நடிகர்களை வேலை வாங்கியதிலும் ஒரு தேர்ந்த இயக்குநராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக ஓவியர் ஸ்ரீதர் நடிப்பும், அவரது கதாபாத்திர வார்ப்பும் அத்தனை துல்லியம். கதிர் நடிப்பில் எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் பரியேறும் பெருமாள் பரியன் எட்டிப் பார்க்கிறார். மற்ற இடங்களில் ...
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஒரு கற்பனைக் கதை. ஆனால், இந்தக் கதையில் காட்டப்படும் டாக்குமென்ட்ரியில் நிகழ்வது போல் நடப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ள மெத்தனமான நாடு இந்தியா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கடல்நீரில் கலந்த எண்ணெயை வாளியில் அள்ளும் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்த அரசாங்கம், கரை ஒதுங்கும் ஆபத்தை விளைவிக்கும் குண்டை, வெடிக்கும் குண்டு என ஒத்துக் கொள்வதற்கே அதன் வெட்டி கெளரவம் இடம் கொடுக்காது. ஏன் உலகிற்கு இத்தனை குண்டுகள், இத்தனை உயிரிழுப்புகள் என்ற கேள்வியை மிக அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது சடோகா சசாகியின் கதை. ஆனால், தினேஷ் வசமிருக்கும் குண்டு வெடித்து விடக் கூடாது என்ற பதைபதைப்பை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது படம். அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவல், தோழர் ரித்விகாவிற்கு அதிகமாக உள்ளதே தவிர, அதை வெடிக்கவிடாமல் செய்ய என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்றெல்லாம் அவர் யோசிப்பதில்லை. கு...
அடுத்த சாட்டை விமர்சனம்

அடுத்த சாட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலேயே கதை சொல்லிவிடுகின்றனர் சாட்டை படத்தின் இயக்குநர் அன்பழகன். அப்பா கலை கல்லூரியில், ஒரு டிப்பார்ட்மென்ட்டின் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்களின் வகுப்பில் கதை நிகழ்கிறது. சாதி வெறியில் ஊறிய பிரின்சிபல் சிங்க பெருமாளின் மகன் பழனியால் வகுப்பில் சாதிப் பிரிவினை ஏற்படுகிறது. படத்தின் முதற்பாதியில் மகன் திருந்தி விட, இரண்டாம் பாதியில் பிரின்சிபலும் திருந்தி விட படம் சுபமாய் முடிகிறது. சமுத்திரக்கனி முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை சாட்டையை அட்வைஸ்களாகச் சுழற்றியபடியே உள்ளார். அவருக்கு இதே வேலையாகப் போய்விட்டதென அவர் சொல்வதை யாரும் காதில் வாங்கவேயில்லை. ஆனால், நாயகியான போதும்பொண்ணு, “நான் அந்த சாதியைச் சேர்ந்த பையனைக் காதலிக்கவில்லை. எனக்கு உன்னைத்தான் பிடிக்கும். அவனைக் கூடப் பிறந்தவனா நினைச்சுத்தான் பழகுறேன்” என்று நாயகனிடம் சொன்னதும், ஒட்டுமொத்த கல்லூரியிலுள்ள மாணவர்களுக்கும் சாத...
அழியாத கோலங்கள் 2 விமர்சனம்

அழியாத கோலங்கள் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில், இயக்குநர் பாலு மகேந்திராவின் முதல் படம் 'அழியாத கோலங்கள்'. 1979 இல் வெளியான இப்படம், தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான ஒரு சோதனை முயற்சி. எப்படி குழந்தைப் பருவ நட்பு, அழியாத கோலங்களாய் கெளரிசங்கர் மனதில் பதிந்திருந்தது என்பதே அப்படத்தின் கதை. நாற்பது வருடங்களுக்குப் பின் வெளியாகியிருக்கும், 'அழியாத கோலங்கள் 2' படத்திற்கும், பாலு மகேந்திராவின் முதல் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தலைப்பைத் தவிர்த்து. இன்னொரு ஒற்றுமை, பிரதான கதாபாத்திரத்தின் பெயர் கெளரிசங்கர் என்பதாகும். 'மோகனப் புன்னகை' எனும் புத்தகத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெறுகிறார் கெளரிசங்கர். டெல்லியில் சாகித்திய அகாதெமி விருது பெற்றதும், தான் எழுதுவதற்குக் காரணமாக இருந்த மோகனா எனும் தனது கல்லூரிக் காலத்துத் தோழியை, 24 வருடங்களுக்குப் பின் காண சென்னைக்கு வருகிறார். கிண்டியில் தனியாக வசிக்கும் 44 வயதான மோகனாவின்...
கண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’

