சினிமா

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்
'திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் தொல்காப்பியன்.
"சரிகமபதநி" எனும் ஏழு ஸ்வரங்களைப் போல 7 தலைப்புகளில் தொல்காப்பியன், தன் மேன்மைத் தமிழில் , அவருடைய உளவியல் பார்வையைப் படரவிட்டு, சமூகம், கலை, பண்பாடு ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தி மிகச் சிறந்த ஆய்வுப் புத்தகத்தைப் பொருத்தமான நேரத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்தப் புத்தகம் ஒரு 'சினிமா அறிவியல் (Cinema Science)' புத்தகம் என்ற வகைப்பாட்டில் முதன்மைப்படுத்தி வைக்கலாம். ஓர் எழுத்தாளன் எழுத்துக்களை எப்படிக் கோர்த்து எழுதவேண்டும் என்பதற்கு இந்தப் புத்தகமே சரியான முன்னுதாரணம். முனைவர் பட்டம் பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்ட புத்தகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு அற்புதமான செய்திகளைத் தாங்கி நிற்கிறது.
சினிமாவைப் பற்றிய புரிதலும் ஆர்வமும், அதன் மீது கொண்ட காதலும் வெறியும், ஒரு சேரக...

மார்டல் இன்ஜின்ஸ் விமர்சனம்
இருக்கும் இடத்தில் இருந்தே உலகின் பெரும்பகுதியை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்து. அத்தகைய சூரியன் அஸ்தமிக்காத தேசம் என்ற கர்வம் கொண்ட இங்கிலாந்து அரசின் தலைநகரமான லண்டன் ஒருவேளை நகரத் தொடங்கினால்? ஆம், முழு நகரமே பெரிய வாகனம் போல் சக்கரங்களில் நகரத் தொடங்கிவிட்ட காலத்தில், லண்டன் என்னென்ன பாதிப்புகளை உருவாக்கும் என்பதுதான் படத்தின் கதை. பிலீப் ரீவ், 2001 இல் எழுதிய 'மார்டல் இன்ஜின்ஸ்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது.
கதிர்வீச்சின் பாதிப்பில் நிலமும் நீரும் பாழாகி விட, மக்கள் ராட்சஷ வாகனங்களில் அடைக்கலம் புகுகின்றனர். அதற்கும், 'அழியக்கூடிய இயந்திரங்கள்' எனப் பொருள்படும்படி தலைப்பு வைத்துள்ளனர். எல்லாமும் அழியும், இங்கிலாந்து பேரரசிலும் சூரியன் அஸ்தமிக்கும் என்பதே படத்தின் உட்கரு.
ஒரு பெரும் நகரமே சக்கரங்களில் பயணிக்கிறது என்ற மிகு கற்பனையை மிக அற்புதமாகத் திரையில் கொண்டு ...

“கஜா பேரிடரிலிருந்து மீள அனைவரும் ஒன்று சேரவேண்டும் – நடிகர் ஆதி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் விவசாய மக்களுக்கு பல இளைஞர்கள் பொது சேவை மையங்கள் மூலம் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் திரு. ஆதி மற்றும் அவரின் குழு புயலால் பாதிக்கப்பட்டு, மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படாத பகுதிகளைக் கண்டடைந்து பேராவூரணி, அறந்தாங்கி பகுதியைச் சுற்றியுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 520 குடும்பங்களுக்கு, மிகவும் முறையாக அந்தந்த குடும்ப ஆவணங்களைக் கொண்டு, தற்போதைய முக்கிய தேவையான சுமார் 5டன் எடை கொண்ட பொருட்கள் - தார்பாய் - சோலார் லைட்- கொசுவலை - போர்வை - மருந்துகள்-மற்றும் உணவு பொருட்களை 1-12-2018 அன்று வழங்கினர்.
மேலும், "அங்கு சென்று பார்த்ததில், நினைத்ததை விட மிகப் பெரிய பேரிடருக்கும் ஆளாகியுள்ளனர் என்பது வேதனை தருகித்ச்து. இதிலிருந்து அம்மக்கள் மீளவும், விவாசாய மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பவும், அனைவரும்...

