Shadow

திரைச் செய்தி

புஷ்பா: தி ரைஸ் – அதிவிரைவு ரோலர் கோஸ்டர்

புஷ்பா: தி ரைஸ் – அதிவிரைவு ரோலர் கோஸ்டர்

சினிமா, திரைச் செய்தி
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 7 ஆம் தேதி அன்று அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியாவின் கூட்டுத் தயாரிப்பில் உருவான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்த இத்திரைப்படத்தில், கதை நாயகனாக அல்லு அர்ஜூன் தோன்ற, அவரோடு ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். ஃபஹத் ஃபாசில், தெலுங்கில் அறிமுகமாகும் முதற்படமிது என்பது குறிப்பிட்த்தக்கது. புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1, ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள சேஷாசலம் காட்டுப் பகுதிகளுக்குள் மெய்சிலிர்க்க வைக்கும் தீவிரமான பயணத்திற்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. புஷ்பராஜ் என்ற லாரி ஓட்டுநர் பாத்திரத்தில் தோன்றும் அல்லு அர்ஜூன், செம்மரக்கட்டை கடத்தல் தொழிலில் தீவிரமாக ஈடு...
“செல்ஃபோனால் கலாச்சார சீர்கேடுகள்” – இயக்குநர் பேரரசு குற்றச்சாட்டு

“செல்ஃபோனால் கலாச்சார சீர்கேடுகள்” – இயக்குநர் பேரரசு குற்றச்சாட்டு

சினிமா, திரைச் செய்தி
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு, “'பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றிப் பேசுகிறது என்று சொன்னார்கள். சிலரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல, பெண்களாலும் தான் ஏற்படுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. டிக் டாக் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற பேச்சும் சகிக்க முடியவில்லை. குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் அருவருப்பானவை. பார்க்க சகிக்க முடியவில்ல...
புத்தம் புது காலை விடியாதா @ அமேசான் ப்ரைம் – ஜனவரி 14 முதல்

புத்தம் புது காலை விடியாதா @ அமேசான் ப்ரைம் – ஜனவரி 14 முதல்

சினிமா, திரைச் செய்தி
அமேசான் ப்ரைம் வீடியோவில், விரைவில் வெளிவரவுள்ள தமிழ் குறும்படங்கள் தொகுப்பான ‘புத்தம் புது காலை விடியாதா’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இப்படத்திலுள்ள ஒவ்வொரு கதையும் தனித்துவமானது, இருப்பினும் அவை அனைத்தும் தனிப்பட்ட முறையில் நம்பிக்கையைக் கண்டறிதல் மற்றும் மனித இணைப்பின் மூலம் புதிய தொடக்கங்களைப் பெறுவதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. இவை நம்பிக்கை, காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் பற்றி இரண்டாவது கோவிட்-19 லாக்டவுனைச் சுற்றி அமைக்கப்பட்ட கதைகள். ஐந்து அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொகுப்பு, பொங்கல் பண்டிகைக் காலமான ஜனவரி 14 ஆம் தேதி அன்று ப்ரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகவுள்ளது. கதைகளில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி G கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜ...
“ரைட்டர்: தமிழ் சினிமா வளமானதாக மாறுகிறது” – பாரதிராஜா

“ரைட்டர்: தமிழ் சினிமா வளமானதாக மாறுகிறது” – பாரதிராஜா

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குநர்கள் பாரதிராஜாவும் பாக்கியராஜும், ரைட்டர் படம் பார்த்த பிறகு இயக்குநர் பிராங்ளினை வெகுவாகப் பாராட்டினார். “தமிழ் சினிமாவில், ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது. எனக்குப் ரொம்பப் பெருமையாக இருக்கிறது. இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப் பார்க்கும் பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன். இயக்குநர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குநர்களை இந்தத் தமிழ் சினிமாவுக்கு தந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்புகளும்” என்றார்...
“மாநாடு: இரண்டாவது தேசிய விருது நிச்சயம்” – இயக்குநர் வெங்கட் பிரபு

