Shadow

சினிமா

நட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்

நட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிவா, ராஜா, மணி ஆகியோர் 'தளபதி' படத்தின் வெளியீட்டு நாள் அன்று ஒரே மருத்துவமனையில் பிறந்த ரத்தம் சதையுமான நண்பர்கள். இதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்த, 'ஒரே வயிற்றில் பிறந்தா ட்வின்ஸ், ஒரே நாளில் பிறந்தால் ஃப்ரெண்ட்ஸ்' என நாயகன் கவினை வாய்ஸ்-ஓவர் மூலம் சொல்ல விடுகிறார் இயக்குநர். 'ஆஹா! தொடக்கமே அற்புதம்' எனப் புல்லரித்து விடுகிறது. மூன்று நண்பர்களுமே, ஸ்ருதி எனும் பெண்ணைக் காதலிக்கிறார்கள். நட்புக்குள் சத்திய சோதனை உருவாகிறது. சோதனையில் இருந்து நண்பர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ரம்யா நம்பீசனை மிகத் தைரியமான பெண்ணாக அறிமுகம் செய்கின்றனர். அதன் பின், வழக்கமான சினிமா ஹீரோயினாக்கி விடுகின்றனர். படம் முடிந்ததும், படக்குழுவினர் பெயர் மேலெழும் பொழுது, கவினை முன் வைத்து ரம்யா நம்பீசனுக்கும், இளவரசுக்கும் நடக்கும் உரையாடல் கூட ரசிக்கவைக்கின்றன. எந்த நோக்கமுமற்ற வேலையில்லா நா...
அப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்

அப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாருமே பேசாத, பேச விரும்பாத ஒரு கருவைத் தனது அப்பா காண்டம் குறும்படத்தில் இயக்குநர் ஆர்வா தொட்டுள்ளார். இப்படத்தை ரெட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.  வயதுக்கு வந்த கல்லூரி படிக்கும் மகனிடம், ஒரு அப்பா, செக்ஸ், மாஸ்டர்பேஷன், சேஃப்ட்டி, காண்டம் எனப் பேசுகிறார். மகனின் வளர்ச்சியில் அப்பாவின் பங்கு பற்றிய அத்தியாயம் அல்லது அப்பாவின் ஆணுறை என படத்தின் தலைப்பையே இயக்குநர் இருபொருள்பட வைத்து அசத்துகிறார். முதலில், இப்படத்தின் கதைக்கு 26 நிமிட கால அளவு என்பது மிக மிக அதிகம். நேரடியாகக் கதைக்குள் செல்லாமல், படத்தின் தொடக்கத்திலேயே சுமார் 6 நிமிடங்களுக்கு ட்ரோன் மூலமாக எடுக்கப்பட்டுள்ள ஏரியல் ஷாட்களால் எக்ஸ்ப்ரீமென்ட் செய்துள்ளனர். அத்தகைய எக்ஸ்ப்ரீமென்ட் குறும்பட இயக்குநர்களுக்கு அவசியம் தான் என்றாலும், கதைக்குத் தேவைப்படாத பட்சத்தில் அதை எடிட்டிங் டேபிளிலேயே கத்தரித்து வீசியிருக்கலாம...
அயோக்யா விமர்சனம்