சீமத்துரை விமர்சனம்
சீமை - அரசர் ஆண்ட நிலப்பகுதி அல்லது வெளிநாடு என இரு வேறு பொருளைக் கொள்ளலாம்; துரை - இந்தியாவில் வசித்த ஐரோப்பியர்களைக் குறிக்கும் சொல். ஆக, சீமைத்துரை என்றால் அதிகாரத் தோரணை மிகுந்த நடத்தையை உடையவர் எனப் பொருள் கொள்ளலாம். நாயகன் அப்படிப்பட்ட குணவார்ப்பு உடையவரெல்லாம் இல்லை. ஆனால், அவரது அம்மாவிற்கு தன் மகன் சீமத்துரை என்ற நினைப்பு.
ஊரில் ஏதாவது உரண்டையை இழுத்துவிடும் கல்லூரி மாணவன் மருது. அவனுக்குப் பூரணியைக் கண்டதுமே முதல் பார்வையில் காதல் வருகிறது. அந்தக் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
'96 படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக வரும் வர்ஷா பொல்லம்மா தான் படத்தின் நாயகி. அப்பாவின் அன்புக்கும், மருதுவின் காதலுக்கும் இடையில் தவிக்கும், பூரணி எனும் பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். அவரது பெரிய கண்களுக்கு மட்டும் க்ளோஸ்-அப் வைத்துள்ளார் திருஞானசம்பந்தம். கண்களால் தன் உணர்வுகளைப் ...

மார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன்
நவீன வாகனங்கள் மற்றும் மனிதர்கள் சக்கரத்தில் பயணிப்பதைத் திரையில் பலமுறை கண்டிருக்கிறோம். ‘மார்டல் இன்ஜின்ஸ்’ எனும் படத்தில், அதற்கெல்லாம் அடுத்த கட்டமாக லண்டன் மாநகரமே சக்கரத்தில் பயணிக்கிறது.
‘மார்டல் இன்ஜின்ஸ்’ என்ற பெயரில் பிலிப் ரீவ் எழுதிய ஒரு நாவலை மையமாக வைத்து கிறிஸ்டியன் ரிவர்ஸ் இயக்கியுள்ள இந்த விஞ்ஞான நவீனம், லண்டன் நகரின் பின்னணியில் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கற்பனைக் காவியம்.
‘கிங் காங்’, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ தொடர் படங்கள், ‘தி ஹாபிட்’ தொடர் படங்கள் போன்ற மகத்தான படைப்புகளைப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கித் திரையில் உலா விட்ட பீட்டர் ஜாக்சன் இப்படத்தின் இணை தயாரிப்பாளர். 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான ரீதியிலான சில நிகழ்வுகளின் விளைவாக, மனித குலமே உருமாறி பல மாறுதல்களை ஆரத் தழுவிக் கொண்ட ஒரு காலகட்டம். ஒருவரையொ...

2.0 விமர்சனம்
ஒரு படத்திற்கான பட்ஜெட் 500 கோடி என்பது வருங்காலங்களில் சகஜமாகக்கூடும். ஆனால், தற்பொழுது, இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக அந்த மைல்கல்லைத் தமிழ் சினிமா தொட்டுள்ளது என்பது மிகப் பெருமைக்குரிய அசாதாரணமான நிகழ்வு. சூப்பர் ஸ்டாராகிய ரஜினி மட்டுமே இதற்கு முழுக்க முழுக்கக் காரணம். அசாதாரணத்தைச் சாத்தியமாக்கிய லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ்க்கே எல்லாப் புகழும்!
படம் திகட்டத் திகட்ட விஷுவல் விருந்தை அளிக்கிறது. திரையை விட்டுச் சீறி வரும் ரஜினியின் தோட்டாகளைக் காணக் கண்டிப்பாகப் படத்தை 3டி-இல் பார்க்கவேண்டும். டைட்டில் கார்டிலேயே, பார்வையாளர்களை 3டி தொழில்நுட்பம் பிரம்மிக்க வைத்துவிடுகிறது.
பெரிய பூர்வாங்க பில்டப்கள் இல்லாமல், கதைக்குள் உடனடியாகச் சென்று விடுகிறது படம். சென்னையைச் சுற்றி 200 கி.மீ.இல் உள்ள செல்ஃபோன்கள் எல்லாம் பறந்து மாயமாகின்றன. அது ஏன், எப்படி, யாரால் நிகழ்கிறது என்பதும், அதை வசீகரனும...

ஃப்ரெஞ்சுக் கோட்டையில் படமாக்கப்பட்ட பயங்கரமான ஆளு
“நம் இந்திய திருநாடு சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. இவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்துள்ளனர். அந்த அரிய கலையை சாமானிய மனிதர் கைகொள்ளும் போது, அவன் சந்திக்க கூடிய மாபெரும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.
இந்திய மண்ணில், இப்படிப்பட்ட அரிய சக்திகள் குறித்தோ, சித்தர்களின் அரிய ரகசியங்கள் குறித்தோ இதுவரை யாரும் சொன்னதில்லை. பல்வேறு நூல்கள், ஓலை சுவடிகள் மற்றும் புராணங்கள் உள்ளிட்ட பலவற்றில் இருந்து கண்டுபிடித்த விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையோடு, பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கி வருகிறோம்.” என்றார் நடிகரும் இயக்குநருமான அரசர் ராஜா.
இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அரசர் ராஜா, முதலில் வேறு ஹீரோவை வைத்து இப்படத்தை இயக்க இருந்த நிலையில், ஹீரோ கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரே ஹீரோவாகவும் நடித்துவிட்டாராம்.
இப்படத்தின் படப்ப...

