சினிமா

குரங்கு பொம்மை விமர்சனம்
புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் என்ற குறும்படம், இயக்குநர் நித்திலனுக்கு 'குரங்கு பொம்மை' படத்திற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்ததுள்ளது. அதைச் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார் நித்திலன்.
ஒரு பேருந்து நிறுத்தத்தில், பெரியவர் ஒருவரின் குரங்கு பொம்மை அச்சிடப்பட்ட பை ஒன்று நாயகனுக்குக் கிடைக்கிறது. அந்தப் பையில் என்ன உள்ளது என்றும், அது நாயகனின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்துகிறது என்பதும் தான் படத்தின் கதை.
படத்தின் முதற்பாதி தன்னுள் பார்வையாளர்களை இழுத்துக் கொள்கிறது. நடிகர்கள் அனைவரையும் அறிமுக இயக்குநர் நித்திலன் மிக அழகாக உபயோகப்படுத்தியுள்ளார். இயக்குநர் பாரதிராஜாவுக்குள் இருக்கும் அசலான நடிகனை வெளிக்கொணர்ந்துள்ளார் நித்திலன். நடிப்பிலும் தான் இமயம் தானென நிரூபித்துள்ளார். பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டிப் படத்தில் வரும் அத்தனைப் பேரையும் ரசிக்க முடிவது தான் படத்தின் சிறப்...

கருப்பன் – ஸ்டில்ஸ்
" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]

ஜூலியன் மூர் – தி கோல்டன் விபரீதம்
2014 இல் வெளியாகி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம், ‘கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்’. டேவ் கிபன்ஸும் மார்க் மில்லரும் இணைந்து எழுதிய காமிக் புத்தகமான 'தி சீக்ரெட் சர்வீஸ்’-ஐத் தழுவி உருவாக்கப்பட்ட படம் அது.
‘எக்ஸ்-மேன்: ஃபர்ஸ்ட் கிளாஸ்’ படத்தை இயக்கியிருந்த மேத்யூ வான் தான் அதனையும் இயக்கி இருந்தார். அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை, சண்டைக் காட்சிகளில் புதிய யுக்திகள் என இப்படம் படு சுவாரசியமான முறையில் உருவாகி, வியாபார ரீதியாக உச்சத்தைத் தொட்டது!
ஜேன் கோல்ட்மேனும், மேத்யூ வானும் இணைந்து திரைக்கதை அமைக்க, மீண்டும் மேத்யூ வான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். கோலின் ஃபிர்த், தாரோன் எகேர்டன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் தோன்ற, ஜூலியானா மூர் வில்லியாக தோன்றி அசர வைத்துள்ளார். மேலும், ஆஸ்கர் பரிசு பெற்ற ஹேலி பெரி, ஜெஃப் ப்ரிட்ஜஸ், மார்க் ஸ்ட்ராங், எல்டன் ஜான் போன்றவர்களும் முக்கிய வேடங்களில் தோ...

பட்டி கேக்ஸ் விமர்சனம்
நம்முள் ஏதோ ஒரு திறமை இருக்கிறது. அந்தத் திறமையைக் கொண்டு தட்டினால் வெற்றியின் கதவுகள் திறக்குமா திறக்காதா எனத் தெரியாது. திறந்தால் பிரச்சனையில்லை. ஒருவேளை திறக்காமல் போனால்? இல்லை திறந்த இடத்தில் ஏமாற்றம் மிஞ்சி நின்றால்? வாழ்வையே வெறுத்துப் போகச் செய்யும் தோல்வியும் அவமானமும் தொடர்ந்து வந்தால்? இதற்கு மேலும், இந்தத் திறமையை நம்பிக் கொண்டிருக்க வேண்டுமா என்ற விரக்தி ஏற்பட்டால்? அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் திறமையின் கதவுகளுக்குப் பெரும் தலைவலியாக வந்து நின்றால்? இவை எல்லாவற்றிற்கும் மேல் உங்கள் உடலமைப்பே உங்களுக்கு எதிரியாக வந்து நின்றால்? இதில் ஏதோ ஓர் 'ஆல்' நம் மீது மோதிய அடுத்த நொடியே நாம் உடைந்து நொறுங்கியிருப்போம் அல்லது நம் திறமைக்கு ஒரு வந்தனம் வைத்துவிட்டு எந்தத் திறமையின் மீது காதலும் நம்பிக்கையும் கொண்டு அலைந்தோமோ, அந்தத் திறமைக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லாத ஓரிடத்தில் சமரசம் ...