“மாநாடு: இரண்டாவது தேசிய விருது நிச்சயம்” – இயக்குநர் வெங்கட் பிரபு

சினிமா, திரைச் செய்தி
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 25 ஆவது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்தப் படத்தின் நன்றி நவில்தல் விழா, டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் வெங்கட்பிரபு, “இந்தப் படத்தின் கதையைச் சொன்னபோது உடனே ஒப்புக் கொண்ட சிம்பு, இந்தப் படத்தை ஃப்ரெஷ்ஷா புது டீமோட வொர்க் பண்ணலாம்ன்னு சொன்னார். இந்தப் படத்தோட கதைய முதல்ல டைம் லூப் இல்லாமல்தான் தயார் பண்ணி இருந்தேன். ஆனால் அந்தச் சமயத்தில் என்.ஜி.கே, சர்க்கார் போன்ற படங்கள் இதே அரசியல் பின்னணியில் வெளியானதால், அதன் பிறகுதான் டைம் லூப்புக்குக் ...
“மாநாடு: வெற்றி கிடைத்ததும் மாறக்கூடாது” – STRஇன் போக்கைக் கண்டித்த SAC

“மாநாடு: வெற்றி கிடைத்ததும் மாறக்கூடாது” – STRஇன் போக்கைக் கண்டித்த SAC

சினிமா, திரைச் செய்தி
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 25 ஆவது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்தப் படத்தின் நன்றி நவில்தல் விழா, டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “சிம்புவுக்கு நீண்ட நாள் கழித்து அவரை மேலே தூக்கிக் கொண்டு வந்துள்ள படமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதேபோல எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இது முக்கியமான படமாக அமைந்துவிட்டது.. இந்த படத்தை இரண்டு முறை தியேட்டரில் பார்த்தேன்.. கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரியான ஒரு கதையை சின்ன குழந்தைகளுக்கு கூட புரிகிற வகையில் இயக்கியுள்ள வெங்க...
“மாநாடு: என்னைப் போல பேசும் குழந்தைகள்” – மகிழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா

“மாநாடு: என்னைப் போல பேசும் குழந்தைகள்” – மகிழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா

சினிமா, திரைச் செய்தி
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 25 ஆவது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்தப் படத்தின் நன்றி நவில்தல் விழா, டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “சமீபகாலமாக ஓடிடி வந்துவிட்டது, கொரோனா வந்துவிட்டது, மழை வந்தால் கூட்டம் வராது என்றெல்லாம் பலவிதமான எதிர்மறை வார்த்தைகளாகவே பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மாநாடு திரைப்படத்தின் வெற்றி தகர்த்துவிட்டது. நல்ல படம் வந்தால் மக்கள் குடையைப் பிடித்துக் கொண்டு கூட கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்பதை இந்தப் படம் நிரூபித்துவிட்டது....
“ரைட்டர்: மாறுபட்ட கோணத்தில் போலீஸின் வாழ்க்கை” – இயக்குநர் வெற்றிமாறன்

“ரைட்டர்: மாறுபட்ட கோணத்தில் போலீஸின் வாழ்க்கை” – இயக்குநர் வெற்றிமாறன்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ரைட்டர் திரைப்படத்தின் சிறப்புகாட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். படம் பார்த்த பிறகு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் பிராங்க்ளினையும் கட்டிப்பிடித்து பாராட்டுக்களைத் தெரிவித்தார். “மிக முக்கியமான படத்தைத் தமிழ் சினிமாவிற்குத் தந்திருக்கிறார்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ரைட்டரும் இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாகத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட படங்களைத் தயாரித்து வரும் இரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்களும் அன்புகளும். ரொம்ப நாளுக்கு முன்பாகவே விவாதிக்கப்பட வேண்டிய ஒரு ...
“ரைட்டர்: தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை” – பா.ரஞ்சித்

“ரைட்டர்: தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை” – பா.ரஞ்சித்

சினிமா, திரைச் செய்தி
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித், “தயாரிப்பாளர் அதிதி என் ரசிகையாக என்னைச் சந்தித்தார். காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார். பிறகு ரைட்டர் படத்தைப் பற்றிப் பேசி இப்படத்தைத் தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர் நான் இயக்கும் படத்தைத் தயாரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் எனக்கு வேறு பட வேலைகள் இருந்ததால் அது முடியவில்லை. அதிதிக்கு சமூக அக்கறை உள்ள படங்களைத் தயாரிக்க மிகவும் ஆசை. பிறகு எங்களுடன் இணைந்தவர்கள் தான் கோல்டன் ரேஷியோ மற்றும் ஜெட்டி புரோடக்சன்ஸ். என்னுடைய அரசியலைப் புரிந்து கொண்டு அவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஐந்து ப...
ஜெயில்: ‘ஐ கான்ட் ப்ரீத்’ – வசந்தபாலன்

