32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 138 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 138)
டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம் சினிமா

டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்

தேர்ந்தெடுக்கப்படும் மனிதர்களைக் கொல்ல, எதிர்காலத்தில் இருந்து இயந்திரங்களால் பூமிக்கு அனுப்பப்படும் கொலை இயந்திரங்களே டெர்மினேட்டர்கள். 1984 இல் தொடங்கிய ‘டெர்மினேட்டர்’ தொடரின் எல்லாப் பாகங்களுக்கும் அநேகமாய் ஒரே கதை தான். என்ன செய்தாலும் அழிக்க முடியாத டெர்மினேட்டர் எனும் அதி நவீன வில்லனுக்கும், என்ன செய்தாவது டெர்மினேட்டர் கொலை செய்ய நினைக்கும் டார்க்கெட்டைக் காப்பாற்ற நினைக்கும் எதிர்கால மனிதர்கள் அனுப்பும் கலப்பு (ஹைப்ரிட்) மனிதனுக்கும் இடையே நடக்கும் துவந்த சண்டையே படத்தின் கதை. 1991 இல் வந்த […]

01/11/2019 Dinesh R
‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் Movie Posters

‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் “அந்த நாள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டார். கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், “அந்த நாள்” படம் வெற்றி பெறவும் வாழ்த்து கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஏவி.எம்.சரவணன், இயக்குநர் S.P.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், திருமதி அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் […]

30/10/2019 Dinesh R
கைதி விமர்சனம் சினிமா

கைதி விமர்சனம்

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை மீட்க ஒரு குழு கமிஷ்ணர் அலுவலகத்தை முற்றுகையிடுகிறது; போதையூட்டப்பட்ட போலீஸ் உயரதிகாரிகளை லாரியில் ஏற்றி மருத்துவமனையில் சேர்க்க ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் அதிகாரியான பிஜோய், லாரி ஓட்டக்கூடிய டில்லி எனும் சிறையில் இருந்து விடுதலையான நபரின் உதவியை நாடுகிறார்; அந்த லாரியில் இருக்கும் 5 அதிகாரிகளை மட்டும் கொல்ல பல குழுக்கள் வட்டமிடுகின்றன. கதாநாயகி இல்லாத படம்; அதனால் டூயட்டும் இல்லை; ஓரிரவில் நடக்கும் கதை என வழக்கமான படத்திலிருந்து […]

26/10/2019 Dinesh R
‘ராக்கி’ வசந்த் ரவி சினிமா

‘ராக்கி’ வசந்த் ரவி

“எனது சொந்த ஊர் திருநெல்வேலி. வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில். ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தேன். சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வமிருந்தாலும் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும்போதே நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. ஆனால், எனது பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. ‘எது செய்வதாக இருந்தாலும் மருத்துவம் படித்துவிட்டு செய்’ என்றார்கள். அவர்கள் கூறியதுபோல நானும் படித்து முடித்தேன். நடிப்பின் மீதிருந்த ஆர்வம் குறையாததால் மும்பைக்குச் சென்று அனுபம்கேர் நடிப்புப் பள்ளியில் பயிற்சி மேற்கொண்டேன். பின்பு […]

26/10/2019 Dinesh R
பிகில் விமர்சனம் சினிமா

பிகில் விமர்சனம்

‘ப்யூகல் (Bugle)’ என்பதொரு ஊது கருவி. பொதுவாக இராணுவத்திலும், ஸ்கெளட்டிலும் ப்யூகலை உபயோகிப்பார்கள். அதன் மழூஉவே ‘பிகில்’. தற்போது அது விசிலுக்கான மாற்று சொல் என்பது போல் திரிபடைந்துவிட்டது. இப்படத்தில், பிகில் என்பது சிறந்த கால்பந்தாட்ட வீரரான மைக்கேலின் ஜெர்சியில் இடம்பெற்றிருக்கும் செல்லப்பெயர். மேலும், டீமின் கோச் விசில் ஊதி வீரர்களை ஒருங்கிணைத்துப் பயிற்சியளிக்கிறார் என்பதாகத் தலைப்பினைக் காரணப் பெயராகவும் கொள்ளலாம். மைக்கேல் தலைமை வகிக்கும் அணி ‘கப்’ அடிக்க வேண்டுமென்பது அவரது தந்தை ராயப்பனின் ஆசை. […]

25/10/2019 Dinesh R
மயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’ சினிமா

மயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’

அல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய ராதா ரவி, “சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படிப் பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியைப் பாராட்டுகிறேன். சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். […]

24/10/2019 Dinesh R
ஆதித்ய வர்மா: விக்ரம் துருவுக்காற்றும் நன்றி சினிமா

ஆதித்ய வர்மா: விக்ரம் துருவுக்காற்றும் நன்றி

துருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ்த் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்தப படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் […]

22/10/2019 Dinesh R
அஜினோமோட்டோ ஆபத்தாபது எச்சரிக்கும் நடிகர் சத்யராஜின் மகள் சினிமா