தப்பாட்டம் விமர்சனம்
இந்தப் படத்தின் நாயகன், 'பப்ளிக் ஸ்டார்' துரை சுதாகர் எனும் அறிமுக நாயகன் ஆவார். தப்பாட்டம் ஆடுபவராக நடித்துள்ளார். வாழ்க்கையைத் தப்பாக ஆடினால் தோற்று விடுவோம் என்றும் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.
படத்தின் காலமும் கதையும் 1984 இல் நிகழ்வதாகப் படம் தொடங்கும் பொழுதே சொல்லப்படுகிறது. கதாபாத்திரங்கள் அனைவரும் சாராயக்கடையே கதியென்ன உள்ளார்கள். வேறு வேலையின்றிக் குடித்து விட்டு சலம்புவதுதான் நாயகனுக்கும், அவன் கூட்டாளிகளுக்கும் வேலை என்று முதற்பாதி முழுவதும் காட்டுகிறார் இயக்குநர் முஜிபூர் ரஹ்மான். தப்பாட்டத்தின் சிறப்பை வசனமாகக் கூட எங்கேயும் பதியாதது உறுத்துகிறது.
நாயகனின் மாமாவாக இயக்குநரும் வேடம் ஏற்று நடித்துள்ளார். அவர் சாப்பிட்டு விட்டு பீடியைப் புகைக்க நினைக்கும் பொழுதெல்லாம், குடிக்காரர்கள் யாரேனும் வந்து அவரைத் தொந்தரவு செய்கிறார்கள் எனக் கதைக்குத் தேவையில்லாக் காட்சிகளை எல்லாம் ஒன்...

விவேகம் விமர்சனம்
நாயகன் அஜித்தும், இயக்குநர் சிவாவும் மூன்றாம் முறையாக இணைகின்றனர். கிராமம், நகரம் என்று பயணித்தவர்கள், தேசிய எல்லைகளைக் கடந்து, Counter Terrorist Squad இல் பணிபுரியும் சர்வதேசக் காவலனாக அஜித்தை ப்ரோமோட் செய்துள்ளனர்.
உலகையே ஆட்டிப் படைக்க நினைக்கும் நிழல் சமூகத்திற்கு விலைக்குப் போய் துரோகமிழைக்கிறார்கள் ஏஜென்ட் ஏ.கே.வின் நண்பர்கள். துரோகத்தில் இருந்து மீண்டு, நண்பர்களையும் பழி வாங்கி, உலகையும் எப்படிக் காக்கின்றார் என்பதுதான் படத்தின் ஜேம்ஸ் பாண்ட் பாணி கதை.
அக்ஷரா ஹாசனின் அத்தியாயம் மிக அழகாய் வந்துள்ளது. நடாஷா என்ற பாத்திரத்தில் அவர் முகம் காட்டும் பதற்றம், அவரது ஹேர்ஸ்டைல், உடை என எல்லாமுமாகச் சேர்ந்து அற்புதமாய் உள்ளது. நடாஷா ஒரு ஹேக்கர் என்பதைக் கேள்விகளின்றி ஏற்க முடிகிறது. அவரைப் பிடிக்க, அஜித் செயல்படுத்தும் பிளான் 'பி (B)' ரசிக்க வைக்கிறது.
குண்டு மழைக்கு நடுவில் அநாயாசமாய்ப் ...