அயோக்யா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2015 ஆம் ஆண்டு, வக்கந்தம் வம்சியால் எழுதப்பட்டு, பூரி ஜெகன்னாதரால் இயக்கப்பட்ட 'டெம்பர்' என்ற தெலுங்குப் படத்தின் உத்தியோகபூர்வ மறு உருவாக்கம் இப்படம். பணமே சகல அதிகாரங்களையும் தருமென்பதையும், காவல்துறையில் சேர்ந்தால் அப்பணத்தை சுலபமாக அடையலாம் என்பதையும் சிறு வயதிலேயே கண்டுணர்கிறான் யாருமற்ற அநாதை சிறுவனான கர்ணன். காவல்துறையில் சேருவதை லட்சியமாக்கி, கொண்ட லட்சியத்தின் படி போலீஸாகவும் ஆகி, அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்து சகல வழிகளிலும் பணத்தை அடைகிறான். அத்தகைய அயோக்கியனை சமயச்சந்தர்ப்பம் யோக்கியனாக மாற்றுவதுதான் படத்தின் கதை. செய்வது அயோக்கியத்தனம் என்றாலும், மட்டு மரியாதை குறையும் பட்சத்தில், சுர்ரெனக் கோபம் சூடாய் மண்டையில் ஏறி தன்முனைப்பு உசுப்பிவிடப்பட்டு தன்னிலை மறந்துவிடுவான் கர்ணன். ஜூனியர் என்.டி.ஆர் அளவு விஷால் தன்னிலை மறக்கவில்லை என்றே சொல்லவேண்டும். அப்படியாகும் பட்சத்தி...
கீ விமர்சனம்

கீ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கீ என்ற சொல்லிற்கு, 'எவ்வளவு நன்மைகள் உண்டோ அவ்வளவு தீமைகளும் உண்டு' என தொல்காப்பியத்தில் பொருளுள்ளதாக இயக்குநர் காளீஸ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கணினியில் நாம் பயன்படுத்தப்படும் கீ (Key)- க்கள் தான் நமது நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கிறது என்றும் தலைப்பிற்குப் பொருள் கூட்டுகிறார் இயக்குநர். இயக்குநர் காளீஸ், செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமும், 100 திரைப்படத்தினைப் போலவே, கதைக்குள் நேரடியாகச் செல்லாமல் அலைபாய்கிறது. சைபர் க்ரைமை மையப்படுத்திய ஒரு த்ரில்லர் படம் எப்படித் தொடங்கக் கூடாது என்பதற்கு இப்படம் ஒரு சாட்சி. ஹீரோவின் அறிமுகம், நேரடியாகப் பார்வையாளர்களைப் பார்த்துப் பேசும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பாட்ஷா வைரஸ் குறித்து அவர் விளக்கமளித்து, அதைக் கொண்டு எந்தப் பெண்ணுடன் டேட்டிங் செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கிறார். பல பா...
100 விமர்சனம்

100 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது புஜ பல பராக்கிரமத்தால், தீயவர்களையோ, சமூக விரோதிகளையோ அடித்து உதைத்து அவர்களைச் சிறையில் அடைத்து, நேர்மையான காவல்துறை அதிகாரியாக மிளிர வேண்டுமென்பது அதர்வாவின் லட்சியம். ஆனால், அவசர உதவி கோரி எண் 100-இற்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் கண்காணிப்பு அறையில் அவரைப் பணிக்கு அமர்த்திவிடுகின்றனர். நேடியாகக் கதைக்குள் செல்லாமல், படத்தின் முதற்பாதி தேவையில்லாத காட்சிகளால் அலைக்கழிக்கிறது. அதர்வாவின் தந்தையாக பருத்தி வீரன் சரவணன், அம்மாவாக நிரோஷா, காதலியாக ஹன்சிகா, நண்பராக 'எருமை சாணி' விஜய் ஆகியோர் கதைக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. தயாரிப்பாளரான ஆரா சினிமாஸ் மகேஷ், அன்வர் எனும் பாத்திரத்தில் அதர்வாவின் நண்பராக நடித்துள்ளனர். ஓர் அழகான பாத்திரத்திற்கு, கொஞ்சம் லெத்தார்ஜிக்கான உடற்மொழியாலும் நடிப்பாலும், போதுமான நியாயத்தைச் செய்யத் தவறிவிடுகிறார். மறைந்த நடிகர் சீனு மோகனின் கதாபாத்திர வார்...
எமதர்மராஜா யோகி பாபு

