இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா
“இன்னிக்கு (ஆகஸ்ட் 4) ஃப்ரெண்ட்ஸ் டே. லவ்வர்ஸ் டே மாதிரி இங்க ஃப்ரெண்ட்ஸ் டே கொண்டாடப்படலை. அதற்கு காரணம், செல்வராகவன் மாதிரி இயக்குநர்கள் தான். எனக்கும் அவருக்கும் நேரடி பழக்கம் இல்லை. அவருடைய ‘மயக்கம் என்ன’ படத்திலும், என் ‘கோ’ படத்திலும் ஹீரோ ஃபோட்டோக்ராஃபர். சோ ஃபோன் பண்ணி அரை மணி நேரம் கதை சொன்னேன். ஆனா அவர் தனுஷை வச்சு பிளான் பண்ணியிருந்த அடுத்த படத்தின் கதை இதுல இருந்தது. அவர் அந்தப் படத்தையே கை விட்டுட்டார்” என்றார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.“செல்வராகவன் படம் ஒவ்வொன்னும் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அவருக்கு அவரே தான் போட்டி. இந்தப் படத்தில் என்னப் பண்ணியிருக்கார்னு பார்க்க.. சினிமாவை சேர்ந்த டெக்னிஷீயன்ஸே ஆவலாக வெயிட் பண்றாங்க. ஆர்யா.. இப்ப தான் ‘நான் கடவுள்’ பார்த்த மாதிரி இருக்கு. அதற்குள் இன்னொரு பெரிய கேரக்டர். அவரை நீங்க தினமும் காலை மகாபலிபுரத்தில் பார்க்கலாம். உடலை ...