விக்ரம் வேதா – க்ளைமேக்ஸ் புதிர் முடிச்சவிழ்த்தல்
சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கலந்துரையாடலில், விக்ரம் வேதா படத்தின் க்ளைமேக்ஸ் பற்றி இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இருவரும் பகிர்ந்து கொண்டது:
"மூன்று ஆப்ஷன்களுக்கு வாய்ப்புள்ளன.
1. ஒன்று, வேதா விக்ரமைச் சுடுவது.
2. இரண்டு, விக்ரம் வேதாவைச் சுடுவது.
3. மூன்றாவது, இருவரும் தங்கள் வழியில் பிரிந்து சென்றுவிடுவார்கள்.
அவர்கள் என்னாவார்கள் என்பதை நாங்க சொல்ல விரும்பவில்லை. அதை ஆடியன்ஸின் பாயின்ட் ஆஃப் வியூவிற்கு விட்டுவிட்டோம்” என்றனர்.
இனி, இதுதமிழின் புரிதல் என்னவாக இருந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
வேதாளம் விக்கிரமாதித்யன் கழுத்தைச் சுற்றி கைகளைப் போட்டு, தோளில் தொங்கியவாறு கதைகள் சொல்லும். கதையின் முடிவில் ஒரு கேள்வி கேட்கும். விக்கிரமாதித்யன் புதிருக்குப் பதில் சரியாகச் சொல்லவில்லை எனில், விக்கிரமாதித்யன் தலை வெடித்துவிடும் என சாபமும் கொடுக்கும்.
தன்னிகரற்ற மன்னரான விக்கிரமாதித்யன...

தரமற்ற படம் தரமணி – ஏன்? எப்படி?
தரமணி படத்திற்குத் திரைக்கதை எழுத இன்ஸ்பையரான இரண்டு விஷயங்களைப் பற்றி ராம் பகிர்ந்து கொள்கிறார்.
<< 1. ஜூனியர் விகடனில் வந்த ஒரு கட்டுரை. வெளிநாட்டில் கணவன் வாழ்கிறான்; இங்கே அவன் வீட்டில் ஒரு லேண்ட் லைன் ஃபோன் வாங்குகிறார்கள். செல்ஃபோன் பரவலான உபயோகத்திற்கு வந்திராத சமயம் அது. ஃபோன் பில் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. இவ்விஷயம் பிரச்சனை ஆகிறது. கால் லிஸ்ட் எடுத்துப் பார்க்கப்படுகிறது. ஒரு நம்பருக்கு அதிகமாக அழைப்புப் போய் வந்துள்ளது. "அவன் யாரெனத் தெரியாது. நன்றாகப் பேசினான். நானும் பேசினேன்" என்கிறாள் அம்மனைவி. >>
படத்தில் இதைத் தழுவி காட்சிகளை வைத்துள்ளார் ராம். இந்த ஒரு சம்பவத்தைக் கொண்டு பொதுமைப்படுத்துவதே அபத்தமான விஷயம். ராம் ஒரு படி மேலே போய் தன் வக்கிரத்தைக் காட்சிகளாக வைத்துள்ளார். எப்படியெனில், அந்நியோன்யமாக இருப்பதாகத் தொடக்கத்தில் இருந்து காட்டப்படுபவர்கள் வீனஸ் - ...

வி.ஐ.பி. 2 சக்சஸ் மீட் – ஸ்டில்ஸ்
" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]

“அன்பைப் பரப்புங்கள்” – வி.ஐ.பி. தனுஷ்
தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’. எதிர்பார்த்தது போல் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்க புஷ்பத்தின் கணவராகப் படத்தில் நடித்திருக்கும் மைண்ட்-வாய்ஸ் விவேக், "தாணு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. வளர்ந்து வருகின்ற கதாநாயகனாக இருந்த ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர்ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்குக் கிடைத்துள்ளது. வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில், ‘சிங்கத்தின் பாலாக இருந்தால் அதைத் தங்கக் கிண்ணத்தில் வைத்துக் கொடுக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப்பார். அதே போல் தனுஷ் - சிங்கத்தின் பால்; தாணு ஒரு தங்கக் கிண்ணம்.
பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு, நீங்கள் எடுக்கும் படங்களில் வெற்றியடையும் ...