எமதர்மராஜா யோகி பாபு

சினிமா, திரைத் துளி
தர்மபிரபு படத்தில் யோகி பாபுவிற்கு அம்மாவாக ரேகாவும், அப்பாவாக ராதா ரவியும் நடித்துள்ளனர். படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நடிகை ரேகா, “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ராதாரவியுடன் இணைந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை. இயக்குநர், ‘அம்மா கதாபாத்திரத்திரம் இருக்கிறது பணியாற்றுகிறீர்களா?’ என்று கேட்டார். யோகிபாபுவிற்கு அம்மா என்றதும் ஒப்புக்கொண்டேன். நானே விரும்பி கேட்ட கதாபாத்திரம் இது. அவருடன் நடித்தால் நகைச்சுவை நன்றாக இருக்கும். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன். இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்து என் கதாபாத்திரத்தைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள்” என்றார். இயக்குநர் முத்துகுமரன் பேசும்போது, “நானும் யோகிபாபுவும் நண்பர்கள். ஒரே அறையில் தங்கியிருந்தோம். அப்போது நாங்கள் இருவரும் இந்தக் கதையைப் பற்றிப் பேசினோம். யாராவது தவறு செய்தால் தண்டனை கொடுப்பது எமதர்மன் தான...
நீயா 2 – நிஜ கருநாகமும், கிராஃபிக்ஸும்

நீயா 2 – நிஜ கருநாகமும், கிராஃபிக்ஸும்

சினிமா, திரைத் துளி
பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் படமான நீயா 2-வில் பாம்பின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் உள்ளது. அந்தப் பாம்பைப் பற்றியும், கிராஃபிக்ஸ் பற்றியும் கிராபிஃக்ஸ் நிபுணரான வெங்கடேஷ், "தற்போது சின்னத்திரையில் பல தொடர்கள் பாம்பை மையமாக வைத்து வருகிறது. அதனுடைய சாயல் வெள்ளித்திரையில் இருக்கக் கூடாது என்பதற்காகவும், அதற்கு வேறுபட்டும் பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தோனேசியாவிற்குச் சென்று அங்கிருக்கும் கருநாகத்தின் பயிற்சியாளரைச் சந்தித்து பாம்பைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தோம். இந்திய அளவில் சுமார் 20 அடி முதல் 28 அடி வரை இந்தப் பாம்பு இருக்கும். படத்திற்காக நாங்கள் 25 அடி பாம்பை தேர்வு செய்தோம். கருநாகத்தின் குணாதிசயங்களைப் பயிற்சியாளரைக் கொண்டு படம் பிடித்தோம். பயிற்சியாளர் கை நீட்டியதும் இந்த கருநாகம் 3 அடி உயரத்திற்கு ஏறியது. மேலும், இப்படத்தில் கருநாக...
ரீவைண்ட் – தேஜ் இயக்கி நடிக்கும் த்ரில்லர் படம்

ரீவைண்ட் – தேஜ் இயக்கி நடிக்கும் த்ரில்லர் படம்

சினிமா, திரைத் துளி
கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான ‘காதலுக்கு மரணமில்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான தேஜ், தொடர்ந்து ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் ‘மொழிவது யாதெனில்’, ‘விண்ணை தொடு’  ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. தற்போது நடிப்புடன் இயக்கத்திலும் கவனம் செலுத்தும் தேஜ், குடும்ப த்ரில்லர் ஜானரில் ஒரு படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். ‘ரீவைண்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் உருவாகிறது. பனரோமிக் ஸ்டுடியோ (Panaromic Studio) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தேஜுக்கு ஜோடியாக சந்தனா ராகவேந்திரா நடிக்கிறார். இவர்களுடன் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் நடிப்பதோடு, இயக்குநர் கே.பாலச்சந்தர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட பழம்பெரும் நடிக...
தடகள விளையாட்டுலகின் கதை – பிரித்வி ஆதித்யா