அஜினோமோட்டோ ஆபத்தாபது எச்சரிக்கும் நடிகர் சத்யராஜின் மகள்

சத்யராஜ் மகள் திவ்யா இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவர். உலகின் மிக பெரிய மதிய உணவு திட்டமான அக்ஷய பாத்திரத்தின் விளம்பரத் தூதுவர். மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வு பற்றியும் திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இவர் சமீபத்தில் அஜினோமோட்டோ (MSG – Mono Sodium Glutamate) கலந்துள்ள உணவுகள் பற்றி ஒரு கலந்துரையாடல் நடத்தினார். “MSG விளைவுகள் பற்றி உலகெங்கும் பேசியுள்ளனர் எனினும், இது […]

21/10/2019 Dinesh R
‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன் சினிமா

‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்

பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ். கிருஷ்ணனின் அடியாத்தே என்ற ஒற்றை வீடியோ பாடலை முன்னணி இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ட்விட்டரில் வெளியிட்டார். இப்பாடலை சுவாகதாவுடன் இணைந்து டி. ல்சத்திய பிரகாஷ் பாடியிருக்கிறார். கரு / தியா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலாலிலோ’, பார்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி’, மற்றும் காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டர்ட்டி பொண்டாட்டி’ உள்ளிட்ட பல துள்ளலான பாடல்களைப் பாடி ரசிகர்களை வென்ற இளம் பாடகி சுவாகதா, முதன்முறையாக […]

20/10/2019 Dinesh R
மாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை சினிமா

மாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை

போர் வீரனின் கதையை பிரம்மாண்டமாக சொல்லும் மம்முட்டியின் “மாமாங்கம்” படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பில் தனது கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் மம்முட்டி. படத்தின் இயக்குநர் பத்மகுமார், “மம்முட்டி சாரின் பிரபல்யம், ரசிகர் வட்டம் மலையாள எல்லைகளைக் கடந்தது. இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகராகப் போற்றப்படுபவர். தமிழில் அவர் பல தொடர் வெற்றிப்படங்களைத் தந்து பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். தமிழ்ப்படங்களில் அவரது […]

19/10/2019 Dinesh R
இசையமைப்பாளரானார் பாடகி ஸ்வாகதா Songs

இசையமைப்பாளரானார் பாடகி ஸ்வாகதா

வார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு பாடல் உயிர் பெறுகிறது. அப்படி மயக்கும் குரலால் தமிழ்சினிமாவில் பல பாடல்களுக்கு உயிர் கொடுத்து பிரபலமான பாடகியாக வலம் வருபவர் பாடகி ஸ்வாகதா. அவரின் குரலில் காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’  பாடல்கள் உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடி இருக்கிறார். இப்போது வெளிவரவுள்ள பல படங்களிலும் பாடி இருக்கிறார். தற்போது அவருக்குள் இருக்கும் இன்னொரு பரிணாமமும் வெளிப்பட்டுள்ளது. இசையையும் […]

18/10/2019 Dinesh R
எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாகும் சாந்தினி சினிமா

எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாகும் சாந்தினி

நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே! அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சாந்தினிக்குத் தனி இடம் உண்டு. ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு. ‘சித்து +2’ -இல் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, சமீபத்தில் வெளியான […]

18/10/2019 Dinesh R
பெளவ் பெளவ் விமர்சனம் சினிமா

பெளவ் பெளவ் விமர்சனம்

ஒரு சிறுவனுக்கும், அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள நேசம் பற்றிய கதை. 110 நிமிடப் படம். முதற்பாகத்தில் சிறுவனும், இரண்டாம் பாகத்தில் நாயும், கதையை நகர்த்தும் பிரதான பாத்திரங்களாக உள்ளனர். லண்டன் டாக்கீஸ் K.நடராஜன் தயாரித்துள்ள இப்படத்தில் மொத்தமே ஐந்து கதாபாத்திரங்கள்தான். மாஸ்டர் அஹான், அவனது தாத்தா பாட்டி, எதிர் வீட்டில் வசிக்கும் ஓர் அங்கிள் ஆன்ட்டி. அஹான் பிறந்தவுடனே அவனது பெற்றோர் இறந்துவிடுதால், அதிர்ஷ்டம் கெட்டவன் என அவனது வகுப்பில் பயிலும் ஒரு மாணவனின் […]

18/10/2019 Dinesh R
அசுரன் விமர்சனம் சினிமா

அசுரன் விமர்சனம்

லாக்கப் எனும் நாவல் விசாரணை ஆனதை விட, பல மடங்கு வீரியத்துடன், வெக்கை நாவலை அசுரன் எனும் திரைப்படமாக மாற்றியுள்ளார் வெற்றிமாறன். எழுத்தாளர் பூமணியின் மூலக்கதையை மிஞ்சும் அளவு, மிகச் சிரத்தையுடன் திரைக்கதை அமைத்து அசக்தியுள்ளனர் மணிமாறனும் வெற்றிமாறனும். ஒரு நாவல் திரைப்படமான முயற்சியில், இயக்குநர் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’ பெற்ற இடத்திற்கு நிகராக வைக்கக் கூடிய கலைப்படைப்பாக வந்துள்ளது அசுரன். நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஏற்படும் தகராறும், அது தொடர்பான கொலையும் பழிவாங்குதலும் தான் படத்தின் கதை […]

05/10/2019 Dinesh R