ஜெயில்: ‘ஐ கான்ட் ப்ரீத்’ – வசந்தபாலன்

சினிமா, திரைச் செய்தி
‘காவியத் தலைவன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஜெயில்’. இதில் ஜீ.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அபர்னதி நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், ‘பசங்க’ பாண்டி, நந்தன் ராம், ரவி மரியா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதையை இயக்குநர் வசந்தபாலனுடன் இணைந்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும், வசனத்தை பாக்கியம் சங்கர் அவர்களும் எழுதியிருக்கிறார்கள். அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, கொரோனா காரணமாகத் திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் தள்ளிவைக்கப்பட்ட இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தைப் பற்றி இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், ''அதிகாரத்தின் பெயரால் சக மனிதர்களுடைய பூர்வீக...
ஜெய் பீம் ‘பவர்’ பாடல்

ஜெய் பீம் ‘பவர்’ பாடல்

சினிமா, திரைச் செய்தி
சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் பாடலான ‘பவர்’ வெளியாகியுள்ளது. அறிவு எழுதிப் பாடியுள்ள இந்தப் பவர் பாடலை, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், நீதிமன்ற வழக்காடலை களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பவர் என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாடலைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவரான அறிவு எழுதிப் பாடியிருக்கும் இந்தப் பாடலை...
வித்யூத் ஜம்வாலின் ‘சனக்’: காதல் + ஆக்ஷன் த்ரில்லர்

வித்யூத் ஜம்வாலின் ‘சனக்’: காதல் + ஆக்ஷன் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
வித்யூத் ஜம்வால் நாயகனாக நடித்திருக்கும் 'சனக்' படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 5 அன்று வெளியானது. பணயக் கைதியை மையப்படுத்திய இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதியன்று பிரத்தியேகமாக வெளியாகிறது. ஹிந்தி திரை உலகில் பணயக் கைதியை மையப்படுத்திய திரைப்படங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, ஜீ ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து 'சனக்- ஹோப் அண்டர் சீஜ்' திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாக்கி இருக்கிறார். இப்படத்தின் சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி, வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பணயக் கைதியின் திக் திக் நிமிடங்கள், இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் வரவைக்கும் வகையில் டிரைலர் அமைந்திருக்கிறது. கனிஷ்க் வர்மா இயக்கியிருக்...
எளிய மக்களைக் காக்கும் சூரன் – ‘ஜெய் பீம்’

எளிய மக்களைக் காக்கும் சூரன் – ‘ஜெய் பீம்’

சினிமா, திரைச் செய்தி
சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படம், இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. இயக்குநர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள். இப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது. பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படம், பழங்குடி இனத்தைச் சேர்ந்த தம்பதியான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசுகிறது. ராஜ்கண்ணு கைது செய்யப்பட...
“காணாமல் போன 2 காளைகளைத் தேடி!” – இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

“காணாமல் போன 2 காளைகளைத் தேடி!” – இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

சினிமா, திரைச் செய்தி
அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப். 15) நடிகர் சூர்யா வெளியிட்டார். எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கை பற்றி நையாண்டித்தனத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம், செப்டம்பர் 24ஆம் தேதி அன்று, 240 நாடுகளிலும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான சமூக நையாண்டி திரைப்படமான ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ ஒரு கிராமீய வாழ்வியலை மையப்படுத்தித் தயாராகியிருக்கும் திரைப்படம். மனிதநேய உணர...
பார்டர் – அருண்விஜயின் ஆக்ஷன் த்ரில்லர்

பார்டர் – அருண்விஜயின் ஆக்ஷன் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் தேசபக்தி கொண்ட ஆக்ஷன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் 'அருண்விஜய்யின் பார்டர்'. ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படமும் இணைகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் முன்னணி நடிகர்களில் நடிகர் அருண் விஜயும் ஒருவர். 'அருண்விஜய்யின் பார்டர்' படத்திலும் துணிச்சல் மிக்க கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் கடுமையாக உழைத்து, ஒத்திகையு...