தடகள விளையாட்டுலகின் கதை – பிரித்வி ஆதித்யா

சினிமா, திரைத் துளி
கதைத் தேர்வில் அதீத கவனத்துடன் இருக்கும் ஆதி, தற்போது அறிமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா இயக்கும் தடகள விளையாட்டு அடிப்படையிலான படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். "நான் ஸ்கிரிப்ட்டை, கதாபாத்திரத்தை எழுதி முடித்த உடனே அந்தக் கதாபாத்திரத்தில் ஆதி சாரை தான் நினைத்து கற்பனை செய்து பார்த்தேன். தடகள வீரருக்குத் தேவையான கட்டுமஸ்தான உடலை அவர் கொண்டிருப்பது தான் முதன்மையான காரணம். ஸ்கிரிப்ட் முடிந்ததும், நான் அவரைச் சந்தித்து ஸ்கிரிப்டை விவரிக்க முடிவு செய்தேன். அவரது அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் இருந்தன. இது நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இறுதியாக, இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவது என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. மிகச் சிறப்பான படத்தைக் கொடுக்க முயற்சி செய்வேன். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. பிரவீன்குமார் ஒ...
ராவண தோட்டத்தில் கயல் ஆனந்தி

ராவண தோட்டத்தில் கயல் ஆனந்தி

சினிமா, திரைத் துளி
'கயல்' படத்தில் மிகவும் எளிமையான மற்றும் அன்பான கதாபாத்திரத்திலும், 'பரியேறும் பெருமாள்' படத்தில் மிகவும் அப்பாவியான பெண்ணாகவும் நடித்த ஆனந்தி தற்போது சாந்தனு பாக்யராஜின் ராவண கோட்டம் படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிகச்சிறப்பான படங்கள் ஆரம்ப கட்டத்திலேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம். குறிப்பாக, 'பரியேறும் பெருமாள்' போன்ற படங்களில் நடித்த பிறகு, நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு கதைகளைக் கவனமாக தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானது. "ராவண கோட்டம்" அந்த மாதிரியான ஒரு திரைப்படம். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் ரசிகர்களைக் கவரும் மிகச்சிறப்பான ஒரு கதையுடன் வந்துள்ளார். மதயானை கூட்டம் படத்துக்குப் பிறகு மிகவும் பொறுமையுடன் இந்த ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார். சாந்தனு பாக்யராஜ் தோற்றம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கும். படப்பிடிப்பு தளத்தில் நா...
K-13 விமர்சனம்

K-13 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
K13 என்பது சோவியத் யூனியனின் பிரபலமான ஏவுகணைகளில் ஒன்று. அமெரிக்காவின் சைட்வைண்டர் எனும் ஏவுகணையை ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்து K13 ஏவுகணையைத் தயாரித்து அசத்தியது சோவியத் யூனியன். அப்படி, இப்படத்தின் க்ளைமேக்ஸில் பிரதான கதாபாத்திரமான திலீப், ஒரு சம்பவத்தைத் தனக்குச் சாதகமாய் 'ரிவர்ஸ்' செய்து பயன்படுத்திக் கொள்கிறான். ஆக, K13 எனும் தலைப்பை ரிவர்ஸ் செய்யும் சாதுரியத்திற்கான குறியீட்டுப் பெயராகக் கொள்ளலாம். பாரில் சந்தித்துக் கொள்ளும் மதியழகனும் மலர்விழியும், ஒன்றாக மலர்விழியின் வீட்டிற்குச் செல்கின்றனர். விழிப்பு வந்து மதியழகன் கண்ணைத் திறந்தால், அவன் நாற்காலியில் கட்டப்பட்டிருக்கிறான். அந்த நாற்காலியின் பின்னாலுள்ள சோஃபாவில் வலதுக்கை நரம்பு அறுக்கப்பட்டு இறந்து கிடக்கிறாள் மலர்விழி. அது கொலையா, தற்கொலையா, எதற்காக ஏன் எப்படி மலர்விழி இறந்தாள் என்ற சைக்காலஜிக்கல் மிஸ்ட்ரி தான் படத்தின் கதை. ம...
தேவராட்டம் விமர்சனம்