முதல் முறையாக ஒரு கன்னடப் படம்
கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விருது என்பது, கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் அவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருது. தன் முதல் படட் இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது விபத்தொன்றில் இறந்துவிட்டார் கொல்லப்படி ஸ்ரீநிவாஸ். அவர் நினைவாக அவரது குடும்பத்தினர், ஒரு திரைப்படத்தைப் பாராட்டத்தக்க விதத்தில் எடுக்கும் ஓர் அறிமுக இயக்குநருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் விருது வழ்ங்குகின்றனர். அப்படம், இந்திய மொழிப் படங்களில் எந்த மொழியிலும் இருக்கலாம்.
இந்த வருடம் அந்த விருது, ஹேமந்த் எம். ராவ் இயக்கிய, ‘கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு)’ என்கிற கன்னடப் படத்திற்குக் கிடைத்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, அசாமீஸ், மணிப்பூரி என பல்வேறு மொழியில், மொத்தம் 20 படங்களில் இருந்து இப்படம் தேரெந்தெடுக்கப்பட்டள்ளது. அல்சீமர்ஸ் நோயால் காணாமல் போகும் தந்தையைத் தேடுவதாக இப்படத்தின்...

பொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்
கூத்தப்பாடி திரெளபதி அம்மன் கோயிலில், ஆலம்பாடியைச் சேர்ந்த ஊத்துக்கோட்டானின் மகளுக்கு மொட்டை அடித்துக் கொண்டிருக்கும் பொழுது பாதியிலேயே கோயிலை மூடி வெளியில் அனுப்பி விடுகின்றனர். இதை அவமானமாகக் கருதும் ஊத்துக்கோட்டான், கூத்தப்பாடியை ஆளில்லாத ஊராக மாற்றி, திரெளபதி அம்மனின் தாய் ஊரான ஆலம்பாடிக்கே நிரந்தரமாகக் கொண்டு வர சபதம் எடுக்கிறார்.
கூத்தப்பாடியைச் சேர்ந்த ஊர்க் காதலரும், தங்க மனசுக்காரருமான கணேஷ் ஊத்துக்கோட்டானின் ஆசையில் எப்படி மண் அள்ளிப் போடுகின்றார் என்பதுதான் படத்தின் கதை.
லூசுத்தனமானவர் அன்று; ஆனால், மக்கு நாயகியாக நிவேதா பெத்துராஜ். நாயகனால் காதலிக்கப்பட மட்டுமே திரையில் தோன்றும் வழக்கமான கதாநாயகி என்பதைத் தவிர்த்துச் சொல்லப் புதிதாக ஒன்றுமில்லை. அவரை ஓர் உயர்ந்த லட்சியத்திற்காகக் காதலிப்பவராக உதயநிதி ஸ்டாலின்.
இயக்குநர் இராஜேஷ் படத்தில் வரும் நாயகன் போல் தான் என்றாலும், ஊரின...

தரமணி விமர்சனம்
'தரமணி' எனும் தலைப்பை, ஓர் ஏரியா பெயராகவோ ஸ்டேஷன் பெயராகவோ கொள்ளாமல், சாதாரண மக்களையும் ஐ.டி. மக்களையும் இணைக்கும் காரிடாரின் குறியீடாகக் கொள்ளலாம்.
பொருளாதாரச் சுதந்திரமுள்ள பெண்ணின் நடவடிக்கைகள் அவளைச் சார்ந்து வாழத் தொடங்கும் ஆணுக்கு எந்தளவுக்குப் பாதுகாப்பாற்ற உணர்வை ஏற்படுத்துமெனப் படம் தெள்ளத் தெளிவாகப் பேசுகிறது.
படிச்ச முண்டை, தேவிடியா, பிட்ச் பிட்ச் பிட்ச், இங்க புழு பிடிச்சுடும் என இந்தப் படத்தில் வரும் வசனங்களுக்கு A செர்ட்டிஃபிகேட் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் தான் இயக்குநர் ராம் நியாகமாகக் கோபப்பட்டிருக்க வேண்டும். ஐ.டி.யில்/பி.பி.ஓ.வில் வேலை செய்பவர்களே இப்படித்தான் எனக் குறை கூறும் மனோபாவத்தை இயக்குநர் ராமால் தவிர்த்துக் கொள்ளவே முடியவில்லை. நடனத்தில் விருப்பமுள்ள மனைவி வேறொருவருடன் நடனமாடுவதைப் பெரிய விஷயமாகக் கருதாத கணவனை எள்ளி நகையாடுகிறார் ராம். கார்ப்ரெட் கலாச்சாரமே...