கண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’

சினிமா, திரைத் துளி
"இயற்கை", " மீசை மாதவன்" உட்பட நிறைய தமிழ் படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா கன்னடப் பட உலகில் முன்னணியில் இருக்கும் இவர் சிறிது இடைவெளிக்குப் பிறகு தமிழில் "தமயந்தி " என்ற படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குட்டி ராதிகாவுடன் லோகி, சாது கோகிலா, ராஜ்பால வாடி, சூப்பர் ஸ்டார் ரஜினியோட நண்பரான ராஜ்பகதுார், அஞ்சனா, கார்த்திக், வீணா சுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.கே.ஹெச்.தாஸ் ஒளிப்பதிவையும், தர்மபுரி சோமு வசனம், பாடல்களையும், கணேஷ் நாராயண் இசையையும், வினோத்குமார் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர். முன்னனி இயக்குநர்கள் பலரிடம் இயக்குநர் பயிற்சி பெற்ற நவரசன் கதை, திரைக்கதை எழுதி மிகுந்த பொருட்செலவில் தயாரித்து இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தைப் பற்றி இயக்குநர் நவரசன், "1980 ஆம் ஆண்டு கதாநாயகியை அழித்து அவரது குடும்பத்தை இருந்த இடம் தெரியாமல் செய...
“துருவின் அப்பா சியான் விக்ரம்” – மகிழ்ச்சியில் மிதக்கும் தந்தை

“துருவின் அப்பா சியான் விக்ரம்” – மகிழ்ச்சியில் மிதக்கும் தந்தை

சினிமா, திரைச் செய்தி
அறிமுக கதாநாயகனான துருவ் விக்ரம், "ஆதித்யா வர்மா படத்திற்கான ரெஸ்பான்ஸைப் பத்திக் கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத் தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. இசையமைப்பாளர் ரதன் உழைப்பு மிகப் பெரியது. கிரிசாயா சார் வெரி ஹார்ட் ஒர்க்கர். தனுஷ் (படத்தில் நண்பனாக நடித்தவர்) முன்னாடி எப்படி நடிக்கிறது என்ற பயம் எனக்கு இருந்தது. ஏன் என்றால் அவன் பாலிலிவுட்ல கேமரா வொர்க் பண்ணவன். சவுரியா (படத்தின் இணை இயக்குநர்) நல்ல உழைப்பாளி. என் அப்பா என் ஜிம் ட்ரைனரிடம் கூடப் படத்தைக் காட்டுவார். ஆனால் என்னிடம் காட்ட மாட்டார். எல்லாவற்றையும் எனக்கு சர்ப்ரைஸாகச் செய்வார். அன்புதாசன் படத்தோட ஸ்ட்ராங் கேரக்டர். அவன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அப்பாவும் இந்தப் படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார். உதவி இயக்குநர்கள் கொடுக்குற எஃபெர்ட் தான் படமே. அவர்கள...
ஜுமான்ஜியின் அடுத்த கட்டம்

ஜுமான்ஜியின் அடுத்த கட்டம்

சினிமா, திரைத் துளி
ராக் நடிப்பில் வெளிவந்த ஜுமான்ஜி படம் சக்கை போடுபோட்டது. அதைத் தொடர்ந்து, ‘ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்‘  என்கிற படம் டிசம்பர் 13 அன்று வெளிவருகிறது. க்றிஸ் எழுதிய 2 புத்தகங்களின் அடிப்படையில் இதுவரை 3 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவை, ஜுமான்ஜி (1995), ஜதுரா: என் ஸ்பேஸ் அட்வன்ச்சர் (2005) மற்றும் ஜுமான்ஜி: வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம் (2017) ஆகும். அம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. ஜுமான்ஜி, 1996 முதல் 1999 வரை ஒரு தொலைக்காட்சித் தொடரகவும் ஒளிபரப்பப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் இடம்பெற்றிருந்த அந்த 4 இளம் மாணவர்கள், அடுத்த கட்ட அதிரடி ஆக்‌ஷனுக்கு தற்சமயம் தயார் நிலைக்கு வந்துவிட்டார்கள்! ஸ்பென்சரின் (அலெக் உல்ஃப்) நகர்வொன்றில், ஜுமான்ஜி விளையாட்டு மீண்டும் துளிர் விடுகிறது. இதர நண்பர்கள், பெத்தானி (மேடிசன் இஸ்மேன்), ஃப்ரிட்ஜ் (செர்டாருஸ் ப...
காதலில் நனைக்கும் மழை

