Shadow

சினிமா

மாணவர்களின் ‘எழுமின்’ – விவேக்

மாணவர்களின் ‘எழுமின்’ – விவேக்

சினிமா, திரைச் செய்தி
'வையம் மீடியாஸ்' சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து இயக்கி இருக்கிற திரைப்படம் “எழுமின்”. தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இந்த விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” திரு. கடம்பூர் ராஜு, “விளையாட்டு துறை அமைச்சர்” திரு. பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் தயாரிப்பாளரும் இயக்குநருமாகிய V.P.விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு, “இவ்வளவு மாணவர்கள் மத்தியில் இந்த விழா மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது. நடிகர் விவேக் எங்கள் ஊரைச் சேர...
நண்பனின் ‘கனா’வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்

நண்பனின் ‘கனா’வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது கனா திரைப்படம். தனது நண்பன் அருண்ராஜா காமராஜாவிற்காகப் படத்தைத் தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன். "அருண்ராஜா எழுதிய எல்லாப் பாடலும் பெரிய ஹிட் ஆகும்போது, நான் அருண்ராஜாவை இப்படியே செட்டில் ஆகிடாத என்று திட்டுவேன். அவன் இயக்குநர் ஆக வேண்டும் என்பது தான் என் கனவும். நம்ம ஊர் பசங்க விளையாடும் தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதை எழுதச் சொன்னேன். அவன் இண்டர்நேஷனல், அதுவும் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதையை எழுதிட்டு வந்தான். நம்ம ஊர்ல நடிக்க ஹீரோயின எங்கடா தேடுறது என்று நான் சொன்னேன். நானே இந்தப் படத்தை தயாரிக்க போகிறேன் என்று சொன்னேன். இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் படம் என்ற பெருமையோடு வெளியாகும் படம், வெளிநாட்டில் யாராவது பார்த்தால் சிரிச்சிடக் கூடாது என்ற பயம் இருந்தது. மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாற...
களரி விமர்சனம்

களரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
களரி என்பது பழந்தமிழர் தற்காப்புக் கலை. 'போர்க்களம்' என்ற பொருளில் படத்தின் தலைப்பு உபயோகிக்கப்பட்டுள்ளது. மிகத் தைரியமான பெண்ணான தேன்மொழி மீது பாசமாக உள்ளார் பயந்தாங்கொள்ளி அண்ணன் முருகேஷ். தங்கையின் கல்யாணத்திற்காக ஓடியோடி உழைக்கிறார். அன்வரைக் காதலிக்கும் தேன்மொழிக்கு, மூர்த்தியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மூன்று மாதங்களில், தேன்மொழி தன்னைத் தீயிட்டுக் கொள்கிறாள். ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழும் முருகேஷ் தன் தங்கையின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்துப் பழி வாங்குகிறாளா என்பதுதான் படத்தின் கதை. கொச்சியில் குடியேறிய தமிழர்கள் வசிக்கும் பகுதியான வாதுருத்தி தான் படத்தின் களம். கதாபாத்திரங்கள் அனைவரும் கேரளாவிலேயே பிறந்த தமிழர்கள். நாயகனின் குடிக்காரத் தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் தவிர்த்து அனைவரும் மலையாளம் கலக்காத தமிழே பேசுகின்றனர். படத்தின் தயாரிப்பாளரான செனித் கெலோத...
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காஷ்மீர் ஆசிபா, அயனாவரம் சிறுமி போன்றவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்ணுறும்பொழுது, மனிதரகள் இவ்வளவு ஆபத்தானவர்களா என்ற நடுக்கம் அடிமனதில் இருந்து எழுந்தது. சக மனிதர்கள் என்று மனதில் எழும் நெருக்கம் மெல்ல அமிழ்ந்து, இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் எழுகிறது. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் அத்தகைய பயத்தை விதைப்பவர்களில்லை. சிறை சென்றுவிட்டு வரும் மாமன் டேவிட்டும், ரோட்டில் அநாதையாகத் திரிந்து அடிபட்டு வளரும் மருமகன் தாமஸும் இணைந்து ஸ்வேதாவைக் கடத்துகின்றனர். ஸ்வேதா, தாமஸின் காதலி. ஸ்வேதாவும், தாமஸும் இணைந்து டேவிட்டை ஏமாற்றி எல்லாப் பணத்தையும் சுருட்ட முடிவு செய்கின்றனர். யார் யாரை ஏமாற்றுகின்றனர் என்பதே படத்தின் கதை. ஃபிரான்சிஸ் டி'செளசாவாக யோகி பாபு நடித்துள்ளார். தாமஸின் ரூம் மேட்டாக வரும் இவர் நகைச்சுவைக்குப் பெரிதும் உதவிடவில்லை. ஸ்வேதாவின் அப்பாவாக ஜெயக...
மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