இதுதான் காதலா – புதிய பாணி விஞ்ஞான காதல் கதை
குறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி.எஸ்.முருகன் தயாரித்து வரும் படம் “இதுதான் காதலா”. இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுக கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.
இது விஞ்ஞான ரீதியான கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதால் இதில் விஞ்ஞான மனிதனாக இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜசிம்மன் நடித்திருக்கிறார். காதல் என்பதை காலம்தான் நிர்ணயிக்கும் என்பதையும் வலியுறுத்திக் காதலையும் கணினியும் இணைத்து புதிய பாணியில் திரைக்கதை அமைத்து “இதுதான் காதலா” படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.
இதில் கதையின் நாயகனாக சரண், நாயகியாக அஷ்மிதா இரண்டாவது நாயகியாக ஆயிஷா, மனித ரோபோவாக இயக்குநர் ராஜசிம்மன், காதல் சுகுமார், கூல் சுரேஷ், பாலு ஆனந்த், பயில்வான் ரங்கநாதன், சின்ராஜ், திருப்பூர் தெனாலி, தென்னவராயன், பாலாம்பிகா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
>> தயாரிப்பு - வி.எஸ்.முருகன்
>> ஒள...

வண்டி விமர்சனம்
டுட்டூ (Duttu) எனும் மஞ்சள் நிற யமஹா RX 135-இன் மூன்று பயணங்களைப் பற்றிய கதை இது.
வேலைக்குச் செல்ல கிருஷ்ணாவிற்கு ஒரு டூ-வீலர் தேவைப்படுகிறது; செயினை அறுத்து நகையைக் கொள்ளையடிக்க டிக்ஷனிற்கும் செளகத்துக்கும் ஒரு பைக் தேவைப்படுகிறது; காதலி ரீத்தாவை ஷாப்பிங் கூட்டிச் செல்ல தீபக்கிற்கு ஒரு வண்டி தேவைப்படுகிறது. டுட்டூவில் நடக்கும் இந்த மூன்று பயணங்களையும், வேலைப் பயணம், சாகசப் பயணம், காதல் பயணம் என மூன்று அத்தியாயங்களாய்ப் பிரித்து, ஒரு நேர்க்கோட்டில் இணைக்கிறது திரைக்கதை.
பயண அத்தியாயங்கள் தொடங்கும் முன், கிருஷ்ணாவின் வாழ்விடம் பற்றியும், அவனது நண்பர்கள் பற்றியும் மிக நீண்டதொரு அத்தியாயம் உள்ளது. விதார்த்திற்கு கிருஷ்ணாவாக நடிக்க நல்லதொரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார் இயக்குநர் ரஜீஸ்பாலா. ஆனால், சத்தமாக வாயு பிரித்து, ரபீக் தான் அந்த வளாகத்தில் இருப்போரை எழுப்பிவிடுவான் என்பதெல்லாம்...

‘மீல் டிக்கெட்’ எனும் அட்சய பாத்திரம்
இந்த வருடம் வந்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கியமான திரைப்படம், The Ballad of Buster Scruggs 2018 (பஸ்டர் ஸ்க்ரக்ஸுடைய பிரபலமான பாடல்).
கோயன் சகோதரர்கள் எழுதி இயக்கியது. கோயன் சகோதரர்கள் சம கால ஹாலிவுட்டின் தனித்துவமான படைப்பாளர்கள். Fargo, No country for old man போன்ற என்றும் நினைவில் தங்கும் படங்களை அளித்தவர்கள்.
இந்தத் திரைப்படம் Western ஜானரில் Anthology வகையைச் சார்ந்த திரைப்படம். Western ஜானர் என்றாலே பரந்த வறட்டு நிலங்கள், குதிரையுடன் சுற்றும் கௌபாய்கள், சாரட் வண்டி, கிளாசிக்கான இசை என்று 200 வருடங்களுக்கு முந்தைய அமெரிக்க நிலப்பரப்பின் கதைகள் உற்சாகம் தரும்.
அந்தப் பின்னணியில், ஒரு நாவலைப் போல இரண்டு மணி நேரம் ஒரு கதையைக்கூறாமல், சிறுகதைத் தொகுப்பைப் போல 6 குறும்படங்களை இரண்டு மணி நேரத்தில் அடக்கியிருக்கிறார்கள். இந்த வகை anthology படங்களில் சில வருடங்களுக்கு முன்னாடி வ...