காதலில் நனைக்கும் மழை

சினிமா, திரைத் துளி
ஆன்சன் பால், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கும் “மழையில் நனைகிறேன்” திரைப்படம் தலைப்பைப் போலவே கவிதை போன்ற காதலைச் சொல்லும் படைப்பாக உருவாகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே காதலர்களின் நெருக்கத்தை, ஆழமான காதலை அழுத்திச் சொல்வதாய் அமைந்துள்ளது படம் குறித்துப் பேசிய அறிமுக இயக்குநர் T. சுரேஷ் குமார், "இது மனதை இலகுவாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான கருத்துக்களைப் பேசும் படமாகவும் இது இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சூழ்நிலையை முதிர்ச்சியான மனநிலையில் அணுகுவார்கள். வரலாறு முழுவதும் தோல்வியடைந்த காதல் கதைகள் தான் வெகு பிரபலம். காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக்கதைகளாக உலா வருகிறது. ஆனால் இப்படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். இப்போது அதை வெளிப்படுத்த முடியாது. திரையில் அந்த உணர்வுகளோடு கண்டுகளி...
வைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்

வைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்

Trailer, காணொளிகள், சினிமா, திரைத் துளி
"ஷ்வேத் - எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்" சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும், வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குநரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் "லாக்கப்". இயக்குநர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய SG சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பல படங்களில் நகைச்சுவை கலந்த படங்களில் இணைந்து வந்த வைபவ் - வெங்கட்பிரபு கூட்டணி முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸான கதாபாத்திரத்தில் "லாக்கப்" திரைப்படத்தில் நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன் வெளியான "லாக்கப்" படத்தின் டீசர் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. படத்தின் எதிர்ப்பார்ப்பைக் கூட்டும் வகையில் இப்படத்தின் டீசர் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டது. மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர...
எதிர்வினையாற்று – பக்கா த்ரில்லர் படம்

எதிர்வினையாற்று – பக்கா த்ரில்லர் படம்

சினிமா, திரைச் செய்தி
தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் படம் "எதிர்வினையாற்று". இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸும் இளமைதாஸும். நாயகனான அலெக்ஸே படத்தைத் தயாரித்தும் இருக்கிறார். விழாவில் பேசிய அலெக்ஸ், "இந்தப் படம் கடந்த ஆறு மாதமாக எப்படி கடந்தது என்றே தெரியவில்லை. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் பெரிய நன்றி. டாக்டராக இருந்தவன் எப்படி நடிகராக மாறினார் என்று கேட்டார்கள். எனக்குச் சின்ன வயதில் இருந்தே நடிப்பு மீது ஈர்ப்பு உண்டு. முதல் நன்றி என் அம்மாவிற்குத் தான். அவரிடம் ஒரு படத்தை நானே நடித்து இயக்க வேண்டும் என்றதும், என் அம்மா என்னை ஊக்கப்படுத்தினார். இந்தப் படத்தை இரவு பகலாக உழைத்து 24 நாட்களில் முடித்தோம். அதற்குக் காரணம் என் டைரக்‌ஷ...
ஆதித்ய வர்மா விமர்சனம்

ஆதித்ய வர்மா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து, 2017 இல் வெளிவந்த “அர்ஜுன் ரெட்டி” படத்தின் தமிழ் ரீமேக்காய் வந்துள்ளது ஆதித்ய வர்மா. விக்ரம் தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்துள்ள படமிது. விக்ரமிற்கு, ‘ப்ரேக்’ கொடுத்த படம், பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘சேது’. ஒரு பிராமணப் பெண்ணை உருகி உருகிக் காதலிக்கும் கோபக்கார இளைஞனான சேதுவிற்கும் இப்படத்திற்கும் ஓர் ஒற்றுமையுண்டு. முக்கியமானதொரு வேற்றுமையும் உண்டு. அது, சேது படத்திலுள்ள நேட்டிவிட்டி இந்தப் படத்தில் மிஸ்ஸிங். இவன் தான் நாயகனென உள்வாங்கிக் கொள்ள சிரமமாக உள்ளது. முக்கியமாகப் படத்தின் முதற்பாதி ஒட்டாமல் மிக அந்நியமாக உள்ளது. இரண்டாம் பாதியும் ஸ்லோவாகப் போனாலும், நாயகனின் வலியையும் காதலையும் தன் அநாயாசமான நடிப்பால் பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறார். வசனங்களை மிகக் கவனமாகக் காது கொடுத்து கேட்டாலன்றி முழுவதுமாகப் புரியவில்லை. சட்டென ...