32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 131 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 131)
அறத்தைப் பரிகசிக்கும் ஒற்றைச் செருப்பின் அபாய அரசியல் கட்டுரை

அறத்தைப் பரிகசிக்கும் ஒற்றைச் செருப்பின் அபாய அரசியல்

‘ஒன் மேன் ஷோ’வாய் ஒரு திரைப்படத்தில் தான் மட்டுமே திரையில் தெரியவேண்டும் என்பது பார்த்திபனின் பல்லாண்டு கனவு. திறன்மிகு தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியோடு, அக்கனவை ஒத்த செருப்பு சைஸ் -7 என்ற நேர்த்தியானதொரு படத்தின் மூலம் நனவாக்கிக் கொண்டுள்ளார். எழுதி, தயாரித்து, இயக்கி, ஒற்றை ஆளாய் நடித்ததன் மூலம், ஒத்த செருப்பு படத்தை, ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘ஏஷியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகியவற்றில் சாதனையாக இடம்பெற வைத்துவிட்டார் பார்த்திபன். அதி அற்புத முயற்சி, தொழில்நுட்ப […]

20/07/2020 Dinesh R
“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண் அரசியல்

“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்

ராஜ்கிரண் என்றழைக்கபடும் J. மொஹைதீன் அப்துல் காதர், ‘கறுப்பர் கூட்டம்’ யூ-ட்யூப் சேனல் வெளியிட்ட கந்த சஷ்டி கவசம் குறித்த ஆபாசமான காணொளியைக் கண்டித்துள்ளார். “ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு, “கந்தர் சஷ்டி கவசம்” என்பது ஒரு பாதுகாப்பு அரண். இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன. இறைவனை நம்பாதோர்க்கு, ‘நம்பாமை’ என்பது அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, […]

15/07/2020 Dinesh R
Portrait of a Lady on Fire விமர்சனம் அயல் சினிமா

Portrait of a Lady on Fire விமர்சனம்

மனிதனுக்கு சுதந்திரமும், கலையும் எவ்வளவு முக்கியமானவை என்பதைப் படம் ஒரு கவிதையாக உணர்த்துகிறது. கான்ஸ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகள் (2019) பெற்றது உட்பட, பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது இந்த ஃப்ரெஞ்ச் மொழிப்படம். ஒரு பெண் இயக்குநரின் படம், கான்ஸ்-இன் Queer Palm விருதினைப் பெறுவது இதுவே முதல்முறையாகும். கோமாட்டி ஹெலூயிஸை ஓவியமாக வரைய, பிரட்டானி தீவுக்கூட்டங்களில் உள்ள ஒரு தீவு ஒன்றுக்கு வரவழைக்கப்படுகிறாள் ஓவியை மரியேன். அந்த ஓவியத்தை மிலனிலுள்ள கோமான் ஒருவனுக்கு அனுப்பித் […]

15/07/2020 Dinesh R
சூஃபியும் சுஜாதயும் விமர்சனம் OTT

சூஃபியும் சுஜாதயும் விமர்சனம்

ஒரு சூஃபிக்கும், சுஜாதா எனும் வாய் பேசா முடியாத பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. “சூஃபிகள், ஆடவும் பாடவும் தெரிந்த துறவிகள்” என்பார் சுஜாதாவின் பாட்டி. சூஃபியை, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராகப் பார்ப்பார் சுஜாதாவின் அப்பா. உண்மையில், சூஃபிகள் மதங்களைக் கடந்தவர்கள். சூஃபிகளை, இறைச் சிந்தனையில் வாழும் ஞானிகள் என்று சொல்லலாம். பொதுவாகத் துறவு மனநிலை கொண்டவர்களாக இருப்பார்களே அன்றி, கட்டாயமாகத் துறவியாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை. மதத்தை மீறிக் கலைகளின் வாயிலாக இறைவனின் ஏகத்துவத்தை விசாலப்படுத்துவதே சூஃபிகளின் […]

04/07/2020 Dinesh R
பெண்குயின் விமர்சனம் OTT

பெண்குயின் விமர்சனம்

ரிதம் எனும் பெண்ணின் மகன் காணாமல் போய், ஆறு வருடங்களுக்குப் பின் கிடைக்கின்றான். அவனை யார் கடத்தினார்கள், அந்தச் சிறுவனுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரிந்து கொள்ள ரிதம் நினைக்கிறார். அவரால் அதைத் தெரிந்து கொள்ள முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. “ஓப்பன் பண்ணா, காட்டுக்கு நடுவுல ‘மதர் ஆஃப் நேச்சர்’ சிலை. ஒரு கருப்பு நாய், தத்தித் தத்தி நடக்கும் சின்ன பையன், சிலைக்குப் பின்னாடியிருந்து மஞ்சள் நிறக் குடையில் சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த […]

20/06/2020 Dinesh R
தேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் சினிமா

தேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்

பசும்பொன் தேவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஜெ.எம்.பஷீர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இதை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். இந்தப் படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ என பல வெற்றிப் படங்களை தந்தவர். தேவர் சமூகத்தைச் சேர்ந்த சௌத்ரி, தேவரைப் போல உருவ அமைப்பில் உள்ள பஷீரிடம் தேவராகப் படத்தில் நடிக்கக் கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டார். தேவர் […]