சமூகம், சினிமா, திரை விமர்சனம்
குறிஞ்சி நிலத்தின் கரடுமுரடான வாழ்வியலை அட்டகாசமாகப் பதிவு செய்துள்ளனர். கும்மிருட்டு விலகாத விடியற்காலையில் எழும் ரங்கசாமி, மலையில் ஏறியிறங்கும் தூரம் மிக நீண்டது. அவரது வேலை என்பது ஏலக்காய் மூட்டையைச் சுமந்து கொண்டு மலையில் இறங்கும் சுமைக்கூலி வேலை. ஒரு கையளவு நிலம் வாங்க நினைக்கும் அவனது வாழ்வு, அவன் தினமும் பயணிக்கும் மலைப்பாதை போலவே ஏறியிறங்கி ஒரு வெற்றுவெளியில் முடிகிறது. தேனி ஈஸ்வர். ஒளிப்பதிவில் மாயம் செய்துள்ளார். ஒரு வாழ்க்கையை அதன் அருகில் இருந்து பார்த்த உணர்வையும், கோம்பையில் இருந்து கேரள எல்லை இடுக்கி மாவட்டம் வரை மலையைச் சுற்றிப் பார்த்த ஒரு திருப்தியையும் தருகிறது படத்தின் விஷுவல். மனம் பிசகிய பாட்டி ஒருவர் தன் கையிலுள்ள வளையல்களை எண்ணிக் கொண்டிருப்பார். தகதகக்கும் பொன்னிற சூரிய வெளிச்சத்தின் பின்னணியில் வரும் அந்த ஷாட்டு ரசனையின் உச்சம். படத்தில் வரும் கதாபாத்திரங்களில் ...
ரெட் ஹில்ஸில் பி.வி.ஆர். சினிமாஸ்

ரெட் ஹில்ஸில் பி.வி.ஆர். சினிமாஸ்

சினிமா
சென்னையில் தங்களது நான்காவது திரையரங்கத்தைத் திறந்துள்ளது பி.வி.ஆர். சினிமாஸ்க்குக் குழு. முன்னதாக, அமைந்தகரையில் அம்பா ஸ்கைவாக்கிலும், வேளச்சேரி கிராண்ட் மாலிலும், மீனம்பாக்கம் விமான நிலையம்  எதிரே கிராண்ட் கலாடாவிலும் ஆகிய மூன்று இடங்களில் பி.வி.ஆர். குழுமத்தின் திரையரங்குகள் உள்ளன. தற்போது, சென்னை செங்குன்றத்திலுள்ள SKLS கேலக்ஸி மாலில், ஐந்து திரைகள் கொண்ட அரங்கத்தை, ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று திறந்துள்ளனர். ...
சிவகார்த்திகேயனின் கனா

சிவகார்த்திகேயனின் கனா

சினிமா, திரைச் செய்தி
மரகத நாணயம் படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், அனிருத்தின் குரலில் "கனா" படத்தில் ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளார். "அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்தப் பாடலைப் பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது. அந்தப் பாடல் பதிவின் முழு அமர்விலும் நாங்கள் மிகப் பாசிடிவாக உணர்ந்தோம். அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது" என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கனா' படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புறப் பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு. "நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சி செய்தோம். வழக்கமாகப் பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும். ஆனால் நாங்கள் அதைப் பாரம்...
லக்ஷ்மி – தி டான்ஸர் தித்யா

லக்ஷ்மி – தி டான்ஸர் தித்யா

சினிமா, திரைச் செய்தி
ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் நடனத் திரைப்படம் 'லக்‌ஷ்மி'. நடனப்புயல் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி 'தித்யா' ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்குச் சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. "லக்‌ஷ்மி என் கனவு திரைப்படம். ஒரு டான்சராக இருந்து விட்டு இந்தத் திரைப்படத்தில் நடித்திருப்பது சிறப்பான அனுபவம். ஐஸ்வர்யா தான் என்னை அழைத்து, 'நீ இந்தப் படம் பண்ணனும்' என்று சொன்னார். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த குழந்தைகள் மிகப்பெரிய ஆளாக வருவார்கள்" என்றார் நடிகை ஷோஃபியா. இசையமைப்பாளர் சாம் C.S."இதுவரை நிறைய ஹாரர், த்ரில்லர், மாஸ் திரைப்படங்களுக்கு தான் இசையமைத்திருக்கிறேன். முதன் முறையாக ஒரு ...
கோலமாவு கோகிலா விமர்சனம்