தேவராட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போல் தேவராட்டம் என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று. ஆனால் அத்தகைய கலைக்கும் படத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதாலும், படத்தில் வானுலக மனிதர்கள் இல்லாததாலும், படத்தின் தலைப்பிற்கு நேரடியாக ஒரே பொருளைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. தொழிலுக்காகக் கொலை செய்பவரையும், கொலையைத் தொழிலாகச் செய்பவரையும் பகைத்துக் கொள்கிறார் வெற்றி. அவர்கள் இவரை வெட்டப் பார்க்க, காவற்கார வம்சத்தைத் சேர்ந்த இவர் அனைவரையும் வெளுக்க, படம் முழுவதும் ஒரே வெட்டாட்டம் தான். கடைக்குட்டி சிங்கம் படம் இயக்குநரை ரொம்பப் பாதிச்சிருக்கும் போல, நாயகனுக்கு ஆறு அக்காக்கள். போஸ் வெங்கட், ஆறுபாலா, சூரி, முனீஷ் ராஜா முதலியவர்கள் அக்கா கணவர்களாக நடித்துள்ளனர். மூத்த அக்கா, மாமாவாகப் போஸ் வெங்கட்டும், வினோதினி வைத்தியநாதனும் குணச்சித்திரப் பாத்திரத்தில் அசத்தியுள்ளனர். நாயகனுடன் நெருக்க...
100 – காவல்துறை அதிகாரியாக அதர்வா

100 – காவல்துறை அதிகாரியாக அதர்வா

சினிமா, திரைச் செய்தி
ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் '100'. அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். மே 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்தப் படத்தை குரு ஸ்ரீ மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் சிஎஸ் பதம்சந்த் ஜெயின். “சாம் ஆண்டன் உடன் நான் இணையும் மூன்றாவது படம் 100. முந்தைய இரண்டு படங்களும் நகைச்சிவைப் படங்கள். இந்தப் படம் கதை எழுதப்படும் போதே மிகவும் சுவாரசியமாக இருந்தது. சீட்டின் நுனிக்கு வரவைக்கும் ஒரு த்ரில்லர் படம். திரைக்கதை மிகச்சிறப்பாக இருக்கும்” என்றார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த். “விக்ரம் வேதா, அடங்க மறு, 100, அயோக்யா என அடுத்தடுத்து போலீஸ் படங்களாக நான் இசையமைத்து வருகிறேன். வெளியில் இருந்து பார்த்தால் எல்லாப் ...
ஆதி 2 குறும்பட விமர்சனம்

ஆதி 2 குறும்பட விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆதி என்ற குறும்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார் இயக்குநர் அரவிந்த். ஆதி என்பதை ஆதி மனிதன் என்பதற்கான குறியீட்டுச் சொல்லாகக் கொள்ளலாம். Man from Earth என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் பாகத்தில், நாயகன் ஆதி, பல்லாயிரம் வருடமாக இறப்பின்றி வாழ்வதாக நிறுவி இருப்பார்கள். பத்து வருடத்திற்கு ஒருமுறை அடையாளத்தையும் இடத்தையும் மாற்றிக் கொள்ளும் ஆதி, இம்முறை அடையாளத்தை மாற்றிக் கொள்ளாமல் இடத்தை மட்டும் சிங்கப்பூருக்கு மாற்றிக் கொள்கிறார். அவரிடம் பயிலும் மாணவர்கள் ஆதியின் உண்மையான அடையாளத்தைத் தெரிந்து கொள்கின்றனர். அவர்களுக்குள் நடக்கும் சுவாரசியமான உரையாடல்தான் இரண்டாம் பாகத்தின் கதை. வரலாற்று ஆசிரியராக முதல் பாகத்தில் வந்த மொஹிதீனிடமிருந்து படம் தொடங்குகிறது. அவர் ட்யூஷன் எடுக்கும் குழந்தைகளிடம், லெமூரியா என்கிற குமரிக்கண்டம் பற்றி விவாதிக்கிறார். ஆதி, குமரிக்கண்டத்தில் தான் வாழ்ந்த...