01/06/2020 Dinesh R
மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை சமூகம்

மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றைத் தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது. கொரானோ தொற்றுப் பரவலைப் பொறுத்து, சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகள் என எல்லாத் தொழில்களையும் நடத்துவதற்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலில் மூடப்பட்ட தனித்திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு […]

01/06/2020 Dinesh R
பொன்மகள் வந்தாள் விமர்சனம் OTT

பொன்மகள் வந்தாள் விமர்சனம்

குழந்தைகள் மீது நடக்கப்படும் பாலியல் வன்முறையினால், அக்குழந்தைகளுக்கு ஏற்படும் வாழ்நாள் மன அதிர்ச்சியைப் (mental trauma) பற்றிப் படம் பேசுகிறது. போலீஸ் எப்படி பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகச் சோடிக்கும் என்பதையும் படம் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. இரட்டைக் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட ஜோதியை, சைக்கோ என முத்திரை குத்தி, 2004 இல் என்கவுண்ட்டர் செய்து விடுகிறது போலீஸ். அந்த வழக்கை மறுவிசாரணைக்குக் கொண்டு வருகிறார் பெட்டிஷன் பெத்துராஜ். இறந்துவிட்ட ஜோதிக்கு ஆதரவாக வெண்பா எனும் வக்கீல் களமிறங்க, 15 வருடத்துக்கும் […]

29/05/2020 Dinesh R
“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா சமூகம்

“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

திரையரங்கு உரிமையாளர்களின் கடும் அதிருப்திக்கும், கோபத்திற்கும் இடையில், “பொன்மகள் வந்தால்” படம் அமேசான் ப்ரைமில் மே 29 அன்று வெளியாகவுள்ளது. ஓடிடி என்பது சினிமாவிற்கு மாற்றா, இல்லை சினிமா என்பதே தியேட்டரில் பார்த்து மகிழும் ஓர் அனுபவம், அதற்கு எந்தப் பாதிப்பும் மாறாது என விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோதிகா தனது படத்தைப் பற்றியும், ஓடிடி பிளாட்ஃபார்ம் குறித்தும் பேசியுள்ளார். “எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் போது வசதியாக […]

25/05/2020 Dinesh R
TENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும் சினிமா

TENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்

TENET is a palindrome. முன்னிருந்து பின்னோக்கிப் படித்தாலும் சரி, பின்னிருந்து முன்னோக்கிப் படித்தாலும் சரி ஒரே வரிசையில் எழுத்துகளைத் தரும் சொல். அச்சொல்லை Ambigram ஆகவும் மாற்றித் தலைப்பை உருவாக்கியுள்ளார். அதாவது தலைப்பை 360° திருப்பினாலும், மீண்டும் அதே வரும். நோலன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படத்தின் தலைப்பில் இருக்கக்கூடிய இந்த பாலிண்டிரோமிற்கும் ஆம்பிகிராமிற்கும், திரைக்கதையுடன் மிகப்பெரிய ஒற்றுமை இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இப்போது வரை இந்தத் திரைப்படத்தின் கதை என்னவென்று மிகச் சில நபர்கள் தவிர […]

24/05/2020 Dinesh R
பொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள் சினிமா

பொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள்

அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்தியச் சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 […]

23/05/2020 Dinesh R
“கடைசியாக அது நம்மை நோக்கி வந்துவிட்டது” – ராட்டினம் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி சினிமா

“கடைசியாக அது நம்மை நோக்கி வந்துவிட்டது” – ராட்டினம் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி

இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.எஸ்.தங்கசாமி, “ராட்டினம்”, “எட்டுத்திக்கும் மதயானை” ஆகிய படங்களை இயக்கியவர். திருப்பூர் சுப்ரமணியத்தின் முயற்சிக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். “சமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் ஒரு எளிய தீர்வை முன்வைத்தது மிகவும் வரவேற்புக்குரியது. தனது இந்த முன்னெடுப்பிற்கு […]

23/05/2020 Dinesh R
“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா சினிமா

“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

ஓடிடி (OTT) பிளாட்ஃபாரத்தில் நேரடியாக வெளியாகும் முதல் இந்திய மெயின்ஸ்ட்ரீம் திரைப்படம் என்ற பெருமையைப் ‘பொன்மகள் வந்தாள்’ பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பினைத் தூண்டியுள்ள இந்தப் படத்தைப் பற்றி ஜோதிகா, “இது ஒரு சமூக அக்கறையுள்ள கதை. த்ரில்லர் படம் என்பதால் என்ன சமூக அக்கறை என்பதை சொல்ல முடியாது. இந்தப் படத்தில்  5 இயக்குநர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கடந்த படத்தில் ரேவதி மேடம், ஊர்வசி மேடம் இந்தப் படத்தில் பார்த்திபன் சார், பாக்யராஜ் சார், […]

21/05/2020 Dinesh R