கோலமாவு கோகிலா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோகிலாவின் அம்மா வடிவுக்கு நுரையீரல் புற்றுநோய் இரண்டாம் நிலையில் உள்ளது. தனது அம்மாவைக் குணபடுத்த 15 லட்சம் செலவாகும் என மருத்துவர் சொல்லிவிட, அப்பணத்திற்காகக் கோகிலா எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை. ஒப்புக்குச் சப்பாணியாகக் கூட ஒரு நாயகன் இல்லாத முழு நீள ஹீரோயின் ஓரியன்டட் படம். நயன்தாராவை நம்பி மட்டுமே இத்தகைய முயற்சி சாத்தியம். பாவாடை சட்டையில் அப்பாவியான முகத்துடன் படம் முழுவதும் நயன்தாரா மட்டுமே! இடைவேளைக் காட்சியில் நயன்தாரா காட்டும் மனப்பாங்கு (ஆட்டிட்யூட்) நகைச்சுவையாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அந்த வன்மம் மிகவும் அச்சுறுத்துகிறது. காதலில் விழுந்த சேகராக யோகி பாபு. எல்.கே எனும் லக்‌ஷ்மண குமாராக அன்புதாசன் நடித்துள்ளார். அவரது அறிமுகமே அட்டகாசம் எனினும் யோகி பாபுவுடனான அவரது காட்சிகளில் பார்வையாளர்கள் வெடித்துச் சிரிக்கிறார்கள். 'சாய்பாபா படத்தை 30 பேருக்கு ஷேர் பண்ணா...
ஓடு ராஜா ஓடு விமர்சனம்

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எழுத்தின் மேலுள்ள ஆர்வத்தில் வேலையை விட்டு எழுத்தாளர் ஆகிவிடுகிறான் மனோகர். நர்ஸாக வேலை புரியும் அவனது மனைவி மீரா தான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள். மனோகரிடம் பணம் கொடுத்து, செட்-டாப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்கிறாள் மீரா. தனது நண்பன் பீட்டருடன் செட்-டாப் பாக்ஸ் வாங்கக் கடைக்குப் போகும் மனோகர், ஒன்றிலிருந்து மற்றொன்றெனப் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான். அந்தச் சிக்கல்களில் இருந்து மனோகர் மீண்டு, வீட்டுக்குச் செட்-டாப் பாக்ஸ் வாங்கிக் கொண்டு போனானா என்பதுதான் படத்தின் கதை. ஆனாலும், கதையை இப்படி நேர்க்கோட்டிற்குள் அடைத்து விட முடியாது. மூன்று கிளைக் கதைகள், மையக் கதையுடன் நான்-லீனியராக ஒட்டி உறவாடுகிறது. ஒன்று, வேஷ்டி சட்டை கேங் சகோதர்களான காளிமுத்து மற்றும் செல்லமுத்துவின் தந்தையான பெரியதேவர், தன் மகன்கள் இருவரும் ரெளடியிசத்தை விட்டுவிடவேண்டுமெனச் சத்தியம் வாங்கிக் கொள்கிறார். தந்த...
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ என்ற தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் பாட்டு, ஒரு அழகான காதல் பாடல். அந்தப் பாடலின் தொடக்கத்தைத் தலைப்பாக வைத்திருக்கும் இப்படமோ, ‘செயின் ஸ்னாட்சிங்’ பற்றிய படம். சுலபமாய் உருக்கிவிடக்கூடிய தங்கம் தான், மறைந்திருந்து பெண்களின் கழுத்தை மர்ம கும்பல் நோட்டமிடக் காரணம். பெண்களின் செயினை அறுப்பது வெறும் கொள்ளைக் குற்றம் மட்டுமில்லை, அது அட்டெம்ப்டட் மர்டரில் வரும் என்பதைப் படம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. நகை அணிந்து கொண்டு, இரவில் ஒரு பெண் தனியாக, என்று நடக்கிறாளோ அன்று தான் உண்மையாகச் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் எனக் காந்தி சொன்னதை மாற்றி, என்று ஒரு பெண் பகலில் தைரியமாக நகையணிந்து நடக்க ஆரம்பிக்கிறளோ, அன்று தான் சுதந்திரம் எனப் படத்தின் இறுதியில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளார் இயக்குநர். பெண்களின் தங்கச்சங்கிலியை அறுக்கும் கும்பலிடம் இருந்து சங்கிலியைப...
செந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2

செந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2

சினிமா, திரைத் துளி
கழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பைக் கவனிக்கிறார். மூணாறில் படமாக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் நேற்று முதல் படத்தின் டப்பிங் தொடங்கியது. செந்நாய் வேட்டை பற்றிய படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது....